Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி - சுண்டிக்குளம் பகுதியில் அனர்த்த இடத்தில் இருந்த கடற்படை வீரர்கள் ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கழிமுக அகலப்படுத்தும் நடவடிக்கை இலங்கை கடற்படை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சுண்டிக்குளத்தில் உள்ள கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் போன வீரர்களை மீட்க ஏற்கனவே விரிவான தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/navy-personnel-missing-disaster-site-chundikulam-1764506135

  2. புதிய இணைப்பு Update - 06:47 விபத்திற்குள்ளான குறித்த உலங்கு வானூர்தியில் பயணித்த ஐந்து பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாம் இணைப்பு சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது. லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விழுந்து இந்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்திற்குள்ளான போது குறித்த உலங்கு வானூர்தியில் நால்வர் பயணித்ததாகவும், குறித்த நால்வரும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://tamilwin.com/article/extr…

  3. 30 Nov, 2025 | 04:02 PM சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஞாயிற்றுக்கிழமை (30) இணையவழி ஊடாக பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய உதவிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பிரதேச செயலாளர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், மேன்மேலும் துரிதமான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டதுடன், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக…

  4. Published By: Digital Desk 3 30 Nov, 2025 | 12:38 PM மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/232018 மாவிலாறு வெள்ளம்: விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் 121 பேர் மீட்பு Nov 30, 2025 - 01:38 PM மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 121 பேர், இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்திகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை விமானப்படை ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலைத் தெரிவித்…

  5. வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை - தவிசாளர் நிரோஸ்! 30 Nov, 2025 | 10:37 AM வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது. அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெ…

  6. பகிடிவதையில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் 19 பேர் மறியலில் 30 Nov, 2025 | 01:38 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினரா…

  7. யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கள விஜயம் 30 Nov, 2025 | 02:03 PM யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார். அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங…

  8. மன்னாரில் பெரும் இழப்பு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கால்நடைகள் 30 November 2025 சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நானாட்டான், மடு, மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/433451/huge-loss-in-mannar-thousands-of-cattl…

  9. பேரிடர் மரணங்கள் 193 ஆக உயர்வு; 228 பேர் மாயம் நாட்டை உலுக்கிய மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் பலியானவர்களில் எண்ணிக்கை தற்போது 193 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 228 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழழை (30) காலை 11.30 மணிக்கு பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்ட அறிக்கையில், 266,114 குடும்பங்களைச் சேர்ந்த 968,304 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிக எண்ணிக்கையிலான பேரிடர் இறப்புகள் பதுளை மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. அதாவது 71 இறப்புகள். இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் 52 இறப்புகளும், மாத்தளை மாவட்டத்த…

  10. அத்தியாவசிய சேவைகள் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, வீடமைப்பு, மற்றும் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை புகையிரத திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேச…

  11. இலங்கையை விட்டு முழுவதுமாக விலகிச் சென்ற ‘டித்வா’ “டித்வா” புயலானது நேற்று (29) இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே சுமார் 130 கி.மீ தொலைவில் (அகலாங்கு 10.7°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில்) மையங்கொண்டிருந்தது. இந்தத் தொகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, நிலவும் மழையுடனான வானிலை இன்று (30) முதல் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும…

  12. வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளுக்கு மருத்துவ உதவி Nov 30, 2025 - 12:58 PM வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அல்லது சிக்குண்டுள்ள செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகள் அல்லது வீதி விலங்குகளுக்கு அவசர கால்நடை மருத்துவ உதவிகளை வழங்க இலங்கை கால்நடைவைத்தியர்கள் சங்கம் தயாராக உள்ளது. இத்தகைய உதவிகள் தேவைப்படின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு சங்கத்தின் தலைவர் சுகத் பிரேமசந்திர கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்: தொலைப்பேசி இலக்கம்: 071 6000 666 வைத்தியர் மாலக லசந்த: 071 414 5242 வைத்தியர் நிலூஷா: 070 610 3808 https://adaderanatamil.lk/news/cmilefssf0274o29ntcgdpfzt

