ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
அம்பாறை மாவட்டம் கல்முனையில் சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையான பிள்ளையான் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு கொதித்தெழுந்த முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் பாரிய அளவிலான முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 568 views
-
-
அனுராத புர பாதுகாப்பை அதிரடி படைகள் ஏற்றுள்ளது கடந்த காலங்களில் அனுராத புரத்தின் எல்லை பகுதிகள் மீது விடுதலைப் புலிகளினால் இராணுவத்திற்கு தொல்லை கொடுக்கும் தாக்குதல்கள் தீவிரமாக நடைபெற்றன. அதனால் அந்த பகுதி கெப்பி்ற்றி கொலவ பகுதி சாலை இழுத்து மூடப்பட்டு சோதனை சாவடிகளும் ரோந்துகளும் நடைபெற்று பின் மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1229
-
- 0 replies
- 745 views
-
-
மக்களாகிய உங்களின் பலத்தினால்தான் எதிரிகளை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கிறோம் - பா.நடேசன் சிறிலங்கா அரசிற்கு பல உலக நாடுகள் ஆயுத உதவிசெய்கின்றபோதும் நாம் அவர்களை எதிர்கொண்டு நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் அது மக்களாகிய உங்களின் பலத்தினால்தான். சிறிலங்கா இராணுவம் தற்போது மிகவும் பலவீனப்பட்டுப்போயுள்ளது. இப்போதுதான் நாம் எமது விடுதலைப்போராட்டத்திற்கான திருப்பு முனகைளை ஏற்படுத்தும் காலமாக கனிந்திருக்கிறது சண்டையை வெல்லக் கூடிய சூழலுக்கு நாம் வந்துவிட்டோம். எனத் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய பணிக்குழுவினருடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கரு…
-
- 0 replies
- 572 views
-
-
ஆக்கம்: நிலவரம் பத்திரிகைக்காக கொற்றவன் 31. மார்ச் 2008 21:51 மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு விடுதலைப்போர் வெற்றி அடைவது மிக மிகக் கடினம். விடுதலைப் போரின் பங்காளிகளாகவும் அதை முன்னெடுப்பவர்களாகவும் மக்கள் இடம்பெறும் போது விடுதலைப்போர் தனது வெற்றி இலக்கை அடைந்தே தீரும். சீனா, வியட்நாம் ஆகிய நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போர் மக்கட் போர் (PEOPLE'S WAR) எனப்படும். ஆசியாவின் மூன்றாவது மக்கட் போர் இப்போது தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. புலிகள் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப்போர் பல வியப்பூட்டும் இராணுவப் பரிமாணங்களைக் கொண்டது. மக்கட் போரின் தாக்குப்பிடிக்கும் வலு அதன் வெற்றி இலக்கை அடைய உதவுகிறது. பிடித்து வைத்திரு…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமது அமைப்பில் இணைந்த சிறார் போரளிகள் 22 பேரரை நேற்று விடுதலை செய்துள்ளனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். புலிகளின் சமாதான செயலகத்தின் இணையதளம் ஊடாக வெளியிடப்பட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்திருக்கினர். யுனிசெவ் அமைப்பு விடுதலைப் புலிகளிடம் நூற்றுக் கணக்கான சிறார் போரளிகள் இன்னும் உள்ளனர் என்த தெரிவித்து வருகிறது. தங்களால் விடுதலை செய்யபட்ட சிறுவர்களை 'யுனிசெவச' அமைப்பு உறுதிப்படுத்தத் தவறியமையே இவ்வாறான கருத்து எழக் காரணமாகியுள்ளது எனவும் 20 சிறுவர் போரிளிகளின் பெற்றார் அல்லது பாதுகாவலர்களை கண்டு பிடிப்பதற்கான நடவடிக்கைகளலில் சி.பி.ஏ என்ற சிறுவர் பாதுகாப்புக்கான தமது அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் நூற…
-
- 0 replies
- 761 views
-
-
இந்தியாவின் நெருக்கடி காரணமாகவே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியவில்லை பிரித்தானிய எம்.பி.க்களிடம் - சோமவன்ச தெரிவிப்பு இனத்துவ அடிப்படையில் அதிகாரத்தை பரவலாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள், இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு விடுவார்கள். எனவேதான் 13ஆவது திருத்த முன்னெடுப்பைத் தாம் எதிர்ப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கை உட்பட தெற்காசியப் பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் இந்தியாவின் கொள்கையையும், கொள்கை வகுப்பாளர்களையுமே எதிர்ப்பதாக இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடம் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பின…
-
- 0 replies
- 752 views
-
-
