Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜெனிவா பிரகடனத்தை மீறுகின்ற தாக்குதல் புலித்தேவன் இலங்கை அரசு ஜெனிவா பிரகடனத்தை மீறி வன்னிப் பகுதியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு அரச மருத்துவமனை மற்றும் அரச அதிபர் பணிமனை மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல் குறித்து இணையத்தளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ""பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள அதனைக் கண்காணிக்கின்ற அரச உத்தியோகத்தர் பணிமனை போன்றவற்றை வேண்டுமென்றே இலக்குவைப்பதன் மூலம் அரசு ஜெனிவாப் பிரகடனத்தை மீறுகின்றது'' என்றார். (தற) http://www.sudaroli.com/pages/news/today/02.htm

    • 1 reply
    • 928 views
  2. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து, உண்பதற்கு உணவின்றி, குடிதண்ணீர், மருந்து வசதிகள் இன்றி, மர நிழல்களில் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அக்கறையில்லை. அந்த மக்களைப்பற்றிச் சிறிதும் கூடக் கவலைப்படாமல் மடுமாதாத் திருவிழாவை நடத்துவதற்கும், அதில் தெற்கு மக்களைக் கலந்துகொள்ளச் செய்வதற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜயலத் ஜயவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ஜனநாயக நாட்டில் ஏன் இப்படியான பாரபட்சம் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். “உண்மையாகவே மடுமாதா தேவஸ்தானத்தின் வருடாந்த உற்சவம் நடத்தப்படுமா? இல்லையா?, மடுமாதாத் திருச் சொரூபம் மீண்டும் தேவஸ்தானத்தில் பிரதிஷ்ட…

  3. குடும்பிமலை பகுதியில் நேற்றும் கிளைமோர்த் தாக்குதல்: 5 படையினர் காயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிக்கலப் பிரதேசத்துக்குட்பட்ட தாராவில்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் ஐந்து படையினர் காயமடைந்தனர். இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் தாராவில்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப் படையினரையும்இ படையினரையும் இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரமொன்றில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமோர்க் குண்டே வெடிக்க வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஐவரும் ம…

  4. திருகோணமலை நீதிமன்ற வீதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை இனந்தெரியாததோர் கடத்திச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் நேற்று (ஆகஸ்ட்7) மாலை நடைபெற்றதாக திருகோணமலை காவற்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது. 37 வயதான முத்துகுமார் கமலேஸ்வரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சாந்தி காவல்துறையினரிடம் செய்துள்ள முறைப்பாட்டில் கூறியுள்ளார். கடத்திச் செல்லப்பட்டவர் 10 வருடங்கள்; வன்னியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வன்னியில் இருந்தமையே அவர் கடத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 596 views
  5. இலங்கைக்கு காணாமல் போதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு(2008) மட்டும் 200 பேர் உத்தியோக பூர்வமாக காணாமல் போயுள்ளனர் ஏறாவூரைப் பிறப்பிடமாகவும் வட்டவளையை வசிப்பிடமாகவும் கொண்ட 38 வயதுடைய சண்முகம் காளிதாஸ் என்பவர் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் காணாமல் போனவரின் மனைவி செல்வராஜா சுமதி முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். தந்தையான இவர் கடந்த கடந்த மாம் 28ஆம் திகதி காணாமல் போயுள்ளார். ஏறாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தங்களது குடும்பம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வட்டவளையில் வசித்து வருவதாகவும் சம்பவ தினம் தயார் செய்யப்பட்ட நகைகளை கொழும்பிற்கு ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென்றதாகவும் கொழும்பிலிருந்து தொலைபேசி மூலமாக வவுனியாவிலிர…

    • 0 replies
    • 1.1k views
  6. கொழும்பு பாலத்துறையில் காரில் சென்ற மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாலத்துறை பாலத்திற்குக் கிழாகச் செல்லும் வீதியிலேயே நேற்றிரவு ஒன்பது மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இனந்தெரியாத நபர்கள்மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயொகத்தில் ஸ்தலத்திலேயே மூவரும் பலியாகியுள்ளனர். கொல்லப்பட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையளம் காணப்படவில்லை என பாலத்துறைப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 889 views
  7. சிறிலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்களினாலும் வல்வளைப்புக்களினாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்து அக்கராயன்குளம், வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான போன்ற பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வீடமைப்பதற்கான உதவிகளை செய்து வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

