ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
யுத்தம் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாதென திவயின ஊடகவியலாளர் சிறிமேவன் கஸ்தூரிஆராச்சிக்கு நேற்றைய தினம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் மீது அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகளின் மற்றுமொரு கட்டமாகவே இதனை ஊடக அமைப்புக்கள் கருதுகின்றன. இது தொடர்பாக இலங்கை உழைக்கும் பத்தரிகையாளர் சங்கம், ஊடக சேவையாளர் சங்கம், தமிழ் ஊடகப் பேரவை, முஸ்லிம் ஊடகப் பேரவை மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு ஆகியன இணைந்து கூட்டாக கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட உபாலி பத்திரிகை நிறுவனத்தின் திவயின நாளேட்டின் பாதுகாப்புத்துறை செய்தியாளரும், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான சிறிமேவனின் வீட்டுக்கு நேற்று (29.…
-
- 1 reply
- 997 views
-
-
எரிபொருளை சிக்கனப்படுத்த அரசாங்கம் பாடசாலை இயங்கும் நாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நடத்தப்படும் நேரத்தை நீடித்து, பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை சிக்கனப்படுத்தும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, உரிய தரப்புகளின் கருத்துக்களை பெற்று இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 27 replies
- 3.4k views
-
-
அடுத்த வருடத்தினை தேர்தல் ஆண்டாக கருதி கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கட்சியின் வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு புதியவாகளை நியமித்து தேர்தலக்கு தயாராக வேண்டும் என்று மஹிந்த நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கருத்துத்; தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2009ம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. 2010 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்துடன் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகின்றது. எனவே அடுத்த வருடத்தினை தேர்தல் ஆண்டாக கருதி செயற்பட வேண்டும். வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு புதியவர்களை நியமித்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் மஹிந்த அங்கு தெரிவித்தார். கட்சியின் பதில் பொருளாளராக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழக…
-
- 0 replies
- 736 views
-
-
முருகண்டிச் சம்பவம் தொடர்பான செய்தி. ஆங்கிலத்தில் விளக்கம் உள்ளது. உங்கள் நாட்டு மக்களுக்கும், அரசுக்கும், ஊடகங்களுக்கும் இச்செய்தியை உரியமுறையில் கொண்டு சேர்க்கவும். -> படங்களின் மேல் அழுத்தினால், அச்சுப்பிரதி எடுப்பதற்குரிய அளவிலான பெரிய படத்தை பெற்றுக்கொள்ளலாம். தவறவிடப்பட்ட ஒரு படம் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-
-
தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் ஒன்றாக எழுச்சி கொள்ளவேண்டும். 30.05.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்தில் வாழ்கின்ற தமிழர்கள் எழுச்சி கொள்ளும் போது, தமிழினம் இமாலய வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சிங்களப் பேரினவாதிகளால் 1958 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் 50 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை: தாயகத்தில் வாழும் மக்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் 8 கோடி தமிழ் மக்களும் ஒன்றாக எழுச்சி கொள்ளவேண்டும். தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கக்கூட
-
- 9 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெறும் யுத்த முன்னெடுப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அமெரிக்காவின் இராஜங்கச் செயலகத்தின் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான துணைப் பொறுப்பதிகாரி ஐவன் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… இலங்கை இனப்பிரச்சினைக்குப் படைத்துறை ரீதியில் தீர்வு காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை இன முரண்பாட்டைத் தீர்க்க அரசியல் தீர்வு மூலமாகத் தான் தீர்வை எட்ட முடியும் என அமெரிக்கா கருதுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். News from : tamilwin.com
-
- 1 reply
- 748 views
-
-
இரகுநாதன் கவியழகன் மொத்தம் 500 க்கு 464 புள்ளிகபைபெற்றுள்ளார். அகில இந்திய ரீதியில் 9 இலடசத்திறகும் அதிகமான மணவர்கள் எழுதிய இத்தேர்வில் ஓர் ஈழத்து (அகதி) மாணவர் அணைத்துப்பாடங்களிலும் ஏ-1 இரக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார் ஈழத்து இளைய கலைத்துறைச் சாதனையளன், ஓவியம், கலைமாமணி- இரகுநாதன்-கவியழகன்(2006 ) கராத்தேயுவ கலாபாரதி- இரகுநாதன்- கவியழகன்(2005) 1992 ம்ஆண்டு ஆனிமாதம் 27திகதி ஈழத்தின்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கரையில் செம்லை என்ற ஊரில் பிறந்த இம்மாணவன் போராட்டச் சுழலில் வாழ்ந்தான். தந்தையார் இரகுநாதன்(எம்.ஐ.ஆர்) அவர்கள் நீண்டகாலம் போரளிகளின் பயிற்சி சம்பந்தப்பட்ட பொறுப்புக்களை வகித்து வந்தவர். குடும்ப சுழல் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நா…
-
- 10 replies
- 1.9k views
-
-
தமிழீழத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "உயிரம்புகள்" திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி. இத் திரைப்படம் விரைவில் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்பட உள்ளது.
