Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சார்க் அங்கத்துவ நாடுகளின் அங்கீகாரத்துடன் 'சார்க் உணவு வங்கி' விரைவில் இயங்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் எட்டு நாடுகளில் பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளும் இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரமளித்துள்ளன. அதேவேளை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏனைய உறுப்புநாடுகளின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாகவும், உணவு வங்கி ஸ்தாபிக்கும் பிரகடனத்திற்கு அவை அங்கீகாரம் வழங்கியதுடன் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது. 2007 ஏப்ரல் 3ஆம் திகதி இந்தியாவில் கடைசியாக இடம்பெற்ற சார்க் உச்சி மாநாட்டில் சார்க் உணவு வங்கியை உருவாக்குவதற்கான பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப…

  2. கிழக்கு இலங்கையில் முஸ்லிம் ஆயுதக்குழுக்கள் உருவாகி வருவது தொடர்பான ஆதாரங்களையும் அதன் பின்னணி தொடர்பான தகவல்களையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 668 views
  3. மனித உரிமை விவகாரங்கள் தொடர்பிலான சிறிலங்காவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 729 views
  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வெவ்வேறு மோதல்களில் 4 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 830 views
  5. சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது புலிகள் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 07:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மேற்கில் குஞ்சுக்குளத்துக்கும் மூன்றுமுறிப்புக்கும் இடையில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களின் நடவடிக்கையை முறியடித்து விரட்டியடித்துள்ளனர். இதில் படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாக்குதலின் போது சிறிலங்காப் படையினரிடம் இருந்து ரி-56 - 2 ரக …

    • 0 replies
    • 1k views
  6. தாயக- தமிழகக் கலைஞர்களின் உருவாக்கத்தில் "எங்களின் கடல்" குறுவட்டு வெளியீடு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:13 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] தாயகக் கலைஞர்களும் தமிழகக் கலைஞர்களும் இணைந்து உருவாக்கிய "எங்களின் கடல்" பாடல் குறுவட்டு நேற்று முன்நாள் வெளியிடப்பட்டது. புதுக்குடியிருப்பில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுக்கு திரைப்பட வெளியீட்டுப்பரிவு பொறுப்பாளர் செழியன் தலைமை தாங்கினார். லெப். கேணல் நிசாந்தனின் துணைவியார் அமுதா பொதுச்சுடரினை ஏற்ற, முதல் மாவீரன் லெப். சங்கரின் திருவுருவப்படத்திற்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் செ.செல்வச்சந்திரன் ஈகச்சுடரிடனை ஏற்ற, முல்லை வலய - 01 காவல்துறை கண்காணிப்பாளர் கிருஸ்ணகுமார் மலர்ம…

    • 0 replies
    • 728 views
  7. காத்தான்குடியில் இன்றும் கடையடைப்பு: வன்முறையில் மூவர் காயம் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 04:34 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் தொடர்ந்து நாளாக மூன்றாவது இன்றும் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அங்கு தொடர்ந்தும் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாள் அங்கு இடம்பெற்ற வன்முறையில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கல்லடியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டதனைத் கண்டித்தே இந்த கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கடையடைப்பை முன்னிட்டு அங்கு இயல்பு நிலை செயலிழந்துள்ளது. கடைகள் மற்றும் அரச அலுவலகங்கள் என எவையும் இன்றைய நாள் இயங்கவில்லை. அங்கு தொடர்ந்…

    • 0 replies
    • 532 views
  8. Posted on : 2008-06-03 ஜனநாயகக் கேலிக்கூத்தால்தான் இனப்பிணக்கு பூதாகரமானது தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை. இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின் றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப் படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக் கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக. ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார். இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்…

  9. சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு : இராமேஸ்வரம் மீனவர் பலி! பத‌ற்ற‌ம்! செவ்வாய், 3 ஜூன் 2008( 13:52 IST ) 45 நாள் தடைக்குப் பிறகு கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இராமேஸ்வரம் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார். ‌சிறல‌ங்க கட‌‌ற்படை‌த் து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌‌ம் ‌மீனவ‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌கி‌ன்றன‌ர்! ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 714 விசைப் படகுகளில் நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். அப்பகுத…