  13. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள் நன்கொடைகளை எளிதாகவும் விரைவாகவும் விடுவிக்க விரைவான பொறிமுறை Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 11:20 PM தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதில் வெளிநாடுகள், அரசாங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதுடன், மக்களுக்கு நிவாரணங்களை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்கான விரைவான பொறிமுறையை நிறுவும் நோக்கில் சனிக்கிழமை (29) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. சுங்கம் மூலம் பொருள் நன்கொடைகளை விடுவிக்கும் போது பல்வேறு வரி செலுத்துதல்கள், தர ஆய்வுகள் மற்றும் அனுமதிகளைப் பெறுதல் ஆகியவற்றை விரைவுப…

  14. ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவி Nov 30, 2025 - 09:48 AM சீரற்ற வானிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜப்பான் இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் ஊடாக, மதிப்பீட்டுக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இக்குழுவில் மருத்துவ அதிகாரிகளும் உள்ளடங்குவர். அவர்கள் நாட்டின் மருத்துவத் தேவைகளைக் கண்காணிப்பதுடன், ஜப்பானிய அனர்த்த நிவாரணக் குழுவொன்றை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருங்கிணைப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு JICA நிறுவனத்தின் ஊடாக கூடாரங்கள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அவசர நிவாரணப் பொருட்களையும் வழ…

  15. யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை Nov 30, 2025 - 12:10 PM யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இதற்கமைய, இன்ற…

  16. Published By: Digital Desk 1 30 Nov, 2025 | 07:32 AM கொட்டுகோட பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக கொட்டுகோட 220/132/33kV மின் இணைப்புக்கான துணை மின்நிலையம் தற்காலிகமாக செயல்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழையால் சுற்றியுள்ள வெள்ள நீர் வேகமாக உயர்ந்து, துணை மின்நிலைய வளாகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நேற்று (29) சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நீர் மட்டம் கட்டுப்பாட்டுப் பலகை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை மோசமாக உள்ளதால், இலங்கை மின்சார சபையின் கொட்டுகோட மின் இணைப்புபின் துணை மின்நிலையத்தை பாதுகாப்பாக துண்டித்து அணைத்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு…

  17. கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இக்கட்டுரையில் உள்ள விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.) ''தாய் ஒருவர் அவருடைய 8 மாத குழந்தையை அரவணைத்தபடியே இறந்திருந்தார்.'' என்கிறார் வி.கே.முத்துகிருஸ்ணன். இலங்கையின் கண்டி - சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவதாகவும் அங்குள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர். இந்த மண்சரிவு சம்பவம் நேற்று முன்தினம் (27) இரவு ஏற்பட்டது. சரசவிகம - ஹதபிம பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று முன…

  18. 29 Nov, 2025 | 04:33 PM "திட்வா" சூறாவளி மற்றும் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்ததால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை (29) மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களையும் பிரதமர் சந்தித்தார். இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை ஆய்வு செய்த பிரதமர், உணவு, சுகாதார உபகரணங்கள் உட்பட அத்தியாவசியத் தேவைகளை விரைவாக வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை மேற்பார்வையிட்டார். தற்போது ஏற்பட்டுள்ள தேசிய அனர்த்தத்தைப் புரிந்துகொண்டு, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதில் அயராது உழைக்கும் அனைவருக்…

  19. இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்! 29 Nov, 2025 | 01:40 PM சீரற்ற வானிலை காரணமாக, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிவித்தலின்படி, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், உதவிகளுக்கு 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231918

  20. இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையி…

  21. Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்…

  22. 29 Nov, 2025 | 01:47 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது. சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk

  23. 29 Nov, 2025 | 02:51 PM நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் …

  24. 29 Nov, 2025 | 02:57 PM யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இடர்மிகுந்த சூழலில் ப…

  25. குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! 29 Nov, 2025 | 05:24 PM குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.