ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.8k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் எம்.எம்.இஸ்மையிலை சிலர் தாக்க முயன்றுள்ளனர். தாக்குதல் நடத்த சென்றவர்களை கலைக்கும் நோக்கில் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்த இரண்டு காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி இந்த காவல்துறையினர் இருவரையும் இடமாற்றம் செய்துள்ளதாக சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் பேச்சாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துளளார். http://isoorya.blogspot.com/
-
- 1 reply
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அறிக்கையை வெளியிட்டதற்காக கத்தோலிக் திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக கெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 739 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு விதிக்கப்படும் காலக்கெடு முட்டாள்தனமாக நகைச்சுவை – முன்னாள் இராணுவத் தளபதி Sunday, 04 May 2008 யுத்தத்தை குறித்த காலத்திற்குள் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று காலக்கெடு நிர்ணயிப்பது ஒரு முட்டாள்தனமாக நகைச்சுவை என முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க குறிப்பிட்டுள்ளதாக இருதின செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குப் பிரச்சினையை இராணுவ நடவடிக்கைகளின் மூலம் மட்டும் தீர்க்க முடியாதெனவும், அதற்கு தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் மக்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளாக ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க மற்றும் சந்திரிக்கா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இராணுவப் படையில் உயர் பதவிகளை வகி…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரால் படுகொலை செய்யப்பட்ட வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 674 views
-
-
மட்டகளப்பு கிராம மக்களின் வாக்கு சீட்டுகளை பறிக்கிறது ஒரு குழு - பெப்பரல் நிறுவனம் Sunday, 04 May 2008 மட்டக்களப்பு கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆயுதங்களோடு செல்லும் ஒரு குழுவினர் அங்குள்ள மக்களிடமிருந்து தேர்தல் வாக்கு அட்டைகளை எடுத்துச் சென்றிருப்பதாக பெப்ரல் தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. http://www.ajeevan.ch/content/view/2412/1/
-
- 7 replies
- 1.2k views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளைக் கோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நிகழ்வு நேற்று முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 644 views
-
-
ஐந்தாவது தடவையும் புலிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் பௌத்த உரிமைகள் கேந்திர மையமான பிலியந்தலையில் வெடித்த குண்டு காரணமாக அந்தப் பிரதேசம் வாரம் முழுவதும் சோகமயமாக காட்சியளித்தது. கடந்த 25ஆம் திகதி நகரில் வெடித்த குண்டின் ஓசைகள் இன்னும் நகர மக்களின் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் நோக்கில் பேரூந்தில் ஏறிய மாணவர்களும், வேலை முடிந்து வீடு நோக்கி சென்ற பெரியவர்களும் இந்த குண்டில் சிக்கிக் கொண்டனர். இதன்போது பாடசாலை புத்தக பைகளும், வேலைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தவர்களின் பைகளும் வீதியில் சிதறிக்கிடந்தன. சிலரின் கையடக்க தொலைபேசிகள் இடைவிடாது ஒலித்து கொண்டிருந்தன. உறவினர் நண்பர்களை தேடியவர்கள் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான 170,000 வாக்காளர் அட்டைகள் இன்னமும் விநியோகிக்கப்படாமல் தபால் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான மொத்த வாக்காளர் அட்டைகளில் 20 வீதமான வாக்காளர் அட்டைகளே இவ்வாறு விநியோகிக்கப்படாதிருப்பதாக
-
- 1 reply
- 729 views
-
-
பிள்ளையான் குழு பிளவுபடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள வார இதழ் முதல் பக்கச் செய்தி வெளியிட்டுள்ளது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த பாரதீ உள்ளிட்ட சிலர் கட்சியிலிருந்து விலகிச் செயற்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. புதிய அரசியல் பிரவாகமொன்றை ஏற்படுத்துவதைவிடுத்து கிழக்குவாழ் தமிழர்களிடம் கப்பம் பெறல் மற்றும் வன்முறைகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வருவதாக பாரதீ குழு குற்றஞ்சாட்டுகிறது. பிள்ளையான் குழுவினர் பிரதேசத்தில் உள்ள தமிழ் பெண்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் பாரதீ குழு தெரிவித்துள்ளது. மேலும், ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அடக்கு முறை, கப்பம் பெறல், கடத்தல் போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவது நியாயமா…
-
- 6 replies
- 2.1k views
-
-
அமைச்சர் ஜி எல் பீரிஸூக்கும் வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகொல்லகமவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியகட்சியி;ல் இருந்து அரசாங்க கட்சிக்கு மாறிய அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என் கே நாராயணன் ஆகியோரை சந்திப்பதற்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும் இதனை வெளியுறவு அமைச்சர் ரோஹித்த போகல்லாகம ஆட்சேபித்துள்ளார் தமக்கு தெரியாமல் இவ்வாறான முனைப்புகள் மேற்கொள்ளப்படுவது முரனானது என தனது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் குறித்த சந்திப்புகளை ரத்துச்செய்துள்ளது. http://isoorya.blogspot.com/ http:/…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க இரு முனைகளில் முயற்சி [04 - May - 2008] -விதுரன் - அரசும் படைத்தரப்பும் நினைத்ததற்கும் மாறாகவே வடக்கே களநிலையுள்ளது. விடுதலைப்புலிகள் பலமாகவேயுள்ளனர். புலிகளின் திட்டமிடலும் பதில் தாக்குதல்களும் படையினரின் தாக்குதல் திட்டங்களை தவிடுபொடியாக்குகின்றன. இதனால், புலிகளுக்கெதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டிய நிலையில் படைத்தரப்புள்ளது. வடக்கே புலிகளுக்கெதிரான படைநடவடிக்கை வெற்றிகரமாக நடப்பது போன்றும் அங்கு தினமும் புலிகள் பெருமளவில் கொல்லப்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதுடன் படையினருக்கு மிகமிகக் குறைந்தளவு இழப்புக்களே ஏற்படுவது போல் தென்பகுதி மக்களை நம்பவைக்க அரசும் படைத்தரப்பும் முயல்கின்றன. எனி…
