ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142861 topics in this forum
-
சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியைக் கைப்பற்றுவதே சிறீலங்காப் படையினரின் அடுத்த இலக்கு. கிளிநொச்சியை முழுமையாகக் கைப்பற்றி அதனைக் கொண்டாடும் நாள் வெகு விரைவில் இல்லை. விடுதலைப் புலிகள் தற்போது பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளனர். விடத்தல் தீவை விடுதலைப் புலிகள் கைப்பற்றியது கடற்புலிகளினது தளபதி சூசைக்கு இது பாரிய தோல்வி என அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல மேலும்
-
- 35 replies
- 3.6k views
-
-
யாழ்பாணத்திற்க்கு, இலங்கை டயலொக் நிறுவனத்தால் 3G தொலைபேசி சேவை அறிமுகம்.
-
- 27 replies
- 3.4k views
-
-
சிறிலங்காவில் இயங்கும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கும் அவற்றில் பணிபுரிபவர்களுக்கும் சிறிலங்கா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 496 views
-
-
பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியில் வீடொன்றில் தனித்திருந்த வயோதிபரொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரான ஆறுமுகம் தங்க வடிவேல் என்பவரே எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த முதியவரின் மனைவி இறந்து விட்டதாகவும் மகள் வெளிநாட்டிலிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் தங்கச் சங்கிலி அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில், இவரின் வீட்டிற்குள்ளிருந்த பொருட்களை இவருக்கு மேல் போட்டுக் கொழுத்தியே இவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. சம்பவ இடத்திற்குச் சென்ற பருத்தித்துறை மேலதிக மாவட்ட நீதிபதி எ.ஜி.அலெக்ஸ்ராஜா விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தை யாழ்…
-
- 1 reply
- 949 views
-
-
இலங்கை பாதுகாப்பு படையினர் கடந்த 20 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே யுத்தத்தை முன்னெடுக்கும் படையினருக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என சிறீலங்காத் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி அஸ்கிரி மாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கை ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலுக்கமைய பாதுகாப்புப் படையினர் விரைவில் பங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பர் என அஸ்கிரி மாநாயக்க தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்த முன்னெடுப்புகளில் முன்னாள் தளபதிகள் கொழும்பிலிருந்தே படையினரை வழிநடத்துவார்கள் எனவும் தற்போது படைத்தளபதிகள் எதிரிகளுக்கு எதிராக யுத்த முனைகளில் போரிட்டு வரு…
-
- 0 replies
- 640 views
-
-
கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு போதிய நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண சபை ஆளுநர் கொமடோர் மொஹான் ஜயவிக்கிர இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்ட போது, கிழக்கு மாகாணசபை இயங்காததால் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்யப் பட வில்லை. கிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்தப் பட்டு நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்யப் பட்ட போதிலும் நிதி ஒதக்கீடு வழங்கப் படாததால் சபை தனது அலுவல்களை முழு அளவில் செயற்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படு கின்றது. இந் நிலையில் நிதி உதவி கோரி ஆளு நர் அவசர கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். சேதமடைந்…
-
- 0 replies
- 525 views
-
-
மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் கடந்த புதன்கிழமை புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மொத்தம் பதினாறு பேர்களினுடையன என்று அவற்றை ஆய்வு செய்த சட்டவைத்திய அதிகாரி உறுதிசெய்துள்ளார். பொலிஸ் பேச்சாளர் எஸ்.ரஞ்சித் குண சேகர இத்தகவலைத் தெரிவித்தார். ஆறு வருடங்களுக்கு முன்னர் கொல் லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் சட லங்களின் எச்சங்களே அவை என்றும் சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சட்ட வைத்திய மற்றும் மரபணுப் பரிசோத னைக்காக நாளை கொழும்புப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்திடம் ஒப்படைக்கப் பட விருக்கின்றன. மட்டக்களப்பில் இராணுவக் கட்டுப் பாட்டுப்பகுதியான பாலமீன்மடு கிராமத் தில் பொது…
