ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
போரை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி வழங்கும் நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
வட போர் முனையில் யுத்த தளபாடங்கள் குவிப்பு சிறிலங்கா இராணுவம் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள், எறிகணைகள் போன்ற யுத்த தளபாடஙகளை முகமாலை, கிளாலி, நாகர்கோவில் மற்றும் தீவுப்பகுதி முன்னரங்கு நிலைகள் நோக்கி நகர்த்து கின்றது. காங்கேசன்துறை துறைமுகத்தில் இறக்கப்பட்ட இராணுவ தளபாடங்கள் அடங்கிய கொள்கலன்கள் பார ஊர்திகள் மூலம் வட முன்னரஙகுகளுக்கு நகர்த்தப்படுவதை குடிசார் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பலாலி வீதி, பருத்திததுறை வீதி என்பன பொமுமக்கள் போக்கு வரத்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டு இராணுவ தொடர் வழங்கல்கள் மேற்கொள்ளப்படட்டு வருகின்றன. வடமராட்சி வல்வையில் 4 மணித்தியாலங்கள் வரை பொதுமக்கள் தடுத்து வைக்கப்படடுள்ளனர். வடபோர் முனையில் பாதுகாப்பு வேல…
-
- 11 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் கடந்த வாரம் மூழ்கடிக்கப்பட்ட டோறாப் படகு, நீர்மூழ்கிக் கப்பல் அல்லது அலையுடன் பயணிக்கும் கலம் மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கடற்படையின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 4.9k views
-
-
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவிருக்கன்றது எனத் தெரிவித்த அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, பிரபாகரனையோ அல்லது பொட்டம்மானையோ மன்னிப்பதற்கு அரசாங்கம் தயாராகவில்லை" என்று தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்தார். அடுத்த ஒன்றரை வருட காலத்துக்குள் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்திமுடிக்கப்பட்டுவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். மார்கா நிறுவனத்தைச் சேர்ந்த கொட்பிரி குணதிலக்க, பவ்ரல் அமைப்பின் தலைவர் கிங்ஸ்லி றொட்றிகோ, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா உட்பட பல அரசுத் தலைவருடனான இந்தச் சந்திப்பில் பங்குகொண்டனர். இந்தச்சந்திப்பில் மேலும் …
-
- 11 replies
- 3k views
-
-
மன்னார் மற்றும் வவுனியாக் களமுனைகளில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 690 views
-
-
இந்திய கடற்படை ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை நாட்டவர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். ரமேஸ்வரம் அருகே உள்ள உச்சிப்புலி கடல் பகுதியில் ரோந்து...................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_2110.html
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் ஆயுததாரிகளினால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 636 views
-
-
2009ம் ஆண்டின் இறுதிவரை யுத்தம் தொடருமென இராணுவ தளபதி பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளி வடபகுதி பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மஹிந்த மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகள் கலந்த கொண்ட விஷேட பாதுகாப்புச் சபை கூட்டத்திலேயே பொன்சேகா மஹிந்தவிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். தெரிவு செய்யபட்ட 1500 வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கபட்டு வருவதாகவும் அவர்கள் விரைவில் களமுனைக்கு அனுப்பபடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் சுமார் 3000 புலிகள் எதிர்வரும் ஆகஸ்ட மாதத்திற்கு முன்னர் கொல்லப்பட்டு விடுவார்களெனவும் இவ்வருட இறுதியில் தனது பதவிக் காலம் முடிவடைவதற்குள் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு விடுமெனவும் இவர் முன்னர் தெரிவித்திருந்தார். இந்நிலையில…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்தத் தீர்மானம் குறித்து பிள்ளையான் குழு கட்சியைச் சேர்ந்த கைலாஸ்வர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவினைத் தொடர்ந்து பிள்ளையான் குழு வெற்றிலைச் சினத்தில் போட்டியிடவுள்ளது. இதன்படி, பிள்ளையான் குழுவின் முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். தேசிய சமாதானம், கிழக்கு அபிவிருத்தி ஆகிய தொனிப்பொருட்களை முதன்மையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இம்முறை கிழக்குத் தேர்தல்களில் களமிறங்கவுள்ளது. எனினும், தமது கட்சியின் முதலமைச்சர் பதவி …
