ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
தமது அச்சுறுத்தலுக்கு அடங்காது தொடர்ந்து செய்ற்பட்டு வரும் மகேஸ்வரன் எம்.பி. யைக் கொன்று, அதற்கான பொறுப்பை ஈ.பி.டி.பி மீது சுமத்தி அதன் மீது கறைபூசி, 'ஒரு கல்லில் இருகனி பறிக்கும் செயலில்' ஈடுபட்டிருக்கின்றனர் விடுதலைப் புலிகள். இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றது ஈழமக்கள் ஜனநாயக கட்சி(ஈ.பி.டி.பி) இது தொடர்பான அக்கட்சியின் ஊடகப் பிரிவு நேற்று 'அரசியல் படுகொலைகளுக்கான பழிகளை அடுத்தவர்கள் மீது சுமத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்ககையிலேயே இவ்விடயம் தெரிவிக்கபட்டுள்ளது. முழு அறிக்கை :- 'உனது கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் நீ கருதுச் சொல்லும் உனது சுதந்திரத்திற்காக எனது உயிரைக் கொடுத்தும…
-
- 9 replies
- 3.1k views
-
-
மட்டக்களப்பு - கல்முனை வீதியில் உள்ள நீலாவணைப் பிரதேசத்தில் சிறிலங்கா அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 839 views
-
-
ஒரு கோரமான படுகொலைச் செய்தியுடன்தான் இந்த புதிய வருடம் பிறந்திருந்தது. [முரசத்திற்காக ஆய்வு நிலவன்] முன்னாள் அமைச்சரும் ஜக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டதான செய்தியைத் தாங்கியதாக 2008ம் வருடம் பிறந்திருந்தது. புத்தாண்டு தினம் காலை 9.15 மணியளவில் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள சிறீ பொன்னம்பலவானேஸ்வரர் (சிவன் கோவில்) ஆலயத்தில் புதுவருடப் பிறப்பையொட்டி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது இவர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது மகேஸ்வரன் படுகாயமடைந்து, மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தியாகராஜா மகேஸ்வரன் சிகிற்சைகள் பல…
-
- 0 replies
- 1.9k views
-
-
மகேஸ்வரனின் கொலைக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் எனும் கோஸத்தோடு இறுதி ஊர்வலம் இன்று வெள்ளவத்தையிலுள்ள மகேஸ்வரனின் இல்லத்திலிருந்து பி.ப.2.30 மணிக்கு தொடங்கிய மரண ஊர்வலம் கனத்தை வரை வந்து சேர்வதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்தது. அனைத்து மத வழிபாடுகளின் பின்னர் பெரும் திரளான மக்கள் கலந்து கொள்ள அவரது இறுதிக்கிரியைகள் இடம் பெற்றன. இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க , மங்கள சமரவீர, எஸ்.பீ.திஸாநாயக்க , ரவூப் ககீம் ,மனோ கணேசன் , குமார் ரூபசிங்க , சுனந்த தேசப்பிரிய ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழர் இயக்கங்களும் தமிழர் கட்சிகளும் எங்கே?
