Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டமும் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே! 1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை…

    • 0 replies
    • 470 views
  2. துணைப் படைக்குழுவின் தலைவருக்கு குண்டு துளைக்காத வாகனம் [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:00 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] கிழக்கு மாகாணத்தில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவின் தலைவரான பிள்ளையானுக்கு அந்நாட்டு அரசாங்கம் குண்டு துளைக்காத வாகனத்தை வழங்கியுள்ளது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது இந்த விவகாரம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது. ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, குண்டுதுளைக்காத வாகனத்தை அரசாங்கம் பிள்ளையானுக்கு வழங்கியிருப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். இக்குற்றசாட்டுக்கு பதிலளிக்கையில் அரசாங்கத்தின் பிரதம கொறடா தினேஸ்…

    • 0 replies
    • 630 views
  3. சரத் பொன்சேகாவின் குழுவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு காரணம்: ஜோசப் மைக்கல் பெரேரா [செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 06:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் தலைமையின் கீழான ஒரு குழுவே ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் இன்று ஊடகவியலாளர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், தாக்குதலுக்கு இலக்காகின்றனர். ஆனால் இச்சம்பவங…

    • 0 replies
    • 369 views
  4. கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் 112 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 இலங்கைப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிறசம்பவங்களில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 61 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

  5. கடந்த மாதம் இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைளில் 112 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 793 இலங்கைப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கைப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் பிறசம்பவங்களில் 43 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 61 பொதுமக்கள் காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்

  6. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 803 views
  7. ஆயுதங்களைக் களைந்து ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனிமேல் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 494 views
  8. ஜே.வி.பி.யின் அனுராதபுர காரியாலயம் மீது தாக்குதல் செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஜே.வி.பியின் அனுராதபுரம் காரியாலயத்தின் மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜே.வி.பி. அனுராதபுர சிறி லங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு வேளையில் ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்த ஏழுக்கும் அதிகமான குழுவினரால் நுளைவாயில் கதவு உடைக்கப்பட்டு அலுவலகம் தாக்கப்பட்டதாகவும், அதன்போது அலுவலகத்தில் இருந்த ஜே.வி.பி.யின் அனுராதபுர மாவட்ட உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டு, இனி இப்பகுதிகளில் ஜே.வி.பி. எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என மிரட்டப்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

  9. 'அரசியல் பொருளாதார படைத்துறை நெருக்குவாரங்களில் சிக்கித்திணறும் மகிந்த அரசு" -எரிமலை- அண்மைக்காலங்களாக தென்னிலங்கையிலே வாழுகின்ற மக்கள், அன்றாட வாழ்க்கைச் செலவு பாரியளவு அதிகரித்திருப்பது தொடர்பாக மகிந்த அரசின் மீது கடுமையான சீற்றமும் வெறுப்பும் அடைந்திருப்பதுடன் பல்வேறு தொழிற்சங்கங்களும் இவ்விலைவாசி உயர்வினை எதிர்த்தும், வாழ்க்கைச்செலவிற்கு ஏற்ப சம்பள உயர்வு கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். சிறிலங்கா அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் நிலவும் லஞ்ச ஊழல் மோசடிகள், பெருமளவிலான பணமானது பாதுகாப்பு நிதிக்கென ஒதுக்கப்படுவது, தவறான நிதிக் கையாளுகைகள், வெளிநாட்டு நன்கொடையாளர்கள் சிறிலங்காவிற்கு நிதி வழங்குவதற்கு பின்னடிப்பது …

  10. பிரித்தானிய அரசாங்கம் கருணாவை இலங்கைக்கு நாடு கடத்திய நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற்குள்ளும் புதிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையம் ஒன்று தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.கருணாவின் உதவியுடன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டமை................. தொடர்ந்து வாசிக்க................

