Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கில் அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட தொப்பிக்கல் பகுதியை சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் அரசத்தரப்பினால் இரகசியமான முறையில் கனகச்சிதமாக முன்னெடுக்கபட்டு வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தொப்பிகல்லில் 2 ஆயிரம் ஏக்கர் பிரதேசத்தைச் சுற்றிப்பிடித்து வளைத்துப் போட்டு, அங்கு சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை றிறுவி, அதன் மூலம் சிங்களவர்களின் ஆதிக்கத்தை அங்கு வலுப்பெறச் செய்வதற்கு அரச உயர்மட்டத்தினர் திரைமறைவில் சதித்திட்டம் தீட்டி வருகின்றனராம். இந்த வர்த்தக வலயத்தில் உள்ளுர் மற்றும வெளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைப்பதற்கான ஊக்குவிப்பு முயற்சியில அரசு தற்போது ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.அங்கு சிங்கள முதலீட்டாளர்களுக்கே அதிக வாய்…

    • 2 replies
    • 1.5k views
  2. சுயநிர்ணய உரிமையும் இறையாண்மையும் - இதயச்சந்திரன் ஐ.நா. சபையின் 62 ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோ

  3. படையினருக்கு அதிர்ச்சியளித்த புலிகளின் இரண்டு தாக்குதல்கள் -அருஸ் (வேல்ஸ்)- கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு தாக்குதல்கள் படைத்தரப்பின் பிரசாரங்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கி விட்டன. கிழக்கிலங்கையின் பாதுகாப்பு, தென்னிலங்கையின் பொருளாதாரம் போன்றவற்றின் மீது ஒரு தாக்குதல் காட்டமாக வீழ்ந்தபோது, மறுதாக்குதல் வடபோர்முனை தொடர்பான படைத்தரப்பின் கருத்துக்களுக்கு ஆச்சரியக்குறியை இட்டுச் சென்றுள்ளது. யாழ். மாவட்டத்தின் கடல் நீரேரியில் கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை ஆரம்பித்த மோதல்கள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை தென்னிலங்கையின் உட்பகுதியும், ஜனாதிபதி மஹிந்தவின் சொந்த இடமுமான அம்பாந்தோட்டை வரை விரிவடைந்துள்ளது.விபரங்களுக்கு

  4. வடக்கில் சிறிலங்கா அரசாங்கம் வலிந்த தாக்குதல் நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயர்வர்: ஐ.நா. இலங்கையின் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கமானது வலிந்த தாக்குதலை நடத்தினால் 4 லட்சம் மக்கள் இடம்பெயரும் நிலைமை உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபரங்களுக்கு

    • 0 replies
    • 790 views
  5. புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த இராணுவ நகர்வு எது என்பதில் சிங்களத் தரப்பு கடும் குழப்பமடைந்திருப்பதனை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு களமுனையைச் சுட்டிக்காட்டும் சிங்கள ஏடுகளில் ஒன்றான "லக்பிம" சிங்கள வார ஏடு "புலிகளின் இலக்கு யாழ்ப்பாணமா?" என்று இந்த வாரம் "ஆய்வு" கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளதாவது:விபரங்களுக்கு

    • 5 replies
    • 2.6k views
  6. ஓமந்தையில் இராணுவத்தினரால் கடத்தபட்ட நோர்வே பிரஜையை கண்டுபிடிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு. - இன்ரப்போலின் தேடப்படுவோர் பட்டியலில் நோர்வே தமிழன். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 21 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ ஓமந்தையில் இராணுவ உளவுத்துறையால் கடத்தபட்டு பின்னர் காணாமல் போன நோர்வே பிரஜையைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு மாவட்ட நீதவான் எம்.இளஞசெழியன் உத்தரவு பிறப்பித்துள்ளர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழரான நோர்வே குடியுரிமை பெற்ற ஒருவர் கொழும்பு வந்து கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்றிருந்தார். இவர் ஓமந்தை வழியாக கிளிநொச்சிக்குச் சென்று சில தினங்களின் பின்னர் அதே வழியில் திரும்பியுள்ளார். ஆனால் இவர் காணாமல் போயிருப்பதாக சர்…

  7. சிறிய தாக்குதல் பெரிய தாக்கம் -விதுரன்- கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறிவருகையில் புலிகள் தெற்கில் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதுவொரு சிறிய தாக்குதலாயுள்ள போதும் இதன் எதிரொலி தெற்கை பெரிதும் அதிரவைத்துள்ளது. தெற்கில் மேலும் பலதாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தால் அங்கு மேலதிக படையினரை அனுப்பி வரும் அரசு வடக்கிலும் பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெற்கில் இடம்பெற்ற தாக்குதலானது இராணுவ ரீதியில் அரசுக்கு மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ள போதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கிழக்கின் வெற்றியும் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போரும் இனப்பிரச்சினைக்கு அரசு இராணுவத்தீர்வை நாட…

