Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச நிறுவனங்களில் கைரேகை ஸ்கானர்களைப் பயன்படுத்துவது இன்று முதல் அமுல்! அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் வருகையை உள்ளீடு செய்வதற்கு கைரேகை ஸ்கானர்களைப் பயன்படுத்துவது இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வருவதையும் புறப்படுவதையும் உறுதிப்படுத்த கைரேகை ஸ்கானர்களைப் பயன்படுத்துவது 2009 இல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா தொற்று நெருக்கடியின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கம் இந்த நடவடிக்கையை இடைநிறுத்தியது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் வருகையைக் குறிக்க கைரேகை ஸ்கானர்களின் பயன்பாடு ஆரம்பிக்கப்படும் என ப…

  2. Published By: VISHNU 15 MAY, 2023 | 12:21 PM குமுதினி படுகொலையின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை (15) காலை 9 மணிக்கு நெடுந்தீவில் இடம்பெற்றது. குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்தில் நினைவேந்தல் இடபெற்றது. காலை 8.15 மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆத்ம சாந்தி வேண்டி திருப்பலியும், சமநேரத்தில் மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள வீரபத்திர பிள்ளையார் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி சிறப்பு பூஜையும் இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு குமுதினி படு…

  3. உறவுகளை எந்த சந்தர்ப்பத்திலும் நினைவேந்தலாம்: ரணில் நினைவேந்தல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்னோர் இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளமை தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. மக்களின் உரிமைகள் ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை. அதேபோல் நினைவேந்தல் உரிமையையும் எவரும் தட்டிப் பறிக்க முடியாது. வடக்கிலுள்ளவர்கள் தெற்கிலுள்ளவர…

  4. K.K.S சீமெந்து ஆலையில் இரும்புகள் திருட்டு 08 பேர் கைது! May 15, 2023 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை உயர் பாதுகாப்பபு வலயத்தினுள் உள்ள சீமெந்து ஆலையில் இரும்புகளை திருடிய குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், அது கடந்த 33 வருட காலங்களுக்கு மேலாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றது. இந்நிலையில் மீளவும் தொழிற்சாலையை புனரமைத்து இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு தொழிற்சாலையில் இருந்த பாரிய இயந்திரங்களை வெட்டி அவற்றின் பாகங்களை இரும்புக்காக தென்னிலங்கையை சேர்ந்த நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். அது தொடர்பில…

  5. திருகோணமலை நெல்சன் திரையரங்குக்கு முன்பாக தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் தாய்லாந்தில் இருந்து சென்றிருக்கும் பௌத்த தேரர்களின் உபசம்பதா நிகழ்வுக்காக பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது. எனினும், இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டால் அது இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கலாம் என்ற அடிப்படையில் மாவட்ட அரசாங்க அதிபரினால் அந்நிகழ்வுகளை அவ்விடத்தில் நடத்த அனுமதி வழங்க தவிர்க்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பௌத்த தேரர்கள், சிங்கள மக்கள், திருகோணமலையில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து சமய நிகழ்வுகளை முன்னெடுத்தனர். அத்துடன், தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் முப்படையினரின் பாதுகாப்பையும் மீறி வலுக்கட்டாயமாக நுழைந்து தமது …

  6. Published By: DIGITAL DESK 5 14 MAY, 2023 | 04:01 PM இலங்கையின் போதைப்பொருள் வலையமைப்பை வெளிநாட்டிலிருந்து வழிநடத்தும் பம்மா குழுவின் முக்கிய உறுப்பினரான பெண்ணொருவரை ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தியதில் அவர் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை சந்தேக நபரின் கணவரின் தம்பியான விக்னேஷ் என்ற நபரே அனுப்பி வைத்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது. விக்னேஷ் என்பவர் தற்போது வெளிநாட்டில் இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஸ்டான்லி கென்னடி பெர்னாண்ட…

  7. Published By: NANTHINI 14 MAY, 2023 | 02:28 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக தேசிய கடன்களை மறுசீரமைப்பது மிகக் கடினமான விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ள பொருளியல் நிபுணர்கள், இருப்பினும் கடன் மறுசீரமைப்பு என்பது ஒரு சத்திர சிகிச்சையை போன்றது என்றும், அதனை ஒரே முறையில் சரியாக செய்து முடிக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி செயற்திட்டத்தின் கீழ், சுமார் 3 பில்லியன் டொலர் கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாடு கடந்த மார்ச் மாதம் எட்டப்பட்ட நிலையில், கடன் மறுசீரமைப்பு குறித்த செயற்றிட்டத்தை ஏப்ரல் …