  8. 25 வருட போராட்டம்! ஈழத்தமிழர்களின் கருப்பு ஜூலை. ஈழத்தமிழர்களின் வரலாற்றில்... 1983 ஜூலை 23-ந் தேதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழினத்திற்கு எதிரான சிங்கள ராணுவத்தினர் மீது தமிழர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து... தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது சிங்கள அரசு. அந்த அரச பயங்கரவாதத்தைத்தான் "கருப்பு ஜூலை' என்று ஈழத்தமிழர்கள் பதிய வைத்துள்ளனர். அந்த "கருப்பு ஜூலை' நிகழ்ந்து தற்போது 25 வருடங்கள் அகிவிட்டன. அன்றைய ஜூலையில் நடந்த கொடூரங்களை தமிழர்கள் இன்னமும் மறந்துவிட வில்லை. அன்று என்ன நடந்தது? எழுபதுகளின் தொடக்கத்திலேயே ஈழத்தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திவிட்டனர் என்றபோதிலும், அந்த ஆயுதங்களின் வலிமையை, சிங்கள அரசு 19…

  9. அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 08:54 பி.ப ஈழம்] [க.நித்தியா] அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:- அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முகாம் அருகே துணை இராணுவக்குழுவான இனியபாரதி குழுவினர் முகாம் நிறுவியதனை சிறப்பு அதிரடிப்படையினர் தமது பாதுகாப்புக் கருதி தடுத்த…

    • 0 replies
    • 1.1k views
  10. இலங்கை இராணுவத்துக்கு தற்போதுள்ள தலைமைத்துவம் தொடர்ந்திருந்தால் புலிகளை மட்டுமல்ல உலக நாடுகளையே வெற்றி கொள்ள முடியுமென ஹெல உறுமைய பா.உ எல்லாவல மேதானந்த தேரோ தெரிவித்துள்ளார். மேலும் : இதுவரை காலமும் புலிகளின் தலைவர் பிரபாகரனை வெல்லப்பட முடியாத ஒரு ஒரு அசுரனாக உருவகப்படுத்தியிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. தகைமையற்ற தலைமைகளே பிரபாகரனை வெல்ல முடியாதெனக் கூறினர். ஆனால் தற்போது இந்த நாட்டுக்கும் இராணுவத்துக்கும் சரியான தலைமைத்துவம் கிடைத்துள்ளதனால் பிரபாகரனை வெற்றி கொண்டு வருகிறோம். வடக்கை விரைவில் மீட்டு விடுவோம். அதே வேளை, தற்போது பிரபாகரன் கடைப்பிடித்து வரும் மௌனத்தையும் உபாயத்தையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். ஏனேனில், இது தொடர்பில் எமக்க…

    • 24 replies
    • 3.4k views
  11. நெடுங்கேணியில் கிளைமோர் தாக்குதல்: அப்பாவிப் பொதுமகன் பலி [வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 04:31 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா வடக்கு நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் இடம்பெற்றது. நெடுங்கேணியில் இருந்து மருதோடை நோக்கி ஈருளியில் விவசாய நிலத்தைப்பார்க்கச் சென்று கொண்டிருந்த பொதுமகன் மீது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் சுப்பையா நடராசா (வயது 57) என்பவர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளார். புதினம்

  12. அமைச்சர் மேர்வின் சில்வாவினால் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு, கமராக்கள் பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொள்ளுப்பிட்டியில் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுதந்திர ஊடக அமைப்பு உள்ளிட்ட ஐந்து ஊடக அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவிலயாளர்கள், அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களும், சிவில் அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும், பொலிஸாருக்கும் எதிராக கோஷமெழுப்பினர். அமைச்சர் மேர்வின் சில்வா நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை தாக்கிய, கெமராக்களை பறித்துச் சென்றமைக்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றபோதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்…

    • 0 replies
    • 714 views
  13. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்டு வெளியேறமுடியாத நிலையில் இருப்பதாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையம் தெரிவித்துள்ளது. மக்களைத் தேடிய ஊடகப் பயணம் இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாக மன்னார் தகவல் தொடர்பாடல் ஊடக வலைப்பின்னல் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் பகுதி ஊடகவியலாளர்கள் நானாட்டான் பிரதேச செயலாளர் பகுதியிலுள்ள முகாம்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடியுள்ளனர். முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் முகாம்களை விட்ட…