-
- 6 replies
- 1.9k views
-
-
வியாழன் 03-01-2008 23:06 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீலங்காவின் நடவடிக்கையால் நம்பிக்கையை இழந்துவிட்ட முதலீட்டாளர்கள். சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர…
-
- 3 replies
- 2.5k views
-
-
வியாழன் 03-01-2008 22:45 மணி தமிழீழம் [தாயகன்] தமிழின அழிப்பு நடவடிக்கையின் புத்தாண்டு பரிசே மகேஸ்வரனின் படுகொலை - ச. சந்திரநேரு. மிகக் கொடூரமாக இந்து ஆலயம் ஒன்றில் வைத்து நண்பர் மகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது ஆழ்ந்த வேதனையினையும் அதிர்ச்சியினையும் அளித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச. சந்திரநேரு தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது அரசியல் வாழ்வில் நான் சந்தித்த ஓர் இனிமையான நண்பன் மகேஸ்வரனாவார். அவர் புனிதத் திருத்தலம் ஒன்றில் படுகொலை செய்யப்பட்டமையானது, அத்திருத்தலத்தின் புனிதத் தன்மைக்கு மாசு கற்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்து மக்களின் உணர்வுகளுக்கும் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 1k views
-
-
ஸிரீ லன்காவுக்கான அயுத ஏற்றுமதி லைசன்ஸ்கள் அமேரிக்கவினால் ரத்து. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24169
-
- 9 replies
- 3k views
-
-
தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை பரப்புவதே இலங்கை அரசாங்கத்தின் வாடிக்கையாகி விட்டது வைகோ 1/3/2008 9:10:37 PM வீரகேசரி இணையம் - பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா என்ற விவகாரம் குறித்து இலங்கை அரசு பரப்பி வரும் செய்தியில் துளியும் உண்மையில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும் தமிழர்களுக்கு விரோதமாக பொய்யான செய்திகளை பரப்பி வருவதே இலங்கை அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது எனத்தெரிவித்த அவர் இலங்கை சுதந்திர தினவிழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா புதிய அணையை கட்…
-
- 15 replies
- 2.9k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் வெளிநாட்டுக் குடியுரிமையுடைய தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை முதல் காணாமல் போய் இருப்பதாக அவரது பெற்றோர் வெள்ளவத்தை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 3.7k views
-
-
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
கொலை செய்யப்பட்ட அமரர் மகேஸ்வரன் சில நாட்களுக்கு முன் 'சக்தி' தொலைக்காட்சியின் 'மின்னல்' நிகழ்ச்சியில் கூறியவைகளை அவரது இறுதி வாக்குமூலமாக எடுக்கும் படியும் அந்த ஒளிநாடாவைப் பெற்று அதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இவரின் மரணம் சம்பந்தமாக யாழில் இருவர் உட்பட இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியின் இரத்தத்தையும் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியிலிருந்த இரத்ததின் மாதிரியை மரபணுப் பரிசோதனைக்கு அனுப்ப பொலிஸாருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் இன்று மாலை அக்கினியுடன் சங்கமமாகியது. கொழும்பில் தமிழருக்காய் பேசிய கடைசித் தமிழ…
-
- 1 reply
- 2k views
-
-
போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டதன் மூலம் இலங்கையை 1997 ஆம் ஆண்டின் காலப்பகுதிக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கொண்டு சென்றுள்ளார். அந்த காலப்பகுதியில் தான் இராணுவம் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளும் பல தொடர் தாக்குதல்களை பெருமெடுப்பில் மேற்கொண்டிருந்தனர் என்று அனைத்துலக ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர்களுக்காக குரல் கொடுத்த மகேஸ்வரனை புலிகள் கொன்றார்கள் என்பது வேடிக்கை திருமாவளவன் கண்டனம் 1/3/2008 7:07:36 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை விடுதலைப் புலிகள் சுட்டு கொன்றார்கள் என்று பழி சுமத்துவது வேடிக்கையாக உள்ளது என தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டு தினத்தன்று கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கொடூரமான முறையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமரர் மகேஸ்வரன் பற்றி ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் ரவி கருணாநாயக்கா, ஜயலத் ஜயவர்தனவின் பேட்டி -- காணொலியில். http://www.virakesari.lk/VIRA/VIDEO_pop/RA...UNANYAKEwmv.htm http://www.virakesari.lk/VIRA/VIDEO_pop/Dr%20Jayalathwmv.htm thanks virakesari.