  8. Published By: NANTHINI 14 MAY, 2023 | 02:13 PM வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபர் சனிக்கிழமை (13) காலை கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து சீனிப்பாணி நிரப்பப்பட்ட 263 போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேன் என சீனிப்பாணியை விற்பனை செய்வதாக வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று காலை வேப்பங்குளம் 8ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றினை சுற்றிவளைத்துள்ளனர். அதனையடுத்து, குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அந்த வீட்டில் விற்பனைக்கு தயாரான நிலையில் இருந்த 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணி (750 மில்லி ல…

  9. Published By: NANTHINI 14 MAY, 2023 | 01:13 PM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதமான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதி அமைச்சினாலேயே முன்னெடுக்கப்பட்டன. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான சட்டங்கள், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான சட்டம், ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சட்டங்களை நாமே தயாரித்தோம் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயற்பாடுகளை மக்களுக்கு பயனுள்ள வகையில் மேலும் வலுப்படுத்துவது குறித்த நீதியமைச்சின் உத்தியோகத்தர்களுக்கான செயல…

  10. திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் - உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு Published By: Nanthini 14 May, 2023 | 12:36 PM (நா.தனுஜா) திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார். கண்டி, அஸ்கிரிய பீடத்தின் ஏற்பாட்டுக்கு அமைய தாய்லாந்திலிருந்து வரும் 40 பௌத்த தேரர்கள் அடங்கிய குழு த…

    • 3 replies
    • 689 views
  11. இலங்கையில் சீனாவின் பொருளாதார அரசியல் செல்வாக்கினால் ஆபத்துக்கள் ஏற்படலாம் - நாணயநிதியம் அரசியல் மனித உரிமை நிபந்தனைகளை விதிக்கமுடியாது - பிரிட்டிஸ் அமைச்சர் Published By: Rajeeban 14 May, 2023 | 02:14 PM இலங்கையில் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்கினால் ஆபத்துக்கள் ஏற்படலாம் என்பதை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றது என அந்த நாட்டின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார் பிரிட்டனின் வெளியுறவு பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் அன்ரூ மிட்செல் பொதுச்சபையில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். எனது நண்பர் குறிப்பிட்ட கொவிட் பெருந்தொற்…

    • 3 replies
    • 301 views
  12. கொழும்பில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது ஏன்?: பாதுகாப்பு அமைச்சு பதில்! கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரை கலைப்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால சூழ்நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த முன் பயிற்சிக்காக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நேற்று முதல் வரவழைக்கப்பட…

  13. 13 மே 2023 கம்பளை - வெலிகல்ல - எல்பிட்டிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 22 வயதான பாதிமா முனவர் என்ற யுவதி, கடந்த 7ம் தேதி காலை காணாமல் போயிருந்தார். பேராதனை - கெலிஓய பகுதியிலுள்ள மருந்தகமொன்றில் இந்த யுவதி பணிப்புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், எல்பிட்டிய பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து கெலிஓய பகுதியிலுள்ள தனது வேலைத்தளத்திற்கு கடந்த 7ம் தேதி காலை குறித்த யுவதி சென்றுள்ளார். தனது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள பள்ளிவாசல் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த யுவதி செல்லும் காணொளி பதிவாகியிர…

  14. 2023ஆம் ஆண்டுக்கான உலக இராணுவ டிரையத்லான் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் முப்படையைச் சேர்ந்த ஏழு வீரர்கள் பிரான்சில் காணாமல் போயுள்ளனர். அதன்படி, நிகழ்விற்காக பிரான்ஸ் சென்ற 13பேர் கொண்ட தூதுக்குழுவின் தலைவரிடமிருந்து இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள், கடற்படையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இலங்கை விமானப்படையின் இரண்டு அதிகாரிகள், தமது கடவுச்சீட்டுகளை திருடி, குழுவிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முப்படையைச் சேர்ந்த ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் மூன்று அதிகாரிகள் அடங்கிய 13 பேர் கடந்த 04 ஆம் திகதி அன்று பிரான்ஸ் சென்றனர் கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததால், போட்டியாளர்களின…

  15. இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெறுவதே எமது இலக்கு, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம் – சம்பந்தன் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் நீண்டகாலமாகவே உறுதியாக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பிலான நாளையதினம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை குறித்து தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பை தாம் பயன்படுத்திக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை நாம் பயன்படுத்தாது விட…

  16. இலங்கையில் பாரிய துறைமுக வளாகத்தை அமைக்கின்றதா சீனா ?? உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில் கடன் திருப்பி செலுத்தலை நிறுத்தியுள்ள இலங்கை தற்போது பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வகுத்து வருகின்றது. இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் ஒரு பெரிய தளவாட வளாகத்தில், 392 மில்லியன் டொலர்கள் மதிப்பீட்டைக் கொண்ட சீனா வணிக குழுவின் முதலீடொன்று முன்னெடுக்கப்படுகின்றது.இது தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதல் பாரிய வெளிநாட்டு முதலீடாகும். தளவாட மையத்திட்டம் இலங்கையின் வருமாதத்திட்டம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொண்டு செல்லும், இது நாட்டின் மிகப்பெரிய வெளி…