  10. ஜனாதிபதியின் கிரகநிலை சரியில்லை Tuesday, 03 June 2008 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கிரக நிலை பாதகமாக காணப்படுவதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி நாடு திரும்ப மாட்டார் எனத் தெரியவருகிறது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் 7ம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி ஜனாதிபதி சற்று கால தாமதமாகியே நாடு திரும்ப உள்ளார். ஜோதிடர்கள…

    • 2 replies
    • 1.3k views
  11. அரசாங்கத்தினால் நியாயமற்ற ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு வாகன ஒலி எதிர்ப்பு போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக ஐக்கியதேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்கள், காவற்துறை உத்தரவுகள் என்பவற்றை பொருட்படுத்தாது போராட்டத்தில் பெருமளவிலானவர்கள் இணைந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. இன்று (யூன்3) இலங்கை நேரப்படி நணபகல் 12.00 மணிக்கு வாகனங்களை ஐந்து நிமிட…

    • 0 replies
    • 553 views
  12. வட,கிழக்கில் உள்ள படையினருக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கல்! வீரகேசரி இணையம் 6/3/2008 3:31:21 PM - வட,கிழக்கில் சேவையிலுள்ள படைவீரர்களின் பாவனைக்காக தொலைக்காட்சிப் பெட்டி,ஒலிப்பத்திவுக்கருவி போன்ற இலத்திரனியல் உபகரணங்களை அபான்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி அயோமா ராஜபக்ஷ நேற்று அமைச்சில் நடைபெற்ற வைபவமொன்றில் இந்த உபகரணங்களை படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்.இவ்வைபவத்தில

  13. வீடியோ தொழிநுட்ப சாட்சிப்பதிவு நிறுத்தம். ஆதாரம் வீரகேசரி

  14. ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய நாள் ஏற்பாடு செய்த வாகன நிறுத்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று மதியம் பெரும் வாகன நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 656 views
  15. மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும்: பா.நடேசன் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 01:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மக்களின் எழுச்சிதான் விடுதலையை நாம் பெறுவதற்கு பெரும் பங்களிப்பாக இருக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற தேசியப் பணிக்குழு சங்கமம் நிகழ்வில் அவர் ஆற்றிய சிறப்புரை: தேசியப் பணிக்குழுவின் செயற்பாடுகள் தமிழீழத் தேசியத் தலைவருக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. இந்தியப் படைக்காலத்தில் இப்பகுதி மக்கள் பெரும் பங்களிப்பை அச்சுறுத்தலுக்கு மத்தியில் உதவினர். இதற்காக இந்தியப்படைய…

  16. தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்கா கடற்படையினர் படுகொலை செய்வது குறித்த தமிழகத்தின் முறைப்பாடுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பாராமுகமாகவும் இரக்கமற்ற தன்மையோடும் செயற்படுவதாக தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 690 views
  17. சிறிலங்கா வெள்ள அனர்த்தத்தில் 18 பேர் பலி- 2 லட்சம் பேர் இடம்பெயர்வு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 02:56 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தென்பகுதியிலும் மலையகத்திலும் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கடும் மழை மற்றும் மண் சரிவினால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானனோர் இடம்பெயர்ந்துள்ளனர். தென்பகுதியில் உள்ள களுத்துறை, காலி, இரத்தினபுரியிலும் மலையகத்தில் நுவரெலியா, கேகாலை, ஹற்றன் போன்ற இடங்களிலே கடும் மழையும் மண்சரிவும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்திலேயே மழையினாலும் மண்சரிவாலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களை வெள்ள நீர் மூழ்கியுள்…

    • 3 replies
    • 879 views
  18. தமிழர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைக்க விரும்பினால் பின்வரும் இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு விரும்பிய ஒரு தமிழரை சிபரிசு பண்ணவும். இந்த இணையத்திற்கு சென்று http://www.tamilnobellaureate.com/ அங்கே கீழே உள்ள Please send your suggestions by filling in the Nomination Page. என்பதை கிளிக்பண்ணி தெரிவிக்கலாம்.