-
- 1 reply
- 1.8k views
-
-
-
கண்காணிப்புக்குழுவின் பிராந்திய உறுப்பினர்கள் கொழும்பு திரும்பவுள்ளனர் [Thursday January 03 2008 01:28:27 PM GMT] [யாழ் வாணன்] போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு சிறீலங்கா அரசு முடிவெடுத்துள்ள நிலையில், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மாவட்ட உறுப்பினர்கள் கொழும்பு திருப்ப இருக்கின்றனர். கொழும்பில் தமது உறுப்பினர்கள் சந்தித்த பின்னர் தமது எதிர்கால பணிகள் பற்றி மீளாய்வு செய்யப்படும் என கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. யாழ் குடாநாட்டில் பணிபுரிந்துவரும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) அங்கிருந்து வெளியேறி கொழும்பு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. tamilwin.com
-
- 0 replies
- 1k views
-
-
பயங்கரவாத அரசின் ஏவல் நாய்களினால் கொன்றொழிக்கப்பட்ட அமரர் தி. மகேஸ்வரனின் இறுதி ஊர்வலம் பல்லாயிரக்கணக்கான மூவின மக்களுடன் அவரது வெள்ளவத்தை இல்லத்திலிருந்து கொழும்பு கனத்தை பொது மயானத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.. இவ்வூர்வலத்தில் பல எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் பல மதத்தைச் சார்ந்த மதத் தலைவர்களும் அவரது உடலம் தாங்கிய பேழையுடன ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் கொலைக் கலாச்சாரத்தை நிறுத்து. வெட்கம் போன்ற பாதாதைகளைத் தாங்கியவண்ணமும். இன்னும் சிலர் தமது வாய்களைக் கருப்புத் துணியால் கட்டியபடியும் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ் ஊர்வலம் அமரர் ரவிராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தை நினைவிற்குக் கொண்டுவருவதாயுள்ளது. கனத்தை பொது மயனத்திலும் பெ…
-
- 4 replies
- 3.2k views
-
-
யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி; ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சையில் - 3713 மாணவர்களுக்கு 3 ஏ [Thursday January 03 2008 07:41:39 AM GMT] [யாழ் வாணன்] கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஜி.சீ.ஈ(உயர்தரம்)பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் 27 மாணவர்கள் விசேட சித்தி பெற்றுள்ளனர் என முற்கொண்டு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் மாலை வெளியாகியிருந்தன. எனினும் குடாநாட்டுப் பாடசாலைகளுக் கான முடிவுகள் நேற்று மாலை வரை யாழ் பாணத்திற்கு வந்து சேரவில்லை. பாடசாலைகளின் அதிபர்கள் நேற்று இணையத்தளத்தின் மூலம் தாம் பெற்ற பரீட்சை முடிவுகளை உதயனுக்கு அனுப்பி வைத்திருந்தனர். அந்த வகையில் நேற்றுமாலை வரை கிடைத்த பெறுபேறுகளின் அ…
-
- 17 replies
- 2.8k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது ஆயுதங்களை கீழே வைத்தால் பேசத் தயார் என்று சிறிலங்காவின் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்ப தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலையைக் கண்டித்து கொழும்பு நகரின் மத்தியில் உள்ள தமிழ் வர்த்தகர்கள் இன்று கடையடைப்புச் செய்ததற்கு சிறிலங்கா காவல்துறையினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2.3k views
-
-
இன்று காலை கெப்படிகொல்லாவையில் அமுக்க வெடியிற் சிக்கி இராணுவத்தினர் பயணித்த பாரவூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியதில் இரு இராணுவத்தினன் பலியானதுடன் மேலும் மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானா
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கையில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறுவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்த போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவர் என்று நோர்வே தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
'படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் எம்.பி. கடந்த வாரம் யாழ் செல்வதற்கு முன் 'சுடர் ஒளி' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியவற்றை இந்த அரசு அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டது. தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன் கூட்டியே மகேஸ்வரன் பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதனை அரசு உதாசீனப்படுத்தி அவருடைய உயிரையே பறித்துவிட்டது.' என்று அரசின் மீது குற்றம் சுமத்துகிறார் ஐ.தே..கட்சியின் ஊடகப் பேச்சாளரான நா.உ. கயந்த கருணாதிலக்க. நேற்றுக்காலை எதிர்க்ட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே இதனை அவர் தெரிவித்ததார். கடந்த 22ம் திகதி 'சுடர்ஒளி' பத்திரிகையில் வெளியான செய்தியை (சிங்கள மொழி பெயர்ப்பை) கய…
-
- 0 replies
- 1.6k views
-
-
வன்னிப் பெருஞ்சமர் தொடங்கும் நிலையில் புலம்பெயர் தமிழர்களின் வரலாற்றுக் கடமை என்ன? என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-