Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. லிஸ்டீரியா குறித்து அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்! நாட்டில் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண் ஒருவரே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக வெளியான செய்தி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவரின் இறப்புக்கான காரணம் லிஸ்டீரியா (Listeria – Listeriosis) நோய் என உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதேவேளை, காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி…

  2. சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு நிதியைப் பெற்றாலும், இலங்கைக்கு கடினமான பாதை உள்ளதென Moody's Analytics இன் மூத்த பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவையிடம் கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் திங்கட்கிழமை இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. Moody's Analytics சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கத்ரீனா எல் கூறுகையில், நினைப்பது போல் இந்த கடன் வசதி என்பது, இலங்கையின் நெருக்கடிக்கு ஒரு வெள்ளி தோட்டா (silver bullet) அல்ல என குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எவ்வளவு நிதியுதவி அல்லது ஆதரவு வழங்கினாலும், இலங்கையின் நிலைமை இன்னும…

  3. (எம்.ஆர் எம்.வசீம். இராஜதுரை ஹஷான்) நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை கொண்டாடுகிறார்கள், உண்மையில் இவர்கள் வெட்கப்பட வேண்டும். கடன் பெற்று பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் பாராளுமன்றம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் த…

  4. எரிபொருள் விலை குறைக்கப்படும் - மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் Published By: DIGITAL DESK 5 21 MAR, 2023 | 03:26 PM (எம்.ஆர் எம்.வசீம்.இராஜதுரை ஹஷான்) அமெரிக்க டொலர் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் எரிபொருள் விலை குறைப்பு, ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் எரிபொருள் விலை குறைக்கப்படும். பொருளாதார முன்னேற்றத்தின் பயனை நாட்டு மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட…

  5. இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படை தன்மையுடன் முன்னெடுக்கவேண்டும் - ஜப்பான் பிரதமர் Published By: RAJEEBAN 20 MAR, 2023 | 03:06 PM இலங்கை தனது கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெளிப்படைதன்மையுடன் முன்னெடுப்பது அவசியம் என ஜப்பான் பிரதமர் பியுமோ கிசிடா தெரிவித்துள்ளார் புதுடில்லியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/150976

  6. பறிபோகும் தாய்நிலம் – எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிக்கப்படும் தமிழர் நிலம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசதிணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அத்துடன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனை அழைத்து அங்குள்ள நிலைமைகளைக் காண்பித்துள்ளனர். கொக்குத்தொடுவாய் – கோட்டக்கேணியிலிருந்து, அம்பட்டன் வாய்க்கால், தீமுந்தல், பணம்போட்ட கேணி, நாயடிச்ச முற…

  7. நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரை சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் கடன் வழங்குபவர்களுடனும் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன. தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச நாணய நிதிய…

  8. மணலாற்றைப் பௌத்தமயமாக்க திரைமறைவில் தீவிர முயற்சி! முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களை சத்தம் சந்தடியில்லாமல் பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு திரைமறைவில் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழர்களின் பூர்வீகமான மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும், மணற்கேணிப் பகுதியையும் அதேபெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு தமி…

  9. சங்கிலியன் மந்திரிமனையின் மீளுருவாக்கப் பணிகள் இரு வாரங்களில் நிறைவடையும் - பேராசிரியர் புஷ்பரட்ணம் Published By: Digital Desk 5 21 Mar, 2023 | 11:09 AM சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை மீள் உருவாக்க செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான நிதியுதவிகளை மக்களிடம் கோருகிறோம் என தொல்லியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பரமு.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மந்திரிமனை வளாகத்தினுள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ,அது தொடர்பில் மக்கள் மத்திய…

  10. கிளிநொச்சியில் அதிக அளவில் காணிப் பிரச்சினை !! இடம்பெயர்வுகள் மற்றும் மீள்குடியமர்வின் பின்னரும் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் மாவட்டம் கிளிநொச்சி என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் மக்களிடையே ஒரு பாரிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுகின்ற போதிலும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத …

  11. மாத இறுதியில் இருந்து மாணவர்களுக்கு ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ – அமைச்சர் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் 30 ஆம் திகதி முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். தரம் 6–9 மற்றும் 10–13 வகுப்புகளில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களையும் சர்வதேச நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறையில் புதிய இலக்கை அடைவதற்கு இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்ன…

  12. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – அமெரிக்கா குற்றச்சாட்டு இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து அவர்களை தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நட…

  13. பொது மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை! நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடைசெய்யப்பட்ட மூன்று திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka மற்றும் OnmaxDT ஆகிய நிறுவனங்கள் வங்கிச் சட்டத்தின் 83C இன் விதிகளை மீறியுள்ளனவா என்பதைக் கண்டறிய இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை மேற்கொண்டது. நடத்தப்பட்ட பரீட்சை தொடர்பாக, சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள், நிறுவுனர்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்க…

