Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் கடல் கண்காணிப்பு நடவடிக்கை இலங்கைக்கு பாரிய அளவில் உதவுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம நேற்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதையும் ஏனைய ஆதரவுகளையும் தடுத்து நிறுத்துமாறு சர்வதேச சமூகத்திற்கு கொழும்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஆதரவாரளர்கள் நிதி சேகரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். 'இந்து' பத்திரிகைக்கு இது தொடர்பாக ரோகித்த மேலும் தெரிவித்ததாவது : விடுதலப் புலிகளின் மையக் கட்டமைப்பு தற்போதும் சிதைவுறாமால் இருக்கின்றதா? என்று அவரிடம் 'இந்து' கேள்வி எழுப்பியது. வெளிமட்ட உதவி தடுக்கப்பட வேணடிய தேவை உள்ளதாகவும் அதுவே …

  2. சிறிலங்கா படையினரின் ஆழ ஊடுருவும் பிரிவினர் இன்று இரவு வன்னியின் புதூர் பகுதியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்கும் இடையே உள்ள புதூர் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலின்போது மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

    • 16 replies
    • 2.9k views
  3. கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தம்மைப்பற்றி பெறுப்பேற்றும் சதித்திட்டமாகச் சிங்கள அமைசசர் ஒருவர் திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்துள்ளார் என ம.தி..க பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டடிருக்கின்றார். 'புலிகள் தழிழீழத்தை அடைந்தால், வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களை அங்கு திரும்பிச் செல்ல அனுமதிக்கவே மாட்டார்கள், என்ற சாரப்பட வைகோ கருத்து வெளியிட்டார் என இலங்கை அரசின் சார்பில் பேசவல்ல ஓர் அமைச்சரை மேற்கோள் காட்டி அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் செய்திகளை ஒட்டித் த.தே.கூட்டமைப்புக்குத் தாம் அனுப்பி வைத்துள்ள ஒரு விளக்க அறிக்கையிலேயே மேற்படி செய்தி, சிங்கள அமைச்சர் ஒருவரின் திட்டமிடப்பட்ட சதி என வைகோ கடுமையாகச் சாடியிருக்கின்றார். அந்த அறிக்…

  4. மிக்-27 ரக போர்விமானங்கள் புலிகளின் மன்னார் நிலைகள் மீது குண்டுவீச்சு வீரகேசரி இணையம் 6/5/2008 10:14:14 AM - இன்று காலை 8.20 மணியளவில் மன்னார் முன்னரங்குகளில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது விமானப்படையின் மிக்-27 ரக போர்விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  5. சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு : இராமேஸ்வரம் மீனவர் பலி! பத‌ற்ற‌ம்! செவ்வாய், 3 ஜூன் 2008( 13:52 IST ) 45 நாள் தடைக்குப் பிறகு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். ‌சிறல‌ங்க கட‌‌ற்படை‌த் து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌‌ம் ‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்! ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 714 விசைப் படகுகளில் நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அப்பகுத…

  6. "தவிச்ச முயல் அடிக்கும்' தந்திரோபாயம் இது! 05.06.2008 "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள். தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், தமது தாயக மண்ணில் பாரம்பரிய பூமியில் தமது இனத்தின் இருப்புக்காகவும் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்கள். பாரத மாதாவைத் தமது பெரியன்னையாக வரித்து, மதித்துப் போற்றி வரும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பி, அவர்தம் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு. ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொப்புள் கொடி இணைப்புப் போல தாய் சேய் நேசம் கொண்டது. "தானா…

  7. இந்தியா - புலிகள் இடையேயான உறவின் கீறலை சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உண்டு: க.வே.பாலகுமார் [புதன்கிழமை, 04 யூன் 2008, 05:28 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] இந்தியாவின் நலன்களை எமது நலன்களாகப் பார்த்துக்கொண்ட காலம் ஒன்று இருந்தது. என்றைக்கு இந்தியா எம்மைப் பிரித்துப் பார்க்கத் தொடங்கியதோ அன்றைக்கே அதில் கீறல் விழுந்துவிட்டது. அதனைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பு இந்தியத் தரப்பிற்கு உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமார் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகும் "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை (03.06.08) அவர் வழங்கிய நேர்காணல்: கேள்வி: தமிழீழத் தாயகம் என்ற தீர்வு…

