ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு [ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:12 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாக தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவில் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார். வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் பொதுத்திருவுருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி மாவீரர்களின் திரு…
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ்நாட்டு கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு வானூர்திகளை பயன்படுத்த இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 612 views
-
-
இந்தியாவுடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கையை பிற்போட வேண்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஜெ.வி.பி அவசர கோரிக்கை வீரகேசரி நாளேடு 7/6/2008 7:39:24 PM - இலங்கையில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் இந்தியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் பிற்போட வேண்டும். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் குறித்து பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜே.வி.பி. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய நிறுவனத்துடனான எண்ணெய்வள ஆய்வு உடன்படிக்கை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது. மன்னார், கடற்பரப்பில் எண…
-
- 0 replies
- 621 views
-
-
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகளால் சீற்றமடைந்திருக்கும் சிறிலங்கா அரசு, இப்படியான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு உலகெங்கும் உள்ள தனது தூதரங்கங்களுக்கு அறிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 914 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
பூநகரியில் இருந்து அரியாலை முகாம் மீது விடுதலைப்புலிகள் எறிகணை வீச்சு! கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரியில் இருந்து யாழ் அரியாலை படைமுகாம் நோக்கி விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நேற்று காலை 10:00 மணியவில் அரியாலை உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள படை முகாம்களில் சுமார் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படையினருக்கு ஏற்பட்ட சேத விபரங்களை படைத்தரப்பு இன்னும் வெளியிடவில்லை. நிருபர்:ஈழச்செல்வன் http://www.tamilseythi.com/tamileelam/poon...2008-07-06.html
-
- 0 replies
- 2.4k views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் இருப்பதாக கூறப்படும் எண்ணெய்வள ஆய்வு குறித்து இந்தியாவின் கேயான் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் நாளை கைச்சாத்திடவுள்ளது. இந்திய நிறுவனத்திற்கான ஆய்வு அனுமதி ரகசியமாக கோரப்பட்ட கேள்வி பத்திரத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கான உடன்படிக்கை நெறிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த உடன்படிக்கையில் உள்ள விடயங்கள், இதனால் நாட்டுக்கு ஏற்படகூடிய நன்மைகள், எண்ணெய் வளத்தை கேயான் நிறுவனத்துடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது போன்றவை குறித்து வினைத்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கனிய எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பதாக கூறிய எண்ணெய…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களை இப்போதைக்கு உடனடியாக தோற் கடிக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் புலிகளை தோற்கடித்து விடலாம் என்று இராணுவம் கூறினாலும் அது உடனடியாக சாத்தியம் ஆகாது. இந்தப் போரை வெல் வதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவர் கருணா தெரிவித்தி ருக்கிறார். அவர் இது குறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு: விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னமான நிலையிலேயே இருக்கிறார்கள். எனினும் அவர்களை உடனடியாக வெல்ல முடியாது. அவர்கள் இப்போது தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களால் இப்போது வலிந்த தாக்கு தல்களை முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வாய்ப்பு இலங்…
-
- 9 replies
- 2.2k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சிப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பொதுமக்களின் வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 551 views
-
-
சிறிலங்கா அரசுக்கு வர்த்தகத்துறையில் ஏற்பட்டு வரும் பாதிப்புக்கள் ஆபத்தான கட்டத்தை அண்மித்துள்ளதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 651 views
-
-
ராஜ தந்திரிக்கான கடவுச்சீட்டில் திருட்டுத்தனமாக லண்டனுக்குள் நுளைந்த கருணா கைது செய்யப்பட்டு சில காலம் இமிக்கிரேசன் விருந்தாளியாக கொட்டடியில் இருந்தார். தண்டனை முடிந்ததும் அவர் போய்ச் சேரும் இடம் எதுவென்று தெரியாமல் இந்தியா, நேபால், நியூஸ்லாந்து, ஆர்ஜன்ரீனா என்று ஒவ்வொன்றாக சொல்லிப்பார்த்தார்............. தொடர்ந்து வாசிக்க................
