ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142625 topics in this forum
-
Published By: Digital Desk 1 28 Sep, 2025 | 03:10 PM யாழ்ப்பாண சிறையில் 52 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததன் பின்னர், விடுவிக்கப்பட்ட இந்தியாவில் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் செப்டம்பர் 30 ஆம் திகதி வீடு திரும்புவார்கள் என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செப்டம்பர் 27 ஆம் திகதி இலங்கை கடற்கரையிலிருந்து காக்கிநாடாவுக்குப் புறப்பட்டது. நான்கு மீனவர்களும் வெள்ளிக்கிழமை (26) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். புதுடில்லியில் உள்ள ஆந்திரப் பிரதேச பவனில் உள்ள மாநில அரச அதிகாரிகளின் முயற்சிகளைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இலங்கை கடலோர காவற்படை செப்டம்பர் 26 ஆம் திகதி மண்டபம் முகாமிலுள்ள இந்திய கடலோர காவற்படையி…
-
- 2 replies
- 119 views
- 1 follower
-
-
28 Sep, 2025 | 10:49 AM (நா.தனுஜா) முன்னைய அரசாங்கங்களால் நினைவுகூரலுக்கான உரிமை மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் தமது அரசாங்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களை முன்னிலைப்படுத்தாத வகையில் போரில் உயிரிழந்த அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த இடைவெளி எதிர்வருங்காலங்களில் மேலும் வலுப்படுத்தப்படும் என உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஜெனிவாவில் ஆரம்பமானது. எதிர்வரும் ஒக்டோபர் மா…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
ஆடை வாங்க பணம் தராததால் உயிரை மாய்த்த சிறுமி மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சனிக்கிழமை (27)மாலை இடம் பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 13 வயதுடைய லிங்கம் லட்சுமி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் குறித்த சிறுமி அவரது தாய் மற்றும் இரட்டை சகோதரியும் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள்வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளதுடன் அடுத்த மாதம் நாட்டுக்கு திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக கூறியுள்ளார். தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடை…
-
- 1 reply
- 150 views
-
-
27 Sep, 2025 | 04:34 PM ( எம்.நியூட்டன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருதத்துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
27 Sep, 2025 | 09:06 PM ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. இந்த கலாசார நிகழ்வைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் கூடியிருந்தனர். இந்த நிக…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
இலங்கை தற்போது நிலைபேறான மற்றும் பங்கேற்பு பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்றது – ஜப்பானில் ஜனாதிபதி September 27, 2025 ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சனிக்கிழமை (27) முற்பகல் ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக, ஜப்பானின் ஒசாகாவில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை தின நிகழ்வு, இலங்கையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலாசார அம்சங்களுடன் வண்ணமயமாக இருந்தது. …
-
- 0 replies
- 132 views
-
-
27 Sep, 2025 | 05:02 PM (எம்.மனோசித்ரா) இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது. அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த நிலைமை மாற்றப்பட்டால் மாத்திரமே இலஞ்ச, ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணைகள் தொடர்பான ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்தார். கொழும்பில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மக்களின் நிலைப்பாட்டுக்கமைய இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவு தொடர்புடையது பொலிஸா…
-
-
- 3 replies
- 195 views
- 1 follower
-
-
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் வழக்கு விவகாரத்தை தாம் கையாள்வதாக சட்டத்தரணி சுமந்திரன் கேட்டபோது அந்த விடயத்தை வைத்தியர் மனோகரன் நிராகரித்துள்ளதாக கனடாவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் றோய் சமாதானம் தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, குறித்த வழக்கு விவகாரத்தை படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரின் தந்தையான மனோகரனே ஐக்கிய நாடுகள் சபை வரைக்கும் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வைத்தியர் மனோகரனால் சுமந்திரன் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், https://tamilwin.com/
-
- 0 replies
- 162 views
-
-