இலங்கைப்பொருட்களுக்கான தீர்வை சலுகைகுறித்து விரைவில் மீள்பரிசீலனை-ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிப்பு இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் தீர்வைச் சலுகை விரைவில் மீள் பரிசீலனை செய்யப்படவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்போது வர்த்தக நடவடிக்கைகளின் தன்மை மற்றும் மனித உரிமைகளின் நிலை குறித்தும் கவனம் செலுத்தப்படுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான நட்புறவின் அடிப்படையில் தனது ஒன்றிய நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்வைச் சலுகையை வழங்கி வருகின்றது. இதன் அ…
-
- 0 replies
- 680 views
-
-
இலங்கை அகதிகள் வந்த படகை பிடித்த இந்திய கடற்படை அகதிகளை ஏற்றிவந்த இலங்கை படகை இந்திய கடற்படையினர் மடக்கி பிடித்ததோடு அதன் படகோட்டிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர். இலங்கை மன்னாரை சேர்ந்த மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1223
-
- 0 replies
- 823 views
-
-
சென்னையிலுள்ள ஜெமினி ஸ்ரூடியோவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தன்னுடைய சர்ச்சைக்குரிய 'பிரபாகரன்' திரைப்படத்தின் பிரதிகளை மீளப் பெற்றுத் தரவேண்டும் எனக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திரைப்பட இயக்குனர் துஷாரா பீரிஸ் தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டுள்ளார். இதன் பிரதியைப் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம உறுதியளித்ததையடுத்தே அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து துஷாரா பீரிஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளருடன் நேற்றைய தினம் சென்னைக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இவர் சென்னை புறப்பட்டிருக்கின்றார். சென்னை ஜெமினி ஸ்ர…
-
- 9 replies
- 3.2k views
-
-
மட்டக்களப்பில் உயர் பாதுகாப்பு பிரதேசத்தில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்.
-
- 0 replies
- 796 views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....de0ef88d2f7129e ஆராய்பவர்கள் தமிழீழ அரசியல் ஆய்வுமையப் பொறுப்பாளர் திரு கவியழகன் மற்றும் புலிகளின் குரல் பிரதம செய்தி ஆசிரியர் - திரு இறைவன் இவர்களுடன் திரு வீரா
-
- 2 replies
- 1.1k views
-
-
உள்ளத்தூய்மை,சிந்தனைத் தெளிவு, செயல் துணிவுடன் தமிழினத்தை வழிநடத்திய தலைவர் தந்தை செல்வா -மா.க.ஈழவேந்தன்- * இன்று 110 ஆவது பிறந்ததினம் இருள் படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத்தோன்றியவர் தந்தை செல்வநாயகம் "மெல்ல மெல்ல பணிபுரியும் செல்வநாயகம் சொல்லுகின்ற பாதையிலே செல்கின்ற வீரர் நாம்". ஈழத்து பெண்கவிஞர் ஒருவர் உயர்ந்து பாராட்டுகின்ற அளவுக்கு ஈழத்து தமிழ் மக்களையெல்லாம் முழுமையாக ஆட்கொண்டு வழிநடத்திச் சென்றவர் அவர். விடுதலை தவறி பாழ்பட்டுக்கிடந்த தமிழ் மக்களையெல்லாம் ஒற்றுமைப்படுத்தி ஒளிபொருந்திய வாழ்வு நமக்கு உண்டு. தன்நம்பிக்கையுடன் வாழ், தன்மானத்துடன் வாழ் என்று புது வழி காட்டி புத்துணர்வாக்கிய பெருமை அவரையே சாரும். வரலாறு தரும் தீர்ப்பு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கைதி தற்கொலை கல்கிசை காவல் நிலையத்தில் கைதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். நேற்று இரவு நஞ்சருந்திய இவர் களுபோவில வைத்தியசாலையில் இன்று அதிகாலை உயிரிழந்தள்ளார். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குறித்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினா மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1695#1695
-
- 0 replies
- 934 views
-
-
கொழும்பு மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த மர்மச் சுவரொட்டிகளுக்கு பாதுகாப்பு அமைச்சே பொறுப்பெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் போராளிகளாக வருபவர்கள் சரணடைந்தால் அவர்களுடைய வாழ்கையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கும் இந்தச் சுவரொட்டிகள் கடந்த வாரத்தில் மர்மான முறையில் கொழும்பு நகரில் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு யார் காரணம் எனத் தெரிவிக்கப்படாமையால் இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசாங்கத்தால் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்படவில்லை என அரசாங்க அமைச்சர் ஒருவர் கடந்தவாரம் தெரிவித்திருந்ததை அடுத்து, இதற்குக் காரணம் யார் என்ற கேள்வி பெரிதாக எழுப்பப்பட்டது. இந…
-
- 1 reply
- 1.3k views
-
-
போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி வழங்கும் நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 607 views
-
-
வட போர் முனையில் யுத்த தளபாடங்கள் குவிப்பு சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், எறிகணைகள் போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பலாலி வீதி, பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன. வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர். வடபோர் முனையில் பாதுகாப்பு வேல…