-
- 8 replies
- 2.3k views
-
-
வாங்கோ வாங்கோ... அனைவருக்கும் இனிய வணக்கங்கள் அல்ல இழவுகள்! இஞ்ச பாருங்கோ. கீழ ரெண்டு படங்கள் இருக்கிது. சும்மா ஒருக்கால் கனகாலத்துக்கு பிறகு தமிழ்நெட் பக்கம் போனன். அப்படியே அதிர்ந்துபோனன். இவர்களப் பார்க்க உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? எம்மை மாதிரி இரண்டு கண்கள், இரண்டு காதுகள், வாய், மூக்கு, தலை, கால்கள் உள்ள மனிதர்கள் தானே இவர்கள்? எங்கட வீடுகளில இப்பிடி ஒண்டு நடந்தால் நாங்கள் பேசாமல் இருப்பமா? இவர்களை இவ்வளவு குரூரமான முறையில் கொன்று இருக்கின்றார்களே! இவற்றை பார்க்க உங்களுக்கு ஒன்றுமே தோன்ற இல்லையா? ஈராக்கில அமெரிக்காகாரன் ஒருத்தன அங்க இருக்கிற கொலைகாரங்கள் கத்தியால கோழிய வெட்டிற மாதிரி கழுத்த வெட்டி இணையத்தில அந்த வீடியோவ போட நாங…
-
- 8 replies
- 1.9k views
-
-
2004 ஆம் ஆண்டு, மே மாதம் 30 ஆம் திகதி, திங்கட்கிழமை. காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 'ஹலோ" என்றதும் அழைத்தவரின் குரலில் ஒரு தடுமாற்றமும,; பதற்றமும் தெரிந்தது. '..... வேலைக்குப் போகவில்லையா?" 'இல்லை, ஏன்?" 'மாமாங்கத்தில ஜேர்னலிஸ்ட் ஒருவரச் சுட்டுப் போட்டுக் கிடக்காம். அது தான். .... ஒருவேள நடேசண்ணையா இருக்குமோ?" விபரம்: http://www.swissmurasam.info/
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று கொழும்பு மருதானையில் இஸ்ரேலிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று முஸ்லீம் அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. இவ்வார்ப்பாட்டத்திற்கு இலங்கை அரசும், பொலிஸாரும் முழு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிகிறது. .... http://www.orunews.com/?p=1096
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இன்று இரவு ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 865 views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் கரகொலபிட்டிய என்ற காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் படைத்தரப்பினர் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 839 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகங்களை மிரட்டும் அரசாங்கத்தின் செயலைக் கண்டித்து கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் அரச ஊடகத்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 762 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்திற்கு எதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 744 views
-
-
தமிழீழ தனியரசு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 2k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் கரகொலபிட்டிய என்ற காட்டுப்பகுதியில் இன்று பிற்பகல் படைத்தரப்பினர் மீது அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பினைக் கண்டித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் பெரும் வாகன நிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகாமையில் கடற்படையினரின் முக்கிய தகவல் மற்றும் பாதுகாப்பு பரிமாற்ற மையமாக செயற்படும் சிறுத்தீவு கடற்படை முகாம் மீது கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ பிரிவினார் வியாழக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் மேற்கொண்ட ஈரூடக தாக்குதலானது பாதுகாப்பு தரப்பினரை திகிலடைய வைத்துள்ளது. குறித்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி விட்டு கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் பெருமளவு ஆயுதங்கள் மற்றும் முக்கிய தகவல் பரிமாற்ற கருவிகளை மீட்டுக்கொண்டு வெற்றியுடன் தமது தளம் திரும்பியிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு விட்டன. இன்னும் சில காலத்தில் அவர்கள் முழுமையா அழிக்கப்பட்டு விடுவார்கள். என்று இலங்கைப் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கருணாக…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜுன் 3ஆம் திகதி புதுமையான எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயணிக்கும் வாகனங்கள் 5 நிமிடநேரம் நிறுத்தப்பட்டு வாகனங்களின் விழக்குகளை ஒளிரவிட்டு, வாகன ஒலிகளை எழுப்ப வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த புதுமையான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள மக்கள் இவ்வாறு செய்தி தமது எதிர்ப்பைத…
