ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் மீண்டும் தெரிவாவதற்கான இறுதி முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (13.05.08) தீவிரமாக இறங்க உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
அண்மையில் நடைபெற்ற முகமாலைச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் "சமாதானம்" எனப்படும் தமது தயாரிப்பு எறிகணைகளை ஏவியிருந்தனர். இதனால் மணிக்கு 30-40 பேரை சிறிலங்கா இராணுவம் இழந்திருந்தது என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வேலைக்கு உணவு என்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உலக உணவுத்திட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளது என்று உலக உணவுத்திட்ட அமைப்பின் சிறிலங்காவிற்கான பிரதிப் பணிப்பாளர் ஜூன் வெஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 841 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் வசம் ஐந்துக்கும் அதிகமான சிலின்-143 ரக வானூர்திகள் உள்ளதாக சிறிலங்காப் படையினரின் புலனாய்வுதுறை தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு முடிவு ஈபிடீபி 51 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 48 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 வாக்குகள் மூலம் : சிரச வானொலி
-
- 9 replies
- 3.2k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 09.05.08 அன்று ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 1.3k views
-
-
சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள், தமிழீழ மக்களின் தேசிய மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்த்து வைக்காது| - என்ற கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளோம். இக்கருத்தைப் பல தளங்களில், பல கோணங்களில் ஏற்கனவே நாம் தர்க்கித்து வந்தும் உள்ளோம். அவற்றில் ஒரு கருத்தை இன்று வேறு ஒரு பரிமாணத்தில் வைத்துச் சிந்திக்க................. தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5818.html
-
- 0 replies
- 1.2k views
-
-
பாரதூரமான போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஒரு குற்றவாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது பிரித்தானிய அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை விளிம்பில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுதந்திரம் மற்றும் சுதந்திரம் அற்ற நாடுகளுக்கிடையில் இலங்கை இருப்பதாக சுதந்திர இல்லம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரம் உள்ள நாடுகளில் இந்தியா உள்ளடக்கப்பட்டுள்ளது. மனித உரிமை அறிக்கைகளில் ‘மிகவும் மோசமான நாடுகள்’ எனும் தலைப்பிலான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகவும் மோசமான எட்டு நாடுகளின் பட்டியலில் .................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4526.html
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்த போது கைப்பற்றப்பட்ட படையினரின் 5 உடலங்கள் இன்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 990 views
-
-
கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு [ சனிக்கிழமை, 10 மே 2008, 05:00.11 AM GMT +05:30 ] [ உதயன் ] "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்பட…
-
- 1 reply
- 1.5k views
-
-
வாக்கு மோசடிகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் அடையாளங் காட்டியுள்ளனர் மட்டக்களப்பு மாகாணசபைத் தேர்தல்களின் போது வாக்கு மோசடி மற்றும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 14 வாகனங்களை குச்சவெளி மற்றும் புதுவக்காடு மக்கள் அடையாளங் காட்டியுள்ளனர். குறிப்பிட்ட பஸ் மற்றும் வேன் வண்டிகள் நேற்று நள்ளிரவு முதல் பிரதேசத்தில் சஞ்சரிப்பதாகவும், சில வாகனங்கள் இன்னமும் குறித்த பிரதேசங்களில் சஞ்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனங்கள் தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டிருந்த வேளை மக்களால் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. குறித்த வாகனங்களின் இலக்கங்கள் பின்வருமாறு: (WP) PB-0537, 53-8133" ,(WP) G-0880, PA-7991" 58-4858" PA-5389" PX-3372" HM-9787" HJ-6988" …
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாநகர எல்லைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய புறநகர்ப் பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் சட்டம் ஒழுங்கை மீறும் வகையில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டதாக சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு கிளிவெட்டி பிரதேசத்தில் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றதாகத் தெரியவருகிறது. பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் அநேக வாக்களிப்பு மையங்களிலிருந்து வாக்காளர்களை வான், மற்றும் முச்சக்கர வண்டிகளில் பலவந்தமாக அழைத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாட்டுக…
-
- 1 reply
- 1.3k views
-
-
நிலத்திற்குள்ளிருந்து வாயு வெளியேறியதை தற்செயலாக கண்டுகொண்டதனையடுத்து எண்ணெய் அகழ்வாராய்ச்சிப் பணியை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சிலாபம் முன்னேஸ்வரம் கோவிலுக்கு சமீபமாக வாயு வெளியேற்றம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்த
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈரானுடன் இலங்கை ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன், அமெரிக்காவுடனான நட்புறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயற்படுவதற்கு இலங்கை தீர்மானித்திருக்கதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானிய ஜனாதிபதி மகமூட் அமதிநிஷாட் கடந்த மாதம் இலங்கை வந்திருந்ததுடன், இலங்கையின் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் சுத்திகரிப்பு போன்றவற்றுக்குப் பெரும் பணம் வழங்கியிருந்தார். இந்த நிலையில் இலங்கையும், ஈரானும் இரகசிய இராணுவ ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக .................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1977.html
-
- 0 replies
- 1.5k views