  8. புத்தளத்தில் தொழிலதிபர் வெள்ளைவானில் கடத்தல் Thursday, 05 June 2008 புத்தளம் மாவட்டத்திலுள்ள கையடக்கத் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் நேற்று புதன்கிழமை மாலை கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். வெள்ளை வானொன்றில் வந்த ஆயுதபாணிகளால் இவர் கடத்திச் செல்லப் பட்டிருக்கின்றார். குறிப்பிட்ட வெள்ளை வானை அவரது நண்பர் ஒருவர் மோட்டர் சைக்கிள் ஒன்றில் துரத்திச் சென்ற போதிலும் வெள்ளை வான் வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று புதன்கிழமை மாலை 6.10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றிருக்கின்றது. புத்தளம் நகரிலுள்ள தன்னுடைய கைத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு அருகாமையில் வைத்தே எஸ்.எச்.எம்.அலி என்ற 55 வயதான முகாமையாளர் கடத்திச் செல்லப்பட்…

  9. அப்பாவி மக்களையோ அல்லது ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை எட்ட முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். பி.பி.சி. உலக சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்தை வெளிளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதாகவும் முடியுமானால் தம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துமாறு ஜனாதிபதி அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கில் இடம்பெறும் படுகொலைகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை எனவும், வேறும் சில அமைப்புக்கள் மேற்கொள்வதாக அவர் சு…

  10. பிரிகேடியர் பால்ராஜ் வண்ணத்துப்பூச்சி ஒன்று பறந்து சென்று விட்டது -பரணி கிருஸ்ணரஜனி- 01. அஞ்சலிக்குறிப்பு எழுதுவது என்பது அன்றாட அலுவல்களில் ஒன்றாகி விடுமோ என்ற அச்சம் மேலெழுந்தபடியே உள்ளது. 'பால்ராஜ் அண்ணைக்கு அஞ்சலிக்குறிப்பொன்று எழுதித்தாங்கோவன்" என்று ஒரு ஊடகத்துறை நண்பர் தொடர்பு கொண்டு கேட்டதிலிருந்து மேற்படி அச்சம் மன ஆழத்தில் அலைந்து உழன்றபடியே உள்ளது. ஈழத்தமிழர் வாழ்வியற் போக்கில் துர்மரணம் என்பது ஒரு நோயாய் பீடிக்கப்பட்ட விட்டது போலும். திறந்து வைத்த இனிப்புப் பண்டத்தின் மீது மொய்க்கும் ஈக்களைப் போல அவர்கள் செல்லும் இடமெல்லாம் அது அவர்களைத் துரத்திக்கொண்டேயிருக்கிறது. பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் இறந்துவிட்டார் என்ற செ…

  11. வவுனியா மாவட்டம் பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 படையினர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 674 views
  12. பாதுகாப்பு தொடர்பிலான செய்திகளை நாளை முதல் வெளியிட முடியாது - லக்மன் உலுகல்ல புதன், 04 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] இலங்கையில் மீண்டும் செய்தித் தணிக்கை அமுலுக்கு வருகின்றது. நாளை முதல் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை தொலைக்காட்சிகள், வானொலிகள் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையத்தினால் வெளியிடப்படும் செய்திகளை மட்டுமே வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையத்தின் பணிப்பாளர் லக்மன் உலுகல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் பாதுகாப்பு தொடர்பில் வெளியிடப்படும் செய்திகளுக்கு காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரின் பேச்சாளர்களை மேற்கோள்காட்டி செய்திகளை வெளியிட முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். …

  13. படையை விட்டு தப்பியோடிய கோத்தபாயதான் தேசத்துரோகி: ரணில் [புதன்கிழமை, 04 யூன் 2008, 07:56 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காப் படையை விட்டு தப்பியோடி அமெரிக்காவில் தஞ்மடைந்த கோத்தபாய ராஜபக்சதான் தேசத்துரோகி என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வில் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது: ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். களமுனைச் செய்திகளை ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தாது விடின் படையினரது உயிர்களை அரசாங்கம் நாசமாக்கிவிடும். களமுனைச் செய்திகளை …