    • 0 replies
    • 780 views
  14. அரச படையினர் கடந்த ஒரு வருடகாலத்துக்கு மேலாக மேற்கொண்ட தீவிர இராணுவ நடவடிக்கைளில்; புலிகள் இயக்கத்தினர் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு மாகாணப் பிரதேசங்கள் அனைத்தையும் இழந்துவிட்டதுடன், அண்மையில் மன்னார் மாவட்டிலிருந்து முற்றும் முழுதாப் பின்வாங்கிவிட்டனர். இவவாறான பாரிய வெற்றிகளை அடைந்துள்ள அரச படையினர் தற்போது புலிகளிடமிருந்து பிரதேசங்களை மீட்கும் இராணுவ நடடிக்கையின் இறுதிக் கட்டமாக புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து கிளநெச்சி, முல்லைதீவுப் பிரதேசங்களை மீட்பதற்கான தீவிர தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கிளிநொச்சி பிரதேசத்ததுக்குள்ளும் முல்லைத்தீவு பிரதேசத்திலும் வெற்றிகரமாக பிரவேசித்துள்ள அரச படையினர் அந்தப் பிரதேசத்துக்குள்ளான களம…

  15. இலங்கை வான்படைக்குச் சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் அனுராதபுரத்தின் நுவரவௌ பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8.45 அளவில் விமானம் அனுராதபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விமானப்படைப் பேச்சளாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்திய விமானமொன்றும் அண்மையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது நன்றி தமிழ் வின்

  16. மன்னாரில் எம் அய் - 17 கெலி சேதம்- படைமுகாமுக்குள் அவசரமாகத் தரை இறக்கம். டெய்லிமிரொர்

  17. பிரிட்டனைச் சேர்ந்த ராப் இசைப்பாடகியான மாயா (மாதங்கி அருள்பிரகாசம்) பயங்கரவாதத்த்pற்கு ஆதரவு தெரிவிப்பதாக தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். தான் பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிப்பவள் என்றும் அவர்களுக்காகப் பாடுபவள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. எனினும் தான் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். M.I.A.உலகெங்கும் ஆங்கிலத்தில் வெளிவரும், ஈழம் பற்றிய செய்திகளுக்கான இணைப்பை தரும், தமிழ் கனடியன் இணையத் தளத்தில்தான் அந்த செய்தி இணைப்பையும் [Jan. 27, 2005 Eye Weekly] பார்த்தேன். அதனைத் திறந்து படிக்கும் ஆர்வத்தை தலைப்பும் முன்குறிப்பும் சுட்டி நின்றன. Tiger, tiger, burning brigh…

    • 19 replies
    • 2.8k views
  18. சிறிலங்காவுக்கு ஈரான் அணுத்தொழிநுட்பத்தை அந்த நாட்டின் அபிவிருத்தி, மற்றும் சுமுகமான வாழ்வுக்கு உறுதுணையாக இருக்க வழங்கத் தயாராகவுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மனோஹ் மொட்டஹி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற 15அவுது சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள சிறிலங்காவின் அழைப்பை ஏற்று அவர் கொழும்பு வந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ஈரானுக்கும் சிறிலங்காவுக்கும் வரலாற்று ரீதியாகவும், காலங்காலமாக நட்புறவும், பரஸ்பர புரிந்துணர்வும் நிலவி வருவதையிட்டு மகிழ்ச்சி வெளியட்ட அவர், சிறி லங்காவின் வளமான முன்னேற்றத்திற்கு ஈரான் முழுமையான ஒத்துளைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 450 மில்லியன் நிதியுதவியை ஈரான் சிறிலங்காவுக்கு வழங்கியுள்ளதாகவும், இந்த நித…

    • 3 replies
    • 965 views
  19. 10 நாள் போர் நிறுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என எந்த எழுத்தாளரும் எழுதவில்லை. நிழல் யுத்தம் செய்வதற்கு மாயமான்களை தேடுவது போல் தனியார் இணையத்தளமொன்றில் எம்மையெல்லாம் மிக கீழ்த்தரமாக விமர்சித்து, இறைவனின் குசும்பொன்று ஊர்ப் புதினத்தில் வந்தது. இத்தகைய அலட்டல்களை ஒரு புறம் ஒதுக்கி, எமது பணியை இன்னமும் வேகமாக முன்னெடுப்போம். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தப் பிரகடனம் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமறிந்த, இராஜதந்திர நகர்வாகும். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவன்று பெரும்யுத்தமொன்றை விடுலைப் புலிகள் ஆரம்பிப்பார்களென்று தேசிய உணர்வு கொண்ட ஆய்வாளர்கள் எவருமே கூறவில்லை. இத்தகைய எதிர்பார்ப்பு சிங்கள தேசத்திற்கு இருக்…

