ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
கட்டுநாயக்கா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 8 பெண்கள் உட்பட 14 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 4.30 மணிமுதல் 8.30 மணிவரையான 4 மணிநேரங்கள் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகரா தெரிவித்தார். தேடுதல் குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்து கூறியதாவது பொலிஸார் விமானப் படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் ஆகியோர் இணைந்து இன்று காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போதே 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டுநாயக்கா வர்த்தக நிலையத்த…
-
- 0 replies
- 933 views
-
-
சர்வதேச மனிதஉரிமைச் சங்க அங்கத்துவத்தை இலங்கை இழந்துள்ளது. இந்நிகழ்வானது, மனித உரிமை வாதிகளுக்கு திருப்தியான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் மக்களின் சீரழிந்த அவல வாழ்வினை இவ்விவகாரம் தலைகீழாக மாற்றிவிடப் போவதில்லை. இது குறித்து சில விளக்கங்களை சென்ற வார சமகால அரசியல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். திரும்பவும் அதனை மீட்டிப் பார்ப்பது சற்று பொருத்தமாக இத்தருணத்தில் அமையலாம். அதாவது ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை எவ்வகையிலாவது நிறுவிவிட முனையும் மேற்குலகம், ஜீ.எஸ்.பீ. பிளஸ் என்கிற ஆடை ஏற்றுமதி சலுகை (கோட்டா) ஊடாக அதனைச் சாதிக்க முயன்றால் ஆசியப் பெரும் வல்லரசான சீனாவின் பக்கம், முழுமையாகச் சாயும் நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்படலாம். இது குறித்த கவலை மேற்குலக…
-
- 0 replies
- 785 views
-
-
தமிழீழத்தை உளவு பார்க்க சிறீலங்கா அரசாங்கம் தனக்கென சொந்த செய்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்குரிய இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள செய்திக்காக எனும் மூடிமறைப்புடன் இவ் ரகசியத்திட்டம் அரங்கேறுகின்றுது செய்கோளை இந்தியாவின் உதவியுடன் விண்ணிற்கு செலுத்துவதற்கான முயற்சிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற போதிலும், இரு நாடுகளின் அரசுகளும் இது தொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.
-
- 8 replies
- 3.4k views
-
-
மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை ரத்து செய்வதற்கு அரசாங்கம் ஊடகங்களின் மூலம் சூழ்ச்சி செய்வதாகத் தெரியவருகிறது. வெளிநாட்டில் உள்ள சில இலங்கைத் தூதுவர்களின் மூலம் பாதுகாப்பு தகவல்கள் கசிவதாக ஞாயிறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்வது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வெளிநாட்டு சக்திகளின் நிதியுதவியில் இயங்கும் உதலாகம ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார். உதலாகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைளை ஈடுபட்ட பகவதி குழுவினரின் செயற்பாடுகள் குறித்தும் அரச…
-
- 0 replies
- 719 views
-
-
ஏறாவூரில் வைத்து ஆயுதக்குழுவால் நேற்றும் இரண்டு முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆனால் பொலிஸார் பின்னால் விரட்டிச் சென்று அவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் இக்கடத்தலை மேற்கொண்ட ஆயுதக்குழுவை பொலிஸார் கைதுசெய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறத. இந்தப் பதற்றம் காரணமாக ஏறாவூரில் நேற்றுப் பிற்பகல் இரண்டு மணியளவில் ஊரடங்குச்சட்டம் பொலிஸாரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு: ஏறாவூர் ஐயங்கேணி முஸ்லிம் பகுதியில் மரம் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை ஆயுதக்குழுவொன்று வெள்ளைவானில் கடத்திச் சென்றிருக்கின்றது. இதைக் கண்டவர்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்…
-
- 1 reply
- 841 views
-
-
“சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவும்படி அரசுக்கு வெளிநாட்டு தூதுவர்கள் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படும்” என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்: “17வது திருத்தச்சட்டத்தின் மூலம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுயாதீன பொலீஸ் ஆணைக்குழு சுயாதீன அரசசேவை ஆணைக்குழு ஆகியவற்றை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எமது கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளது. சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படாததால் இன்று நீதி நியாயமான தேர்தல் ஒன்றை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அரசு தற்போது இவ்வருடத்துக்குள் மேலும் இரண்டு மாகாணசபைகளை கலைத்துவிட்டு தேர்தலை நடாத்த தயாராகின்றது. அதற்கு முன் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுவதற்கு அரசுக்கு…
