Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 5 03 Mar, 2023 | 12:03 PM கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கைது, நாட்டில் விலைவாசியேற்றம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறைகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்…

  2. பற்றாக்குறையாகவுள்ள 37 மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டது! நாட்டில் பற்றாக்குறையாக உள்ள 37 வகையான மருந்துகளை உடனடியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் ஒப்புக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதுதொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டுடன் இணைந்து இந்த கலந்துரையாடல் ஜெனீவாவில் இடம்பெற்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். நாட்டிலுள்ள மருந்துப் பற்றாக்குறை மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் …

  3. சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்! சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தோடு போதைப் பொருள் பாவனைப் பரவலைக் கட்டுப்படுத்த பொலிஸாரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுப்ப…

  4. வெளிநாடு செல்வோரின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானம்! வேலைவாய்பிற்காக வெளிநாடு செல்பவர்களின் உயிரியளவியல் தரவுகளை பெற்றுக்கொள்ள தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தலை தடுக்கும் தேசிய செயற்குழு, இந்த செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் இடம்பெறும் ஆட்கடத்தலில் இருந்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, 2023 ஜனவரி மாதத்தில் 24ஆயிரத்து 236 இலங்கையர்க…

  5. அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தடையெனில் தனியார் வங்கிகளில் கணக்குகளை ஆரம்பிக்க தீர்மானம் - அரசாங்கம் Published By: T. SARANYA 02 MAR, 2023 | 03:53 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் உறுதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கு அரச வங்கிகளின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் தடையாக இருக்குமானால், தனியார் வங்கிகளில் வங்கிக் கணக்குகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த ம…

  6. இன்று முதல் இலவச எரிபொருள் கிடைக்கும் ! விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக்கன்கள் வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நாட்டில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்துவதற்காக சீன அரசாங்கம் 6.98 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியிருந்தது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் தீவின் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று (02) கொழும்பு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எரிபொருள் டோக்கன்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதன்படி, இன்று முதல் அனைத்து விவசாயிகளும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை இலவசமாக இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என …

  7. யாழில் புற்றுநோயால் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு தாளையடிப் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததுடன் , இவருக்கு நான்கு மாதங்களேயான பெண் குழந்தையொன்றும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/242965

  8. நீதிமன்றக்கட்டளையை மீறி குருந்தூர்மலையில் தொடரும் பௌத்த கட்டுமானப் பணிகள் -துரைராசா ரவிகரன் சிறப்பு செவ்வி March 2, 2023 குருந்தூர்மலையில் பௌத்த கட்டுமானப் பணிகள் இனி மேற்கொள்ளப்படக் கூடாது என்ற முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளையை மீறி அங்கு கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வி… கேள்வி-முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பில், நில அபகரிப்புக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து இருந்தீர்கள்? இது குறித்து கருத்து கூற முடியுமா? பதில்- குருந்துார் மலையை அண்மித்த பகுதியில் நில அளவை திணைக்களமும் பிரதேச சபை செயலகமும் …

  9. இலங்கையில் குண்டாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் அதிக எடை மற்றும் பருமனானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எடை அதிகரிப்பால் பிற்காலத்தில் தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன கூறுகிறார். உலக உடல் பருமன் தடுப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் “விழிப்புடன் இருப்போம், பருமனில் இருந்து விடுபடுவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். "2015 ஆம் ஆண்டில், ஆண்களில் 22.5% பேர் அதிக எடை மற்றும் பருமனானவர்களாக இருந்தனர்.…

  10. தகவல் அறியும் சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் : மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு 02 MAR, 2023 | 09:15 AM (சிவலிங்கம் சிவகுமாரன்) பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், அவர்கள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான விடயங்களை, தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக அவர்களிடம் கோரும் போது அவற்றை அவர்கள் வழங்க வேண்டும். இந்த சட்டமானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் முக்கியத்துவமான தீர்ப்பொன்றை நேற்று முன்தினம் வழங்கியது. பாராளுமன்று உறுப்…

  11. வலுவடையும் ரூபாய் பெறுமதி…. டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ! நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி,டொலரின் கொள்விலை 351.72 ரூபாயாகவும் விற்பனை விலை 362.95 ரூபாயாகவும் இன்று காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் மற்றும் முதலீட்டாளர்களிடத்தில் நம்பிக்கை அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். https://athavanne…

  12. யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு விரைவில்! யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும், சட்டத்தரணியுமான வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் திகதி இடம்பெற்ற முதல்வர் தெரிவில் இ.ஆனோல்ட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது நியமனம் குறித்த …

  13. அமெரிக்க செனட் சபையின் அறிவிப்பு இலங்கை மீதான சர்வதேச நிலைப்பாட்டை தெளிவாக பிரதிபலிக்கிறது - ஹர்ஷ டி சில்வா Published By: VISHNU 01 MAR, 2023 | 05:08 PM (எம்.மனோசித்ரா) அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டலுவல்கள் குழுவின் தலைவர் தேர்தலை மேலும் காலம் தாழ்த்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளமையின் ஊடாக , இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்பதை தெளிவாக அறியமுடிகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மேலும் இலங்கையில் ஜனநாயகம் சர்வாதிகாரத்தினால் முடக்கப்பட்டுள்ளது என்பதே சர்வதேசத்தின் நிலைப்பாடாகவுள்ளது என்பது தெளிவாகிறது எனவும் கல…