-
- 3 replies
- 2k views
-
-
வன்னி முற்றுகையை முறியடிப்பதில் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் பங்கு [04 - May - 2008] கனடாவில் இருந்து புலத்தவன் கிழக்கினைப் பிடித்து கேக் துண்டுகளைப் பரிமாறி வெற்றிக் கழிப்பில் மிதந்த இலங்கை அரசு, இதோ வடக்கினைப் பிடித்து கிளிநொச்சியில் கொடியேற்றுகின்றோம் என்ற வீறாப்புடன் வன்னிமீதான தனது போரைத் தொடக்கி நொந்து போயுள்ளது. வன்னிப் பெரு நிலப்பரப்பின் தென்முனைக் களமான மணலாறு தொடக்கம் மன்னார் வரையான மிக நீண்ட களத்தினையுருவாக்கி அங்கே 59, 56, 57, 58 என நான்கு டிவிசன்களைப் படை நடவடிக்கைக்காக நிறுத்தி வைத்துள்ள அதேவேளை, வன்னிக்கு வடக்கே, அதாவது யாழ்ப்பாணத்தில் 51, 52, 53, 57 ஆகிய டிவிசன்களை நடவடிக்கைக்காகப் பயன்படுத்திக் கொண்டு வன்னியைப் பிடிக்கின்ற போரை நடாத்தி வ…
-
- 0 replies
- 1.8k views
-
-
திருச்சி அகதிகள் முகாமில் இலங்கை வாலிபர் தற்கொலை ஞாயிற்றுக்கிழமை, மே 4, 2008 திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் தங்கியிருந்த 21 வயது இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் ஏராளமானோர் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கே.செந்தில்நாதன். கடந்த 1990ம் ஆண்டு இங்கு வந்தார். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விரைந்து வந்து செந்தில்நாதனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். http:/…
-
- 0 replies
- 970 views
-
-
ஐ.தே.க அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மீது தாக்குதல் வீரகேசரி இணையம் 5/4/2008 10:11:42 AM - ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் பிரதான வேட்பாளருமான தயா கமகே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயங்களிற்குள்ளான தயா கமகே சிகிச்சைகளிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
- 0 replies
- 789 views
-
-
இலங்கை அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் இயங்கும் மிஹின் எயார் வானூர்தி, காலவரையன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிஹின் எயார் ஏற்கனவே சுமார் பில்லியன் ரூபா அளவில் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரச்சினையை அடுத்து, குறித்த வானூர்தி நிறுவனத்தின் தலைவர் சசின் குணவர்த்தன பதவிவிலகியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் பீஜிங் முகாமையாளர் ஜெயசீலன் அழைக்கப்பட்டு தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இதேவேளை 19 வருடங்கள் பழமைவாய்ந்த வானுர்தி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சேவையை மேற்கொள்ள மிஹின் எயார் நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இலங்கை வானுர்தி சட்டத்தின்படி 19 வருடங்கள் பழமை வாய்ந்த வானூர்தியை பதிவு செய்யமுடியாது என்பதால் அந்த…
-
- 0 replies
- 975 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். ""முதல்வருக்கு வேண்டுகோள்'' என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்ட தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய…
-
- 4 replies
- 1.2k views
-
-
மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள் வான் புலிகளின் வீசிய 5 குண்டுகளால் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
வடபகுதியில் 3 கப்பல் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 2 மாதங்களில் தரையிறக்கி உள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசநாயக்கவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்க அக்கட்சி திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 669 views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் செயற்பாடுகளுக்கு ஆயுதக்குழுக்களால் அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அந்தந்த வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்துச் செய்யப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 472 views
-
-
உலகில் உள்ள போராளிகள் இடையே தமிழீழ விடுதலைப் புலிகள் சக்தி படைத்தவர்கள் என்றும், முகமாலையில் அவர்கள் எப்போதும் மிகப்பலத்துடன் உள்ளனர் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
வட மாகாண ஆளுநர் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவரை நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 623 views
-
-
வன்னிக்களமுனையான மணலாறிலும், மன்னாரிலும் மற்றும் திருகோணமலை, கெப்பிற்றிக்கொல்லாவவிலும் இடம்பெற்ற முறியடிப்புத் தாக்குதல்களிலும், கிளைமோர் மற்றும் மிதிவெடிச் சம்பவங்களிலும் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 17 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 514 views
-
-
மனித உரிமை விசாரணைகள் தொடர்பாக கண்காணிப்பதற்காக அழைக்கப்பட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு குறித்து அண்மைக்காலமாக அரசாங்கம் கடும் விமர்சனங்களை ................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8727.html
-
- 2 replies
- 1.8k views
-