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் சனி, 27 செப்டம்பர் 2025 06:03 AM ஆசிரியர் - Editor II மன்னாருக்கு காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் பலர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காற்றாலைக்கு எதிராக மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடாத்தி வரும் நிலையில், காற்றாலை உதிரி பாகங்களை தீவுக்குள் கொண்டு செல்லும் முயற்சி நடந்துள்ளது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் முதல் கட்டமாக காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றிவந்த வாகனங்களை மக்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போதிலும் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை உதிரிபாகங்கள் கொண…
-
- 2 replies
- 234 views
- 1 follower
-
-
உலகளாவிய பயண இதழான டைம் அவுட், 2025 ஒக்டோபரில் பார்வையிட வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது, இது அந்த மாதத்திற்கான சிறந்த பயண இடங்களின் வருடாந்திர பட்டியலை வெளியிட்டது. டைம் அவுட் இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காகப் பாராட்டியதுடன், இப்பண்புகள் ஒக்டோபரில் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இலங்கையை அமைப்பதாக கூறியுள்ளது. தங்க நிறக் கடற்கரைகள் மற்றும் மலைநாட்டு நடைபயணங்கள் முதல் பண்டைய கட்டிடங்கள் மற்றும் வனவிலங்கு சஃபாரிகள் வரை, இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்தையும் வழங்குவதாக சிறப்பிக்கப்பட்டது. இலையுதிர் கால வண்ணங்கள் மற்றும் பருவகால விழாக்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இலங்கையைத் தொடர்ந்து துருக்கி மற்றும் ந…
-
-
- 6 replies
- 502 views
-
-
76 ஆவது ஆண்டு நிறைவு சீன மக்கள் குடியரசு தோற்றுவிக்கப்பட்டதன் 76 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பு சினமன் லைப் ஹோட்டலில் நேற்று (25) இடம்பெற்ற கொண்டாட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இலங்கையில் அமைந்துள்ள சீனத் தூதரகம் ஏற்பாடு செய்த ஆண்டு விழா வரவேற்பு நிகழ்வில், இராஜதந்திரிகள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1353905240072086?ref=embed_post https://adaderanatamil.lk/top-picture/cmg0og7qk00nnqplpm1s73b58
-
- 0 replies
- 99 views
- 1 follower
-
-
பாவனைக்கு உகந்த தரத்தில் அல்லாத பழைய மின் சாதன பொருட்கள் காரணமாக அதிகளவான எரிசக்தி இழப்பு ஏற்படுவதாக இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஹர்ஷ விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் உரிய தரம் அல்லாத வீட்டு மின்சார உபயோகப் பொருட்கள் அதிக மின்சாரக் கட்டணத்திற்குக் காரணம் என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை பொதுவாக 10 ஆண்டுகளுக்…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும். வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்…
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன் September 26, 2025 வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களி…
-
- 0 replies
- 174 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு நான் பதிலளிப்பேன். ஆனால் பைத்தியக்காரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்து குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வில் , நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் வடக்கில் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் அதற்கு சரியான பதில்களை வழங்கவில்லை என்று அரச்சுனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சிரித்தவாறு குறி…
-
-
- 1 reply
- 164 views
-
-
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியை துறந்தார்! adminSeptember 25, 2025 நீதவானுக்கு உரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மல்லாகம் நீதவான் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். யாழ்ப்பாணம் , மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் , நீதவானுக்குரிய கண்ணியமான நடத்தைகளை வெளிப்படுத்தாதமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நீதவான் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நீதி சேவை ஆணைக்குழுவிடம் கையளித்துள…
-
- 9 replies
- 493 views
-
-
மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இலங்கை உள்ளது. சிறந்த வாழ்க்கை தரமுள்ள நாடுகள் Numbeo என்ற அமைப்பு, 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த மற்றும் மோசமான வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சுகாதாரம், கல்வி, வேலை-வாழ்க்கை சமநிலை, வாழ்க்கைச் செலவு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படியாக வைத்து இந்த பட்டியலை தயாரித்துள்ளது. இதில், 218.2 புள்ளிகளுடன் லக்சம்பர்க், சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து 2வது இடத்திலும், டென்மார்க் 3வது இடத்திலும், ஓமன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5வது இடத்திலும் உள்ளது. அந்தர் பல்ட்டி அடித்த ட்ரம்ப்...…