    • 62 replies
    • 7.5k views
  20. மணலாறு பகுதியில் சிறிலங்காப் படையினர் ஐந்து முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடலங்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் மிகச்செறிவான எறிகணைத் தாக்குதல்களுடன் ஐந்து முனைகளில் முன்நகர்வுத்தாக்குதலை நடத்தினர். இந்த பெருமெடுப்பிலான நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். கொல்லப்பட்ட படையினரின் நால்வரின் உடலங்கள் உட்பட படைப்பொருட்கள் விடுதலைப் பு…

  21. இலங்கையிடமிருந்து கச்சதீவை மீளப் பெறுவதற்கு மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மனு ஒன்று நேற்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் சட்டத்தரணியான சிறிகலா குரு கிருஷ்ணகுமார் என்பவரே இந்த மனுவைத் தாக்கல் செய்தார் என்று இந்தியச் செய்திகள் தெரிவித்திருக்கின்றன. இந்திரா காந்தியின் காலத்தில் இந்திய அரசமைப்பில் எந்தவித மாற்றமும் செய் யப்படாமல் கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், தமிழக மீனவர்கள் அங்கு தங்கி மீன்பிடிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. h…

  22. இந்த நாட்டில் ஆட்சித் துறையால் அரங்கேற்றப்படும் அராஜகங்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் எல்லாம் எல்லை தாண்டி விட்டன. அவற்றுக்கான தண்டனைக்கு நியாயத்துக்கு நாட்டு மக்கள் இறைவனிடம்தான் இறைஞ்சவேண்டும் போல உள்ளது. அப்படித்தான் மக்களை வழிப்படுத்தும் நிலைக்கு வழிகாட்டும் கட்டத்துக்கு ஆட்சிப் பீடத்தின் முக்கிய பங்காளியான அமைச்சர்களே தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க, அரசின் ஊடகத்துக்குள்ளேயே ஓர் அமைச்சர் குண்டர் குழுவுடன் புகுந்து காட்டுத் தர்பார் பண்ணுகின்றார்; அராஜகம் புரிகின்றார். அந்த அட்டூழியங்களை அடுத்துக் கட்டவிழ்ந்த "கேவலங்கள்' அரச தொலைக்காட்சி ஊடகத்திலேயே நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவ்வளவுக்கும் பின்னரும் இந்தக் கோணங்கித்தனத்தை ஒட்டி சட்…

  23. வன்னியில் பல்வேறு பிரதேசங்களையும் புலிகள் இயக்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ள அரச படையினர், தற்போது தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னேறி வரும் நிலையில், புலிகள் இயக்கம் அதன் பத்திரிகை, வானோலி, தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமும் மற்றும் ஆதரவு ஊடகங்கள் மூலமும் ஸ்ரீலங்கா அரசுக்கும் அரச படையினருக்கும் எதிரான பொய்யான ஊடக பிரசாரங்களைச் செய்து வருகின்றனா. இவற்றின் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கருத்துகளையும் நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகங்களுக்கிடையே உருவாக்குவதே புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் நோக்கமாகும். இவ்வாறு புலிகள் இயக்கம் அதன் மேற்படி ஊடகங்கள் மூலம் அரசு படையினரின் விமானத்தாக்குதல்கள், மல்ரிபரல் மற்றும் சூட்டுத் தாக்குதல்கள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்ச…

  24. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திருச்சொரூபம், மடு ஆலயத்தின் தூய்மைப் பணிகள் முடிவுற்றதும் கொலுவேற்றம் செய்யப்படும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக மடுக்கோவிலில் இருந்து தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட மடு அன்னையின் திருச்சொரூபம் தற்போது மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை தெரிந்ததே. நான்கு மாதங்களுக்குப் பின்னர் புதன்கிழமை 6 ஆம் திகதியே மடு ஆலயத்திற்கு குருமார்கள் சென்றுள்ளார்கள். மடு ஆலயத்தின் திருத்த வேலைகள் செய்யப்பட்டுள்ள போதிலும் ஆலயத்தின் உட்கட்டமைப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆவணி திருவிழா நடைபெறுவதாக இருந்தால், ஆலயத்திற்கு வரும் பெரும்…

  25. இலங்கைப் படையினரின் தாக்குதலைக் கண்டித்து ஜெயலலிதாவின் தலைமையில் போராட்டம் தமிழக மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களைக் கண்டித்து நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். கச்சதீவை விட்டுக்கொடுத்ததிற்குப் பிறகு தமிழக மீனவர்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமது போராட்டம் இராமேஸ்வரம் பாண்டியன் திடலில் இடம் பெறவிருப்பதாக அவர் அறிவித்துள்ளார். இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதாகப் பழி சுமத்தித் தமிழக மீனவர்கள்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் வன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.