-
- 1 reply
- 2.1k views
-
-
மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள - கதிர்காமம் வீதியில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த இருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 556 views
-
-
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 559 views
-
-
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 541 views
-
-
வடமராட்சியில் கரும்புலிகள் தின சுவரொட்டிகள் யாழ். நகரப் பகுதியில் மக்கள் நடமாட்டமில்லை [06 - July - 2008] ] * கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு படையினர் பலத்த பாதுகாப்பு கரும்புலிகள் தினமான நேற்று சனிக்கிழமை யாழ். மாநகரப் பகுதி சன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டதுடன் இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன. கரும்புலிகள் தினத்தையொட்டி விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் எதனையும் நடத்தலாம் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக சோதனை நடவடிக்கைகளையும் வீதி ரோந்து நடவடிக்கைகளையும் படையினர் வெகுவாக அதிகரித்திருந்தனர். இதன் காரணமாக பீதியடைந்த மக்கள் கரும்புலிகள் தினமான நேற்று யாழ். மாநகரப் பகுதியில் தமது நடமாட்டங்களை வெகுவாகக் குறைத்…
-
- 0 replies
- 689 views
-
-
கருத்துக்கணிப்பை நடத்தினால் புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகளா? இல்லையாவென்பதை சர்வதேசம் அறிய முடியும் [06 - July - 2008] *விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் யோகி கூறுகிறார் விடுதலைப் புலிகளையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவரும் சர்வதேசம், தமிழ் மக்கள் தன்னுரிமையை வேண்டுகிறார்களா இல்லையா என்பதை அறியவும் விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளவும் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப்பார்க்க வேண்டுமென விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரும் சமர் ஆய்வுப் பொறுப்பாளருமான யோகரட்ணம் யோகி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் தடை செய்துவிட்டன என்பதற்காக விடுதலைப் புலிகளின் போராட்டம் நின்றுவிடப்போவதில்லை. எம்மை தடை செய்துவிட்டார்…
-
- 0 replies
- 558 views
-
-
தாயகக்த்தில் இருந்து நேரடியாக நேரலை மூலம் நிகழ்ச்சிகள் தற்பொழுது இணையத்தில் ஒளிபரப்புகின்றது கொஞ்ச நேரம் தடங்கி வரும் பின் நல்லா இருக்குது நான் தற்பொழுது பார்த்து வருகிறேன்.. கரும்புலிகளின் நிணைவு நாளுடன் இவ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..... இவ் ஒளிபரப்பு http://www.tamilntt.com/ இவ் தொடரியில் பார்க்கலாம்...
-
- 5 replies
- 3.3k views
-
-
-
மாகாணசபை முறையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். எனினும், 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபை முறையின் மூலம் தீர்வுகாணமுடியாது என்பது தமக்கும் தெரியும் எனவும், அதற்காக, மாகாணசபையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வேறுகட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருணா கூறியுள்ளார். தமது கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அடுத்த அமர்வில் கலந்துகொண்டு, 13வது திருத்தச் சட்டமூலத்தை மு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இன்றுமுதல் தொலைக்காட்சியை நேரடியாக பார்க்கலாம் windowsmedia player அல்லது VLC Media player ல் பார்வையிடலாம் பார்ப்பதற்கு http://tamilntt.com/
-
- 5 replies
- 3.3k views
- 1 follower
-
-
கறுப்பு ஜூலை நினைவுதின நிகழ்ச்சிகளைத் தடுக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை! கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் வெளிநாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கக் கூடாதென, இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது. 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து 83ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கே அனுமதியளிக்கவேண்டாமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு…
-
- 0 replies
- 768 views
-
-
மணலாறு "மைக்கல் முகாமை" கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு! மணலாறு முன்னரங்கப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் ‘மைக்கல் முகாமை’ இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவினர் கைப்பற்றியிருப்தபாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த முகாம், முல்லைத்தீவுக் காட்டுப்பகுதியிலுள்ள முக்கிய முகாமொன்றுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டமுகாம் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன. முல்லைத்தீவை நோக்கி இராணுவத்தினர் ஜனகபுரத்தின் ஊடாக முன்னேறிவருவதாகவும், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்தே இராணுவத்தினர் மைக்கல் முகாமைக் கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில…
-
- 0 replies
- 1.3k views
-
-
போலிக் கடவூச்சீட்டை பயன்படுத்தி கருணா இலங்கை வந்தார் என – கிரியெல்ல குற்றச்சாட்டு! கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் நாடு திரும்புவதற்காக பயன்படுத்தியூள்ள கடவூச் சீட்டும் போலியானதொன்றென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். போலிக் கடவூச் சீட்டு தயாரிப்பதில் வெளிவிவகார அமைச்சு தற்போது கைதேர்ந்த நிலையை அடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியூள்ளார்.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/laksma...2008-07-06.html
-
- 0 replies
- 700 views
-
-
சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்புக்களை வழங்குவதற்கு 25,000 படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 650 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை 138 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்கள புள்ளி விபரங்களிலிருந்து தெரியவருகின்றது. விபரம் வருமாறு: யாழ் மாவட்டத்தில் 417 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 75 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 96 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 03 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. முல்லைத் தீவு மாவட்டத்தில் 102 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 04 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 105 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 18 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 187 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 06 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 262…
-
- 0 replies
- 595 views
-