-
- 0 replies
- 517 views
-
-
தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வன்னியில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்வது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான நிலையியல் குழு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துப்பொருட்களை விநியோகிப்பதை உடனடியாக ஆரம்பிக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் எனத் தனது வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ள அக் குழு மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்ந்தும் பதற்றம் மிகுந்ததாகக் காணப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி ஆட்லறித்…
-
- 0 replies
- 887 views
-
-
ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸிலுக்கான தேர்தலில் போட்டியிட்ட இலங்கைக்கு உலக நாடுகள் நல்ல பாடம் புகட்டிவிட்டன. தன்னுடைய தேசத்தில் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான ஆட்கடத்தல்கள்,காணாமற் போகச்செய்தல், சட்ட விரோதப் படுகொலைகள், கப்பம் அறவிடல், துணைப்படைக் குழுக்களைக் கொண்டு அட்டகாசங்கள், அராஜகங்களுக்குத் தாராளமாக இடமளித்தல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களுக்கு அனுமதித்துப் பார்த்திருக்கும் ஓர் ஆட்சிக்கு, ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸிலில் ஆசனம் வழங்கப்பட மாட்டாது என்பதே அந்தச் செய்தியாகும். உலகமே இப்படித் திரண்டு வந்து, சர்வதேச மன்றத்தில் வைத்துக் காட்டமான பாடம் புகட்டிய பின்னரும் கூட கொழும்பு ஆட்சிப்பீடம் திருந்துவதாக இல்லை. ஆட்கடத்தல்களும், படுகொலைகளும், அட்டகாசங்களுமாக "அரச பயங்…
-
- 0 replies
- 1k views
-
-
தனியார் பஸ் கட்டணங்களை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 06 ரூபாவாக இருந்த அடிப்படைக் கட்டணம் 07 ரூபாவாக வும் 08 ரூபாவாக இருந்த கட்ட ணம் 10 ரூபாவாகவும் 11 ரூபா கட்டணம் 14 ரூபாவாகவும் 16 ரூபா கட்டணம் 20 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது. ஏனைய கட்டணங்கள் 27.2 வீதத்தால் அதிகரிக்கப்படும் போக்குவரத்து அமைச்சருடன் இன்று இந்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இந்த இணக்கம் காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்தார். அதேவேளை, இலங்கை போக்குவரத்துசபை(இ.போ.ச.) பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 669 views
-
-
-
- 0 replies
- 765 views
-
-
-
- 6 replies
- 2.1k views
-
-
மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் இனமோதலுக்கான தீர்வைக்காண இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக விரும்புவதால் தனிநாட்டு கோரிக்கையை கைவிடுமாறு அமெரிக்கா பிரபாகரனை கேட்டுள்ளது. .....நான் நினைக்கிறேன் தனிநாட்டு யோசனையை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் பேச்சுவார்த்தை வார்த்தை சம்மதிப்பது மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று இலங்கைகான அமெரிக்க தூதுவர் Robert Blake தெரிவித்துள்ளார். தான் தமிழர்களுடன் நடத்திய பேச்சுகளிலிருந்து 95 வீதமானோர் ஐக்கிய இலங்கைக்குள் தான் ஒரு தீர்வை விரும்புகிறார்கள் என்று நினைப்பதாக Blake தெரிவித்தார். "அவர்கள் (தமிழ் மக்கள்) பிரபாகரன் தேடும் சுதந்திர தமிழ் ஈழத்தை தேட விரும்பவில்லை" என்று Blake சண்டே ஒப்சேர்வர் நாளிதழுக்கு தெரிவித்தார். Prabhakaran…
-
- 15 replies
- 3k views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினர் மக்களை திசை திருப்பும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றனர். எனவே இவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாமென எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிந்தித்து செயற்படுங்கள் யாழ்ப்பாண களியாட்டம் யாருக்கு? என்ற தலைப்பில் எல்லாளன் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படைகளால் திறந்த வெளிச் சிறைச்சாலை யாக்கப்பட்டிருக்கும் குடாநாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் மக்கள் மீதான படுகொலைகளையும் மூடி மறைக்கும் நோக்கோடும் குடாநாட்டில் மக்கள் எதுவித பிரச்சினைகளுமின்றி இருப்பதாகக் காட்டும் ந…
-
- 1 reply
- 1k views
-
-
ஏறாவூரில் கலக்கம்.. மேலும் பல முஸ்லீம் இனத்தவர்களை காணோம் ! பலர் காயம்! http://tamilnet.com/art.html?catid=13&artid=25768