    • 1 reply
    • 1.4k views
  11. பயங்கரவாதிகளுக்கும், சுதந்திரப் போராளிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதாக கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன தெரிவித்திருப்பதாக கனேடியப் பத்திரிகையான ‘நஷனல் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை தனியான சுதந்திர அலகாகப் பிரகடனப்படுத்தவேண்டுமென கனடாவின் டவுன்ஸ் வியூ மைதானத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் முக்கிய உரையாற்றிய அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன கூறியிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதனைவிட இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு இல்லை” என அவர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்திகள் குண்டுத் தாக…

  12. ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த இந்தியா தீர்மானம் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு உச்சிப்புள்ளியில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இ…

    • 0 replies
    • 566 views
  13. முல்லைத்தீவு காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு? முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளமொன்றை இராணுவத்தின் 59 ஆவது படையணியினர் நேற்று கைப்பற்றியதாக இலங்கை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனகபுரவின் வடக்கு நோக்கி முன்னேறும் படையினர் அடர்ந்த காட்டுக்குள் 10 கிலோ மீற்றர் உட்பக்கமாக அமைந்திருந்த இந்த தளத்தை நேற்றுக் காலை 9.30 மணியளவில் கைப்பற்றியுள்ளனர் எனவும் பலம் வாய்ந்த 3 பதுங்கு குழிகள் மற்றும் 3 அகழிகள் காணப்பட்ட இப்பிரதேசத்தில் தேடுதல் நடத்திய படையினர் இரு கைக்குண்டுகளை மீட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் ஒரு விடுதலைப்புலிகளின் உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும் மேலு…

  14. பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பிரியங்கர ஜயரத்ன தெரிவு! பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ண தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பா

    • 0 replies
    • 566 views
  15. கொழும்பு உட்பட மற்றும் பல இடங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க உடமைகள் என்பவற்றை மையப்படுத்தி தாக்குதல்களை நடத்த 50ற்கும் மேற்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் தென்பகுதிகளில் ஊடுருவியுள்ளதாக சிறி லங்கா புலனாய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

    • 4 replies
    • 1.3k views
  16. அரசாங்க அதிகாரிகள் கருணாகுழுவை பிளவுபடுத்த முயற்சித்தபோதும், அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டிருப்பதாக கருணா ஒட்டுக்குழுவின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். தமது கட்சியின் பலம்கண்டு அவர்கள் கவலையடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குத் தெரியாமலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் பிரத்தியேக செவ்வியில் கருணா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்துக்கும், கருணாகுழுவுக்கும் இடையில் சில அசம்பாவிதச் சம்பவங்கள் இடம்பெற்றி…

    • 0 replies
    • 1.3k views
  17. தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் இருபது வருடங்களுக்கு அல்லது அதற்கு மேலும் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று இலங்கை இராணுவத் தளபதி பொன்சேகா கூறியிருக்கிறார், என கொழும்பிலிருந்து வெளிவரும் 'சன்டே லீடர்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இவ்வருட ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலப்புலிகளை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று அண்மைக் காலத்தில்தான் ராணுவத் தளபதியும் பாதுகாப்பு செயலாளர் கோட்டபயாவும் கூறியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை அடுத்த தலை முறைக்கு விட்டு வைக்கப் போவதிலை;லையென்று இந்த இருவரும் தெரிவித்திருந்தார்கள். என்று இப் பத்திரிகை சுட்டிக் காட்டியுள்ளது. இராணுவத் தளபதியின் கூற்றுப் படி 2006 ம் ஆண்டுக்குப் பிறகு 9,000 க்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றோழித்திருக்கிறார்கள்…

    • 4 replies
    • 1.8k views
  18. வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் சிறீதரன்] யாழ் தென்மராட்சி வரணி கண்டல் காட்டுப்பகுதியில், சிறீலங்கா படைகளால் பெருமெடுப்பில் போர் ஒத்திகை நிகழ்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி, காலை 7:00 மணி வரை இடம்பெற்ற போர் ஒத்திகையில், எழுநூற்று ஐம்பதுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இதன்பொழுது, போர் ஒத்திகையில் ஈடுபட்ட துருப்புக்களுக்கு பாதுகாப்பாக, வரணிப் பகுதியின் வீதிகளில், பவள் கவச வாகனங்கள் சகிதம் தரைப்படை கவச அணியினர் ரோந்துகளை மேற்கொண்டதாக, குடிசார் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனிடையே, யாழ் நகரின் …

