Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிள்ளையான் குழு பற்றிய பூரண அறிக்கையொன்றை வழங்குமாறு தம்மிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்தில் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜனநாயகவாதிகளின் சம்மேளனத்திலும் பிள்ளையான் குழு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சர்வதேச பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கிழக்குத் தேர்தல்களின் போது பிள்ளையான் குழு ஆயுதங்களைக் காட்டி தேர்தல் கொள்ளையில் ஈடுபட முயற்சி…

    • 0 replies
    • 1.1k views
  2. தேசிய பிரச்சினைக்கு போரினால் தீர்வுகாண முயன்ற ராஜபக்ஸ அரசாங்கம் விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதான பேச்சு மேசைக்கு அழைத்து வர சர்வதேச பின்னணியுடனான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையின் அரசாங்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும்,.............. தொடர்ந்து வாசிக்க................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_1828.html

    • 0 replies
    • 1.1k views
  3. சுவிசின் சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழர்களின் சார்பில் மே நாள் நிகழ்வு மிகப் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 585 views
  4. வட மாகாணத்திற்கு நிழல் மாகாண சபை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 588 views
  5. யாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை இந்திய தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 648 views
  6. மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 737 views
  7. கல்கிஸ்ஸ மொரட்டுவை பகுதியில் 13 தமிழ் இளைஞர்கள் கைது Friday, 02 May 2008 கல்கிஸ்ஸ மற்றும் மொரட்டுவ பிரதேசங்களில் இலங்கை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 13 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் குறித்த பிரதேசங்களில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் எனத் தெரியவருகிறது. எவ்வாறெனினும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் குறித்த பிரதேசங்களில் ஏன் தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றி சரியான தகவல்களை வெளியிடவில்லை எனவும், சிலர் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். http://www.ajeevan.ch/content/view/2361/12/

    • 0 replies
    • 788 views
  8. சிறிலங்கா தொடர்பான கொள்கையை மாற்றி தனது வாலை இந்தியா சுருட்டி கொள்ளவேண்டும். - சோமவன்ச கொழும்பு நகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க உரையாற்றும் போது சிறிலங்காவிற்கு எதிரான இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தெருவில் இறங்கி போராட்டங்களை ஆரம்பிப்போம் எனவும் சிறிலங்கா தொடர்பிலான கொள்கையை மாற்றிக்கொண்டு இந்தியா வாலைச் சுருட்டிக் கொள்ள வேண்டும். 2009 ஆண்டு மே தினத்தை ஜே.வி.பி. மட்டுமே நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை இன்றே மேற்கொண்டு நீலம், பச்சை நிறங்களை ஓரம் கட்டுவோம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் தெரிவித்தார். அங்கு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: …

    • 3 replies
    • 1.2k views
  9. மடு பிரதேசத்தை விசேடமாக சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்தில் பிரதிஸ்டை செய்ய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், கத்தோலிக்க ஆயர்களுக்கும் அழுத்தங்கொடுக்க வேண்டும் எனவும் கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் ஒமல்பே சோபித தேரர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருந்த மடு தேவாலயத்தை எமது படைவீரர்கள் மீட்டெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், மன்னார் ஆயர் இரயப்பு ஜோசப் …

  10. இலங்கை அரசினால் பஸ்களிலும் கிராமங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்டன எனக் கூறப்படும் தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கையாகவே கடந்த வருடம் மேற்கொண்ட பல தாக்குதல்கள் அமைதிருக்கின்றன எனத் தெரிகின்றது என்று அமெ. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை அச்சுறுத்தவதற்காகா இலங்கை அரசு ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்துகிறது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது. உலக நாடுகளின் பயங்கரவாத நிலைமை குறித்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமெரிக்காப் பிரஜைகளையோ சொத்துகளையோ இலக்கு வைக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப…

  11. இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு அந்த பிரதேச குடியிருப்பாளர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 2006 ஆம் ஆண்டு அந்த பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்; இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இன்னமும் தங்கியிருக்கின்றார்கள். தாங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், தமது குடியிருப்புப் பகுதிகளில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்தப்படுவதை எதிர்க்கும் இவர்கள், இதற்கு இந்தியா உதவுவது குறித்து அந்த நாட்டின் மீது தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பீ.பீ.சியிடம் கருத்து தெரிவித்த ம…

    • 0 replies
    • 1.4k views
  12. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்; கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்தக் கருத்தும் வெளிவநிதுள்ளது. இது குறித்து பீ.பீ.சீயிடம் கருத்து வெளியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் ‘இலங்கை இனப்பிரச்சனை…

