ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரையில் ஒளிப்படங்களின் பங்கு அளப்பரியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 578 views
-
-
கிழக்கில் பல விடுதலைப் புலிகளின் பிஸ்ரல் படையணிகள் ஊடுருவியுள்ளனர் – பிள்ளையான் திங்கள், 14 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] தமிழீழ விடுதலைப்புலிகள் இப்போது மிகப்பலவீனமாக இருப்பதால் விரைவிலேயே சிறிலங்கா இராணுவத்தினர் வன்னிப் பிரதேசத்தையும் முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடுவர் என தாம் நம்புவதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆயுததாரியுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான சண்டே ஒப்சேவருக்கு அவர் வழங்கியிருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்துவெளியிட்டுள்ள பிள்ளையான், கிழக்கு மாகாணத்தை தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்து அங்கு ஒரு ஜனநாயக ரீதியான சமுதாயத்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் களமுனையில் சிறப்பான களப்படப்பிடிப்பை மேற்கொண்டு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பாராட்டைப்பெற்ற போராளிப் படப்பிடிப்பாளர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 600 views
-
-
முப்பது வீதமான சிங்கள மக்களே புலிகளை போரின் மூலம் நசுக்கலாம் என நம்பிக்கை போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என்று முப்பது வீதமான சிங்கள மக்களே நம்புகின்றனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. லண்டன் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் எரித்திரிய கற்கைநெறிகளுக்கான துறையினர், "சமாதான வாக்கெடுப்பு" என்ற தலைப்பின் கீழ் சிறிலங்காவில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு விபரத்தின் சில வருமாறு: தற்போது நடைபெறும் போர் பாரதூரமான பிரச்சினை என்று 37 வீதமான சிங்க…
-
- 0 replies
- 883 views
-
-
யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் களமுனைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 672 views
-
-
மீராவோடை குண்டு வெடிப்பில் ஒருவர் காயம் வீரகேசரி இணையம் 7/14/2008 3:59:28 PM - மட்டக்களப்பு மீராவேடை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இப்பகுதியிலுள்ள மின்மாற்றிக்கு அருகில் குண்டு வெடித்துள்ளதாகவும், இதில் மின்மாற்றிக்கு சேதம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் ஓட்டமாவடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
- 0 replies
- 667 views
-
-
இம்மாதம் மூன்று பிரிவுகளாக இந்தியப்படையினர் கொழும்பு வருவர்! திங்கள், 14 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] எதிர்வரும் சார்க் மாநாட்டிற்கு இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு வரும்போது இந்திய படையினரின் பாதுகாப்புடனேயே வரவுள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பு வழங்க உள்ள இந்தியப்படையினரின் எண்ணிக்கை சிறி லங்காவில் உள்ள ஊடகங்கள் தெரிவுக்கும் அளவுக்கு பெருந்தொகையாக இருக்காது என தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை 3000 இந்தியப்படைகள் இந்த நடவடிக்கைகளுக்காக கொழம்பு வருவர் எனவும், இதன் முதல்க்கட்டமாக நாளை செவ்வாய்க்கிழமை (15 ஜூலை) இந்தியப்பாதுகாப்பு படையினரில் ஒரு தொகுதி படையினர் கொழும்பு வரவுள்ளதாகவும், எதி…
-
- 0 replies
- 702 views
-
-
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஒரு சைவ உணவகத்தில் சாப்பாட்டுத் தட்டில் போடப்படும் “லஞ்ச் சீட்” டுக்கும் இரண்டு ரூபா மேலதிகமாக அறவிடப்படுகிறது. இது எவ்வகையிலும் நியாயமில்லை எனப் பொதுமக்கள் கூறுகின்றனர். தண்ணீர் செலவைக் குறைக்கும் நோக்குடன் சாப்பாட்டுத் தட்டுக்களைக் கழுவாமல் மீண்டும் பரிமாற இந்த “லஞ்ச் சீட்” முறை துணை செய்கிறது. இருப்பினும் இந்த சைவக் கடையில் இது ஒரு மேலதிக கட்டணமாகவே அறவிடப்படுகிறது. மலிவாகச் சாப்பிட தோசைத் கடைக்குச் சென்றால் இப்படி கொள்ளையா? என்றும் மக்கள் கேட்கின்றனர். இதே கடையில் தோசை சாப்பிட்டு விட்டு மூன்று இடியப்பங்கள் கேட்டால் ஐந்து எடுக்குமாறு வெயிட்டர்கள் வலியுறுத்துகின்றனர். ஐந்து இடியப்பத்துக்கே கட்டணமும் அறவிடப்படுறது. இது மற்றும் ஒரு பகல் கொள்ளைய…