  14. வருமான வரி செலுத்தாதவர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை வருமான வரி செலுத்த தவறிய பல்வேறு தொழில்கள் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண துரித நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்புரை விடுத்துள்ளார். நாடு அரசாங்க வருமானம் தொடர்பில் கவனம் செலுத்தும் இவ்வேளையில், வரிகளை விதித்து வருமானம் ஈட்டுவது மற்றும் அவ்வாறு வரி செலுத்தத் தவறியவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று நிதியமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்…

  15. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரியின் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு Published By: T. SARANYA 01 MAR, 2023 | 03:50 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்படுத்தப்பட்டு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங் குணவர்தன ஆகிய இருவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் புதன்கிழமை (1) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட …

  16. இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்புக்கு உலக வங்கி ஆதரவளிக்கும் இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். அத்துடன், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பான நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உலக வங்கி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்குப் பொறுப்பான உப தலைவர் மார்ட்டின் ரெய்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிப…

  17. சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு நிதி அமைச்சின் கீழ் இயங்கும் நலன்புரி சபையினால் வழங்கப்படும் சமுர்த்தி உட்பட 52 நலன்புரிப் பலன்களைப் பெறுவதற்கு மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யாதவர்கள் அந்தப் பலன்களைப் பெறுவதற்கு உரிமையற்றவர்கள் என நிதியமைச்சு வலியுறுத்துகிறது. மார்ச் 31ஆம் திகதிக்குள் பதிவு செய்து முடிக்கவில்லை என்றால், உலக வங்கியின் இந்தத் திட்டத்துக்கான உதவி கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது. அப்படியானால், நலத்திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் நன்மைகளைப் பெற முடியாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நலன்புரி சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒன்லைன் மூலம் 3.7 மில்லியன் மக்கள் இதற்க…

  18. IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கைசாத்திடப்படும் இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நேற்று தெரிவித்தனர். IMF உடனான இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடன் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்து இலங்கைக்கு அதிக உதவிகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். “நாட்டில் ஏற்…

  19. மண்ணெண்ணெய் விலை குறைப்பு இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாவாகும் என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/242625

  20. கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி : பக்தர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு Published By: Digital Desk 5 01 Mar, 2023 | 09:36 AM கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (28) யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிவிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு ப…

  21. வெடிபொருட்கள் அகற்றப்படாத முகமாலையில் சட்டவிரோத மண் அகழ்வு Published By: Digital Desk 5 01 Mar, 2023 | 11:18 AM முகமாலையில், நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படும் பிரதேசங்களுக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்த காலத்தில் சூனிய பிரதேசமாக இருந்த முகாமாலை பகுதியில் நில கண்ணிவெடிகள் மற்றும் அபாயகரமான வெடிபொருட்கள் காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து 14 வருடங்கள் ஆகின்ற போதிலும் , அப்பகுதியில் தற்போதும் வெடிபொருட்களை அகற்றும் ப…

  22. புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் : முடங்குகின்றன முக்கிய சேவைகள் ! பெட்ரோலியம், துறைமுகம், மின்சாரம், சுகாதாரம், நீர் வழங்கல், கல்வி, வங்கி, தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. இலங்கையில் தற்போதுள்ள அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தே தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறவுள்ளது. இதன் காரணமாக, இன்று புதன்கிழமை பல்வேறு சேவைகள் முடங்கும் என பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ந…

  23. உள்ளாட்சித் தேர்தலை தாமதமின்றி நடத்துங்கள் – அமெரிக்க செனட் குழு இலங்கையிடம் வலியுறுத்து! உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதமின்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்களின்பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு முயற்சியும் மறுக்க முடியாத ஜனநாயக விரோதமானது மற்றும் இலங்கையர்களின் உரிமைகளை நேரடியாக மீறும் செயலாகும் என அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், தனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் பிற்போடப்பட்டதாக …

  24. புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை அவமதிக்கும் செயல் – சித்தார்த்தன் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி பிரபாகரணை இவ்வாறு பொது வெளியில் பொய்யான கருத்துகளை வெளியிடுவது ஒரு போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் என்றும் சித்தார்த்தன் மேலும்…

  25. சுழிபுரம் - காட்டுப்புலம் மீனவர்களின் சொத்துக்கள் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் Published By: VISHNU 28 FEB, 2023 | 10:26 PM சுழிபுரம் - காட்டுப்புலம் மீனவர்களின் ஏழரை இலட்சம் ரூபா தொழில் முதல் இந்திய இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சதாசிவம் சிறிகாந்தன் என்பவருடைய வலை முதலே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கருத்து தெரிவிக்கையில், 27 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு கடலுக்கு சென்றோம். வலையை கடலில் விட்டுவிட்டு இருந்தவேளை சுமார் 300 இந்தியன் இழுவைப் படகுகள் எங்களது கடல் எல்லைக்குள் வெளிச்சம் பாய்ச்சாது உள்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.