-
- 0 replies
- 633 views
-
-
முல்லைத்தீவில் இரு விமானத் தாக்குதல் வீரகேசரி இணையம் 3/31/2008 2:56:28 PM - முல்லைத்தீவுப் பகுதியில் விமானப்படையில் இன்று காலை விமானதை இரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 9.45 மற்றும் 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கான ஓடுபாதை மீது இவ் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது . விமானப்படையினர் இவ் வான் தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் அன்ர் விஜயசூரிய தெரிவித்தார்
-
- 0 replies
- 822 views
-
-
இலங்கையில் நடப்பது அரச பயங்கரவாதமே அன்றி வேறில்லை என்பதை எப்பொழுது உலக நாடுகள் உணர்கின்றனவோ அன்றுதான் நாட்டில் அமைதியும் சமாதானமும் பிறக்க ஏதுவான சூழல் அமையும். அதற்கிடையில் எத்தனை மரணங்கள், எத்தனை பட்டினிச் சாவுகள், எத்தனை ஆட்கடத்தல்கள், எத்தனை இடமாற்றங்கள், எத்தனை வன்செயல்கள், எத்தனை நட்டங்களை மக்கள் அனுபவிக்கப் போகின்றார்களோ தெரியாது. 'பயங்கரவாதம்', 'பயங்கரவாதிகள்' என்ற சொற்கள் அண்மைக் காலங்களில் பயங்கரமான முக்கியத்துவம் அடைந்துள்ளன. ஆனாலும், சட்டப்படி அச்சொற்களுக்குப் போதுமான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால் 'பயங்கரவாதிகள்' யார் என்பதில் மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்க நியூயோர்க் ந…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழ் அகதிகளின் பெரும் இடம்பெயர்வு ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 759 views
-
-
பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா படையினர் மீது சட்ட நடவடிக்கை – ஐநா அறிவிப்பு ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையணியில் இடம்பெற்றிருந்த 114 ஸ்ரீலங்கா படைச் சிப்பாய்கள் மீது பாலியல் வல்லுறுவு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. ஹேய்டியில் ஐநா மேற்கொண்டு வரும் சமாதான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் ஸ்ரீலங்கா படையினரும் ஐநா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எனினும் அவர்கள் ஐநாவின் விதி முறைகளுக்கு முரணாக ஹேய்டியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளிலும் சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளிலும் ஈடுப்டமை விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த துஸ…
-
- 1 reply
- 752 views
-
-
வடபகுதி மோதல்களில் அரசும் படையினரும் எதிர்பார்த்ததை விட விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாக இருப்பாதாக இராஜ தந்திரிகளும் ஆய்வாளாகளும் தெரிவித்துள்ளனர். வடக்கில் நான்கு முனைகளில் கடந்த ஒரு வருடகாலத்திற்கும் மேலாக அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையியே பாரியளவிலான மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது. வவுனியா, மன்னார், மணலாறு, யாழ.;குடாநாடு ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக படையினரின் பாரிய படை நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இப்பகுதிகளில் எந்தவொரு சிறு வெற்றியைக் கூட படையினரால் மேற்கொள்ள முடியவில்லையென்றே சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரம், மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள…
-
- 1 reply
- 2k views
-
-
போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்துங்கள்: பிரதமருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் சென்னை, மார்ச்.30&: போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:& வேதனை மிகுந்த உள்ளத்துடன் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இலங்கை தீவில் வாழும், எங்கள் சகோதரர்களும், சகோதரிகளுமான, அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டியது உடனடித் தேவை என்பதே இக்கடிதத்தின் நோக்கம். இரக்கமற்ற இலங்கை அரசின் கொடுங்கரங்களில் அவர்கள் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறா…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழகத்தில் சிங்களவர்களின் கால்பதியக்கக்கூடாது 31.03.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்திற்கு விஜயம் செய்த சிறிலங்காவின் ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தனவின் தலைமையில் வந்த முக்கிய பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள பேரூர் கிராமம்திருநெல்வெலியின் ஆலன்குளம் போன்ற இடங்களில் பௌத்த ஆலயங்களுக்கான அடிக்கல்லை நாட்ட வந்திருந்தனர். பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரமல்லாமல்அனைவருக்கும