-
- 3 replies
- 2k views
-
-
சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரிக்கை ஞாயிறு, 13 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] சிறீலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்தப் போவதாக சீனா எச்சரித்துள்ளது. மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை இந்தியாவின் ‘கெயன்’ நிறுவனமும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் செய்துகொண்ட உடன்படிக்கையை அடுத்தே சீனா இது தொடர்பில் இறுதி முடிவு எட்டும் வகையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ஈநியூஸி்ல் தெரிவித்துள்ளது. சிறீலங்காவில் எண்ணெய் வள ஆய்வுப் பணிகளை சீனாவிடம் கையளிப்பதற்கே முன்னர் இலங்கை இணங்கியிருந்த நிலையில், இந்திய நிறுவனத்திடம் இந்தப் பணிகள் ஒப்ப…
-
- 4 replies
- 1.7k views
-
-
உலக வல்லரசு நாடுகளின் சில புலனாய்வு சேவையினர் இலங்கையின் வடக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான புதிய தகவல்களை அறியும் நோக்கில் மறைமுகமாக செய்மதி படங்களை எடுத்து வருவதாக இலங்கை பாதுகாப்பு துறையின் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பாக வாராந்தம் செய்திமதி மூலம் புகைப்படம் எடுப்பதுடன் தற்போதைய போர் நிலைமைகளை கண்காணித்து அந்த தகவல்களையும் தமது நாடுகளுக்கு வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் வழங்கி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜதந்திர ரீதியில் பெற்றுக்கொள்ளும் தகவல்களுக்கு மேலதிகமாக இந்த நாடுகள் பெற்றுக்கொள்ளும் இந்த ரகசிய தகவல்கள் எந்த நோக்கத்திற்காக பெற்றுக்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து பாரிய பிரச்சினை எழுந்துள…
-
- 11 replies
- 2.5k views
-
-
கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ சிவானந்தா வீதியிலுள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பாக நின்று வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி ஆட்டோவில் வந்த மூவரால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்றுள்ளது. பலர் அவ்விடத்தில் நின்று வழிபட்டபோது திடீரென ஆட்டோவில் வந்த இவர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீசிவானந்தா வீதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகல் 1.30அளவில் கொட்டாஞ்சேனை சுமித்திரா மாவத்தையில் வீதியால் நடந்து சென்று கொண்டி…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்திய படையினர் கொழும்புக்கு வரவுமில்லை, வரப்போவதுமில்லை [12 - July - 2008] * அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென இந்தியாவிலிருந்து 1500 படையினர் இலங்கை வந்துள்ளதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மைகளுமில்லையெனத் தெரிவித்துள்ள அரசு இந்தியப் படை வரவுமில்லை, இனிவரப்போவதுமில்லையெனவும் உறுதிபடக் கூறியுள்ளது. சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்கென 1500 இந்தியப் படையினர் வந்துள்ளதாக வெளிவரும் செய்திகள் தொடர்பாக அரசு விளக்கமளிக்க வேண்டுமென ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்னாயக்கா வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கேள்விக்கு அரசு சார்பாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பதிலளிக்கு…
-
- 11 replies
- 1.7k views
-
-
