Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்: துரிதப்படுத்த கோருகிறார பாக். வெளிவிவகார அமைச்சர் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 08:40 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வேலைகைளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவை வலியுறுத்தியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்துள்ள பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான நகலை பாகிஸ்தான் ஏற்கனவே சிறிலங்காவிடம் சமர்ப்பித்துவிட்ட…

    • 0 replies
    • 595 views
  2. சிறிலங்காவில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 589 views
  3. லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.7k views
  4. சார்க் அங்கத்துவ நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 15 ஆவது உச்சிமாநாடு நாளை சனிக்கிழமை முற்பகல் 11:02 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாகவும் இதற்கான அனைத்துப் பூர்வாங்க வேலைகளும் நிறைவடைந்திருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. "எமது மக்களுக்கான ஒத்துழைப்பு" எனும் தொனிப்பொருளில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் வரலாற்றில் சமகாலத்தில் நடைபெற்ற அரச தலைவர்களின் உயர் மட்டக் கூட்டமாக இதனைக் கருதமுடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் நான்கு பிரதான உடன்படிக்கைகளில் அரச தலைவர்கள் கைச்சாத்திடவுள்ளனர். பிராந்திய அபிவிருத்தி ஸ்தாபனத்தை உரு…

    • 0 replies
    • 683 views
  5. 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், பயங்கரவாத செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்தில் உள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்பு பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் இருப்பதாக துருக்கியைத் தளமாகக் கொண்டியங்கும் மேற்படி நிலையம் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தக் காலப்பகுதியில் உலக நாடுகளில் 2396 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் 4204 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 7614 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. குறித்த காலபபகுதியில்…

    • 2 replies
    • 889 views
  6. சிங்களப்படை அகலக்கால் வைப்பதும் அதனால் தோல்விகளைச் சந்திப்பதும் சிங்களப் படைகளின் வரலாறாக உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 962 views
  7. யுத்தம்- மதிப்பீடும், ஒப்பீடும் இராணுவம் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகின்றது வன்னிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பெருமளவு நிலப்பரப்பைக் கைப்பற்றிவிட்டோம்; விரைவில் கிளிநொச்சி மீதும், முல்லைத்தீவு மீதும் தாக்குதலை நடத்தவுள்ளோம்;. அப்பகுதிகளும் விரைவில் மீட்டெடுக்கப்படும் என்பவை இன்று சிறிலங்கா ஆட்சியாளர்களினதும், படைத்துறைத் தரப்பினரதும் முக்கிய பிரச்சாரமாகவுள்ளது. இவற்றிற்குச் சிறிலங்காவில் இருந்து வெளிவரும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. ஒருபுறத்தில் முக்கியத்துவம் கொடுக்குமாறு அரச தரப்பால் வற்புறுத்தப்பட்டும் வருகின்றது. இதே சமயம், ஓரளவிற்கு உண்மை நிலையை வெளிப்படுத்த முனையும் …

  8. யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி குளத்தில் சில மனித எலும்புகளும், ஆடைகளும், திறப்புக் கோர்வை ஒன்று மீட்கப்பட்டுள்ளன.இன்று காலை பொதுமக்கள் வழங்கிய தகவலால், இவை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகின்றது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. திறப்புக் கோர்வையில் கடைக்குரிய திறப்புகளும் காணப்படுவதால், இவை கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.இருப்பினும

  9. 15வது சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரிலுள்ள முக்கிய வீதிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்திருப்பதுடன், தலைநகரிலுள்ள அலுவலகங்களின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை நடத்தப்பட்டிருந்தது. இதனால் கொழும்பின் பல்வேறு வீதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், வீதிகள் மூடப்பட்டமையால் வாகனங்களில் பயணித்தவர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. …

    • 0 replies
    • 616 views
  10. ஏங்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையாக- ஓயாத அலைகளாக- இன்றும் உறுமுகிற ஒரே அமைப்பு "விடுதலைப் புலிகளே": "ஆனந்த விகடன்" புகழாரம் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] ஈழ விடுதலைக்காக சிறிலங்கா அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்றுவரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு- "தமிழீழ விடுதலைப் புலிகள்" என்றும் ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான் என்றும் தமிழ்நாட்டின் முன்னணி வார ஏடான "ஆனந்த விகடன்" புகழாரம் சூட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆனந்த விகடன் இதழானது (06.08.08 பதிப்பு) "கருத்துக்கணிப்பு" ஒன்றை வெளியிட்டு பிரசுரித்துள்ள கட்டுரை: ஜூலை 25, …

