ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்தம் -பலவீனத்தின் வெளிப்பாடா? இராசதந்திர நகர்வா? புலிகளின் இவ் அறிவிப்பானது சிங்களம் கூறுவதைப் போன்று விடுதலைப் புலிகளின் பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மாறாக தம்மிடம் இருக்கும் பலத்தைத் தக்க வைத்துக் கொண்டு மேலும் அசுர பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டின் ஒரு அங்கமே சுவிசில் இருந்து மாதம் இருமுறை வெளிவரும் நிலவரம் பத்திரிகை கடந்த வாரம்(01.08.08) தனது ஆசிரியர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சிறி லங்கா தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் மாநாட்டை ஒட்டி பத்து நாள் போர் நிறுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள். மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் விடுதலைப் பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாராளுமன்ற முறைமையை பலப்படுத்துவதற்கு 17வது திருத்தச்சட்டமூலம் அவசியம் என்பதால் அதனை அமுல்படுத்தவேண்டும் என சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார். 17வது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழு, திருத்தச்சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்கான மாற்றுவழிகளைப் பரிந்துரை செய்யவேண்டும் எனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு 17வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்துவத்தினால் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தின் ஊடாக அமுல்படுத்தப்படுவதில்லையென
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கையின் தென்பகுதியான தங்காலையில் இன்று காலை நில அதிர்வு ஒன்று உணரப்பட்டதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.தங்கல்ல, பெலியத்த, ரன்ன, மற்றும் குடாவெல ஆகிய பிரதேசங்களில் இன்று காலை 5.45 மணிக்கு இந்த இலேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. எனினும் இதன் காரணமாக உடமைகளுக்கோ உயிர்களுக்கே எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilseythi.com/srilanka/lanka-2008-08-06.html
-
- 0 replies
- 673 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைத் தமிழீழ எம்.பி.க்களாகக் கருதி சார்க் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காததையிட்டு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய, இலங்கை அரசுக்கிடையிலான சீபா உடன்படிக்கை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் புறக்கணிக்கப்பட்டதுடன், அவமதிக்கப்பட்டுள்ளனர். இது வெளிநாட்டு அமைச்சின் திட்டமிட்ட செயலாகும். சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் எந்தவொரு நன்மை…
-
- 0 replies
- 719 views
-
-
(2ம் இணைப்பு)கோத்தபாய - பசில் - பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ள இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு [திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 08:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] தமிழின அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசின் முக்கிய நபர்களாகக் கருதப்படும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகிய அமெரிக்க குடிமகன்கள் மூவருக்கும் எதிராக இனச்சுத்திகரிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு (Tamils Against Genocide [TAG]) அமெரிக்காவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்…
-
- 5 replies
- 1.6k views
-
-
தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து பயங்கரவாதத்தை ஒழித்தல் என்று ஒன்று கூடி "சார்க்' தலைவர்கள் விடுத்த அறிவிப்பு எள்ளி நகையாடத்தக்க வகையில் அமைந்திருக்கின்றது. நோயின் மூலகாரணியைத் தேடிக் கண்டு பிடித்து, அதற்கு வைத்தியம் செய்வதை விடுத்து, நோய் வெளிப்படுத்தும் குணங்குறிக்கு மருத்துவம் பார்க்கும் "அரைகுறை' வைத்தியர்களாகவே அவர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள். அது மாத்திரமல்ல, அந்த நோயின் விளைவாக வெளிப்படும் "பயங்கரவாதம்' என்ற பிரச்சினை மட்டுமே இந்த எட்டு நாட்டுத் தலைவர்களின் கண்களில் பட்டிருக்கின்றது. அதுபோன்ற மிக மோசமான இந்நோயின் மற்றொரு வெளிப்பாடு அவர்களின் கவனத்தை ஈர்க்காமை அவர்களை "அரைகுறை' வைத்தியர்களாகவே அடையாளம் காட்டி நிற்கின்றது. சிறுபான்மைத் தேசிய இனங்களின் நியாயம…