    • 3 replies
    • 1.5k views
  13. சுவிற்சர்லாந்தில் அனைத்துலக தொழிலாளர் நாள் பேரணி இன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளில் சுவிஸ்கிளையினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். (படங்கள் இணைப்பு) சுவிற்சர்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரிடையே உள்ள பதினைத்துக்கும் அதிகமான பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்தப்பேரணியில் கலந்து கொண்டனர். சுவிஸ்கிளைப் பொறுப்பாளர் குலம் தலைமையில் இன்று 01.05.2008 காலை 10.30 அளவில் சூரிச் நகரில் பெரிய தபால் நிலையம் முன்பிலிருந்து ஆரம்பமாகிய இப்பேரணியில் சிங்களப்பேரினவாதிகளில் கோர முகத்தை சித்தரிக்கும் உருவம் தாங்கிய ஊர்தி பலரையும் கவர்ந்தது. தமிழீழத் தேசியத்தலைவரின் உருவப்படங்களுடன் தமிழீ…

    • 0 replies
    • 1.4k views
  14. கிழக்கு தேர்தலில் ஜ.தே.க.வுக்கு அளிக்கும் வாக்குகள் பிரபாகரனுக்கு உரியனவாகும் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் 5/1/2008 10:56:23 PM - கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போடும் வாக்காகும். அரசாங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் படையினர் வடக்கிற்கு செல்வதற்கான வாக்காகவே அமையும். இதனால், எதிர்வரும் 10ஆம் திகதி 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று சமையலறை யுத்தத்திற்கும் விரைவில் முடிவுகட்டுவோம். கிழக்கு மாகாண மக்களுக்கு ஜன…

  15. சமாதான முன்னெடுப்புகளுக்கு மீண்டும் அரசு முயல்கிறது Thursday, 01 May 2008 தேசிய பிரச்சனைக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு என இறங்கிய ராஜபக்ஸவின் அரசு மீண்டும் சமாதன பேச்சுக்களை முன்னெடுக்க முயல்கிறது. விடுதலைப் புலிகள் பல் வேறு கட்சித் தலைமையோடு ஆட்சி செய்த அரசுகளோடு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டாலும் பின்னர் அதிலிருந்து விலகியமை குறித்து சந்தேகக் கண்கொண்டு இருக்கும் தற்போதைய அரசு எதிர்வரும் காலங்களில் பேச்சு வார்த்தை ஒன்று நடத்தப்படுமானால் விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தை மேசையில் தொடர்ந்தும் பங்கு கொள்ளும் பொறுப்பை சர்வதேசம் பொறுப்பேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்த பேச்சு வார்த்தைகள் அண்மையில் நோர்வேயில் வைத்து நடைபெற்றது.…

    • 2 replies
    • 1.5k views
  16. தமிழர் தாயகம் எங்கும் இன்று வியாழக்கிழமை மே நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியோடு நடைபெற்றுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 778 views
  17. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வுக்கான தொடக்க நிகழ்வுகள் புலிகளின் குரலின் வானொலி மன்றத்தின் ஏற்பாட்டில் முள்ளியவளை கோட்ட அரசியல்துறையின் ஆதரவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 364 views
  18. மணலாறு சிறிலங்காப் படை நிலைகள் மீது நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலில் 25 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 749 views
  19. நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோ உள்ளிட்ட பல நகரங்களில் தமிழர்கள் சார்பில் மே நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியாக நடத்தப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 715 views
  20. 30.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_005.html

    • 0 replies
    • 1.7k views
  21. 29.04.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_006.html

    • 0 replies
    • 1.5k views
  22. தெஹிவளையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும், காவல்துறையினர் இணைந்து பிரதேசத்தில் இன்று காலை 6 மணி முதல் முற்பகல் 9.30 வiர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, பருத்தித்துறை,.............. தொடர்ந்து வாசிக்க............... http://isoorya.blogspot.com/2008/05/4.html

    • 0 replies
    • 788 views
  23. ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம் வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. நிர்வாக சபைக்கு ஈடாக சிறப்பு செயலணிக் குழு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு செயலணிக் குழு ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பத்தியூன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். வடக்கு மாகாணத்தின் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்பு செயலணிக் குழுவினர் அபிவிருத்தி தொடர்ப்பில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை சிறீலங்கா அதிபர் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்த போது, அதற்கு அமைச்சர…

  24. சிங்கள அரசின் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராகவும் தொடர்ந்து போராடுவோம் என்று இன்றைய மே நாளில் உறுதியேற்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 510 views
  25. மகாபாரதத்தில் குருஷேத்திரத்தில் இடம்பெற்றதொரு காட்சிதான் இன்று கிழக்கு மாகாணத்தில் ரணில் ! May 1, 2008 மகாபாரதத்தின் குருஷேத்திரம் இன்று கிழக்கில் அரங்கேற்றம் 01.05.08 திருகோணமலை முற்ற வெளியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மேலும் தனது உரையில் பாண்டவர்கள் அதிகாரப் பகிர்வு கேட்டார்கள். நூறு சகோதரர்களுடன் ஆட்சி நடத்திய துரியோதனன் மறுத்தான். பாண்டவர்கள் குருஷேத்திரத்தில் துரியோதனாதியர்களைச் சந்தித்தனர் அப்போது கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு செய்த உபதேசம் பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. பதினெட்டு நாள் குருஷேத்திரப் போர் நடக்கிறது. பாண்டவர் வென்றனர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நான் இத்துடன் ஒப்பிடுகிறேன். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.