Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி அனைத்து இல்லங்களிலும் வியாபார நிலையங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு பலாலி பாது காப்பு படைகளின் தலைமையகம் கோரி யுள்ளது. தலைமையகம் நேற்று விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாளை 4ஆம் திகதி எமது தாய் திரு நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது. 1948ஆம் ஆண்டு தொடக்கம் இந்நாளை நாம் ஆடம்பரத்துடனும் கௌரத்துடனும் கொண்டாடி (கொன்றாடி - கொன்று + ஆடி ??) வருவதுடன், இந்நாளைக் கௌரவிக்கும் முகமாக அனைத்து இல்லங்களிலும் வியாபார நிலையங்களிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு கேட் டுக் கொள்கின்றோம் என்றுள்ளது. மூலம்: உதயன் - http://www.uthayanweb.com/FullView.php?ntid=5396 பறக்கவிட…

    • 15 replies
    • 3.8k views
  2. தெற்குப் போடும் பிச்சைதான் நடைமுறைச் சாத்தியமான தீர்வா? 06.02.2008 பெரும்பான்மை இனத்தவரான பௌத்த, சிங்களவரின் விருப்பமும், முடிவும், தீர்மானமும் ஒருதலைப்பட்சமாக சிறுபான்மையினரான தமிழர்கள் மீது திணிக்கப்பட்டமையே இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்து, மோசமான உள்நாட்டுப் போராக உருக்கொண்டு, பேரழிவுகளை ஏற்படுத்தி வருவதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் அம்சம். அமைதி வழியிலோ, இராணுவப் பலாத்காரம் மூலமோ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்பவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்பவர்களாக இல்லை. மீண்டும் ஒரு திணிப்பு மூலம், நிரந்தர நீடித்து நிற்கின்ற அமைதி நிலையை அல்லது சமாதானச் சூழலை ஏற்படுத்தி விடலாம் என அவர்கள் கனவு காண்கின்றார்கள். அத்தகைய எத்…

  3. வடக்கு - கிழக்கில் மட்டும் இடம்பெற்று வந்த போர் இன்று சிறிலங்காவின் தென்பகுதிக்கும் பரவி உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.9k views
  4. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இன்று நடைபெறவுள்ள சுதந்திர நாள் கொண்டடங்களின் போது குண்டுகள் வெடிக்கவுள்ளதாக அடையாளம் தெரியாத ஆள் ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியூடாகத் தெரிவித்துள்ளார். தயவு செய்து அவதானமாக இருக்குமாறும், கொழும்பில் சில இடங்களில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறுமெனவும் தெரிவித்த நபர் தான் எல்லாளன் படையைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும் விடுதலைப் புலிகளுடன் அந்த நபருக்குத் தொடர்புண்டா எனக்கேட்டபோது அவர் தொடர்பைத் துண்டித்துவிட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

    • 16 replies
    • 4.3k views
  5. அரசாங்கத்தின் நகர்வுகளும் புலிகளின் எதிர் நகர்வுகளும் -அருஸ் (வேல்ஸ்)- இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட நகலை தயாரிப்பதற்காக 63 இற்கு மேற்பட்ட தடவை கூடிய அனைத்துக்கட்சி குழு அதன் தீர்வுத் திட்டத்தை இந்த வருடம் முன்வைத்து விடும், அடுத்த மாதம் முன்வைத்துவிடும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அதனை நம்பி ஏமாந்த அனைத்துலக சமூகம் தமது பொறுமையின் எல்லைகளை கடந்துவிட்டது. இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், தொழில்நுட்ப உதவிகள் என மிக அதிகளவான உதவிகளை வழங்கிவரும் இந்திய மத்திய அரசும் ஏதாவது ஒரு தீர்வுத்திட்டத்தை பெயருக்காவது முன்வைப்பதன் மூலம் இராணுவத்தீர்வு என்ற வெளிப்படையான போக்கின் உக்கிரத்தை உலகின் கண்களில் இருந்து மறைத்…

    • 3 replies
    • 2.7k views
  6. ""கோடரியுடன்'' பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஆதிவாசிகளின் தலைவர் 2/5/2008 10:38:42 PM வீரகேசரி இணையம் - ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலெத்தோ பாராளுமன்றத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை "கோடரி'யுடன் வருகை தந்திருந்தார்.பாராளும ன்றத்தின் முழுமையான அனுமதியுடனேயே அவர் மன்றிற்கு வருகை தந்து சபாநாயகரின் கலரியில் அமர்ந்திருந்தார். ஆதிவாசிகளின் தலைவர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருக்கின்றார். அவரை கலரிக்குள் சபாநாயகரின் கலரிக்குள் கோடரியுடன் அனுமதிக்குமாறு அமைச்சரும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடாவுமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வாய்மூலமான கேள்வி நேரத்தில் சாபாநாயகரை கேட்டுக்கொண்டார். ஆதிவாசிகளின் தலைவரை பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுப்ப…