-
- 0 replies
- 531 views
-
-
மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு மே.ம.மு.தலைவரான கொழும்ப மாவ. எம்.பி. மனோ கணேசனுக்கு விடுத்;த அழைப்பை அவர் தவிர்த்துக் கொண்டார். கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த மன்மோகன் சிங்கை பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்தித்த போதும் அனைத்துக் கட்சிகளுக்கும் இந்தச் சந்திப்புபக்காக குறுகிய நேரமே ஒதுக்கபட்டது. மன்மோகன் சிங்குடனான சந்திப்புக்கு தங்களுக்கு குறைந்தது அரை மணிநேரமாவது ஒதுக்க வேண்டுமெனவும் இந்திய வம்சாவளி மக்களினதும் பிரச்சினை குறித்து மட்டுமல்லாது நாட்டில் இடம் பெறும் இனப்படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணமால் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்காக தாங்கள் மக்கள் கண்காணிப்புக் குழுவொன்றை அமைத்திருப்பதால் அத…
-
- 8 replies
- 2.5k views
-
-
சறுக்கிய சார்க் மாநாடு இலங்கையில் கடந்த இருபத்தி ஏழாம் திகதி துவங்கி நடந்து வரும் சார்க் மாநாடுஇ உலகில் பல உறுப்பு நாடுகள் தங்களது பிராந்தியத்தை ஒட்டிய அண்டை நாடுகள் என பல அமைப்புகள் உள்ளது. நாம் அதிகம் அறிந்தது காமன் வெல்தஇ யூரோ ஆபிர்க்கன்இ பெடரேசன் ஆப் இஸ்லாமிக் நேசன்இ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவை நாம் அறிந்தவை நாம் அறியாதவைகள் பல ஆம் சுமார் 260க்கும் மேற்பட்ட பல உலக நாடுகளில் கூட்டமைப்பு மற்றும் குழுக்கள் உள்ளது. இவற்றில் பல சனநாயக அமைப்பு கொண்ட நாடுகள். முக்கியமாக யூரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பின் கொள்கைகள் அனைத்தும் 5 வருடங்களுக்கு ஒருமுறை அந்த சமயத்தில் ஏற்படும் பொருளாதார மாறுதலுக்கேற்ப அந்தந்த நாடுகளில் முதலில் மக்களிடம் பொதுப்பார்வைக்கு வைக்கப்படு…
-
- 3 replies
- 1.5k views
-
-
வவுனியா - குஞ்சுக்குளம்இ நவ்வி பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் நிலைகளை நோக்கி நகர்வை மேற்கொண்டிருந்தனர். இந்த நகர்வை தீவிர தாக்குதல் மூலம் விடுதலைப்புலிகள் முறியடித்துள்ளனர் முன்நகர்விற்கு எதிராக விடுதலைப்புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துமுள்ளனர். புலிகளால் கைப்பற்றப்பட்டவை படையினரின் உடலம் ஒன்று கிளைமோர் -1 ரி 56-2 வகை துப்பாக்கி -1 ரவை கூடுகள் -5 நடுதர ரவைகள் -150 தொடுகம்பி சுருள் -1 குண்டு -1 ரவை கூடு தாங்கி அணிகள் -2 தலை கவசம் -1 தண்ணீர் கலன்கள் -4 பை -1 புலிகளின் குரல்
-
- 0 replies
- 816 views
-
-
மாரிகாலத்தில் வன்னி களமுனையில் எதிர்மறையான மாற்றம் ஏற்படும். நெப்போலியனை ரஷ்யா விரட்டியடித்ததைப் போன்று வன்னியில் நுழையும் படையினர் விரட்டியடிக்கப்படுவர் என்று த.தே.கூட்டமைப்பின் யாழ். பா.உ ஸ்ரீகாந்தா தெரிவித்தார். இக் கொடிய யுத்தம் முன்னெடுக்கபட்டால் அழகிய இலங்கை நாடு பாரிய அழிவை சந்திப்பதை தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாரளுமன்றில் நேற்று கடல் சார் தீர்ப்புத் தடைசட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவறு தெரிவித்தார். மேலும் : பரந்து விரிந்த ஐரோப்பாவை கட்டியாண்ட நெப்போலியன் ரஷ்;யாவை கைப்பற்ற முயன்றபோது, மொஸ்கோவினால் தோற்கடிக்கப்பட்டதைப் போன்று வன்னியினுள் நுழையும் படையினர் விரட்டியடிக்கப்படுவர். எதிர்வ…
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைப் படைநடவடிக்கை குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை: இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் முதன்முறையாக இந்தியப் பிரதமருக்கு நேரடியாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எனில் இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? (செய்திகளில் வெளிவராத முக்கிய தகவல்கள்) [ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 02:30.08 AM GMT +05:30 ] இலங்கையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் குறித்து இந்தியப் புலனாய்வாளர்கள், இலங்கையின் பாதுகாப்பு உயர்தரப்பை எச்சரித்துள்ளனர். “சார்க்” மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் புலனாய்வுத் துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இலங்கையின் பாதுகாப்புத்துறை உயர்தரப்புடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைத் தரப்பால் தற்போதைய யுத்தம் தொடர்பாகப் பெரும…
