ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143605 topics in this forum
-
கிளிநொச்சி தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 718 views
-
-
யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொலை அச்சுறுத்தல் காரணமாக நேற்று திங்கடகிழமை ஒரு குடும்பம் அடைக்கலம் கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
தமிழ் மக்களுக்கு சுயாதீன தமிழ் ஈழமொன்று வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கத்தின் ட்ரொன்ட் ஜென்ஸ்ட்ரெட் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த நோர்வே அரசியல்வாதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
-
- 6 replies
- 2k views
-
-
இலங்கை வங்கி 1.36 பில்லியன் ரூபாவை அறவிடமுடியாகடனாக அறிவிப்பு செவ்வாய், 17 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] சிறீலங்காவின் இலங்கை வங்கி ரூ1.36 பில்லியன் பெறுமதியான பணத்தினை தள்ளுபடி செய்யவுள்ளதாக தெரியவருகிறது. 2006 ம் ஆண்டு அளவில் அறவிடமுடியாத கடனாக இத்தொகை காணப்படுவதாகவும் இவற்றினை தள்ளுபடி செய்யவுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1261
-
- 0 replies
- 922 views
-
-
வெண்புறாவின் மனிதநேய விழிப்புணர்வு நடவடிக்கை – முதலாவது பரிசு செவ்வாய், 17 ஜுன் 2008 [தாயகன்] லண்டனில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்வில் ஈழத் தமிழ் மக்களின் அவலத்தை வெளிகொண்டுவந்த, வெண்புறா மனிதநேய அமைப்பிற்கு முதலாவது பரிசு கிடைத்திருக்கின்றது. லண்டன் கார்சல்ரன் (Carshalton) பகுதியில் வருடாவரும் நடைபெறும் Carnival Parade எனப்படும் கேளிக்கை நிகழ்வில் பிரித்தானிய வெண்புறா அமைப்பும் கலந்து கொண்டிருந்தது. கடந்த 14ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்ற காட்சிப்பொருள் ஊர்வலத்தில் வெண்புறாவுடன், மேலும் 12 தொண்டு அமைப்புகளும் பங்குகொண்டிருந்தன. “ஆழிப்பேரலையில் வாழ்க்கை “ என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் வெண்புறாவின் இளம் தொண்டர்கள் உட்பட 25இற்கும் ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஆர்வத்துடன் தற்போது அவற்றினை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத் தீவு எதை நோக்கிச் செல்கிறது? - புனிதன் இன்றைய நிலையிலிருந்து இலங்கைத் தீவின் எதிர்காலம் எதை நோக்கிப் போகிறது என்ற வினாவுக்கு விடை தேடும் ஒரு சிறு முயற்சி இது. சகிப்புத் தன்மையுடன் தமிழ் சமூகம் தொடர்ந்து வாழும் என்றும், தமிழ் சமூகத்தின் உரிமைகள் சர்வதேச நிறுவனங்களால் பேணப்படும் என்றும், காந்தீய சிந்தனைகளால் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த - படித்த - தமிழ் அரசியல் வாதிகளில் பெரும் பகுதியினர் இலங்கைத் தீவினுள் ஒரு தமிழ் மாநிலத்தை நோக்கியே இலங்கை செல்கிறது என்று எண்ணியிருந்தனர். இச்சிந்தனையில் மாறுபட்ட தமிழ் அரசியல் வாதிகள் இன-மத-மொழி வேறுபாடற்ற இலங்கைத் தீவு நோக்கிய கனவில் திளைத்திருந்தனர். இந்த இரு சிந்தனைகளும் இன்னும் …
-
- 3 replies
- 1.8k views
-
-
சட்ட விரோத ஆயுதப் பாவனை தீவிரமாக அதிகரிப்பு: ஆய்வு வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள் Tuesday, 17 June 2008 இலங்கைத் தீவில் மோசமடைந்துசெல்லும் அரசியல் சூழ்நிலைகளால் தொடர்ந்தும் சட்டவிரோத ஆயுதப் பாவனைவீதம் அதிகரித்துச் செல்வதுடன், இழப்புக்களும் அதிகரித்துள்ளதாக ஆயுதப் பாவனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது. நாட்டின் அரசியல் நிலைவரம் மோசமடையும்போது சட்டவிரோத ஆயுதங்களின் பயன்பாடும் அதிகரிப்பதாகத் தெரியவிக்கப்படுகின்றது. 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலகுரக ஆயுதங்களே பயன்படுத்தப்பட்டு வந்தபோதும், காலப்போக்கில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து பல நவீனரக சட்டவிரோத ஆயுதங்கள் தென்பகுதி உள்ளிட்ட மோதல்கள் இல்லாத பகுதிகளுக்குக் க…