இலங்கை வாழ் தமிழர்கள் பாதுகாப்பற்ற ஓர் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த அரசியல்வாதி சிறிசேன குரே தெரிவித்துள்ளார் வடகிழக்குப் பிரச்சினைக்கு முப்பரிமாண ரீதியில் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையான அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தினாலோ அல்லது பேச்சுவார்த்தைகளின் மூலமாகவோ இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வுஇ ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்கள் பல்வேறு சிக்கல்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான படை நடவடிக்கைகள் குறித்த சிங்கள ஆய்வாளர்களின் தொனிகள் மாறத்தொடங்கியிருக்கின்றன. படையினர் வழங்கும் புலிகளின் இழப்புத் தொகைகளைப் பாடுகின்ற முன்னைய தெனாவெட்டு கொஞ்சம் அடங்கி, புலிகள் வலிந்த தாக்குதல் செய்யும் சூழல் பற்றிய ஆய்வுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். படை நகர்வின் தொடக்க வேகம், படையினரின் சராசரி இழப்புக்கள், காலத்திற்குக் காலம் மாறுபடுவதாகத் தெரியும் அவர்களின் கால வரம்புகள் என்பன சிங்களப் படைய மூலோபாயத்தை நியாயப்படுத்தும் தென்னிலங்கை ஆய்வாளர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ~தமிழ்த் தேசியவாதத்தில் நம்பிக்கையுள்ள மக்கள் அங்கே இருக்கிறார்கள். ஒரு ஆயிரம் போராளிகள் மட்டில் இன்னமும் இரண்டு தசாப்தங்களுக்கு (அதாவது, இருபது வரு…
-
- 4 replies
- 1.8k views
-
-
நேர்மையான போரை எடுத்துச்செல்ல முடியாத சிறிலங்கா அரசு, மக்கள் மீதுபோரைத் திணிக்கின்றன. 14.07.2008 / நிருபர் எல்லாளன் களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது: ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர். தமிழ் மக்கள் திடமான நிலையில் …
-
- 0 replies
- 600 views
-
-
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வது விடுதலைப்புலிகள் தான் என்று வீண் பழி சுமத்தும் மஹிந்தவின் பொய் பிரச்சாரத்திற்கு தற்போது இந்திய அரசும் ஒத்து ஊதுவது மிகுந்த வேதனைக்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாh. மேலும் : நாகை மாவட்டம், ஆறுகாட்டுத் துறையைச் சேர்ந்த மீனவர்கள் வாசகன் மற்றும் நாரயணசாமி ஆகியோர் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் நமது கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகி பலியாயியுள்ளனர். தமிழக மீனவர்களை கொலை செய்வது இலங்கை கடற்படைதான் என்பது உலகறிந்த உண்மை. ஆனால், தமிழக மீனவாகளைச் சுட்டுக் கொல்வது விடுதலைப் புலிகள் தான் என்…
-
- 1 reply
- 873 views
-
-
Posted on : 2008-07-14 தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளுடன் பேசுங்கள்! ""புதிய அரசமைப்பு ஒன்றைத் தேடிக்கொள்ளும் நகர்வுகளை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கின்றது.'' இப்படித் தகவல் வெளியிட்டிருக்கின்றார் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரண. "ஒற்றையாட்சி முறை', "சமஷ்டி முறை' என்ற இறுக்கமான நிலைப்பாடுகளைத் தளர்த்தி, ஒற்றையாட்சி முறைக்குள் அதிக அதிகாரப் பரவலாக்கத்தை ஏற்படுத்தவும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டுவரவும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். கொழும்பில் வார இறுதியில் புத்தக வெளியீட்டு வைபவம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர…
-
- 0 replies
- 953 views
-
-
இந்தியத் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்ய மகிந்த திட்டம்: எதிர்த்துப் போராட ஜே.வி.பி. Monday, 14 July 2008 அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இந்தியாவின் தேவைகளுக்காக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் முயலுமானால் போராடி அதனைத் தடுத்து நிறுத்துவதற்குத் தயங்கப்போவதில்லை எனவும் அறிவித்திருக்கின்றார். 1987 ஆம் ஆண்டு பலாத்காரமாக எமது நாட்டுக்குள் புகுந்து உயிரிழந்த இந்தியப் படையினருக்கு நினைவுத் தூபி அமைக்கும் அளவுக்கு அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு மண்டியிட்டுள்ளார். இந்தியாவிடம் மண்டியிட்டுள்ள அரசாங்…
-
- 0 replies
- 638 views
-
-