-
- 0 replies
- 1.3k views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் போரியல் நுட்பத்தின் குறியீடாக திகழ்ந்த பிரிகேடியர் பால்ராஜூக்கான நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களைக் களைவதன் மூலம் மட்டுமே கிழக்கில் முஸ்லிம் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று கூறுகிறார் கிழக்கு மாகாண அமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா. அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட காத்தான்குடியில் மீரா ஜும்மா பள்ளிவாசலில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் தொழுகையை அடுத்து அங்குள்ள மக்கள் மத்தியில் கலந்துரையாடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களையச் செய்வதற்குத் தாம் நடவடிக்கை எடுத்து வருகிறார் எனவும், இது தொடர்பாக அரசுடனும், பொலிஸ் மா அதிபருடனும் தாம் பேசியிருக்கின்றார் எனவும் அங்கு அவர் கூறியிருக்கின்றார். இதேபள்ளிவாசலுக்கு நேற்று மதியம் கிழக்கு மாகாண முதலமைச்சர்…
-
- 7 replies
- 1.8k views
-
-
சுவிற்சர்லாந்தின் லவுசான் மாநிலத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் 13 ஆவது ஆண்டு நினைவாக விளையாட்டுப் போட்டி இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 581 views
-
-
வீட்டுக்குள் வேளாண்மை செய்யும் தொழில்நுட்பத்தை மகிந்த கண்டுபிடித்துள்ளார்
-
- 2 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வன்முறைகளுக்கு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவே காரணம் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 956 views
-
-
இலங்கையில் அரசரகால சட்டம் தொடந்தும் அமுல் செய்யப்படுவதைப் போல உத்தியோகபூர்வமாகச் செய்தித் தணிக்கை கொண்டுவரப்படவில்லை. எனினும் இலங்கையில் போர் நடைபெறும் இடங்களுக்குச் செய்தியாளர் அனுமதிக்கப்படுவதில்லை என்ற விடயத்தை இந்தோனிசிய பாலி நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சர்வதேசச் செய்தியாளர் மாநாடு ஒன்றில் தாம் சுட்டிக்காட்டியதாக சண்டே டைம்ஸின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஊடகங்கள்; இராணுவத்தினர் போர் தொடர்பாகக் கூறும் கருத்துக்களை மற்றும் தகவல்களை மாத்திரமே செய்தியாக வெளியிடும் வழமையை கொண்டுள்ளன. அதற்கு அப்பால் சென்று மறுபுறத்தில் தகவல்களைச் சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் யுத்தத்தில் இறந்…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணியில் மேலும் இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் வெள்ளைவானில் சென்ற பிள்ளையான் அணியினர் இந்த இளைஞர்களைக் கடத்திச் சென்றதாக முஸ்லீம்காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவுத் தெரிவித்துள்ளார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பிள்ளையான் தரப்பில் இருந்து உத்தியோக பதில்கள் வெளிவரவில்லை. இதனை அடுத்து அப்பகுதியிலும் பதட்டம் நிலவுவதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இப்பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான பதற்ற சூழ்நிலையினையடுத்தே இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள…
-
- 4 replies
- 1.1k views
-
-
அட்டாளைச்சேனை பிரதேசசபை தலைவர் மசூர் சின்னலெப்பை அரசாங்கத்தின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடுமையான தாக்குதலுக்குள்ளான இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசாங்க அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களாலேயே இவர் தாக்கப்பட்டிருப்பதாக பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார். இதேவேளை, ஏறாவூரில் இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்து ஏறாவூரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் ஏறாவூர் பகுதியின் இயல்புநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 22ஆம் திகதி காத்தான்குடியில் இடம்பெற்ற வன்…
-
- 0 replies
- 820 views
-
-
-
சிறிலங்கா அரசின் கேவலமான தோற்றப்பாட்டை மறைத்து வந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கான உறுப்புரிமையும் தற்போது பறிபோய் உள்ளது. எம்மால் அதனை தக்கவைக்க முடியவில்லை. எனவே நாம் எங்கு போகின்றோம்? என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 967 views
-
-
திறந்த வெளிக்கள்முனைக்கு செல்லும் மன்னார் யுத்தம்-தினக்குரல் விதுரன் வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தர…
-
- 0 replies
- 1.7k views
-