-
- 4 replies
- 336 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்கு காரணம் என்ன, பலாலி விமான நிலைய அபிவிருத்தி தவிர்ந்த பிறிதொரு காரணங்களுக்காக விமான நிலையம் என்ற போர்வையில் மக்களின் காணிகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படாமல் இராணுவ ஆக்கிரமிப்பால் அபகரிக்கப்படுகிறது என்ற கூற்றை ஏற்றுக்கொள்கிறீர்களா என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து, அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/ 2இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகைய…
-
- 1 reply
- 165 views
-
-
26 Sep, 2025 | 05:21 PM நாட்டில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் உரிமைகள் அமைப்பான EQUAL GROUND ஆல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. EQUAL GROUND நிர்வாக பணிப்பாளர் ரோசன்னா ஃபிளேமர் - கால்டெராவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலாத் தலைவர் புத்திக ஹேவாவசம் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார். சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையை நிலைநிறுத்தவும் அதன் திறனை அங்கீகரித்துள்ளார். எங்கள் சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தவும் இந்த திட…
-
- 0 replies
- 140 views
-
-
(செ.சுபதர்ஷனி) நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. தொடர்ந்து அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்…
-
- 0 replies
- 137 views
-
-
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் - ஹினிதும சுனில் செனவி 26 Sep, 2025 | 04:16 PM (எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்) யாழ் தையிட்டி திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. காணியும் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படவில்லை. காணி குறித்து வெளிப்படைத்தன்மையுடன் ஆராயப்படுகிறது. தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு உண்மை நோக்கத்துடன் தீர்வு காண்பதற்கு எடுத்த நடவடிக்கைகளை ஆராய வேண்டும். இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணும் தன்மை கிடையாது. நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி திஸ்ஸ பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம் என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். பாராளும…
-
- 0 replies
- 112 views
-
-
யாழில் இன்றையதினம்(26.09.2025) தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பும் வகையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திலீபனின் நினைவுநாளின் இறுதி நாளான இன்று உணர்வு பூர்வமாக நிகழ்வுகள் தமிழர் பகுதியில் இடம்பெற்ற வேளையில் யாழில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த துண்டுப்பிரசுரத்தில் “அரசியல் கட்சிக்கான வேண்டுகோள்” என்ற தலைப்பிடப்பட்ட நிலையில் விநியோகிக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆக்கப்பார்க்கும் சிலர் அதில் “மக்களுக்கான சேவைகளைச் செய்வதற்காகவே மக்களாலே அரசியல் பிரமுகர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவர்கள் மக்களுக்கான சேவையினை மட்டுமே முன்னெடுக்க வேண்டும். இச்சேவையின் ஊடாக மக்கள் இவர்களை விரும்ப வேண்டும். சிலர் மக்களில் எல்லா விடயங…
-
- 0 replies
- 150 views
-
-
மருத்துவத் தவறால் கை அகற்றம் தாதிய உத்தியோகத்தர் கைது; நாட்டைவிட்டு வெளியேறத் தடை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாத வகையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சாண்டில்யன் வைசாலி என்ற சிறுமி காய்ச்சலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் மணிக்கட்டு வீக்கமடைந்து பின்னர் அந்தப் பகுதி வெட்…
-
-
- 1 reply
- 207 views
-
-
செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்; நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்! தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான த…
-
- 1 reply
- 160 views
- 1 follower
-
-
ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்படவுள்ள முன்னாள் இராணுவ அதிகாரிகள்! 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார். தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம். சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும். அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி …
-
- 0 replies
- 125 views
-