  11. இந்தியாவுடனான சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லையென அரசு தீர்மானம் -முடிவை மாற்றுமாறு இந்திய அதிகாரிகள் கடும் அழுத்தம் இந்தியாவுடன் செய்து கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த பரந்தளவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (சீபா) அரசாங்கம் கையெழுத்திடாது என வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, சீபா ஒப்பந்தத்தை கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வருகை தரும்போது கைச்சாத்திடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசகர் குழு கூட்டத்தில் சீபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீபா …

  12. "விகடன்" கருத்துக்கணிப்பில் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி: பா.நடேசன் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:31 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயம் என்று தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" நடத்திய கருத்துக்கணிப்பில் தமது உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் நன்றி தெரிவித்துள்ளார். "ஆனந்த விகடன்" (06.08.08 பதிப்பு) ஏட்டில் வெளியாகியுள்ள பா.நடேசனின் பேட்டி வருமாறு: இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன? முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறிலங்கா அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத் தேசத்…

    • 0 replies
    • 834 views
  13. மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் புரியச் செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கையை ஐந்து வருடங்களுக்குள் கணிசமான அளவு குறைத்துவிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்; தெரிவித்தது. அதற்கு மாற்றீடாக நன்கு பயிற்றப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களை கனடா, அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பணியகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை யொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவே மேற்படி தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது:- “இலங்கை நாட்டவர்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்…

    • 0 replies
    • 754 views
  14. சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள் -இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே) திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது. அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது. மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர்…

  15. தமிழ் ஈழ போராட்டத்திற்கு இந்தியர்களின் ஆதரவு கீழ் இனைக்கப்பட்ட செய்தியையும் அதன் கீழ் வாசகர்கள் எழுதி இருக்கும் கருத்துக்களையும் வாசியிங்கள் பெரும்பாலான இந்தியதழிழர்களின் கருத்துகளை http://www.dinamalar.com/fpnnews.asp?News_...17&cls=row3

    • 14 replies
    • 3.3k views
  16. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாளை (01.08.2008)வெள்ளிக்கிழமை விசேட விமானங்கள் மூலம் கொழும்பு வரவுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 15 ஆவது சார்க் உச்சிமாநாடு எதிர்வரும் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் சார்க்கில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றவுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாளை நண்பகல் 12.45 மணியளவிலும், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாளை பிற்பகல் 3.00 மணியளவிலும் ஆப்கான் ஜனாதிபதி ஹமீட் ஹர்சாய் நாளை மாலை 6.40 மணியளவிலும் இங்கு வரவுள்ளனர். நேபாள பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, பூட்டான் …

  17. மகிந்தவின் சாக் கொண்டாட்டம் தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் படி 500 பேருக்கு சாக் சாப்பாடு, மது வகைகளுக்கு தனிக்கணக்கு இலங்கை மக்களின் வரிப்பணத்திலிருந்து 2880 மில்லியன் ரூபாய்கள் சாக் களியாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வெளிவிவகார அமைச்சின்வீண் விரயம் இந்நிலையில்.................. தொடர்ந்து வாசிக்க..........

    • 1 reply
    • 1.1k views
  18. ஆகஸ்ட் 1ல் சுவிஸ்நாட்டில் மக்களிள் வீடுகள் தோறும் சிவப்பு நிறத்தில் வெள்ளைச் சிலுவை பொறித்த சுவிஸின் தேசியக் கொடி பட்டொளி வீசிக் காட்சி தரும். அன்றையை தினத்தில் ஒவ்வொரு கிராம, மற்றும் நகர ஆட்சிப் பகுதிகளிலும் பல இலட்சம் பிறாங்குகள் செலவில் இரவு சுமார் 9.30 அளவில் இடம் பெறும் பெரும் வாண வேடிக்கைகளை எவரும் பார்த்து மகிழலாம். இத்தகைய மகிழ்ச்சிக்கு சுவிஸ் நாடு பெருமைப்படும் காரணியாக இருப்பது அதன் இணைப்பாட்சி முறையிலான கன்ரோன்கள் அடிப்படையில் அமைந்த பல்லின மொழி ,மத ,பிரதேச, மக்கள், தமது வேறுபாடுகளின் மத்தியில் ஒன்றிணைந்து ஆட்சி நடத்தும் ,சமஷ்டி ஆட்சி அரசமைப்பு முறையாகும். முக்கியமான சுவிஸ் அரசமைப்புச் சட்ட விதிகள் பற்றியவையே. இவற்றைப் பார்த்த பின்னரும் இலங்கையோ அல்லது இந…