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கு மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் பிற்போட முடியும் - ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை சிறீலங்கா அரசாங்கம் பிற்போடலாம் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் தற்போது எழுந்துள்ள பாதுகாப்பு பிரச்சினைகளை உறுதிப்டுத்தும் வரை மாகாணசபைத் தேர்தலை சிறீலங்கா அரசாங்கம் பிற்போட முடியும் எனத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 633 views
-
-
நோர்வே தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் வள ஆலோசனை மையம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.03.08) உயர்கல்விக் கருத்தரங்கு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 604 views
-
-
ஏ-9 வீதியை திறந்து புலிகள் என்னைக் கொலை செய்வதை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா? இவ்வாறு காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் மஹிந்த ஏ-9 வீதியை மக்கள் போக்குவரத்துக்கு திறந்து விட அரசு முயற்சிக்க வேண்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் மஹிந்தவிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு சீற்றம் கொண்டார் என்று அறியவருகின்றது. சிவில் சமூக அமைப்பாளர்களைச் சோந்த பிரமுகர்காளான ஜிப்ரி குணதிலக, ஜெகான் பெரேரா, கிங்ஸ்லி றொட்ரிகோ உட்படப் பலரை மஹிந்த கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடினார். அப்போது : நாடாளுமன்றத்திற்க்கான தேர்தல்கள் நிர்ணயிக்கப்பட்டதன் பிரகாரம் 2010 ம் ஆண்டிலேயே நடத்தப்படும். அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தப…
-
- 0 replies
- 1k views
-
-
அனுராத புரத்தில் படைகளினால் பாலியல் நோய் அதிகரிப்பு அனுராத புரத்தில் படைகளினால் பலியல் நோய் அதிகரித்துள்ளது. இவை பற்றி மேலும் தொரிய வருவதாவது. பலியல் நோய் சம்பந்தமான கட்டுப்பாட்டு அதிகாரிநிமால் எதிர சிங்க தெரிவிக்கையில் அனுராத புரத்தில் பாலியல் நோய் தொடா்பாண எண்ணிக்கை அதிகரித்துள்ளது . மேலும் படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1210
-
- 0 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Mar 30 21:45:00 2008 "உதய சூரியன்' சின்னத்தை தமதாக்கி தேர்தலில் போட்டியிட ஆனந்தசங்கரி முயற்சி தமிழர் விடுதலைக் கூட்டணியின் "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்தும் முழு உரிமையையும் கைப்பற்றி அந்தச் சின்னத்தில் அந்தப் பெயரில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டி இடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எத்தனித்து வருகின்றார். "உதயசூரியன்' சின்னத்தை பயன்படுத்துவதற்கான முழு உரிமை தமக்கு இருப்பதை அங்கீகரிக்கும் படி தேர்தல் ஆணையாளர் நாயகத்தை எழுத்து மூலம் அவர் கோரி இருக்கிறார் என அறியவந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பான சிக்கல் நீதிமன்றம் வரை சென்றிருப்பது தெரிந்ததே. கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஒரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிறப்புப் பார்வை (Tamil Eelam) (March 1st.2008) ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 886 views
-
-
வட போர்முனை நடவடிக்கைகள் தொடர்பாக சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு முப்படைத் தளபதிகள் விளக்கமளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
நீண்டகாலம் மற்றும் குறுகியகால அடிப்படையில் இலங்கை மிகவும் வறிய நாடாக மாறி வருகின்றது என்று ஆசிய பசுபிக் பொருளாதார மற்றும் சமூக சேவைகள் அமைப்பு அதன் 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 625 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக ஊடகவியலாளர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 804 views
-