-
- 1 reply
- 1.2k views
-
-
"சலனம்'சித்திர அமைப்பின் தலைவர் கடத்தப்பட்டார் தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையின் முன்னாள் உறுப்பினரும், "சலனம்' சித்திர அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவருமான கனகசபை தேவதாஸன் காணாமல் போயிருக்கிறார் எனக் கூறப்படுகின்றது. தங்களைப் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்ட சிலர், இவரை வெளியில் எங்கிருந்தோ அழைத்துக் கொண்டு, கொழும்பு, ஜம்பட்டா வீதியில், அவரது தங்குமிடத்துக்கு கடந்த சனியன்று வந்திருக்கின்றனர். அதன் பின்னர் அவரை அவர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றனர் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவத்தின் பின்னர் அவர் காணாமற் போயிருக்கின்றார். பொலிஸாரோ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரோ அவரைத் தாங்கள் கைதுசெய்யவேயில்லை என்று தெரிவித்திருப்பதால் தே…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமைதி தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: நோர்வே [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 07:55 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கை தொடர்பான கொள்கைகளை நோர்வே மாற்றவில்லை, அங்கு அமைதியை ஊக்குவிப்பதற்காக நோர்வே எப்போதும் பாடுபடும் என்று நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் றெய்மென்ட் ஜோகன்சென் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்கு எப்போதும் நோர்வே பாடுபடும். அங்குள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை காணும் முகமாக நோர்வேயின் செயற்பாடுகள் அமையும். எல்லாச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் முகமாக பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை காணும் முயற்சிகளுக்கு நோர்வே அனுசரனைகளை வழங்கும் என்…
-
- 0 replies
- 817 views
-
-
தனி தமிழ் ஈழம் கோரிக்கை இந்தியாவுக்கு எதிரானது அல்ல என்று விடுதலைப் புலிகள் மூத்த தலைவர் கே.வி. பாலகுமாரன் கூறினார். இந்தியாவில் உள்ள சகோதர-சகோதரிகளிடையே எமக்கு உள்ள கலாசார தொடர்பின் அடிப்படையில் இந்திய அரசு எங்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கழகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இந்தியாவின் நலனே எங்கள் நலன். தமிழ் ஈழம் இந்தியாவுக்கு எதிரானது அல்ல. எனவே இலங்கைப் பிரச்னையில் இந்தியா தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்றார் அவர். இலங்கைப் பிரச்னையை இந்தியா தனது கோணத்திலிருந்து அணுகுவது வருத்தமளிக்கிறது. சர்வதேச சமூக ஒத்துழைப்புடன்தான் இலங்கைத் தமிழர் போராட்டம் வெற்றி பெற முட…
-
- 0 replies
- 2.2k views
-
-
நேற்று இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போகல்லாகம : விடுதலைப் புலிகள் அமைப்பில் பிரிந்து வந்த கருணா குடியேற்ற விதிகளை மீறிய குற்றத்திற்காக பிரிட்டனில் காவலில் இருந்தார். ஒன்பது மாத சிறைததண்டனைககுப் பிறகு விடுதலையாகியுள்ளான். அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆனால் அவனை இலங்கைக்கு கொண்டுவர அரசு எந்த முயற்சியையும் எடுக்காது. அப்படி எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை. விடுதலை புலிகளின் உறுப்பினரான ஆயுதம் எடுத்துப் போரடிய பிள்ளiயான் தற்போது ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி கிழக்கு முதல்வனாக உள்ளார். அதே போல், புலிகளுக்கும் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பவேண்டும். இலங்கையில் மனித உரிமை மீறல்களை உறுதி செய்ய அரசயில் சட்டம், …
