Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெருமளவிலான வளப்பற்றாக்குறையுடன் 2,120 வரையிலான மாணவர்கள் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர் என்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 621 views
  2. தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவி புரிகின்றனர் - கடற்படைப் பேச்சாளர் வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழ்நாட்டு மீனவர்களை அத்துமிறிவந்து சிறி லங்கா கடற்படையினர் சுட்டுக்கொலை செய்கின்றனர் என தெரிவிக்கப்படும் செய்திகள் அப்பட்டமான பொய்யாகும். உண்மையில் இங்கு நடக்கும் சம்பவங்கள் அப்படி அல்ல. தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடி என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவும் உபகரணங்கள் மற்றும் எரிபொருட்கள் என்பவற்றை தமிழ்நாட்டில் இருந்து கடத்திவந்து கொடுத்துவருகின்றனர். இது மறுக்கப்படமுடியாத ஒரு உண்மை என சிறி லங்கா கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க தெரிவித்துள்ளார். உதாரணமாக கடந்த ஜூன் மாதம் சிறி லங்கா க…

  3. பத்திரிகை நிறுவன அதிகாரி தாக்கப்பட்டமை குறித்து சுவீடிஸ் அதிகாரிகள் அரசாங்கத்துடன் பேச்சு வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இலங்கை பத்திரிகை நிறுவன அதிகாரியான, நாமல் பெரேராவின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், பத்திரிகை நிறுவனத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக, சுவீடிஸ் மற்றும் பின்லாந்து அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளுடன் நேற்று பேச்சு நடத்தியுள்ளனர். இதன்போது நாமல் பெரேரா மீதான தாக்குதல் தொடர்பில், உரிய குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். http://www.pathivu.com/?p=1913

  4. அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது சபையில் ரவி எம்.பி. குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 7/10/2008 11:02:24 PM - பிளாஸ்டரை ஒட்டி ஊசிகளை ஏற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதியமைச்சின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவகாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: வைத்தியசாலைகள் முற்றாக செயலிழந்துள்ளன. குடுலால் போன்றவர்கள் வைத்தியசாலைகளில் உள்ளனர். அவர்கள் மருந்து வாங்கச் சென்…

  5. வீரகேசரி இணையம் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். யுத்த செலவுகளை கட்டுப்படுத்தவும், படைவீரர்களுக்கு வழங்கப்படும் நிதியை குறைப்பதற்கும் விடுதலைப் புலிகள் இவ்வாறான சூழ்ச்சித் திட்டம் தீட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தினம

    • 1 reply
    • 1.1k views
  6. அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் - புலும்பெர்க் இணையத்தளம் [ வியாழக்கிழமை, 10 யூலை 2008, 06:12.35 AM GMT +05:30 ] அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாகப் புலும்பெர்க் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் பொதுமக்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் படைபலம் குறிப்பிடக் கூடியளவு வலுவிழந்துவிடவில்லை எனச் சர்வதேச பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஜேன்ஸ் பாதுகாப்பு …

    • 0 replies
    • 1k views
  7. புண்ணியவாதம் பத்மநாதன் என்ற தனது மகனான கடத்த சிலர் முயற்சி செய்வதாக அவரது தாயார் நடுவிலான் தெய்வானை மக்கள் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்பு கதிரேசன் வீதியிலுள்ள எவரெஸ்ட் லொட்ஜில் தாங்கள் தங்கியிருப்பதாகவும் 9ஆம்திகதி அதிகாலை ஐந்து மணியளவில் வெள்ளை வானில் பிரவேசித்த பலர் தனது மகனைக் கடத்த முயற்சி செய்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார். அதிகாலை வெளையில் கதவைத் தட்டி பத்மநாதனைக் கடத்த முயற்சி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 67 வயதுடைய தாயாரான தெய்வானை கத்தி கூக்குரல் இட்டு அயலவர்களை அழைத்ததாகவும் இதனால் கடத்த முயன்றவர்கள் தாம் பெற்றா காவற்துறையை சேர்தவர்கள் என அறிமுகப்படுத்தி உள்ளார்கள் எனவும் தெரிய வருகிறது. பிடிவாத குண…

    • 0 replies
    • 999 views
  8. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளரும், நுவரெலியா காமினி தேசிய பாடசாலையின் ஆசிரியருமான ஜகத் தர்மசிறி ஹெட்டியாராச்சி, அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவின் அடியாட்களினால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் வீட்டிக்கு நேற்றிரவு சென்ற இந்த அடியாட்கள் ‘நீ நாளைக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போகிறாயா’ என கூறியாறு தாக்கியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் ஹெட்டியாராச்சியின் கையடக்க தொலைபேசியையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளனர். அமைச்சர் சீ.பி ரத்னாயக்கவின் செயலாளர் திசாநாயக்க, மற்றும் அவரது சாரதி நுவான் ஆகியோர் தலைமையிலான அடியாட்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்…

