Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் நகர படைக்காவலரண் மீது புலிகள் துணிகரத் தாக்குதல்: ஒருவர் பலி- காவல்துறையினர் இருவர் காயம் [புதன்கிழமை, 18 யூன் 2008, 06:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் நகருக்கு அண்மையில் உள்ள சிறிலங்காப் படையினரின் காவலரண் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அதிகம் உள்ள மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த படையினரின் காவலரண் மீதே இத்துணிகரத் தாக்குதல் இன்று புதன்கிழமை அதிகாலை 2:10 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. "இத்தாக்குதலுக்கு புலிகள் கைக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து இன்று காலை முதல்…

  2. தமிழகத்தோடு இரத்த சம்பந்தமுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா தலையிடக்கூடாது என்று புதுடில்லியிலேயே நின்று உத்தரவிடும் பாணியில் சிறிலங்கா அரசாங்க அமைச்சர் ரோகித போகல்லாகம கருத்து தெரிவித்துள்ளமையை தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் "தமிழோசை" நாளேடு சாடியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1k views
  3. சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் தந்திரோபாயம் தொடர்கின்றது "சர்வதேசப் பிரசாரப் போரில் தோற்றுவிட்டோம்.'' அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார். இலங்கையில் தமது அரசும் படைகளும் ஏதோ நல்ல காரியங்களை ஆற்றுவன போலவும், ஆனால் சர்வதேச மட்டத்தில் தமிழர்களின் பிரசாரப் பீரங்கிகள் தமது அரசின் நல்ல செயற்பாடுகளை எல்லாம் மூடிமறைத்துத் துவம்சம் செய்து விட்டன என்பது போலவும் அர்த்தப்படுத்தும் விதத்தில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கலாம். ஆனால், களத்தில் கேடு பண்ணிக்கொண்டு, வெறும் பிரசாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் ஏமாற்றி நல்ல பெயர் சம்பாதிக்கலாம் என்ற …

  4. காலி நகரில் சுற்றிவளைப்பு : 7 தமிழர்கள் கைது. 20.06.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு காலி நகரை அண்டிய பகுதிகளில் சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலைநடத்தினர் இச் சுற்றிவளைப்பின்போது 7 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று அதிகாலை முதல் வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி நகரின் சந்தைப்பகுதி, பஸ்தரிப்பிடங்கள், காலி கோட்டை போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமான தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது அப்பக…

  5. சிராட்டிகுளம் நோக்கிய நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு. மன்னார் பெரியமடுவிலிருந்து சிராட்டிகுளம் நோக்கிப் பெருமெடுப்பில் மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் முற்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இத் தாக்குதலில் பலத்த உயிர் இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர். ஆயுதங்கள் சில விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று மாலை 4.00 மணியளவில் பின்புலத்தில் இருந்து பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் இந்த முன்நகர்வினை மேற்கொண்டனர். இந்த முயற்சியினை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தினர். இறுதியாக ஆயுதங்களையும் கைவிட்டுப் படையினர் பின்வாங்கினர். இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட…

    • 0 replies
    • 976 views
  6. சிறிலங்காப் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் குறித்த விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலகுவில் கிடைப்பதாக அந்நாட்டு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.4k views
  7. பிரான்சில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் தமிழர்கள் வெள்ளமென திரண்டு "எமது நிலம் எமக்கு வேணடும் என" முழக்கமிட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 875 views
  8. இன்று சர்வதேச அகதிகள் தினம். உலக நாடுகளில் இயற்கை அனர்த்தங்களாலும், போர், கலவரங்கள், வன்முறைகள் போன்ற மனிதக் கொடூரங்களாலும் உறவுகளையும், உடைமைகளையும், உறையுளையும் தொலைத்து ஏதிலிகளாக ஏங்கித் தவிக்கும் பல மில்லியன் மக்கள் குறித்து சர்வதேசம் சற்றேனும் ஏறெடுத்துப் பார்த்துச் சிந்திக்கும் தினம். ஏதிலிகள் பிரச்சினை அதிகம் உள்ள ஆபிரிக்க நாடுகளில் ஜூன் 20 ஆம் திகதி "அகதிகள் நாளாக' அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில், அதனையே "சர்வதேச அகதிகள் தினமாக' கடைப்பிடிப்பது என 2000 ஆம் ஆண்டு டிசெம்பரில் ஐ.நா. தீர்மானித்தது. அதன்படி 2001 முதல் இத்தினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. சமூகத்தில் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினர் குறித்து…

