ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
நேற்று இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போகல்லாகம : விடுதலைப் புலிகள் அமைப்பில் பிரிந்து வந்த கருணா குடியேற்ற விதிகளை மீறிய குற்றத்திற்காக பிரிட்டனில் காவலில் இருந்தார். ஒன்பது மாத சிறைததண்டனைககுப் பிறகு விடுதலையாகியுள்ளான். அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால் அவனை இலங்கைக்கு கொண்டுவர அரசு எந்த முயற்சியையும் எடுக்காது. அப்படி எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை. விடுதலை புலிகளின் உறுப்பினரான ஆயுதம் எடுத்துப் போரடிய பிள்ளiயான் தற்போது ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி கிழக்கு முதல்வனாக உள்ளார். அதே போல், புலிகளுக்கும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும். இலங்கையில் மனித உரிமை மீறல்களை உறுதி செய்ய அரசயில் சட்டம், …
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் என்பன குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசேட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த 3 உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இரு தரப்பு பாதுகாப்பு விவகாரங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 814 views
-
-
கோயம்பேடு மார்க்கெட்டில் குவித்துப் போட்ட கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன.`ஒருவேளை இது தீவிரவாதிகளின் ஆயுதக்களஞ்சியமாக இருக்கலாம்' என ஜெயலலிதா அவரது வழக்கமான பாணியில் இதை வைத்து அரசியல் செய்ய, ஆரம்பமாகி விட்டது அமர்க்களம். கும்மிடிப்பூண்டி சித்திரராஜ கண்டிகையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்குழு (சிப்காட்) வளாகத்தில் பதினேழு இரும்பு உருக்காலைகள் செயல்படுகின்றன.இந்த உருக்காலைகள் வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புச்சாமான்களை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கின்றன. இதே பகுதியில் தாசில்தார் அலுவல…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் :வண. பிதா ஜெகத் கஸ்பார் வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது. ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, மனித இருப்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்கிரமங்களை, ஆக்கிரமிப்புக்களைச் செய்தவர்களை நாங்கள் வாழ்த்துவதும் இல்லை. வணங்குவதும் இல்லை. ஆனால், ஒடுக்கப்படுகின்ற மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனவரி 1ஆம் திகதி முதல் கடந்த வாரம்வரை 128 பேர் வெள்ளைவான் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர்- இராதாகிருஷ்ணன் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் கடந்த ஜனவரி முதல் கடந்த சனிக்கிழமைவரை 128 பேர் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் வாழ்க்கைத் தொழில்நுட்ப பயிற்சிகள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், இராணுவச் சீருடையில் வந்தவர்களாலும் சிலர் கடத்திச்செல்லப்பட்டிருப்பத
-
- 0 replies
- 635 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆயுள் தண்டனைக் கைதியை விட மோசமான நிலையல் தமிழக முதலமைச்சர் இருப்பாதாகத் தெரிவித்த கவிஞர் புலமைப்பித்தன், பிரான்சிலுள்ள சீக்கியரின் தலையிலுள்ள தலைப்பாகை குறித்து கவலைப்படும் இந்திய பிரதமர் தலைபோகும் நிலையிலுள்ள இலங்கைத் தொடர்பில் கவலை கொள்ளவதில்லையென்றும் குற்றம் சாட்டினார். ஒஸ்லோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் உரையாற்றும் போது மேலும் தெரிவித்தாவது : இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் புழல் சிறையில் அடைத்து வைக்கபட்டுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு இருக்கக் கூடிய அழுவதற்கான உரிமை கூட தமிழக முதலமைச்சருக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் உயிரிழந்த போது கருணநிதி எழுதிய இரங்கற்பாவிற்க…
-
- 6 replies
- 1.8k views
-
-
மொனராகலையில் தமிழர் காணாமல் போயுள்ளார் செவ்வாய், 17 ஜுன் 2008 [தாயகன்] மொனராகரையை சொந்த இடமாகக்கொண்ட தமிழ் பொதுமகன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 34 அகவையுடைய கந்தசாமி ராமகிருஸ்ணன் என்பரே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். முச்சக்கர ஊர்த்தி செலுத்துனரான இவர் வெளியே சென்றபோது காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி மொனராகலை காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இவரது முச்சக்கர ஊர்தி குலுந்தலாவ பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1252