சார்க் மாநாட்டுப் பாதுகாப்பு: தமிழர்களுக்கு விடுதிகளில் தடை? Monday, 14 July 2008 கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்பிலுள்ள தற்காலிக விடுதிகளில் தங்குவதைத் தடை செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சார்க் உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்குவதைத் தடுப்பதற்குப் பொலிஸார் முயற்சிப்பதால், அனுமதி வழங்க விடுதி உரிமையாளர்கள் பின்னடிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். "சார்க் உச்சிமாட்டைத் தொடர்ந்து மு…
-
- 0 replies
- 606 views
-
-
சார்க் மாநாட்டில் பங்கேற்கும் ஏனைய நாட்டு தலைவர்களுக்காக இலங்கை அரசாங்கம் 12 குண்டுத்துளைக்காத கார்களையும் பி எம் டபில்யூ பாதுகாப்பு மோட்டார் சைக்கிள்களையும் இறக்குமதி செய்யவுள்ளது. இவற்றுக்காக சுமார் 960 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன. இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் சுமார் 31 கார்களை 8.6 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது. 12 கார்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படையினரின் நிதிஒதுக்கீட்டின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் 31 கார்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன உட்பட்டோரின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இதுமட்டுமன்றி “சார்க்” மாநாட…
-
- 1 reply
- 920 views
-
-
வட போர் அரங்கில் பெருமெடுப்பிலான போரை நடத்திவரும் இலங்கை அரசுக்கு தனது படைகளில் ஏற்பட்டுள்ள ஆட்பற்றாக்குறையே புலிகளை விட பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமது படைகள் வன்னியில் பெரிய பெரிய பிரதேசங்களையெல்லாம் கைப்பற்றிவிட்டன எனக் கொழும்பில் அரசு அறிக்கை விட்டு ஆனந்தம் கொள்கின்றபோதும், பிடித்த இடங்களைத் தக்கவைப்பதற்கு ஆட்கள் இன்றி அவதிப்படும் பெரும் சிரமம் களத்தில் நிற்கும் அரச படைகளுக்குத்தான் தெரியும். அரச படைகள் எதிர்நோக்கியுள்ள இந்தப் பெரும் பிரச்சினையை உடனடியாகச் சீர்செய்யும் வகையில், தெற்கில் படைகளுக்கு ஆட்சேர்க்கும் தீவிர முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, கைத்தொலைபேசிகள் மூலம் குறுந்தகவல் ஊடாக படைகளுக்கு ஆட்சேர்ப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
சத்திரியன் " விடுதலைப் போராட்ட அமைப்புகள் தமது இலக்கை அடையும் வரையில் ஒருபோதும் ஆயுதக் களைவை மேற்கொள்ளக் கூடாது.' "கடந்த 50 வருடங்களில் ஆயுதக் களைவை மேற்கொண்ட எந்தவொரு விடுதலை அமைப்பாவது சமாதானத்தை அனுபவிக்கும் வரை உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.' இது கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபாப் புரட்சிக்குத் தலைமை வகித்தவருமான பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கின்ற கருத்தாகும். உலகின் மிகச்சிறந்த புரட்சியாளர்கள் என்று பட்டியலிட்டால் அதில் முக்கியமான இடத்தை பிடெல் காஸ்ட்ரோவுக்கு அவரது எதிரிகள்கூடக் கொடுப்பார்கள். தற்போது தள்ளாத வயதில் நோயுடன் போராடும் அவர் இன்னமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் வேறு ஊடகங்கள் வாயிலாகவும் புரட்சியாளர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள் நேற்று முன்தினம் லண்டனில் திரண்டு 'பொங்குதமிழ்' எழுச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர
-
- 0 replies
- 728 views
-
-
http://www.bbc.co.uk/tamil/highlights/stor...unareturn.shtml
-
- 1 reply
- 1.6k views
-
-
கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன? [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 04:02 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இவை தொடர்பாக தெரியவருவதாவது: கிழக்கு கள நிலைமைகளில் கைதேர்ந்தவர் என்ற நம்பிக்கையுடனும் தமது உத்தரவுகளுக்கு கட்டுப்படுபவராக இருப்பார் என்ற எண்ணத்துடனும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பிள்ளையா…
-
- 6 replies
- 1.9k views
-