    • 0 replies
    • 1.1k views
  9. தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் -ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளிடம் தமிழ்க்கட்சிகள் கோரிக்கை. [ வியாழக்கிழமை, 19 யூன் 2008, 10:05.01 AM GMT +05:30 ] இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இடம்பெற்று வரும் சட்ட விரோதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களால் தமிழ் மக்களின் இருப்பே இன்று கேள்விக் குறியாகி விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள தமிழ்க் கட்சிகள்; தமிழ் மக்களைக் காப்பாற்ற இனியாவது சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் இலங்கை நிலைமை குறித…

    • 0 replies
    • 757 views
  10. நளினியின் மனு தொடர்பில் பதிலளிக்க தமிழக அரசாங்கத்திற்கு கால அவகாசம் [ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2008, 03:24.24 AM GMT +05:30 ] இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி , தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் சிறைத் தண்டனை அனுபிவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யுமாறு சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே சென்னை மே…

    • 0 replies
    • 759 views
  11. சென்னைத் தீவுத் திடலில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற ம.தி.மு.க.மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்வது தமிழனத்துக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். அம் மாநாட்டில் மேலும் வை.கோ அவர்கள் கூறியதாவது : தமிழக மீனவர்களையும் இலங்கை தமிழர்களையும் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இராணுவ உதவியும், 2 சதவீத வட்டியில் 400 கோடி ரூபாவைக் கடனாகவும் இந்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவில்ல எனப் பிரதமர் பொய் சொல்கிறார். மருந்து மற்றும் உணவின்றித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருந்து வழங்குவதையும் இந்திய அரசு தடை…

    • 0 replies
    • 790 views
  12. இந்த அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவற்றைக் கைப்பற்றி ஆக்கிரித்தாலும் தமிழாகளுக்கு உரிய அரசில் தீர்வு கிடைக்கும் வரை தமிழர்களின் போராட்டம் தொடந்த வண்ணமே இருக்கும் என்று த.தே.கூட்டணி எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். போரட்டத்தின் வடிவம் மாறுமே தவிர, போராட்டத்தின் நோக்கம் ஒருபோதும் மாறாது என்று கூறிய அவர். கௌவரவம் மிக்க அரசியல் தீர்வின் ஊடாகவே தொடரும் இந்த யுத்தத்தை நிறுத்த முடியும் என கூறினார். பாராளுமன்றில் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது பேசிய அவர் மேலும் வடகிழக்கு மற்றும் கொழும்பு உட்பட எல்லா இடங்களிலும் மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகிறது. இப்படியான நிலையில் இன்றைய சூழலில் சாட்சிகளைப் பாதுகா…

    • 0 replies
    • 802 views
  13. வடமராட்சியில் பத்து மீனவர்கள் கைது வெள்ளி, 20 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடமராட்சி வடக்கு மற்றும் முனைப்பகுதியில் மூன்று கிலோமீற்றர் எல்லைக்கு அப்பால் மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பத்து மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவ்களது ஐந்து கட்டுமரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வியாழக்கிழமை நீதிமன்றில் ஆயர்படுத்தியபோது ரூ2000 காசுப்பிணையில் வீடுசெல்ல அனுமதித்ததாகவும் நீதியாளர் அவர்களை எச்சரித்ததோடு சிறீலங்கா படையினரிடம் அவர்களது கட்டுமரங்களை மீள ஒப்படக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். சிறீலங்கா படையினர் வடமராட்ச்சி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீனவர்களை பகல்வேளைகளில் கரையில் இருந்து மூன்று கிலோமீற்றர் எல்லைவரை கட்…