-
- 0 replies
- 550 views
-
-
கண்டி அரச வங்கியில் பணியாற்றும் தமிழ் இளைஞர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்யுனர். பணியாற்றும் கணணி இயங்குனராக பணியாற்றிய இந்த இளைஞன் மீது, கண்டியில் உள்ள பாதுகாப்பு துறை பேச்சாளரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலயின் வீட்டை வீடியே படம் எடுத்தததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1k views
-
-
யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்படட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படை அரண்மீது நேற்று முன்தினமிரவு 7.30 மணிக்கு மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண்மீது அதே இரவு 8.30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த இரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 567 views
-
-
பாராளுமன்றத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட சுகாதார அமைச்சரும், அவைத் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றன. இந்திய படையினரோ விமானங்களோ சார்க் மாநாட்டின் போது இலங்கையில் கடமையில் ஈடுபடுத்தப்படாதென அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு இந்திய விசேட பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க உள்ளதாகவும், இலங்கை வான் மற்றும் கடற்பரப்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, ஜனநாயகத்தின் அதி உயர் பீடமாக …
-
- 0 replies
- 712 views
-
-
காத்தான்குடி பிரதேசத்தில் மீண்டும் பயில்வான்களின் விசுவாசிகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்று நடைபெற்றது. காத்தான்குடி பிரதேசத்தில் அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையில் இயங்கி வந்த பயில்கானின் கொள்கையை பின்பற்றும் இஸ்லாத்துக்கு முற்றிலும் எதிரான தரீக் கதுல் முப்லிஹீன் காரியாலயம் சட்டத்தை மீறி நிர்மாணிக்கபட்டுள்ளது என்று காத்தான்குடி நகரசபை உட்பட பிரதேச அனைத்தும் சமய, சமூக அமைப்புக்கள், நிறுவனங்கள் வழக்கு தாக்கல் செய்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இக்கட்டத்தை தகர்த்ததுடன் பயில்வானின் சடலமும் அகற்றபட்டது. இச் சம்பவத்தின் போது காத்தான்குடி பிரதேச வாசிகள் மூவர் உயிரிந்தமையும் குறிப்பிடபட்டது. இ…
-
- 0 replies
- 861 views
-
-
யாழில் இருந்து தென்பகுதி விமானசேவை சார்க்மாநாடு முடியும்வரை நிறுத்தப்படும்! யாழ் குடாநாட்டிலிருந்து தென்பகுதிக்குச் செல்வதற்கான விமானசேவை எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து சார்க்மாநாடு முடியும்வரை முழுமையாக நிறுத்தப்படுமென படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 435 views
-
-
புதுடெல்லி சென்னை (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008 தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பல முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த பலனும் ஏற்படவில்லை. கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து,. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசை வலியுறுத்தி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஒருநாள் அடையாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மத்திய அரச…
-
- 0 replies
- 576 views
-
-
சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்படும் வலிந்த தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்புக்கள், எறிகணைத் தாக்குதல்கள் ஆகியவற்றின் காரணமாக வன்னியின் மேற்குப் பகுதியில் பாரிய மக்கள் அவலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 1.3k views
-
-
வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் இருந்தவர்கள் நாடு திரும்பும் போது கொண்டு வரும் பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை அரசாங்கம் நீக்குவதற்கு உத்தேசித்துள்ளது. ஏழு பொருட்களுக்கான வரிச்சலுகை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நீக்கப்படவுள்ள தாக சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி 29 மற்றும் 32அங்குல தொலைக்காட்சிப்பெட்டிகள், குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தன்னியக்க சலவை இயந்திரங்கள், ரெபிரிஜிரேடர்கள், நான்கு அடுப்புகளை கொண்ட கேஸ் அடுப்புகள் ஆகிய பொருட்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரிச்சலுகை நீக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலம் இருப்பவர்கள் நாடு திரும்பும் போது ஆயிரத்து ஐந்நூறு டொலர் பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதற்கு வரி விதிக்கப்படுவதில…
-
- 0 replies
- 706 views
-
-
காவற்துறை விசேட அதிரப்படையினருக்கு தாக்குதல் வாகனங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில் பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆயுதப் படையினரின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ஐந்து ட்ரக் வண்டிகள் பிலிப்பைன்ஸிலிருந்து 25 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் சுமார் 13 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவற்துறை விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகளினால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ரக ட்ரக் வண்டிகளை சுமார் இரண்டு கோடி ரூபாவிற்கு பெற்றுக் கொள்ள முடிந்த போதிலும் காவற்துறை விசேட அதிரடிப்படை உயர் அதிகாரிகள் நான்கரை கோடி ரூபா செலவிட்டு…
-
- 0 replies
- 662 views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் வன்னி மேற்குபகுதியை இம்முறை கைப்பற்றுவதே தற்போது நடந்துவரும் ராணூவ நடவடிக்கையின் நோக்கமென நமபகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.புலிகள் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடக்கூடிய ஆனையிறவு, முல்லைத்தீவு நோக்கிய படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்தப்பட்டளவிலும் புலிகளுக்குப்போக்கு காட்டிகொண்டு மன்னாரூடான நடவடிக்கையில் பெரும் ஆரவாரமெதுவுமின்றி புளியங்குளத்துக்கு ஊடறுக்க கூடியபடி நவ்வி என்றா பிரதேசத்துக்கும்,இன்னொரு தொகுதி படையினர் விடத்தல் தீவிற்கும் முன்னகர்ந்து விட்டதாகவும்,இந்த நகர்வு அடுத்தகட்டமாக நாச்சிகுடா கடலை தக்கவைப்பதற்காக நடக்குமென உயர் ராணூவ அதிகாரி தெரிவித்தார். இதேவேளை நவ்வியிலுள்ள் ராணூவமும் நிலைமைக்கு ஏற்ப தம்மைப்பலப்படுத்தி கொண்டு துணூக்…
-
- 1 reply
- 1k views
-
-
அரசசார்பற்ற நிறுவனங்களும் சமூக நல அமைப்புகளும் தவறான வழியில் சென்று கொண்டிருப்பதாகவும் நிதி மோசடிகள் காணப்படுவதாகவும் அடிக்கடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருவதை அவதானித்து வருகின்றோம். பொதுவாக இந்தக் குற்றச்சாட்டுகளை அரசாங்கமே திரும்பத்திரும்ப ஜெபித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசு குற்றம் சுமத்துவதோடு நின்று விடுகின்றதே தவிர தவறிழைக்கும் அமைப்புகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் எடுப்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இந்த நிலைமை இவ்வாறிருக்கும் போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூகநலத்திட்டங்களில் பாரிய மோசடிகளும் ஊழலும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசசார்பற்ற நிறுவனங்களை விட மிகமோசமான மோசடிகள் அரச சமூகநலத்திட்டங்…
-
- 0 replies
- 613 views
-
-
இலங்கையின் வன்முறை கலாசாரம் [ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2008, 11:16 மு.