  9. கிளிநொச்சியில் தேசிய விளையாட்டுப்போட்டி நடத்தப்படும் – மகிந்த நம்பிக்கை! கிளிநொச்சி மாவட்டத்தில் விரைவில் சிறீலங்காவின் தேசிய விளையாட்டுப்போட்டி நடத்தப்படும் என, சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டுப்போட்டியின் 34வது விழாவில் இன்று மாலை கலந்துகொண்டு உரையாற்றிய மகிந்த, கிளிநொச்சியினை தமது படைகள் விரைவில் கைப்பற்றுவார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.tamilseythi.com/srilanka/mahinda-2008-07-10.html நிருபர்: ஈழச்செல்வன்

  10. சிறிலங்காவில் 5,000 ரூபா சம்பள உயர்வுகோரி தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை நடத்திய ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

  11. mervi-dutugamunu.jpgஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் சந்தித்த அனுபவத்தை போன்ற மற்றும் ஒரு அனுபவத்தை அமைச்சர் மேவின் சில்வா நேற்று மீண்டும் சந்தித்தார். மேவின் சில்வா, தேசிய வைத்தியசாலையின் சமையலறைக்கு சென்று அங்குள்ள ஊழியர்களை இன்று நடைபெறவுள்ள, பணிப்புறக்கணிப்பிற்கு ஆதரவளிக்கக்கூடாது என அவர்கள் அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர்கள் அனைவரும் அமைச்சரை சுற்றிவளைத்து அகப்பை சட்டியால் தாக்கப்பட்டார் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒருவாறு அவர் சமாளித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சர் மேவின் சில்வாவின் உதவியாளரான கொழும்பு மாநகரசபையின் உறுப்பினர்,சமன் அபேகுணவர்த்தன, நேற்று கொழும்பு கண் வைத்தியசால…

    • 2 replies
    • 1.8k views
  12. வன்னிக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 572 views
  13. தென்மராட்சி கரையோரத்தில் நேற்றிரவு "மர்ம உலங்குவானூர்தி" [வியாழக்கிழமை, 10 யூலை 2008, 03:03 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். குடாநாட்டில் தென்மராட்சி கரையோரங்களில் நேற்று நள்ளிரவு மர்ம உலங்குவானூர்தி ஒன்று சில நிமிடங்கள் ஆகாயத்தில் மிகவும் தாழ்வாக வட்டமடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமை இரவு 10:30 மணிமுதல் 11:00 மணிவரை இந்த உலங்குவானூர்தி வட்டமிட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக பாரிய இரைச்சலுடன் மிகவும் தாழ்வாகப் பறந்த இந்த உலங்குவானூர்தி கரையோரப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் வரை வட்டமிட்டுக்கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உலங்குவானூர்தி வட்டமிட்டதைத் தொடர்ந்து முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்க நிலைகளை நோக்கி படையினர் எற…

    • 0 replies
    • 1.3k views
  14. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று வியாழக்கிழமை இரவு இந்தியாவுக்கு அவசர பயணத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அரச தலைவர் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

  15. வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளத்தில் இன்று வியாழக்கிழமை காலை எரியூட்டப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த 600 பேர், 1990 ஆம் ஆண்டு மூதூரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேவைப்பட்டால் கருணாவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 719 views
  17. மன்னார், வவுனியா களமுனைகளில் நேற்று இடம்பெற்றமோதல்களில் 12 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 32 இற்கும் அதிகமான படையினர் படுகாயங்களுக் குள்ளாகியுள்ளனர். சிறிலங்காப் படையினர் நேற்று நான்கு முனைகளில் மேற்கொண்ட நகர்வு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. வவுனியா களமுனையில் பாலமோட்டை - குஞ்சுக்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரின்போது ஐந்து படையினர் கொல்லப்பட்டதோடு ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று நண்பகல் 12.40 மணிக்கு சிறிலங்காப்படையினர் பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். மாலை 3.00 மணிவரை நடைபெற்ற இந்த முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுத…

  18. யேர்மன் - சிறிலங்கா இரகசிய பேரம்: அம்பலப்படுத்துகிறது ஜேர்மன் சஞ்சிகை [வியாழக்கிழமை, 10 யூலை 2008, 02:03 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஜேர்மனியிலிருந்து வெளிவரும் Der Spiegel எனும் சஞ்சிகை தனது 23.06.2008 நாளிட்ட இதழில் ஜேர்மனிக்கும் சிறிலங்காவுக்கும் இடையே நடைபெற்ற இரகசிய பேரமொன்றை அம்பலப்படுத்தியுள்ளது. "நேர்த்தியற்ற பேரம்" என்ற தலைப்பில் யேர்மனியில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக்கொண்ட இப்பிரபலமான சஞ்சிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் மீண்டும் நுழைவதற்கு தேவையான எந்த விலையைக் கொடுக்கவும் ஜேர்மன் அரசு தயாராகவிருக்கின்றது. எதிர்வரும் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புச் சபையில் ஒரு பிர…