-
-
அம்பாறை தெஹியத்த கண்டிய பிரதேசத்தில் வாக்கு மோசடியில் ஈடுபட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் உள்ளிட்ட ஆதரவாளர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பரவான மத்திய மாகாவித்தியாலத்தில் உள்ள வாக்கெடுப்பு மையத்திற்கு அருகில் வைத்து காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பட்டுக்குழு தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வா, அமைச்சரின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான குடு லால் உள்ளிட்ட ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் பாதுகாப்பு உத்தியோத்தர்கள் உள்ளிட்ட ஆயுதம் தரித்த சிலரை தெஹியத…
-
- 6 replies
- 1.9k views
-
-
மாவிலாறு பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் ரீ.எம்.வீ.பீக்கும் இடையில் இன்று காலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் சேதவிபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
-
- 0 replies
- 2k views
-
-
அம்பாறையில் விடுதலைப் புலிகளால் ஏறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை காலை அம்பாறை பன்னல்கம பகுதியில் நோக்கி இந்த மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. மோட்டார்த் தாக்குலில் 4 அகவைக் குழந்தை உட்பட 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா படையினர் தெரிவித்துள்னர். இப்பகுதியில் 8 மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன என சிறீலங்காப் படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை நகர மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி இந்த சம்பவமானது பலத்த சந்தேகத்துக்கு இடமளித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அம்பாறையில் நேற்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பை அடுத்து ஐ.தே.க.வின் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்த நாயக்க எம்.பி.யினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ....... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_4928.html
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜனநாயகம் என்ற சூத்திரத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆட்களின் கூட்டுப்பலம் பலம் என்கின்ற கணித வாய்ப்பாடு இருக்கும் வரைக்கும் ஓர் இன மேலாதிக்க உணர்வு கொண்ட பெரும்பான்மை எண்ணிக்கையுடன் இணைந்து ஜனநாயகப் பயிற்சியினை மேற்கொள்வதென்பது நடைமுறையில் சாத்தியமற்றதென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ................ தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_524.html
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமாக சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப் பதிவுகள் பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத முறையில் சுமுகமானமுறையில் இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தில் சில பகுதிகளில் கள்ளவாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத பிராந்தியத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வா…
-
- 1 reply
- 1.1k views
-
-
புலிகளின் புது தூதர்?! நார்வே பயணத்துக்குப் பிறகு வைகோ, விடுதலைப்புலிகளின் அறிவிக்கப் படாத சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக மாறி விட்டார். இன்றைய தேதியில் சர்வதேச நாடுகள் புலிகள் விஷயத்தில் முக்கிய முடிவு களை மேற்கொள்வதற்கு முன்பு வைகோவை கலந்து பேசத் தவறுவதில்லை என்ற பேச்சு இந்தியாவெங்கும் எழத் தொடங்கி விட்டது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வைகோ, புலிகளின் நியாயங்களை எடுத்து வைத்தபோது, 'ஆன்டன் பாலசிங்கம் செய்யவேண்டிய பணியை, உரைவீச்சில் அவரையும் மிஞ்சி செய்து முடித்துவிட்டார் வைகோ' என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பிரிட்டிஷ் ஹை கமிஷனில் அரசியல் துறை தலைவர்களாக இருக்கும் நைஜல் கேஸி மற்றும் விக்டோரியா வொயிட்…
-
- 5 replies
- 3.2k views
-
-
Posted on : 2008-05-10 கேலிக்கூத்து தேர்தல் அரங்கேறுகிறது பெரும் உள்நாட்டு யுத்தமாக வெடித்திருக்கும் இலங்கை இனப்பிரச்சினை இப்போது சூடுபிடித்து உச்சக்கட்டத்தை எட்டியிருக்கின்றது. யுத்தம் தீவிர மடைந்திருப்பதுபோல யுத்தப் பிரசாரமும் உச்ச ஸ்தா யியை எட்டியிருக்கின்றது. யுத்தத்தில் சாதிக்கப்படா தவை எல்லாம் யுத்தத்தை ஒட்டிய பிரசாரத்தின் மூலம் சாதிக்கப்பட்டவை போல விஸ்வரூபமாக்கப்பட்டுக் காட்டப்படுகின்றன. நிஜத்தில் விடயங்கள் நடக்கின் றனவோ, இல்லையோ"நாளொரு சாதனை, பொழுதொரு வெற்றி' என்ற முழக்கங்கள் மட்டும் எந்நேரமும் கேட்டபடி இருக்கின்றன. யுத்த களத்திலே போர் புரிய வேண்டியவர்கள், சமர் குறித்து பிரசாரப் போர் நடத்திக் கொண்டிருக்கின் றார்கள். மறுபுறத்திலே, அரசியல் களத்திலே பிரசா ரப…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted on : Sat May 10 6:32:27 EEST 2008 கிழக்கில் ஆளும் தரப்பின் வெற்றியே பிரபாவின் மாபெரும் தோல்வியாகும்! அரசு நேற்று அறிவிப்பு "தொப்பிகலவில் ஏற்பட்ட தோல்வியோ அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவில் ஏற்படும் தோல்வியோ பிரபாகரன் சந்திக்கும் உண்மையான தோல்வியல்ல. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசு அடையப்போகும் வெற்றிதான் பிரபாகரனுக்கு ஏற்படப்போகும் மாபெரும் தோல்வியாகும்.'' இவ்வாறு அரசு நேற்று அறிவித்தது. ஐ.தே.கட்சி முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி இத் தேர்தலில் வெற்றிபெற்றால் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பதற்கான நடவடிக்கையில் அக்கூட்டணி ஈடுபடும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தேர்தலில் அரசுக்குக்கிட்டும் வெற்றி சமாதான முன்னெடுப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு மேலு…
-
- 0 replies
- 1k views
-
-
ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடும் இடத்து, இலங்கை விவகாரத்தில் மிகவும் மெத்தனமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான உண்மை என்று கனடிய ஏடான "த ஸ்ரார்" தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 977 views
-