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் என்பன குறித்து இந்த சந்திப்பின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விசேட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த 3 உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இரு தரப்பு பாதுகாப்பு விவகாரங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 819 views
-
-
கோயம்பேடு மார்க்கெட்டில் குவித்துப் போட்ட கத்தரிக்காய், தேங்காய் ஸ்டைலில் கும்மிடிப்பூண்டியில் குவியல் குவியலாகக் கிடைத்துள்ள குண்டுகள், தோட்டாக்கள் தமிழகத்தில் குபீர் பீதியைக் கிளப்பி உள்ளன.`ஒருவேளை இது தீவிரவாதிகளின் ஆயுதக்களஞ்சியமாக இருக்கலாம்' என ஜெயலலிதா அவரது வழக்கமான பாணியில் இதை வைத்து அரசியல் செய்ய, ஆரம்பமாகி விட்டது அமர்க்களம். கும்மிடிப்பூண்டி சித்திரராஜ கண்டிகையைச் சுற்றியுள்ள தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்குழு (சிப்காட்) வளாகத்தில் பதினேழு இரும்பு உருக்காலைகள் செயல்படுகின்றன.இந்த உருக்காலைகள் வெளிநாடுகளில் இருந்து பழைய இரும்புச்சாமான்களை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்து, அவற்றை உருக்கி இரும்புப் பொருட்களைத் தயாரிக்கின்றன. இதே பகுதியில் தாசில்தார் அலுவல…
-
- 0 replies
- 1.8k views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் - ஆன்ம வல்லமை கொண்ட ஆளுமையாளன் :வண. பிதா ஜெகத் கஸ்பார் வானம் அளந்தது அனைத்தும் அளந்து, வானம் அறிந்தது அனைத்தும் அறிந்து, வளர்ந்து வாழ்கின்ற எம் தமிழ் மொழியின் வரலாறு எத்தனையோ மிகப் பெரிய வீரர்களைக் கண்டிருக்கின்றது. வீரர்களின் வீரத்தைப் போற்றுகின்றோம்;. போர்களை நாங்கள் விரும்புகிறவர்கள் அல்ல. போர்கள் இல்லாத எவ்வித சச்சரவுகள் இல்லாத சமாதான உலகமே எம் அனைவருடைய கனவாகவும் இருக்கின்றது. ஆனால், அந்த உலகம் வருகின்ற வரை, நீதி வருகின்ற வரை, நீதிக்காக, மனித உரிமைகளுக்கான, மனித இருப்புக்கான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்கிரமங்களை, ஆக்கிரமிப்புக்களைச் செய்தவர்களை நாங்கள் வாழ்த்துவதும் இல்லை. வணங்குவதும் இல்லை. ஆனால், ஒடுக்கப்படுகின்ற மக…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனவரி 1ஆம் திகதி முதல் கடந்த வாரம்வரை 128 பேர் வெள்ளைவான் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர்- இராதாகிருஷ்ணன் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும் கடந்த ஜனவரி முதல் கடந்த சனிக்கிழமைவரை 128 பேர் வெள்ளை வான் குழுவினரால் கடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் வாழ்க்கைத் தொழில்நுட்ப பயிற்சிகள் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், இராணுவச் சீருடையில் வந்தவர்களாலும் சிலர் கடத்திச்செல்லப்பட்டிருப்பத
-
- 0 replies
- 640 views
-
-
15.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு இவ்வாரம் நிலவரம் ஆய்வில் கருப்பொருளாக "உலகெங்கும் பொங்குதமிழ்" எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. http://www.yarl.com/videoclips/view_video....c9b924ec161e763 இந்நிலவரத்தில் இறுதிப்பகுதியில் சில நிமிடங்கள் (தொழில்நுட்பக் கோளாறு காரணமாக) இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
-
- 2 replies
- 895 views
-
-