  19. காவற்துறையினர் படுகொலையுடன் கருணா தொடர்பு என்றால் அவர் விசாரிக்கப்படுவார் - ஹெகலிய வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார்கள் எனக்கருதப்படும் 400 சிறி லங்கா காவற்துறையினர் கொலைகளுடன் அப்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒரு தளபதியாக இருந்த கருணா அம்மானுக்கும் தொடர்பு இருக்கும் என அறிந்துகொண்டால் அவரிடமும் விசாரணைகளை மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைப்பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிடம், கிழக்கு மாகாண 1990 ஆ…

  20. இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ஆறு மாதமாக சம்பளம் பாக்கி கிரிக்கெட் வாரியத்திடம் பணம் இல்லை? சமீபத்தில் ஆசியக் கோப்பையில் வெற்றிவாகை சூடிய, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் முந்தைய ஒப்பந்தம் பிப்ரவரிமாதத்தில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதாலும், அணி வீரர்கள் வெளிநாடுகளுக்கு விளையாட சென்றிருந்ததாலும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் விளையாட்டு வீரர்களும் இந்த பிரச்சினை குறித்து வியாழக்கிழமையன்று விவாதிக்கவுள்ளனர்…

  21. ஹக்கீம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இன்று (ஜூலை 10) பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஹக்கீம் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.கிழக்கு மாகாணசபைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹக்கீம் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக கடமையாற்றினார். கடந்த 8ம் திகதி மாலை தமது மாகாணசபை உறுப்பினர் பதவியை ஹக்கீம் இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/hakeem-2008-07-10.html

    • 2 replies
    • 979 views
  22. இராணுவத் தளபதி மீதான குற்றச்சாட்டுக்கு சான்றுகளைச் சமர்ப்பியூங்கள்! இராணுவப் பேச்சாளர்! ஐ.தே.கட்சியினர் இராணுத் தளபதி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மறுத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயங்கார, இதற்கான தகுந்த ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றைப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களின் மீது இடம்பெறும் தாக்குதல்களுக்கும் படையினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனவும், இராணுவத் தளபதியுடன் தொடர்புபடுத்திக் ஐ.தே.கட்சி கூறியுள்ள இந்தக் குற்றச் சாட்டுப் பொய்யானதெனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதம கொறடாவுமான ஜோசப் மைக்கேல் பெரேரா…

    • 0 replies
    • 663 views
  23. பார ஊர்தி ஒன்றில் போய்க்கொண்டிருக்கும்போதே இவர்கள் இனம்தெரியாத ஆயுதபாணிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 3 Sinhalese businessmen shot dead in Kalmunai [TamilNet, Thursday, 10 July 2008, 06:04 GMT] Unidentified gunmen opened fire on Sinhalese businessmen who were traveling in a lorry in Kalmunai, 36 km southeast of Batticaloa, killing them dead on Quarry Road, Thursday around 9:00 a.m., Police said. The victims were from Wattegama in Kandy. The businessmen were identified as Indika Jayasekara, 22, Wasantha Premakumara, 24, and Asnka Namal, 22.

    • 3 replies
    • 1.2k views
  24. இன்றைய வேலைநிறுத்தப் போராட் டத்தைத் தடுத்து நிறுத்தவோ இடையூறு செய்யவோ அரசும், படைகளும் முயன் றால் இந்த அரசுக்கு இன்றைய நாள்தான் கடைசி நாள். இன்றோடு அரசைக் காலி செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவோம்'' இப்படி நேற்று நாடாளுமன்றத்தில் எச்சரித்தது ஜே.வி. பி. தமது தொழிற்சங்கங்களின் பிரதான பங்களிப்புடன் இன்று நடக்கும் நாடுதழு விய பணிப் புறக்கணிப்புப் போராட்டத் தில் சகலரும் ஒன்று திரண்டு பங்கேற்கவேண் டும் என்றும் அந்தக் கட்சி அழைப்பு விடுத் திருக்கின்றது. ஜே.வி.பியின் எம்பியும் இன்றைய வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்திருக்கும் ஜே.வி.பி. தொழில் சங்கத்தின் தலைவருமான லால்காந்தவே நேற்று நாடாளுமன்றத்தில் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: நாம் ஏற்பாடு செய்திருக்கும்…

    • 6 replies
    • 1.5k views
  25. படைப் புலனாய்வாளர்களால் பொதுமக்கள் கடத்தல் வியாழன், 10 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ் தென்மராட்சி வரணிப் பகுதியை சேர்ந்த இரண்டு பொதுமக்கள், சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் நாளன்று, வரணியில் இருந்து சாவகச்சேரி நகருக்குப் புறப்பட்டுச் சென்ற, முப்பத்தொன்பது அகவையுடைய மயில்வாகனம் மாசிலாமணி என்ற குடும்பத்தவரும், இருபத்தொரு அகவையுடைய அருள்குமார் பிரபு என்ற இளைஞரும் காணாமல் போயுள்ளனர். இவர்களை, கொடிகாமம் பகுதியில் வைத்து சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் கடத்தியதாக, குடிசார் வட்டாரங்கள் கூறுகின்றன. http://www.pathivu.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.