  14. பெண்ணொருவரிடம் நம்பிக்கை அடிப்படையில் பணம் கொடுத்து ஏமாந்த முதியவர் உயிர் மாய்ப்பு - யாழில் சம்பவம் Published By: T. SARANYA 20 MAR, 2023 | 03:27 PM மகன் அனுப்பிய பணத்தினை நம்பிக்கை அடிப்படையில் பெண்ணொருவருக்கு கொடுத்து ஏமாந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவருக்கு , வெளிநாட்டில் உள்ள மகன் கட்டம் கட்டமாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்தினை வழங்கி , யாழ்ப்பாணத்தில் காணி வாங்கி வீடு கட்டுமாறு கூறியுள்ளார். மகனின் பணத்தினை பெற்றவர் காணி வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் , எதிர்பார்த்த காணி கிடைக்காமையால் , காணி வாங்குவதனை…

  15. நீதியரசர் குழாமை பாராளுமன்றக்குழுவில் விசாரிப்பது நாட்டின் நீதித்துறையை மேலும் பாராதீனப்படுத்தும் - சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரிக்கை Published By: T. SARANYA 18 MAR, 2023 | 10:39 PM (நா.தனுஜா) உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள இலங்கைக்கு மிகமோசமானதொரு முன்மாதிரியாகவே அமையும் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. அதுமாத்திரமன்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்…

  16. தாம் பெறும் சம்பளத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் 41 இலட்சம் குடும்பங்கள் தாம் பெரும் வருமானத்தில் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் ஜனவரி மாத இறுதிக்குள் 82 சதவீத இலங்கைக் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கான வேறு வழிகளைக் கடைப்பிடித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது இலங்கையில் உள்ள 48 வீதமான குடும்பங்கள் நிதி நிறுவனம் அல்லது கடனாளிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளனர் அல்லது தமது குடும்பத்திற்கு உணவைப் பெறுவதற்காக தங்க ஆபரணங்களை அடகு வைத்து பணத்தைக் பெற்றுள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கையில் 43 வீதமான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிடும் பணத்தை குறைத்து அந்த பணத்தை உணவு…

  17. முல்லைத்தீவில் அரச உத்தியோகத்தர்களுக்கு அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டம் சமூக சீர்கேடுகளுக்கு பயன்படுகிறது Published By: VISHNU 20 MAR, 2023 | 05:34 PM கரைச்சி நிருபர் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் பனிக்கன்குளம் கிராமத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 2012இல் அரச காணியில் 54 காணித்துண்டுகள் வழங்கப்பட்டு ஒரு இலட்சம் ரூபா கடனும் வழங்கப்பட்டு அமைக்கப்பட்ட வீடுகளில் எவரும் குடியேறாத நிலையில் பாழடைந்து காணப்படுவதோடு, சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட அரச உத்தியோகத்தகர்களு…

  18. இலங்கையில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியவரை தேடி தமிழ்நாடு வந்த இளைஞர் - என்ன நடந்தது? படக்குறிப்பு, ஜெயக்குமார் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி தமிழுக்காக 17 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல நினைத்த பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்து விட்டு தமிழ்நாட்டுக்கு வந்த இலங்கையைச் சேர்ந்தவரை கண்டுபிடிப்பதற்காக, பணத்தை பறிகொடுத்த இளைஞர்களில் ஒருவர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளார். தன்னை ஏமாற்றிய நபர் குறித்து அவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்…

  19. மாவை – சம்பந்தனை தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்ட தீவிர முயற்சி: ஆராய்வதற்கு விசேட குழு! இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை தமிழரசு கட்சியிலிருந்து ஓரங்கட்ட நினைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாவட்ட நிர்வாகத் தெரிவை முடிக்கவேண்டும் என கூறப்படுகின்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னரே புதிய நிர்வாகம் ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அதேவேளை, கட்சியின் யாப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இடையில் மத்திய கூட்டம் ஒன்றை நடத்தி அதைத் திருத்தி அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கே தெரியாது மேலும் உள்ளுராட்சி வேட்பாளர் த…

    • 1 reply
    • 338 views
  20. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேற்று(செவ்வாய்கிழமை) இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 21 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சுமத்தி, கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் வவுனியா, கிளிநொச்சி மற்றும் பூசா முகாம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் …

  21. நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் – டக்ளஸ்! நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328052

    • 1 reply
    • 386 views
  22. உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது - மகிந்த தேசப்பிரிய Published By: Rajeeban 20 Mar, 2023 | 09:53 AM உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய 25 ம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உள்ளுராட்சி சபைகளின் காலம் முடிவடைவதால் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நிலை எவ்வாறானதாகயிருந்தாலும் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு அப்பால் தேர்தல்களை பிற்போடுவது உகந்த விடயமல்ல எனவும் மகிந…

  23. 40 அரச நிறுவனங்களை மூட அரசாங்கம் தீர்மானம்! சுமார் 40 அரச நிறுவனங்களை மூடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். பொதுமக்களுக்கான சேவைகள் குறைந்த மட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களை மூடுவது குறித்தே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். செலவுகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடைய இதனூடாக எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சில அரச நிறுவனங்களில் தலைவர்கள் மட்டுமே காணப்படுவதாகவும், சில நிறுவனங்கள் ஒரே விதமான செயற்பாடுகளையே மேற்கொள்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். …

  24. ரணிலை விரட்டும் ஆட்டத்தை விரைவில் ஆரம்பிப்போம் அந்துவன் "ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் - ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில் ஆரம்பித்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம்" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தருமான ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்தார். தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியவை வருமாறு, " ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கு முகங…

  25. 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர! உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அவற்றின் நிர்வாகம், மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.