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நிகழ்ந்த- நிகழ்ந்து வரும் வன்முறை கலாச்சாரத்தின் தன்மை குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்: இலங்கை வன்முறைகள் பற்றி ஆராய்வதற்கு கறுப்பு ஜூலை இனக்கலவர அவலம் நேர்ந்த 25 ஆவது ஆண்டு பூர்த்தி நாளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இலங்கை இனப்பிரச்சினையின் வரலாற்றில் ஓர் கறைபடிந்த அத்தியாயமாக கறுப்பு ஜூலை கருதப்படுகிறது. கொழும்பிலும் வேறு பிரதேசங்களிலும் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், பெரும் எண்ணிக்கையிலாள வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 95 விழுக்காடு தமிழர்களின் வர்த…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட வெற்றியை கிழக்கின் உதயம் எனும் பெயரில் இலங்கை அரசாங்கம் கொண்டாடி ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள போதும், கிழக்கு மாகாணம் இன்னமும் வழமைநிலைக்குத் திரும்பவில்லை என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. கிழக்கின் வெற்றியை இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் ஜூலை மாதம் 19ஆம் திகதி பெரும் விமரிசையாக சுதந்திர சதுக்கத்தில் கொண்டாடியிருந்தது. இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்ற குழுவைச் சேர்ந்த ஒருவரை கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் அரசாங்கம் நியமித்திருப்பதாக பி.பி.சி. செய்தி குறிப்பிடுகிறது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து முழுமையாக மீட…
-
- 0 replies
- 488 views
-
-
கருணாநிதியின் அரசியல் நாடகம் தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சரும் சிறந்த திரைக்கதை வசனகர்த்தாவுமான மு.கருணாநிதியின் நெறியாள்கை மற்றும் திரைக்கதை வசனம், இயகத்தில் 'தமிழக மீனவருக்கான உண்ணாவிரதப் போராட்டம்' என்னும் திரைப்படமொன்று தமிழகமெங்கும நேற்று சனிக்கிழமை திரையிடப்பட்டது. இதன் மூலம் தமிழக மக்களை முட்டாள்களாக்கும் வல்லமை தற்போதும் கருணாநிதிக்கு உண்டென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கை கடற்படைக்கெதிராகவும் தமிழக மீனவர் பிரச்சினையை டில்லிக்கு உணர்த்தும் வகையிலுமே இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தபட்டததாக தனது கதைக்கு கருணாநிதி முன்னுரை வழங்கியுள்ளார் இந்தக் கதையில் அமைச்சர்களான ஆற்காடு வீரசாமி, அன்பழகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மூன்று மீனவர்கள் படையினரால் தாக்கப்பட்டுள்ளனர். 20.07.2008 / நிருபர் எல்லாளன் யாழ் குடாக்கடலில் உள்ள பாசையூர்பகுதியில் மூன்று மீனவர்கள் சிறிலங்காப் படையினரால் நேற்று தாக்கப்பட்டுள்ளனர். அ.ஜெலின் (27) மு.நிக்சன் (22), க.ஜெனிபேட் (20) ஆகிய மூன்று மீனவர்களுமே தாக்கப்பட்டவர்களாவர் இவர்கள் மூவரும்இரண்டு வாரத்திற்கு தொழிலில் ஈடுபடமுடியாது எனவும் படையினர் தடைவிதித்துள்ளனர். http://www.sankathi.com
-
- 0 replies
- 605 views
-
-
கெஹலியவின் வீட்டை வீடியோ படம் எடுத்தாராம்: வங்கி ஊழியர் கண்டியில் கைது Sunday, 20 July 2008 கண்டி நகரிலுள்ள அரசாங்க வங்கி ஒன்றின் கிளையில் பணிபுரியும் தமிழ் ஊழியர் ஒருவர் கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கண்டியிலுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் இல்லத்தை வீடியோ படம் எடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டே இவர் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியே இவர் கைத செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கொழும்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். நவீன டிஜிற்றல் கமரா ஒன்றைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமைச்சர…
-
- 0 replies
- 795 views
-
-
சிறீலங்காவில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பை மூடுவதற்குத் தீர்மானம் ஞாயிறு, 20 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] சிறீலங்காவின் அமைந்துள்ள பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த வருட இறுதிக்குள் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளது. பிரித்தானியத் தூதரகம் மூடுவதற்கான காரணம் உத்தியோகபூர்வமாகக் தெரிவிக்காத போதும், மறைமுகமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்கா அரசாங்கத்திற்கு பிரித்தானியத் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைள் தொடர்பான ஆலோசனைகளை சிறீலங்கா அரசாங்கம் உசாதீனம் செய்து வந்தமையாலேயே இந்த முடிவை பிரித்தானியா மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?…
-
- 0 replies
- 568 views
-