    • 10 replies
    • 2.5k views
  19. எழுச்சிப் போராட்டங்களுக்கு தயாராகுங்கள்: மாணவர்களுக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 01:20 பி.ப ஈழம்] [திருமலை நிருபர்] தமிழீழத் தலைநகராம் திருகோணமலையில் நடைபெறும் சிங்களவரின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தாயக மண்ணை மீட்கும் மாணவர் எழுச்சிப் போராட்டங்களுக்கு தயாராகுங்கள் என்று திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழீழ மாணவர் எழுச்சி நாளினை (06.06.08) முன்னிட்டு திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட அறிக்கை: தமிழர் தம் வாழ்வியலை கல்வி வாய்ப்புக்களினை சரிவர பயனுடையதாக்கிய தமிழ் மாணவர் சமூகத்தின் கல்வியினை நசுக்குவதற்காக அவர்களின் உயர்கல்வி வாய்ப்பினை வெட்டுப்புள்ளிகள் மூலம் திட்டமிட்டு மட்டுப்படுத்திய சி…

    • 1 reply
    • 910 views
  20. கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விடுத்த கோரிக்கை முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. பிள்ளையான் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவருடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு கோருவது நியாயமற்றதென அரசாங்கப் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. துணைக்குழுக்களுடன் தொடர்புகளைப் பேணும் அரச அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்த முடியும் என பிலிப் அல்ஸ்டன் தெரிவித்திருந்தார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 902 views
  21. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை.இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின் றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப் படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக் கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக. ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார்.இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ பிரபாகரன் "அடக்கப்படும்போதுதான்' இலங்கையில் அமைதி சாத்தியம் என்றும் அவர் கூறி…

    • 0 replies
    • 799 views
  22. புலித்தேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் என்பவரை பிரபாகரனின் நேரடி பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு உட்பூசல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Tamil Tigers place senior leader under house arrest: military Mon Jun 2, 4:32 PM ET COLOMBO (AFP) - The elusive head of the Tamil Tigers in Sri Lanka has placed a senior rebel leader under house arrest over a worsening internal dispute, the defence ministry said Monday. Seevaratnam Prabaharan, alias Pulidevan, who is attached to the Tigers' peace secretariat, has been placed under arrest on the direct orders of the Tiger supremo, Velupillai Pra…

  23. இலங்கை மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அரியலூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். கடல் இலங்கையைப் பிரித்தாலும் தொப்புள்கொடி உறவு தமிழகத்துடன் தொடர்கிறது எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். ஈழத் தமிழர் பிரச்னை தொடர்பாக இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இலங்கை அரசின் இனப்படுகொலைகளை சர்வதேச நாடுகள் புரிந்துக்கொண்டுள்ளன. தனது மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்கு தெரியக்கூடாது…

    • 0 replies
    • 880 views
  24. இலண்டனிலுள்ள தமிழ் சமூகத்தவர்களுக்குப் போதியளவு உளரீதியான ஆதரவு கிடைப்பதில்லையென கிழக்கு இலண்டனிலிருக்கும் இலங்கை உளவளத் துணையாளர் போல் சத்தியநேசன் தெரிவித்துள்ளார். “வீடுகளில் தனியாக உள்ளவர்களுடன் கதைப்பதற்கு எவரும் இல்லை. வீட்டுப் பராமரிப்பு மற்றும் நலன் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் மன அழுத்தத்துக்கு உள்ளானால் அது இயலாமல் போய்விடும்” என அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இலண்டன் கார்ஷல்டன் எனும் பகுதியில் வசித்துவந்த இலங்கைத் தாயார் ஒருவர் தனது 5 வயது மகனையும், 4 வயது மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்ததுடன், இந்தச் சம்பவத்தில் ஆறு மாதக் குழந்தையொன்று காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறது. …

    • 0 replies
    • 1.1k views
  25. த நேசன், பொட்டம்லைன், ரிவிர ஆகிய பத்திரிகைகளை பிரசூரிக்கும் ரிவிர மீடியோ கோபரேசன் நிறுவனத்தின் உரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக ஊடக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று பத்திரிகைகளின் உள்ளடக்கங்களும் ராஜபக்ஸ சகோதரர்களின் கருத்துக்களை இனி பிரதிபலிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரும், ஆர்பிகோ நிறுவனத்தின் தலைவருமான சேன யக்தெனியவிற்கு சொந்தமான ரிவிர பத்திரிகை நிறுவனத்தின் 49 வீத பங்குகளை ஜனாதிபதியின் உறவினரான நிலங்க ராஜபக்ஸ ஏற்கனவே கொள்வனவு செய்திருந்தார். யக்தெனியவினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 40 மில்லியன் கடன் தொகையொன்றை மீளச் செலுத்துவதற்காக பத்திரிகையின் பங்குகளை யக்தெனியா …

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.