    • 0 replies
    • 1.1k views
  14. சுமக்க முடியாத பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜே.வி.பி. இன்று (ஜூன்4) நுகேகோடையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தது. மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து, லஞ்ச ஊழலை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு சேவையாற்றுமாறு ஜே.வி.பி. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்ஹெத்தி தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கொழும்புப் பிரதேச மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களைச் சேர்ந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். படங்களை பார்க…

    • 0 replies
    • 733 views
  15. பதுளைக் கிராமத்தில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடிய நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கருதப்படும் ஒருவர் கிராமம் ஒன்றில் உள்ள சிலரை தாக்கியமையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் பிரவேசித்துள்ளதாக நினைத்து பதுளையில் மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடியுள்ளனர். குறித்த மனநிலை பாதிக்கப்பட்டவர் நேற்று மூதாட்டி ஒருவரை கொலை செய்ததுடன் சிலரை தாக்கி காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து கிராமத்தில் வதந்தி பரவியது. தமிழீழ விடுதலைப்புலிகள் கிராமத்துக்குள் பிரவேசித்துள்ளதாக நினைத்து, மக்கள் தமது வீடுகளை விட்டு ஓடத்தொடங்கினர். பின்னரே உண்மை நிலை தெரியவந்ததாக கூறப்படுகிறது. http://isoorya.blogspot.com/

    • 1 reply
    • 1.1k views
  16. இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை கடுமையாக கண்டிப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் கண் தெரிகிறதா!!! தமிழக அரசு விதித்த 45 நாள் தடைக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் ஏராளமான படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனனர். இதில் சந்தியாகு என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல…

    • 4 replies
    • 2.4k views
  17. எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம்- எறிகணைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல் [புதன்கிழமை, 04 யூன் 2008, 04:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். தென்மராட்சி எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் எறிகணை ஏவுதளம் ஆகியவற்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இலக்கு வைத்து நடத்திய எறிகணைத் தாக்குதலில் அழிவைச் சந்தித்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முகமாலைக் களத்தின் முதன்மைப் பின்தளமாக உள்ள எழுதுமட்டுவாள் சிறிலங்காப் படைத்தளம் மற்றும் மோட்டார் எறிகணைகளை ஏவும் தளம் ஆகியன இன்று புதன்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் …

  18. வீரகேசரி இணையம் - யாழ்ப்பாண நிலைவரம் குறித்த தகவல்கள் எவற்றையும் வெளியிடக் கூடாது என யாழ்.படைத்தளபதி டி.ஏ சந்திரசிறி அதிகாரிகள்,மதகுருமார், மற்றும் மனிதநேய அமைப்புக்களின் பணியாளர்களுக்கு பணித்துள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ். படைத் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு குடாநாட்டு மக்களின் குறைகளை ஆராயும் மாநாட்டிற்கு வருமாறு அழைத்திருந்த யாழ் . அரச அதிபர், ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், மனித நேய அமைப்புக்களின் பிரதிநிதி பரமநாதன், யாழ் மேலதிக நீதவான் ஆர்.ரி விக்கினராசா, யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி சிவராஜசிங்கம் ஆகியோரிடமே படைத் தளபதி சந்திரசிறி இத் தகவலை தெரிவித்துள்ளதாக மேலும் தெரியவருகிறது.

    • 0 replies
    • 1k views
  19. வவுனியாவில் எறிகணை வீச்சு: 2 பொதுமக்கள் காயம் [புதன்கிழமை, 04 யூன் 2008, 04:24 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வவுனியா மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளான நெடுங்கேணி, ஒலுமடு, சேனைப்புலவு, பட்டிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்புக்களை நோக்கி சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை மதியம் 12:00 மணியளவில் நடத்தப்பட்ட இந்த எறிகணை வீச்சுத் தாக்குதலில் காயமடைந்த 2 பேரும் நெடுங்கேணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் நெடுங்கேணி 2 ஆம் மைல் கல்லைச் சேர்ந்த சிறி விஸ்வநாதன் (வயது 30) பட்டைப்பிரிந்தகுள…