  7. மட்டக்களப்பில் வெள்ளை சிற்றுந்துக் கடத்தலில் கொல்லப்பட்ட புளொட் நிதியின் சகோதரர்கள் மட்டக்களப்பில் வெள்ளைச் சிற்றுந்துக் கடத்தலில் கொல்லப்பட்ட புளொட் நிதியின் சகோதரர்கள் ஈடுபட்டு வருவதாக மட்டக்களப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்ட புளொட் நிதியின் இரு சசோதரர்கள் ஆட்கடத்தல், கப்பம் அறிவிடுதல் மற்றும் படுகொலைகளுடன் ஈடுப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரத்தில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம் ஒன்றில் சிறீலங்காப் படையினரின் பாதுகாப்பில் தங்கியிருக்கும் இவர்கள் வெள்ளைச் சிற்றுந்தில் ஆட்களைக் கடத்திப் படுகொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2001ம் ஆண்டு சிறீலங்கா…

  8. மன்னார் தட்சணாமருதமடுவில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு மாணவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 787 views
  9. கைவேலியில் கிபிர்த் தாக்குதல்05.02.2008 / நிருபர் எல்லாளன் புதுக்குடியிருப்புப் பகுதியில் இன்று முற்பகல் 10.15 மணியளவில் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறிலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  10. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகித்து 2 முஸ்லிம் வர்த்தகர்கள் மீது சிறிலங்கா அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதில் இரு வர்த்தகர்களும் படுகாயமடைந்து அக்கரைப்பற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 758 views
  11. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக றசீம் முகமட் இமாம் இன்று செவ்வாய்க்கிழமை காலை பதவியேற்றுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  12. சிறிலங்காவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வடமேல் மாகாண சபையில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  13. விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிவரும் திருமாவளவனை உடனே கைது செய்ய வேண்டும் என்று இளைஞர் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. திருமாவளவனை கைது செய்க தென்சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடந்தது. மாநில தலைவர் மïரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜமாணிக்கம், மாநில பொதுச் செயலாளர் பிஜுசாக்கோ, சைதை நாகராஜ், எபினேசர், முருகன், வில்லிவாக்கம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணில் கொடூரமாக கொலை செய்த விடுதலை புலிகளை ஆதரித்து தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருவதுடன் விடுதலைப் புலிகளை கண்டித்து பேசும் தமிழக…

  14. கோட்டை புகையிர நிலைய தற்கொலை குண்டுதாரியின் இலக்கு வேறாக இருக்கலாம்- கெஹெலிய 2/5/2008 10:59:46 AM வீரகேசரி இணையம் - கொழும்பு கோட்டை ரயில் நிலையத் தாக்குதலை நடாத்திய தற்கொலைதாரியின் இலக்கு வேறாக இருந்திருக்கலாம் என்றும், ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததால் ரயிலில் இருந்து இறங்கியதும் அவர் குண்டை வெடிக்க வைத்திருக்கலாமெனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதாக அரச தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் நிலையத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சமயம் ரயிலில் இருந்து இறங்கிய தற்கொலைக் குண்டுதாரி திடீரென குண்டை வெடிக்க வைத்திருக்கலாமென கருதவேண்டியுள்ளதாக அமைச்ச…

  15. நாள் நோக்கு Feb 4th 08 ஒளி வடிவில்

  16. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லா…

    • 0 replies
    • 1.5k views
  17. நாட்டு நடப்பு Feb 4th 08 ஒளி வடிவில்

  18. கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 03 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!

