Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலகெங்கும் பொங்குதமிழ் பகுதி 2 22.06.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/video/305/Nilavaram-22062008

  2. குண்டுவெடிப்புக்களை அடுத்து பஸ் பிரயாணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி [ திங்கட்கிழமை, 23 யூன் 2008, 03:02.22 AM GMT +05:30 ] கொழும்பில் சமீபத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரட்ண, பொதுமக்கள் கொழும்பிற்கு வருவதையும் குறைத்துக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகத் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய பாதுகாப்புப் போக்குவரத்து நடைமுறைகள் காரணமாகவும் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நீண்டதூர பஸ்கள் காலிவீத…

  3. தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழீழ போராட்டம் பற்றி கூறுவது என்ன?

  4. மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு: மூன்று காவல்துறையினர் பலி: ஒருவர் காயம் திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] இன்று மாலை ஆயித்தியமலை பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரது காவல்நிலை பகுதி ஒன்றில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. மூன்று காவல்துறையினர் அதற்கு அருகாமையில் உள்ள ஏரியில் நிராடுவதற்கு சென்றபோதே இவர்கள் நேரம்குறித்து வெடிக்கவைக்கும் குண்டின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் டி.ஐ.ஜி ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1415

  5. மூன்று குழந்தைகளுடன் பெண்மணியை காணவில்லை திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] வடமராட்ச்சி உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 39 அகவையுடைய ரட்ணசபாவதி கோடீஸ்வரன் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுடன் காணவில்லை என அவரது கணவரால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணயகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் யூன் மாதம் 17 ம் திகதியில் இருந்து இவர்களை காணவில்லை என அறிந்த அயலவர்கள் மத்திய கிழக்கில் நீண்டகாலமாக பணியாற்றிக்கொண்டிருந்த இவரது கணவருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர் யாழுக்கு சென்று மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிட்டுள்ளார். இதன்போது இவரது 16 அகவையுடைய சிறீராம், மற்றுமொரு மகன் சிறீகிருஸ்ணா (அகவை 14), மகள் சிறீஜெனனி (அகவை 10) ஆகிய குழந்தைக…

  6. சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும்: பா.நடேசன் [திங்கட்கிழமை, 23 யூன் 2008, 08:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சண்டைக்களங்களில் கிடைக்கும் வெற்றிகள் தான் போராட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் சிறப்புரையாற்றிய போது பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது: மேஜர் துச்சாதரனின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாவீரர்களின் நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் போதும் மாவீரர்கள் எந்த குறிக்கோளுக்காக வாழ்ந…

    • 0 replies
    • 844 views
  7. சிங்களப் பேரினவாதம் 1958 ஆம் ஆண்டில் மேற்கொண்ட தமிழின அழிப்புக் கண்காட்சியும், அரங்காற்றுகையும் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை மாணவர்களுக்கு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 635 views
  8. இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத உடன்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவினதும் பாகிஸ்தானினதும் நட்பை இலங்கை பெற்றுவிடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுவதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆயுத உடன்படிக்கையானது, “தற்பாதுகாப்பு” என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்குழுவினர், இது தொடர்பான பேச்சுக்களையே இலங்கை அதிகாரிகளுடன் நடத்தியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறி;ப்பிட்டுள்ளது. இந்தநிலையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் தலைமையிலான உயர்குழுவினர் இலங்கைக்கு இராணுவ மற்றும் புலனாய்வு அடிப்படையிலான உதவிகளை வழங்…

  9. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன், சார்ள்ஸ் அன்ரனி, புதுவகையான நச்சு ஆயுதம் ஒன்றைத் தயாரித்து வருவதாக இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இது பாரிய அதிர்ச்சியுடன் ஆட்களைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்படலாம் எனப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் உடலில் பல்வேறு பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் புலனாய்வு குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பிராந்தியத்திற்கு இராணுவத்தினரின் பிரவேசத்தைத் தடுக்கும் வகையில் இந்த நச்சு ஆயுதம் பயன்படுத்தப்படலாம் எனப் படைத்தரப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சண்டை 500 கிலோகிராம் மற்றும் சமாதானம் 500 கிலோகிராம் என்ற இரண்டு ஆயுதங்களும் படையினரின் வன்னிப்பிரவேசத்தைத் தடுக்கப் பயன்பட…

  10. யுத்த நடவடிக்கைகளின் போது அடைந்த வெற்றியைப் போன்றே வடமத்திய மாகாணசபைத் தேர்தலின் போதும் வெற்றியீட்டுவேன் என முன்னாள் இராணுவ உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணத்தில் நிச்சயமாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் அடைந்த வெற்றிகளைப் போன்றே தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நன்றி தமிழ்வின்