    • 0 replies
    • 704 views
  20. தமிழர் தாயகம் உட்பட சிறீலங்காவின் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்புக்களைத் தொடர்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய இழிநிலைப் புள்ளிகளைக் குறியிடும் Z- புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடப்பரப்புகளுக்குமான மாவட்ட ரீதியான புள்ளி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறீலங்காவில் தற்போது பாடப்பரப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் 20,000 ற்கும் மேல் என்று ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறுவதற்கான இழிவுப் புள்ளிகளைப் பெற்றோர் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை ஆகும்..! மாவட்ட அடிப்படையிலான.. பாடப்பரப்புகளுக்குரிய Z- score விபரங்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளது. இது 2007/08…

  21. காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்றும் கடையடைப்பு [புதன்கிழமை, 04 யூன் 2008, 10:35 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் நான்காவது நாளாக இன்று புதன்கிழமையும் கடையடைப்பு மேற்கொள்ளப்படுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிலவும் பதற்றம் நீடித்து வருகின்றது. மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிமகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைக் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடையப்பு மேற்கொள்ளப்படுவதால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் வியாபார நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்திருக்கும் முஸ்லிம் இ…

    • 0 replies
    • 657 views
  22. அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க மனித உரிமை மற்றும் தொழில் விவகார துணைச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகல்ஸ், சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணல்: உங்களின் சிறிலங்காப் பயணத்தின் நோக்கம் என்ன? மனித உரிமை சூழ்நிலை குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடனும், பொதுமக்கள் அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நான் இங்கு பயணம் செய்தேன். பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட சிறிலங்கா அரசாங்கம் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் தொடர்பாக அரசாங்கத்துடனும், பொதுமக்கள் சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவதும் எனது பயணத்தின் மற்றுமொரு நோக்காகும். அப்படியானால் மிக முக்கியமான நோக்கம் ம…

    • 0 replies
    • 1k views
  23. தமிழர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க விரும்பினால் பின்வரும் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விரும்பிய ஒரு தமிழரை சிபரிசு பண்ணவும். இந்த இணையத்திற்கு சென்று http://www.tamilnobellaureate.com/ அங்கே கீழே உள்ள Please send your suggestions by filling in the Nomination Page. என்பதை கிளிக்பண்ணி தெரிவிக்கலாம்.

    • 10 replies
    • 2.5k views
  24. "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' போல "உலக்கை தேய்ந்து உளிப்பிடியான' மாதிரி இலங்கையில் 2006 இற்குப் பின்னர் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடும் குன்றிக் குறுகிப் போய்விட்டது. ஆள்கடத்தல்கள், பலவந்தமாகக் காணாமற் போகச் செய்தல், சட்ட விரோதப் படுகொலைகள், ஊடகங்கள் மீதான அராஜகங்கள், சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான அட்டூழியங்கள் என்று இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றமை குறித்து சர்வதேச ரீதியில் கடும் கண்டனமும், அதிருப்தியும், சீற்றமும், விசனமும் எழுந்திருப்பது தெரிந்த விடயம்தான். தற்போதைய ஆட்சிப் போக்கின் சீத்துவம் பகிரங்கமாகத் தொடங்கியதும் அதைச் சமாளிப்பதற்காக கண்துடைப் …

    • 0 replies
    • 620 views
  25. எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்ச்செய்திதான்: புலித்தேவன் [புதன்கிழமை, 04 யூன் 2008, 10:28 மு.ப ஈழம்] [ப.தயாளினி] தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நோர்வே அனுசரணையாளர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பது நான் கைது செய்யப்பட்டதாக கூறுவதைப் போன்ற பொய்தான் என்று புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" ஆங்கில நாளேட்டுக்கு இன்று புதன்கிழமை (04.06.08)அவர் அளித்துள்ள நேர்காணலின் தமிழ் வடிவம்: நோர்வேயின் அனுசரணையின்றி சிறிலங்கா அரசாங்கத்துடன் எதுவித அமைதிப் பேச்சுக்களும் நடைபெறுவதற…

    • 0 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.