-
- 0 replies
- 808 views
-
-
மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும், சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. விசாரணை ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மனித உரிமை மீறல் விசாரணைகளில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் விசேட …
-
- 0 replies
- 558 views
-
-
வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் படைச்சிப்பாய் ஒருவர் பலியானதுடன் ஆறு படையினர் காயமடைற்துள்ளனர். மணலாறு ஜனகபுரப்பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1.15 மணிக்கு விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் காயமடைந்தார். ஆண்டான்குளத்தில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு படையினர் காயமடைந்துள்ளனர். ஜனகபுரப்பகுதியில் நேற்று முன்தினம் முற்பகல் 10.15 மணியளவில் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கி இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். வவுனியா பெரியமடுப் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 2.15 மணிக்கு இடம்பெற்ற மோதலில் படையினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இத்தகவலை சிறிலங்கா படைத்தரப்பு வெளியிட்ட…
-
- 0 replies
- 623 views
-
-
சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் தேவகுமாரின் படுகொலை குறித்து பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் சங்கம் தனது கடுமையான அதிர்ப்த்தியை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, காணாமல் போவது, தாக்கப்படுவது குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்பு கோரியுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர் தேவகுமாரின் கொலைத்தொடர்பில், எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இந்த கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுகின்ற போதும் சந்தேகத்தின் பேரில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என யாழ்ப்பாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பூஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 692 views
-
-
அனைத்துலக நாடுகள் கடைப்பிடித்து வரும் சிறிலங்கா எதிர்ப்பு நிலைப்பாட்டை தமிழர் சார்பு நிலைப்பாட்டாக மாற்றுவது அவசியமானது என்று சுவிசில் இருந்து வெளிவரும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (30.05.08) வெளிவந்த "நிலவரம்" ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் செயற்குழுவில் மீள் நியமனம் பெற சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட பகீரதப் பிரயத்தனம் தோல்வியில் முடிந்திருக்கின்றது. ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளுள் 101 நாடுகளே சிறிலங்காவின் மீள் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. ஏனைய 91 நாடுகளும் ஆதரவு தெரிவிக்கத்தவறியதால் சிறிலங்கா தனது பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கின்றது. …
-
- 0 replies
- 550 views
-
-
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவுப் பகுதியில் சிறிலங்கா கடற்படைத்தளத்தை அழித்து கடற்புலிகளின் கொமாண்டோக்கள் கைப்பற்றிய கடற்படையினரின் 3 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-