    • 0 replies
    • 816 views
  11. 5000 விடுதலைப் புலிப்படையினரில் 4698 புலிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்? Monday, 23 June 2008 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையின் பிரகாரம் 2008 ஜனவரி 1ம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 20 திகதி வரையிலான காலப் பகுதியில் அரச படைகளால் கொல்லப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தொகை 4698 ஆகும். இவர்கள் தரை வழித் தாக்குதல்களாலும் கடல் வழி தாக்குதல்களாலும் கொல்லப்பட்வர்கள் என தெரிவிக்கப்படுகிறது. விமான குண்டு வீச்சுகளால் கொல்லப்பட்வர்கள் இதில் அடங்கவில்லை. இவை குறித்து சுதந்திர ஊடக வழி உறுதிப்படுத்த முடியாவில்லை. இருந்த போதிலும் இதை நம்புவதாக இருந்தால் இராணுவ தளபதி 4ம் கட்ட ஈழப்போரைத் தொடங்கிய போது கூறியவை தற்போது முழுமைபெற்று இருக்க வேண்டும். 5000 விட…

  12. தற்போது யுத்தக் குற்றங்கள் தொடர்பான நிறுவனமொன்றில் பணியாற்றும் புலிகளுக்கு ஆதரவான பெண் அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாகத் திவயின செய்தி வெளியிட்டுள்ளது. ஆணையாளர் பதவியை வகிக்கும் லூயிஸ் ஆர்பர் பதவி விலகியதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள சில சிரேஷ்ட அதிகாரிகளினால் குறித்த பெண் அதிகாரியின் பெயர் முன்மொழியப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண் அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டால் இலங்கை அரசாங்கத்திற்குப் பாரிய சிக்கல்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டு…

    • 2 replies
    • 1.3k views
  13. இந்தியக் குழுவினரின் விஜயம் தீர்க்கதரிசனமானதா? பிராந்திய ஆக்கிரமிப்பா? அல்லது தற்காலிக ஏற்பாடா? இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வில் இந்தியா தலையிடவேண்டும் எனத் தமிழர்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர். ஏனெனில் இந்தியா தமக்கு அநீதி இழைக்காது என்ற காரணமாகும். எனினும் இந்திராகாந்திக்குப் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவது என்றில்லாமல் தமது பிராந்திய நலனுக்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை ஒரு ஆயுதமாகக் கொள்வதாக அமைந்துள்ளது. இந்தியாவின் முக்கிய தீர்மானங்களை எடுப்பவர்களாக விளங்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புச் செயலர் மற்றும் வெளியுறவுச் செயலர் ஆகியோர் இலங்கைக்குத் திடீர் விஜயம் ஒன்றைக் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு மேற்கொண்டன…

    • 0 replies
    • 844 views
  14. கொழும்பு ஆட்டுப்பட்டித்தெருவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] கொழும்பு புறக்கோட்டை ஆட்டுப்பட்டித்தெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தை ஒருவரும் மகனுமே துப்பாக்கிச் சூட்டக்கு ஆளானதாகவும், இந்த சம்பவத்தில் தந்தை உயிரிழந்துள்ளதாகவும், படுகாயமடைந்த மகன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/

  15. சர்வகட்சி பிரதிநிகள் குழுவில் பிள்ளையான் குழு! பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் பங்குபற்றும் பிள்ளையான் குழுவின் (தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்) பெயர்கள் இவ்வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபை முதலைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இவ்வாரம் குறித்த நபர்களின் பெயர்களை உத்தியோக பூர்வமான அறிவுப்பார் எனவும் அவர் கூறினார். அரசியல் தீர்வுக்கான பிள்ளையான் குழுவின் (தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள்) தீர்வுத் திட்டம் அடங்கிய ஆலோசணையுடன் தங்களது பிரதிநிதிகள் இக் குழுவில் இணையவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் கலந்துகொள்ளும…

    • 3 replies
    • 1.2k views
  16. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகமாட்டோம்: மேலக மக்கள் முன்னணி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தமது கட்சி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். கொழும்பில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக, கொழும்பு மாவட்டத்தில் பிரபல்யமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் முன்னர் வேலைசெய்த நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்திருப்பதாக அரசாங்க ஊடகமொன்று செய்திவெளியிட்டிருந்தது. சந்தேகத்தின்பேர் இலங்கை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் நடராஜா சிவராஜா என்பவர் கட்சியின் உறுப்பினராக வந்ததாகவும், அவர் சம்பளம் பெற்று வேலைசெய்யவ…

    • 0 replies
    • 826 views
  17. இராணுவ தீர்விற்கு எதிர்ப்பு: இந்தியா தெரிவிப்பு! இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு வழங்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதனையே இந்திய அரசாங்கம் எதிர்ப்பார்ப்பதாக இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். …