  19. 1987 ஆம் ஆண்டு, ஓகஸ்ட் மாதம், நான்காம் திகதியன்று, அதாவது, 21 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சுதுமலை என்ற ஊரில், முதன் முறையாகப் பகிரங்கக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். தமிழீழத் தேசியத் தலைவரை நேரில் காணவேண்டும் என்றும், அவரது உரையைக் கேட்க வேண்டும் என்றும், மிகக்குறுகிய கால அவகாசத்திற்குள், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள், ஆர்வத்துடன் சுதுமலையில் கூடி நின்றார்கள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய தினம் தமிழீழத் தேசியத்தலைவர் ஆற்றிய உரை, 'சுதுமலைப் பிரகடனம்" என்று பின்னர் பெயர் பெற்றது. தேசியத் தலைவரின் சுதுமலைப் பிரகடனம் நடைபெற்று, இன்று 21 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற வேளையில், அன்று அவர் கூறி…

    • 0 replies
    • 1.2k views
  20. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக- முழுமையாக- தோற்கடிக்கும் கட்டம் நெருங்கிவிட் போதும் கூட, அவர்களிடம் உள்ள இரகசிய வளங்கள் சிறிலங்கா அரசுக்கு தொடர்ந்து தலையிடியைக் கொடுக்கக்கூடும் என்று அந்நாட்டின் வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  21. இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்ற உதவி நிறுவனங்கள் தயக்கம் [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்களினால் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு உதவி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் அக்கராயன், அம்பலப் பெருமாள்குளம், கோட்டை கட்டியகுளம், ஜெயபுரம் ஆகிய பகுதிகளில் தங்கியுள்ள மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு தமது அச்சத்தினையும் தயக்கத்தினையும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறும் இடர்காலக் கூட்டங்களில் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புதினம்

    • 0 replies
    • 493 views
  22. களமுனைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இலங்கைப் படையினர் போதை மருந்துகள் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதாகக் களமுனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் படைச் சிப்பாய்களுக்குப் படை அதிகாரிகளால் இவை வழங்கப்படுவதாகத் தெரியவருகிறது. படைநகர்வுகளின் போது விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதல்களினால் படையினருக்கு நாளாந்தம் இழப்புக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் படையினரை முன்னகர்வுச் சண்டைகளில் ஈடுபடுத்த இப் போதைமருந்து அல்லது ஊக்கமருந்துகள் படையிருக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. இதே வேளை படையினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சில பொதுமக்களும் இச்சந்தேகத்தை வெளிப்ப…

    • 7 replies
    • 1.8k views
  23. இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை மட்டுமல்ல நீர்த்தாங்கிகளையும் எடுத்து வருவதில் இடர்கள் காணப்படுவதாக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 458 views
  24. "எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன்" [வியாழக்கிழமை, 31 யூலை 2008, 06:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] எதிரிக்கு தரையிலும் கடலிலும் தக்க பதிலடி கொடுத்தவன் லெப். கேணல் கதிர்வாணன் என்று கடற்புலிகளின் தளபதி நரேன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கதிர்வாணனின் வீரவணக்க நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: லெப். கேணல் கதிர்வாணன், கடலில் எதிரிகளை தாக்கி அழித்து கடற்கலங்களை மூழ்கடித்து எதிரிக்கு பாரிய அழிவினை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை எதிரியிடம் இருந்து கைப்பற்றியவன். இவன் போரியலின் சகல வல்லமைகளையும் கற்றுத்தேர்ந்து போரினை அறிவியல் ஊடாக நகர்த்திய அதேவேளை …

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.