-
- 0 replies
- 485 views
-
-
தேசியத் தலைவரின் காலத்தில் வீரக்கலைகள் புத்துயிர் பெற்று வருகின்றன: பா.நடேசன் [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 06:30 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் தமிழர்களின் வீரக்கலைகள் புத்துயிர் பெற்று வருவது மகிழ்வைத் தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். மேஜர் ஈழப்பிரியா நினைவாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தற்காப்புக் கலை போட்டி பரிசளிப்பு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்களின் வீரத்தினை வெளிப்படுத்தவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்குப் பின்னர் எமது இனத்தின் வீ…
-
- 0 replies
- 796 views
-
-
சிறிலங்காவில் சம்பள உயர்வு கோரி எதிர்வரும் 10 ஆம் நாள் நாடாளாவிய ரீதியில் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு -இலட்சுமணன்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்த முடியாமலும் அவற்றைத் தடுக்கும் வழிறைகள் தெரியாமலும் சிங்கள அரசு திண்டாடுகின்றது. இதன் விளைவாக செய்வதறியாத அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து தனது கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறது. அதன் வெளிப்பாடாக வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்துவதுடன் ஆழ ஊடுருவும் அணியினரைப் பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தியும் வருகிறது. தலைநகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாக்குதல்கள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும் இடையே இன்று மதியம் அரச தலைவர் மாளிகையில் சிறப்புச் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை 21,051 மாவீரர்கள் வீரச்சாவு தாயகவிடுதலைப் போராட்ட வரலாற்றில் இதுவரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை 21,051 என தமிழீழ மாவீரர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 27.11.1982ம் ஆண்டு தெடக்கம் 31.05.2008ம் ஆண்டு வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பு வெளிவந்துள்ளது. மாவீரர்கள் ஆண் மாவீரர்கள் - 16,516 பெண் மாவீரர்கள் - 4,535 மொத்த மாவீரர்கள் - 21,051 கரும்புலிகள் ஆண் கரும்புலிகள் - 256 பெண் கரும்புலிகள் - 97 மொத்தக் கரும்புலிகள் - 353 தரைக் கரும்புலிகள் - 102 கடற்கரும்புலிகள் - 251 எல்லைப்படை மாவீரர் - 279 நாட்டுப் பற்றாளர்கள் - 4…
-
- 11 replies
- 3.3k views
-
-
வீரகேசரி இணையம் - வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்துஇ வவுனியா மன்னார் பகுதிகளில் இருந்து கொழும்பு உட்பட நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் தமிழ்ப் பயணிகள் மதவாச்சி சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகப் பயணிகள் பலரும் தெரிவித்தனர். மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வீதி வழியாகவோஇ ரயில் மூலமாகவோ தென்பகுதிகளுக்குப் பிரயாணம் செய்வதற்கு தமிழ்ப்பயணிகளுக்கு பொலிசார் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பயணிகள் பலரும் தெரிவித்தனர். இவ்வாறு பிரயாண அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடர முடியாமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 885 views
-
-
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்த…
-
- 9 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவிற்கான பாதுகாப்புப் பிரிவை மூடியது பிரித்தானியா [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 07:19 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவிற்கான பிரித்தானியா தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவை மூடுவதற்கு பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடாபில் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியா தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு ஆலோசகரை மீளப்பெறுவதற்கு பிரித்தானியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை பிரித்தானியா பேணிவரும். பாதுகாப்புப் பிரிவு அற்ற நிலையில் இந்த உறவுகள் பேணப்படும். உலகளாவிய ரீதியில் கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் செலவீ…
-
- 2 replies
- 1.5k views
-
-