-
- 9 replies
- 3.8k views
-
-
பிரித்தானியாவில் கடனட்டை மோசடிகளில் ஈடுபடும் தனி நபர்கள், அல்லது குழுக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவுடன், தண்டனையில் இருந்து தப்புவதற்காக, விடுதலைப் புலிகளின் தூண்டுதலில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி வருகின்றனர். இவ்வாறான நபர்கள் தாமாக தவறு செய்கின்றனரா அல்லது, சிறீலங்கா போன்ற நாடுகளின் புலனாய்வுப் பிரிவினரின் தூண்டுதலில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் பிரித்தானிய காவல்துறையினர் மத்தியில் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. லீசெஸ்ரர்சையர் (Leicestershire) பகுதியில் பெற்றோல் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய 33 அகவையுடைய அப்துல் சமத் மொஹமட் றயிக் (Abdul Samad Mohamed Raik) என்ற முஸ்லீம் நபர், கடனட்டை மோசடியில் ஈடுபட்டதாக, பிரித்தானிய நீதிமன்றில் முன்னிறுத்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு - 15ஆவது சார்க் உச்சிமாநாட்டின் ஆரம்ப விழாவிற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மண்டபத்தில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார். நானே ஆசனத்தைக் காண்பித்து அமரச் செய்தேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சார்க் மாநாட்டின் பாதுகாப்பு, ஆசன ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் சபையில் எழுந்த சர்ச்சையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, வெளிவிவகார அமைச்சர் கூறியதன் பிரகாரம் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு கௌரவமளித்திருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்தன, பிரேமதாஸ ஆகியோரின் காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு …
-
- 1 reply
- 1.6k views
-
-
த.தே.தொலைக்காட்சியின் ஈழக்கிழவன் http://www.nettamil.tv/play/Eelam_Videos/E...ilavan_29072008 நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் காலக்கணிப்பு http://www.nettamil.tv/play/Eelam_Videos/K...anippu_30072008 நன்றி- நெற் தமிழ்
-
- 0 replies
- 1.6k views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அங்கு மக்களின் அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைபோல் நடைபெற்று வருவதாகவும் சோதனைச் சாவடி தொடர்ந்து செயற்படுவதாகவும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. http://www.tamilseythi.com/srilanka/OMANTHAI-2008-08-05.html
-
- 0 replies
- 836 views
-
-
வவுனிக்குளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மல்லாவி நோக்கி சிறிங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட, காணாமல் போன படையினரின் எண்ணிக்கை 25 என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
பாதுகாப்பு செலவீனங்களை குறைக்கும் ஓர் நடவடிக்கையாக இதுவரை காலமும் வான்படையினருக்கு இரவு நேரத்தில் வழங்கப்பட்டு வந்த தேனீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. வான்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியின் போது இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு செலவீனங்களை குறைக்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் வான்படையினருக்கு வழங்கப்பட்டு வந்த தேனீர் கோப்பைக்கு பதிலாக மல்லித் தண்ணீர் வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். படை சிப்பாய் ஒருவரின் உணவு செலவீனத்திற்காக நாளொன்றுக்கு 280 ரூபா செலவிடப்படுவதாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள படைச் …
-