  14. யாழில் நகைக்கடை உரிமையாளரை காணவில்லை வெள்ளி, 20 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] யாழ்பாணம் நாவாந்துறை கண்ணபுரம் பகுதியை சேர்ந்த இளம் நகைக்கடை உரிமையாளரை கடந்த செவ்வாய்முதல் காணவில்லை என அவரது தாயாரால் மனித உரிமைகள் ஆணையகத்தால் முறையிடப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போனவர் 26 அகவையுடைய பிரபாகர் பிரதாப் சக்கரவர்த்தி எனத் தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1336

  15. வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தின் அருகில் சற்று முன் தற்கொடைத் தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக இராணுவ பேச்சாளன் தற்போது ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இத் தாக்குதலில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊந்துருளியில் வந்த ஒருவரே தற்தகொடைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது.

  16. உருப்படியாகச் செய்ய, உருகுமா இந்தியா? -ப.தெய்வீகன்- 'இந்தியா தனது அரசியல் சிக்கலைiயும் அது சார்ந்த நலன்களையும் விடுத்து, ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு அறிவுபூர்வமான சிக்கலாக உணர்ந்து, எமது மன உணர்வுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்ள முன்வருகிறதோ, அன்றுதான் ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையை அதனால் வகுத்துக் கொள்ளமுடியும். 'தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப- ஒரு சடுகுடு அரசியல் ஆட்டத்தில் இருக்கின்ற ஒரு பகடையாக- தமிழர்களின் போராட்டத்தையும் இந்தியா பயன்படுத்தி வருகின்றதனைப் பார்க்கும்போது நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்." இவ்வாறு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் விடுதலைப் புலிகளின் பிரமுகர் க.வே.பாலகுமாரன். இந்தியாவைப் பொறுத்த…

  17. 17.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/video/304/E...avan-17-06-2008

  18. சர்வதேசத்தை தடை செய்யும் சிறீலங்காவின் எதிர்காலம். 17.06.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/video/303/K...anippu-17062008

  19. மன்னாரில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 645 views
  20. வடபோர்முனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 5 படையினர் கொல்லப்பட்டும் 29 படையினர் காயமடைந்தள்ளதாகவும் சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி புதன்கிழமை வவுனியா- மன்னார் களமுனைகளில் 3 படையினர் கொல்லப்பட்டும் 15 படையினர் காமடைந்துள்ளதாகவும். முகமாலை களமுனையில் புதன்கிழமை காலை பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும் பெரியமடு பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிராட்டிக்குளம் பகுதியில் பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும் மற்றும் மணலாறு களமுனையில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் நான்குபேர் காயமடைந்துள்ளதாகவ…

  21. அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று அடையாளம் தெரியாத நபர்களினால் 2 சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  22. சிறிலங்காவின் அம்பலாங்கொடப் பகுதியில் காவல்துறையினரால் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  23. தொழில்நுட்பம் உச்சமாக வளர்ந்துள்ள போதும் அடிப்படை மனிதப்பாங்கு மாறாத வரையில் எதுவுமே மாறாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 672 views
  24. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். ஊடக அறிக்கையொன்றின் மூலம் மனோ கணேசன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல், கொலைகள் போன்ற சம்பவங்கள் கடுமையான மனித உரிமை மீறல் எனவும், இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தத் துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சிவில் கண்காணிப்பு குழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் கைது செய்தல்களை புரிந்து கொள்ள முடியும் எனவும் அது சட்டரீதியானது எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் வெள்ளை வான்களைப் பயன்பட…

    • 0 replies
    • 628 views
  25. ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்த பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் பிள்ளையான் குழுவை ஐக்கிய தேசியக் கட்சி காட்டிக் கொடுத்தள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த அம்பலப்படுத்தல்களை தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும், பிள்ளையானின் முகாம்களை அம்பலப்படுத்தியதனைப் போன்றே விடுதலைப் புலிகளின் முகாம்களையும் முடியுமானால் அம்பலப்படுத்துமாறு ஜாதிக ஹெலஉறுமய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளது. பிள்ளையானின் 12 முகாம்கள் பொலன்னறுவையில் அமைந்துள்ளதாகக் கூறி வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து நழுவிக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முய…

    • 0 replies
    • 884 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.