மொனராகலையில் தமிழர் காணாமல் போயுள்ளார் செவ்வாய், 17 ஜுன் 2008 [தாயகன்] மொனராகரையை சொந்த இடமாகக்கொண்ட தமிழ் பொதுமகன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 34 அகவையுடைய கந்தசாமி ராமகிருஸ்ணன் என்பரே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். முச்சக்கர ஊர்த்தி செலுத்துனரான இவர் வெளியே சென்றபோது காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி மொனராகலை காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார். இவரது முச்சக்கர ஊர்தி குலுந்தலாவ பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/?p=1252
-
- 0 replies
- 490 views
-
-
Canada puts Tamil group on terrorist list 16 Jun 2008 18:41:38 GMT Source: Reuters (Adds comments, details) TORONTO, June 16 (Reuters) - The Canadian government added the World Tamil Movement to its list of terrorist groups on Monday, describing it as a front organization which raised funds for the Tamil Tigers in Sri Lanka. The group's assets will be frozen and Canada's banking regulator said that Canadian financial institutions must review their records and immediately report to the federal police any transactions made by the World Tamil Movement. The directive covers Canadian banks, insurance companies and credit unions and is part of Canada's effo…
-
- 15 replies
- 3.7k views
-
-
ஈஸ்காம் தமிழர்கள் பொங்குதமிழ்நாளில். Italian Tamils resolve support for Eezham homeland http://tamilnet.com/art.html?catid=13&artid=26036 ழ = L
-
- 2 replies
- 1.7k views
-
-
சிரி லன்கா அரசாங்க அறிவித்தல். [முத்திரை மாற்றம்]
-
- 7 replies
- 3k views
-
-
சிறிலங்காவில் சம்பள உயர்வு கோரி எதிர்வரும் 10 ஆம் நாள் நாடாளாவிய ரீதியில் பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 611 views
-
-
தேசியத் தலைவரின் காலத்தில் வீரக்கலைகள் புத்துயிர் பெற்று வருகின்றன: பா.நடேசன் [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 06:30 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் தமிழர்களின் வீரக்கலைகள் புத்துயிர் பெற்று வருவது மகிழ்வைத் தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். மேஜர் ஈழப்பிரியா நினைவாக முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தற்காப்புக் கலை போட்டி பரிசளிப்பு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழர்களின் வீரத்தினை வெளிப்படுத்தவதாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்குப் பின்னர் எமது இனத்தின் வீ…
-
- 0 replies
- 803 views
-
-
தென்பகுதியின் அச்சம் தணிய புலிகளிடம் மண்டியிட வேண்டிய நிலையில் உள்ள சிங்கள அரசு -இலட்சுமணன்- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிறுத்த முடியாமலும் அவற்றைத் தடுக்கும் வழிறைகள் தெரியாமலும் சிங்கள அரசு திண்டாடுகின்றது. இதன் விளைவாக செய்வதறியாத அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்து தனது கோபத்தைத் தணிக்க முயற்சிக்கிறது. அதன் வெளிப்பாடாக வன்னிப் பெருநிலப்பரப்பெங்கும் கண்மூடித்தனமான விமானத் தாக்குதல்களை நடத்துவதுடன் ஆழ ஊடுருவும் அணியினரைப் பயன்படுத்தி கிளைமோர் தாக்குதல்களையும் நடத்தியும் வருகிறது. தலைநகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள தாக்குதல்கள் விடுதலைப் புலிகளாலேயே நடாத்த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும் இடையே இன்று மதியம் அரச தலைவர் மாளிகையில் சிறப்புச் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 663 views
-