-
- 11 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறாப் படகு, நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 4.9k views
-
-
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கன்றது எனத் தெரிவித்த அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, பிரபாகரனையோ அல்லது பொட்டம்மானையோ மன்னிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை" என்று தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். அடுத்த ஒன்றரை வருட காலத்துக்குள் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்திமுடிக்கப்பட்டுவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். மார்கா நிறுவனத்தைச் சேர்ந்த கொட்பிரி குணதிலக்க, பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா உட்பட பல அரசுத் தலைவருடனான இந்தச் சந்திப்பில் பங்குகொண்டனர். இந்தச்சந்திப்பில் மேலும் …
-
- 11 replies
- 3k views
-
-
மன்னார் மற்றும் வவுனியாக் களமுனைகளில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 689 views
-
-
இந்திய கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை நாட்டவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். ரமேஸ்வரம் அருகே உள்ள உச்சிப்புலி கடல் பகுதியில் ரோந்து...................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_2110.html
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் ஆயுததாரிகளினால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 635 views
-
-
2009ம் ஆண்டின் இறுதிவரை யுத்தம் தொடருமென இராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளி வடபகுதி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மஹிந்த மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்த கொண்ட விஷேட பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே பொன்சேகா மஹிந்தவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெரிவு செய்யபட்ட 1500 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் களமுனைக்கு அனுப்பபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் சுமார் 3000 புலிகள் எதிர்வரும் ஆகஸ்ட மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்டு விடுவார்களெனவும் இவ்வருட இறுதியில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விடுமெனவும் இவர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்தத் தீர்மானம் குறித்து பிள்ளையான் குழு கட்சியைச் சேர்ந்த கைலாஸ்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவினைத் தொடர்ந்து பிள்ளையான் குழு வெற்றிலைச் சினத்தில் போட்டியிடவுள்ளது. இதன்படி, பிள்ளையான் குழுவின் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். தேசிய சமாதானம், கிழக்கு அபிவிருத்தி ஆகிய தொனிப்பொருட்களை முதன்மையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை கிழக்குத் தேர்தல்களில் களமிறங்கவுள்ளது. எனினும், தமது கட்சியின் முதலமைச்சர் பதவி …
-
- 0 replies
- 632 views
-
-
முல்லைத்தீவில் இரு விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் 3/31/2008 2:56:28 PM - முல்லைத்தீவுப் பகுதியில் விமானப்படையில் இன்று காலை விமானதை இரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 9.45 மற்றும் 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கான ஓடுபாதை மீது இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது . விமானப்படையினர் இவ் வான் தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் அன்ர் விஜயசூரிய தெரிவித்தார்
-
- 0 replies
- 821 views
-
-
இலங்கையில் நடப்பது அரச பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை எப்பொழுது உலக நாடுகள் உணர்கின்றனவோ அன்றுதான் நாட்டில் அமைதியும் சமாதானமும் பிறக்க ஏதுவான சூழல் அமையும். அதற்கிடையில் எத்தனை மரணங்கள், எத்தனை பட்டினிச் சாவுகள், எத்தனை ஆட்கடத்தல்கள், எத்தனை இடமாற்றங்கள், எத்தனை வன்செயல்கள், எத்தனை நட்டங்களை மக்கள் அனுபவிக்கப் போகின்றார்களோ தெரியாது. 'பயங்கரவாதம்', 'பயங்கரவாதிகள்' என்ற சொற்கள் அண்மைக் காலங்களில் பயங்கரமான முக்கியத்துவம் அடைந்துள்ளன. ஆனாலும், சட்டப்படி அச்சொற்களுக்குப் போதுமான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் 'பயங்கரவாதிகள்' யார் என்பதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்க நியூயோர்க் ந…
-
- 0 replies
- 1.9k views
-