  19. வவுனியா, இறம்பைக் குளத்திலுள்ள த.தே.கூட்டமைப்பின் உறுப்பினர் வன்னி மாவடட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரின் வீட்டின் மீது நேற்று முன் இரவு கிரேனேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வீட்டின் மீது கிரேனேட்டை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார் என்றும், கிரனேட் வீட்டின் வளவில் வீழ்ந்து வெடித்தது என்றும தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கிஷோர் எம்.பி. தெரிவித்ததாவது குறித்த நபர் எப்படி வந்தார் எங்கிருந்து வந்தார் என்பது எனக்குத் தெரியாது. அவர் வீசிய கிரனேட் வெடித்ததில் வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரனுக்கு சிறு சேதம் ஏற்பட்டு;ள்ளது. படையினரின் காவலரண்கள் வீட்டின் இர…

  20. சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நேற்று தென்னாபிரிக்காவில் அங்கு வாழும் தமிழர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 892 views
  21. யால காட்டுப்பகுதியில் வைத்து சிறிலங்கா நேற்று மாலை 3.30 மணியளவில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். யால காட்டுப்பகுதியில் சுற்றுக்காவல் சென்ற ஊர்காவல் படையினரே விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது ஊர்காவல்படையினரிடமிருந்து ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். 4 homeguards killed Yala jungles [TamilNet, Monday, 04 February 2008, 06:53 GMT] Four members of the homeguards, an auxillary force of the Sri Lanka armed forces, were killed in an attack by the Liberation Tigers in the Yala jungles in the south-east of the island, around 3.30 p.m., Sunday. The home guards …

    • 4 replies
    • 1.9k views
  22. திங்கள் 04-02-2008 14:42 மணி தமிழீழம் [சிறீதரன்] பதுளையில் கிளைமோர் தாக்குதல் : 1 படையினர் பலி: 3 படையினர் காயம் சற்று நேரத்திற்கு முன் கிளெட் பதுளை பகுதியில் கிளைமோர் குண்டு ஒன்று வெடித்துள்ளது. மதியம் 2.10 மணியவில் சிறீலங்கா படையினரின் உழவு இயந்திரம் மீது மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் ஒரு படையினர் கொல்லப்பட்டும் மூன்று சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இக்கிளைமோரானது பதுளை கதிர்காமமம் வீதியில் 45 ம் மைல்கல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 6 replies
    • 1.9k views
  23. மணலாற்றில் பராக்கிரமபுரவுக்கும் ஜனகபுரவுக்கும் இடைப்பட்ட வீதியில்; போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றை இலக்குவைத்து 3:30 மணியளவல் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மரம் ஒன்றில் பொருத்திவைக்கப்பட்ட கிளைமோரே வெடித்துள்ளது. 12 பேர் மரணம் 17 பேர் காயம். இராணுவம் அறிவித்துள்ளது புத்தள - கதிர்காம வீதியில் இராணுவ டிரக்கை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் புத்தள- கதிர்காமம் வீதியில் இராணுவ டிரக் வண்டியை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு;ளளது. இதில் 4 படையினர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுளனர். அதில் ஒருவர் சற்று முன் மரணமடைந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொரட்டுவை பகுதியில் குப்பை மேட்டில் குண்டு மொ…

    • 13 replies
    • 3.3k views
  24. அம்பாறை மாவட்டம் பாக்கிமிட்டியா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் முகாம் இன்று அதிகாலை விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.00 மணிக்கு பாக்கிமிட்டியா படை முகாம் மீது தாக்குதலைத் தொடுத்த விடுதலைப் புலிகள் ஒரு மணிநேரத்தில் முகாமை தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். படை முகாமிலிருந்த பாதுகாப்பு நிலைகள், பதுங்கு குழிகள் என்பவற்றை அழித்த பின்னரே விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி அங்கிருந்து பின்வாங்கியது. இந்தத் தாக்குதலின்போது ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. Bakmityawa STF camp attacked [TamilNet, Monday, 04 February 2008, 06:11 GMT] The Liberation Tigers hav…

    • 8 replies
    • 3.2k views
  25. ஸ்ரீ லங்காவின் சுதந்திரதினமான (பெப்ரவரி 4ம் திகதி) இன்று நியூசிலாந்தில் ஸ்ரீ லங்கா அரசாங்கம் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதை கண்டித்தும் ஸ்ரீ லங்கா அரசு சுதந்திரம் அடைந்த 60 வருடமாக தமிழ் மக்கள் மீது மனித உரிமை மீறல்களையும் வன்முறையையும் பிரயோகிப்பதை எதிர்த்தும் அன்மையில் மன்னாரில் பாடசாலை சிறுவர்கள் படுகொலை செய்வதை கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. ஒக்கிலாந்து நகர மையத்தில் உள்ள அயோத்தியா சதுக்கதிதில் கூடிய மக்கள் சுலொக அட்டைகள் தாங்கிய வண்ணம் வீதியோரங்களில் நின்றார்கள். 60 வருடமாக இடம் பெறும் இன படுகொலையை விளக்கி துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு வினயோகிக்கப்பட்டன. இக்கவனயீர்ப்பு போராட்டம் நியூசிலாந்து தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் ஒழுங…

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.