  19. படைநடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வேண்டும்: ரணில் Tuesday, 08 July 2008 புதிய பாதுகாப்பு முறைமை ஒன்றும், இராணுவத் தந்திரோபாயம் ஒன்றும் வகுக்கப்பட வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப் படைகளைக் கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ எழுதிய நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பங்குகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாக பாராளுமன்றம் இருக்க வேண்டும் எனவும் எனவும் தெரிவித்தார். முழுநேர பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இருக்க வேண்டியதன் அவ…

  20. பேச்சுவார்த்தைக்கான அரசாங்கத்தின் நிபந்தனைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர் [ செவ்வாய்க்கிழமை, 08 யூலை 2008, 01:39.27 AM GMT +05:30 ] இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எதிர்காலப் பேச்சுவார்த்தை; தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஏனைய தமிழ் கட்சிகளுடனும் இணைந்தே நடத்தப்படும் என அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர். நோர்வே நாட்டின் பிரசன்னமில்லாமல் அரசாங்கத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தையை நடத்த முடியாது எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அனைத்துத் தமிழ்த் தரப்புக்களுடன் பேச்சு என்ற அரசாங்கத்தின் தகவலானது, பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்…

    • 0 replies
    • 848 views
  21. முல்லைத்தீவு காட்டிற்குள் ஜானகபுரவிற்கு வடக்கு பக்கமாக உள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய இடமொன்றை நேற்று ராணுவத்தினர் அடித்துப்பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவிக்கின்றது. இதன் உண்மை விபரம் தெரியவில்லை. Troops capture LTTE strong point - North of Janakapura Infantrymen of Sri Lanka Army operating under 59 division yesterday (July 7) captured an LTTE strong point located in the Mulaithiuvu jungle. According to the defence sources, troops advancing towards the area North of Janakapura came cross this strong defensive position of the LTTE located about 10 km inside the jungle around 9.30 am. Troops launched an attack and captured the enemy position afte…

    • 0 replies
    • 1.9k views
  22. இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும் என முன்னாள் ஐஆர்ஏ போராளியும், மூத்த தளபதியும், தற்போது அதிகாரப்பகிர்வு பெற்றுள்ள அரசின் பிரதி முதலமைச்சருமான மார்ட்டின் மைக்கைனீஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 783 views
  23. தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் புதிய தலைவராக குமாரசாமி. நந்தகோபன் என்ற் ரகு அல்லது கோகுலன் பிள்ளாயானால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கருனா நீக்கப்பட்டதாக பிள்ளாயான் கூறியதாக.............. தொடர்ந்து வாசிக்க................

  24. விடுதலைப்புலிகளின் கொழும்பு தாக்குதல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு போலீஸாரின் விசாரணையில் இருக்கும் திரைப்பட கூட்டுஸ்தாபன முன்னாள் இயக்குனர்களில் ஒருவரான தேவதாஸனை அப்பதிவிக்கு நியமித்தது தொடர்பாக ஜேவீபியின் பிரச்சார செயலாளரான விஜித ஹேரத், ஒரு மணி நேரத்துக்கு மேல் இரகசியப் போலீஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு இரகசிய போலீஸாரினால் தான் அழைக்கப்பட்டதாகவும், அங்கு சென்ற போது தேவதாஸனை திரைப்பட கூட்டுஸ்தாபனத்தில் இயக்குனர் பணிக்கு அமர்த்துவதற்கு முன் அவரை எப்படித் தெரியும் என்றும் , அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்புகள் இருந்தனவா? அவரை அப்பதவிக்கு அமர்த்துவதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகள் இரகசிய போலீஸாரால் கேட்கப்பட்டதாகவும…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.