படைத்தரப்பில் 749 பேர் ஹெய்டிக்கு இன்று பயணம் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கைப் படையினர் 749 பேர் இன்று ஹெய்ட்டிக்குச் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு செல்லவுள்ள படையினரில் 52 அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் 697 ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இவர்கள் 6 மாதம் வரை ஹெய்ட்டியில் ஐக்கிய நாடுகளின் சமாதானப்படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்று கூறப்பட்டது. குக்குலைக்களையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை முகாமில் பயிற்சிபெற்ற இப்படையினர் தமது பயிற்சிகளை நிறைவு செய்து நேற்று வெளியேறியுள்ளனர். இவர்கள் ஹெய்ட்டியைச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழருக்காக போரட 10 ஆயிரம் சான்றோர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியோன்றை விரைவில் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பொன்றை ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளார். இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : எனது கட்சியை வளாப்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழை வளர்க்க, தமிழனை வளர்க்க பேரியகம் தேவை என்பதால் தொடங்கியுள்ளேன். இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்காக எந்தளவுக்கு நாம் பாடுபடுகின்றோம் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல இங்கிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
மணலாற்றில் ஊர்காவல் படைச்சிப்பாய் சுட்டுக்கொலை மணலாறு ஜனகபுரப் பகுதியில் இனம்தெரியாதோரால் சிறீலங்கா ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. -பதிவு
-
- 1 reply
- 879 views
-
-
புலிகளின் குரலின் செய்மதி ஒலிப்பினை நிறுத்த சிறிலங்கா அரசு முயற்சி [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 07:39 மு.ப ஈழம்] [பி.கெளரி] சேர்பிய நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் ஒலிபரப்புச் செய்யப்படும் புலிகளின் குரலின் ஒலிபரப்புச் சேவையினை நிறுத்தும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி: ஜூன் மாதம் 1 ஆம் நாள் புலிகளின் குரலின் வானொலி சேவை தனது ஒலிபரப்புச் சேவையை சேர்பிய நாட்டில் இருந்து ஆரம்பித்துள்ளது. இதற்குரிய அனுமதியை சேர்பிய அரசாங்கம் வழங்கியிருந்தது. இந்த ஒலிபரப்புச் சேவை ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேர்பியாவின் செய்மதி ஊடாக மேற்கொள்ளப்பட்டிர…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்கள் தமிழீழத்தை எப்போதோ பெற்று விட்டார்கள். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. இதனைச் செய்ய வேணடும் என்பதை வலியுறுத்தும் வேண்டுகோளை விடுப்பதற்கான ஒன்றுகூடலே இந்த 'பொங்கு தமிழ்'. டென்மார்க் ஒருஸ் நகரில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது த.தே.கூட்டணி எம்.பியான ஜெயானந்த மூர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும் : ஈழத்தமிழர்களாகிய நாம் பரந்த மொழி, சிறந்த நிர்வாகம், சிறந்த படைபலம் என அனைத்தையும் கொண்டுள்ள தேசிய இனமாக இருக்கிறோம். இவற்றையெலலாம் முன்வைத்து எங்களுடைய நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேசத்திடம் முன்வைக்கின்றோம். அன்றி வேறு எதனையும் நாம் கேட்கவில்லை. எங்களிடம் பலம் …
-
- 0 replies
- 688 views
-
-
பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்…
-
- 4 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 630 views
-
-
“எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. வன்னியில் ஆழஊடுருவும் படையினரால் நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் போதெல்லாம் தென்னிலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. வன்னியில் புலிகளின் இலக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உண்மைக்கு மாறாகப் பெருமை பேசிக்கொண்டிருக்க மறுபுறத்தே தலைநகரின் பாதுகாப்பு ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது. விபரம்: http://www.swissmurasam.info/
-
- 0 replies
- 1.2k views
-
-
தகவல்: மணிவாசகன் மூலம்: http://www.frictiontv.com/ftv_debate.php?debate_id=3359 நன்றி!
-
- 2 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பு கல்லடியில் இரு காவல்துறையினர் சுட்டுக் கொலை. முச்சக்கர வண்டியில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இவர்கள் கைவசமிருந்த ஆயுதங்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Two policemen shot in Kalladi Two policemen were shot dead in Kalladi, Batticaloa this evening. They were traveling in a three wheeler at the time of the incident. Their weapons were also stolen. ஆதாரம் Daily mirror
-
- 0 replies
- 781 views
-