  17. ஜனாதிபதி அழைத்தால் பேச்சுக்குச் செல்வோம் – ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வினைக் காண்பதற்காக இதயசுத்தியுடன் ஜனாதிபதி அழைப்பு விடுத்தல் அதில் பங்கேற்பதற்கு தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்காக தமிழ்த் தரப்பினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்தது தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மலையக தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்புக்களையும் தனித்தனியாக சந்திப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  18. Published By: NANTHINI 13 MAY, 2023 | 10:49 PM வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் மற்றும் தமிழினப் படுகொலையை நினைவூட்டும் ஊர்தி பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முல்லைத்தீவில் இருந்து நேற்று (12) இந்த ஊர்தி பவனி ஆரம்பமானதை தொடர்ந்து, நேற்றிரவு வவுனியாவை ஊர்தி வந்தடைந்து, இன்று (13) காலை மீண்டும் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படத் தொடங்கியது. அவ்வேளை, இந்த ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், குறித்த ஊர்திப் பவனி வவுனியா நகரை வலம் வந்ததுடன், மன்னார் நோக்கி பயணத்தை தொடர்ந்து, இன்று மாலை 4 மணியளவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதி மற்றும் மாவட்ட செயலகத்துக்…

  19. அவுஸ்திரேலியாவின் முன்னாள் ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் விமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெள் ஸ்டீபன்ஸ், பீச்கிராப்ட் KA350 விமானத்தை வழங்கும் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார். பீச்கிராஃப்ட் கேஏ350 கிங் ஏர் ஒரு நவீன இரட்டை எஞ்சின் டர்போபிராப் விமானமாகும். “இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்கும் திறனை வலுப்படுத்தும். இது நாடுகடந்த குற்றங்களுக்கு எதிரான எங்கள் நெருங்கிய ஒத்துழைப்பின் மேலும் ஒரு நிரூபணமாகும்” என உயர் ஸ்தானிகர் ட்வீட் மூலம் தெரிவித்தார். https://thinakkural.lk/article/253475

  20. சிங்கப்பூரில் ஆகக்கூடிய வருமானத்தை பெறக்கூடிய தாதியர் தொழில் துறையில் இலங்கையருக்கு தொழில் வாய்ப்புகான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த தொழில் வாய்ப்புகான ஊழியர்களை குழுக்களாக அனுப்பும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக சிங்கப்பூருக்கு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் 36 பேரைக்கொண்ட முதலாவது தாதியர் குழுவினருக்கு விமான பயணச்சீட்டுகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கிவைத்தார். https://thinakkural.lk/article/253465

  21. தற்போதைய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பாடசாலை நிர்வாகங்களையும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அண்மையில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வழங்கப்பட்டது. 2022 வருடாந்த மற்றும் பத்தாண்டு இடமாற்றத்தின் கீழ் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி, இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களது சேவைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனவும், இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கடமைகளுக்கு சமூகமளிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது சட்டவிரோதமான செயலாகும். அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகளின்படி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை அவர்களது பாடசாலைகளில் இருந…

  22. Published By: NANTHINI 13 MAY, 2023 | 03:20 PM தையிட்டி விகாரைக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் இன்று (13) பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு ஆதரவு தெரிவித்து, 'அனைத்து மதங்களையும் ஒன்றாக மதிக்க வேண்டும்' என்ற தொனிப்பொருளில் இப்பேரணி தையிட்டி சந்தியிலிருந்து விகாரை வரை முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பூஜை வழிபாடுகள் மற்றும் மக்களுக்கான மதிய அன்னதானமும் இடம்பெற்றது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விகாரைக்கு ஆதரவு தெரிவித்து பதாதைகளை தாங்கியவாறு நின்றனர். இதன்போது யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய த…

  23. Published By: NANTHINI 13 MAY, 2023 | 11:20 AM தலைமன்னாரில் 3 பிள்ளைகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வியாழக்கிழமை (11) பிற்பகல் 3.30 மணியளவில் வீதியால் சென்று‍கொண்டிருந்த மூன்று பெண்பிள்ளைகளை அவ்வழியே வாகனத்தில் பயணித்த இருவர் கடத்த முயற்சித்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அந்த ஊருக்கு பொருட்களை விற்கச் சென்ற வாகன சாரதி, அவரது உதவியாளர் என இருவரை சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கட…

  24. காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்-நாமல் காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்தக் போராட்டத்தின் அங்கமாக இருந்தவர்களிடம் சில வெளிநாட்டு சக்தியின் பங்கு இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே உரிய நேரத்தில் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எங்களுடன…

  25. 13 MAY, 2023 | 12:14 PM வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா நீலியாமோட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் வெளியில் சென்றுவிட்டு இன்று அதிகாலை தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்த தனது மனைவி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பெண் இடியன் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்ய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.