    • 0 replies
    • 944 views
  18. இராணுவத்தைவிட்டு தப்பியோடிய படையினரை கைது செய்ய பாரிய இராணுவ நடவடிக்கை:உதய நாணயக்கார இலங்கை இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பல்லாயிரக் கணக்கான படைவீரர்களை கைது செய்ய நாடு தழுவிய ரீதியல் பாரிய தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். இராணுவத்தை விட்டு தப்பியோடியவர்களுக்கு இனி வரும் காலங்களில் பொதுமன்னிப்பு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்படும் படைவீரர்களுக்கு விதிக்கப்படும் தண்டனைகளைவிட குறைந்தபட்ச தண்டனையே சரணடைவோருக்கு விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.கடந்த காலத்தில் 15,000த்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் இராணுவத்தைவிட்டு தப்பியோடியுள்ளதாக இராணுவப் …

  19. யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? [23 - June - 2008] அரசாங்க சேவையில் அரசியல் தலையீட்டை இல்லாமற் செய்யும் நோக்குடன் அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு 8 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் கூட, அத்திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரம் தொடர்ச்சியாகச் சிக்கலுக்குள்ளாகிக் கொண்டேயிருக்கிறது. அரசாங்கத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களுக்கான நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதற்கு வகைசெய்வதாக அத்திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது. திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பைக் கொண்ட அரசிஞிலமைப்புப் பேரவையின் (Constitutional Council) உறுப்பினர்களை நியமிப்பதை தாமதப்படுத்துவதற்…

    • 1 reply
    • 1.1k views
  20. தமிழ்க் கூட்டமைப்பின் தூதுக்குழு விரைவில் டில்லி செல்லும் Monday, 23 June 2008 கடந்த வார இறுதியில் கொழும்பு வந்திருந்த இந்திய உயர்மட்டக் குழுவின் அழைப்பை ஏற்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தூதுக்குழு எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இதேவேளை இனநெருக்கடி மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாட இருப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை கொழும்பு வந்திருந…

  21. ஓலிக்கண்ணிவெடி வெடித்ததில் இரத்மலான விமான நிலையத்தில் பரபரப்பு திங்கள், 23 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] இன்று காலை இரம்மலான விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட ஒலிக்கண்ணிவெடியில் கட்டாக்காலி விலங்கு ஒன்று சிக்கியுள்ளது. இதனால் பெரும் சத்தத்துடன் வெடியோசை உணரப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் பெரும் பதற்றமடைந்து அங்கும் இங்கும் ஒடியதாகவும் பின்னரே அது விலங்கினால் ஏற்படுத்தப்பட்ட வெடியோசை எனத்தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. http://www.pathivu.com/?p=1381

  22. இந்தியாவின் மிக உயர்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழு ஒன்று திடீரென சத்தம் சந்தடியின்றி கொழும்பு வந்தமை இலங்கை அரசியல் வட்டாரங்களில் ஏன், எதற்கு என்று பல்வேறு கேள்விக் கணைகளை எழுப்பியிருக்கின்றது. சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்குபற்று வது தொடர்பான முன்னேற்பாடுகளைக் கவனிப்பதே இந்த உயர் அதிகாரிகள் குழுவின் கொழும்பு வருகையின் நோக்கம் என்று கூறப்பட்டாலும் ஆனால் அதுவல்ல பின் னணி என்பது பரகசியமானவிடயம். அந்தத் தேவைக் காக இவ்வளவு உயர்மட்டத்தில் இவ்வளவு முற்கூட் டியேஅதிகாரிகள் குழு இங்கு வரத் தேவையில்லை என் பது எவருக்கும் புரியும் ஒன்று. இந்த உயர்மட்ட இந்தியக் குழுவின் கொழும்பு வருகை பற்றிய தகவலை, அக்குழு கொழும்புக்கு வந்து அவ் விடயம் பரகசியம் ஆகும் வரை, கொழும்பு …

    • 7 replies
    • 2.1k views
  23. இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில் 12,000 க்கும் மேற்பட்டோரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்யும் நடவடிக்கைகள் படையினர் ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் சரணடைவதற்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்ததையடுத்தே, சரணடையாது தலைமறைவாகியிருக்கும் 12,000 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார சர்வதேச செய்தி நிறுவனமொன்றிற்கு தெரிவித்துள்ளார். காலத்திற்குக் காலம் இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், அண்மையில் அவர்கள் சரணடைவதற்கு அரசு சுமார் ஒரு மாதகாலம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் சுமார் ஐயாயிரம் பேர் சரணடைந்து பொது மன்ன…

    • 2 replies
    • 1.2k views
  24. நெதர்லாந்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 1,000-க்கும் அதிகமான நெதர்லாந்து வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 559 views
  25. வீரகேசரி நாளேடு 6 - வட. கிழக்கு மாகாணத்தினை நான் பிரிக்கவில்லை. அது நீதிமன்ற விவகாரமாகும். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்தே வருகின்றது' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர் மட்டக்குழுவினரை அன்று இரவு அலரி மாளிகையில் சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத் துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஸ்ரீ விஜய்சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் தன்னாலான நடவடிக்கையினை எடுத்து வருகின்றது. கிழக்கு மா…

    • 2 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.