- 11 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழ் அகதிகள் வருகை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பு 05.08.2008 / நிருபர் வானதி இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களால் தமிழகத்திற்கு தமிழ் அகதிகள் செல்வது தொடர்ந்தும் அதிகரித்து செல்வதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலப்பகுதியில் கடுமையான கடற்கொந்தளிப்பின் மத்தியிலும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழர்கள் தமிழ் நாட்டிற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். முன்னைய காலங்களில் இந்த அகதிகள் தமது உடைமைகள் சிலவற்றையாவது தம்முடன் எடுத்து வந்தனர். இப்போது சிறிய தொகைப் பணமோ அல்லது உடைகளோ இல்லாமல் வருகின்றனர் என்று தமிழ் நாட்டில் அகதிளுக்கான நிவாரணப் பணியில் தசாப்த காலங்களாக ஈடுபட்டு வரும் எஸ்.சி. சந்திரஹாசன் இந்தோ ஏசியன் செய்திச் சேவைக்…
-
- 0 replies
- 564 views
-
-
மாநாட்டு ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளால் 100 மில்லியன் ரூபா இழப்பு. 05.08.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டு ஒழுங்குபடுத்தல் மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகள் காரணமாக 100 மில்லியன் நட்டத்தை தாம் எதிர்நோக்கியுள்ளதாக உல்லாச விடுதிகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 26 ஆம் திகதியிலிருந்து இந்த மாதம் 04 ஆம் திகதிவரை சார்க் மாநாட்டை முன்னிட்டு முக்கிய உல்லாச விடுதிகள் உள்ள பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டமை, சார்க் மாநாட்டில் பங்கெடுப்பதற்கு வந்த வெளிநாட்டு பிரமுகர்களுக்கு தங்குமிட ஒழுங்குகளை வழங்க அரசாங்கம் பணித்தமை, முக்கிய வீதிகள் அடிக்கடி மூடப்பட்டமை என்பவற்றின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்…
-
- 0 replies
- 703 views
-
-
மட்டக்களப்புப் பகுதியில் 6 சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 23 சுனாமி எச்சரிக்கைக் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் களுவாஞ்சிகுடி காத்தான்குடி வாகரை மட்டக்களப்பு வாழைச்சேனை ஏறாவூர் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்படவுள்ளன. அது இயற்கை அனர்த்தங்களின்போது மக்களுக்குத் தானாக பாரிய ஒலியை ஏற்படுத்தும். இவை அனைத்தும் ஒரு நெற்வேர்க்கில் இணைக்கப்படும். www.tamilwin.com
-
- 0 replies
- 777 views
-
-
சார்க் அமைப்பு நாடுகளில் காவற்துறை பிரிவொன்றை அமைப்பது, தொடர்பாக சார்க் நாடுகளின் காவற்துறை மா அதிபர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களின் மாநாடொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகளின் பயங்கரவாதம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது இந்த பிரிவின் நோக்கமாகும்.சார்க் நாடுகளில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் காணப்பட்டு இணக்கத்திற்கு அமைய இந்த காவற்துறை பிரிவு ( SAARC POLICE DESK) உருவாக்கப்படவுள்ளது. இந்த காவற்துறை பிரிவு சர்வதேச காவற்துறை பிரிவுகளுக்கு சமனானதாகும். பாகிஸ்தானில் நடைபெற உள்ள இந்த காவற்துறை மாநாடு குறித்து அந்த நாட்டின் பிரதமர் யூசுப் கிலானி ஜனாதிபதி மகிந்த ர…
-
- 0 replies
- 610 views
-
-
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளை பன்மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 439 views
-
-
குஞ்சுக்குளத்தில் படையினருக்கு எதிராக முறியடிப்புத்தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 05 ஓகஸ்ட் 2008, 07:23 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத்தாக்குதலை நடத்தியுள்ளனர். வடமேற்கு நவ்வி குஞ்சுக்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிரான முறியடிப்புத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதில் படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். புதினம்
-
- 0 replies
- 563 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்லடி பாலத்துக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினர் ஒருவரால் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 481 views
-