    • 2 replies
    • 2.2k views
  8. உலகத்திலேயே செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர்: ஐரோப்பிய வல்லுநர் ஜெரார்ட் சாலியண்ட் [சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2007, 02:16 PM ஈழம்] [ப.தயாளினி] உலகத்தில் தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர் என்று இனமோதல்கள் தொடர்பிலான ஐரோப்பிய மையத்தின் முன்னாள் இயக்குநர் ஜெரார்ட் சாலியண்ட் கூறியுள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: உலகத்திலேயே தற்போது செயற்திறன் மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளனர். வியட்நாமியர்களும் எரித்தியர்களும் இத்தகைய செயற்திறன் மிக்க இயக்கத்தினராக இருந்தனர். இப்போது விடுதலைப் புலிகள் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளை …

  9. திருமலையில் கண் வைத்து காய் நகர்த்தும் இந்தியா! [21 - October - 2007] [Font Size - A - A - A] -கலைஞன்- இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதுடில்லி வருகையும் இந்திய அரசின் இலங்கைக்கான ஆயுத உதவியும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆயுத உதவிக்கு பிரதியீடாக திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த அனுமதி வழங்கி நன்றிக்கடன் தீர்த்துள்ளது இலங்கையரசு. `இந்துஸ்தான் டைம்ஸ்' நடத்திய மாநாட்டில் பங்கேற்கவே இந்தியாவுக்கு வருகை தந்ததாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறிக் கொண்டாலும் அவரின் திரைமறைவு நிகழ்ச்சி நிரல்கள் இராணுவ உதவிகள், தமிழர் மீதான யுத்தத்திற்கான ஆதரவு போன்றவற்றையே மையப்படுத்தி இந்திய வி…

  10. ஆர்பரின் அதிருப்தியால் ஏற்படக்கூடிய பின்னடைவை சீர்படுத்த தீவிர முயற்சி *ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் சமரசிங்க சந்திப்பு டிட்டோகுகன் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் இலங்கை விஜயத்தின் இறுதியில், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை போதாதென அதிருப்தி தெரிவித்து சென்றுள்ள நிலையில், அரசாங்கம் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திடம் தனது தரப்பு நிலைப்பாடுகளை எடுத்துக் கூறும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் தலை…

  11. மயிலிட்டி கடலில் விபத்து 6 கடற்படையினர் படுகாயம் யாழ். மயிலிட்டி கடற்பரப்பில் கடற்படைக்கு சொந்தமான படகு ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. இதன்போது படகில் இருந்த 6 கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயிலிட்டிக் கடற்பரப்பில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்ட சமயத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. -தினக்குரல்

  12. லூயிஸ் ஆர்பர் அடுத்ததாக என்ன செய்யப் போகின்றார்? -சங்கரன் சிவலிங்கம்- ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக்கவுன்சிலின் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இலங்கைக்கான தனது ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெனீவா திரும்பியிருக்கின்றார். லூயிஸ் ஆர்பர் அம்மையார் ஆணையாளர் என்ற பெரிய பதவியில் இருப்பதால் நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதில்லை. அவரது பிரதிநிதிகளே பயணம் செய்வதுண்டு. மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக நிலவும் நாடுகளுக்கு மட்டுமே அவர் பயணம் செய்வது வழக்கமாகும். அந்த வகையில் முன்பு சூடான், ருவாண்டா, கொங்கோ போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றார். தற்போது இலங்கைக்கு பயணம் செய்திருக்கின்றார். தான் பயணம் செய்வதற்கு முன்னர் தனது பிரதிநிதிகளை அனுப்பி நிலை…

  13. நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தும் முதல் இயக்கம் "விடுதலைப் புலிகள்": சிங்கப்பூர் பேராசிரியர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலகில் உள்ள அமைப்புக்களில் நவீன ஊடக மற்றும் தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்திய முதல் இயக்கம் என்றும், இணையத்தளம் மற்றும் ஏனைய நவீன தொடர்பாடல் முறைகள் மூலம் அது தனது பரப்புரை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சியாம் டெக்வானி தெரிவித்துள்ளார்.மேலும்

    • 0 replies
    • 1.8k views
  14. ஐ.நா பிரதிநிதிகள் மூவர் டிசம்பரில் இலங்கை வருகை Written by Seran - Oct 21, 2007 at 11:07 AM மிகமோசமாக இலங்கையில் அதிகரித்துள்ள மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐ.நா மூவர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை டிசெம்பர் மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்துவந்த குற்றச்சாட்டுக்கள் தொடர் பாக, ஐ.நா கூட்டத்தொடரில் பங்குபற்று வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வந்த குழுவுடன் ஐ.நா. அதி காரிகள் ஆராய்ந்திருந்தனர். படுகொலைகள், கப்பம்கோரல், வல் வந்தமான ஆள்கடத்தல், காணாமற்போதல் போன்ற மனித உரிமை மீறல்களை குறைக்க உருப்படியான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க வேண்டும் என்ற…

  15. அனைத்துப் பகுதி மக்களையும் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம்: மகிந்த ராஜபக்ச அனைத்துப் பகுதி மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப் போராடுகிறோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விபரங்களுக்கு

    • 3 replies
    • 1.4k views
  16. கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் கிடையாது - அமெரிக்கா கிழக்கு மாகாணத்தை சிறீலங்கா அரச படைகள் கைப்பற்றி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அங்கு பாதுகாப்பு உத்தராவதம் கிடையாது என அமெரிக்க இராஜாங்க செலயகம் அறிவித்துள்ளது. சுற்றுலா தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு யூலை மாதம் கிழக்கு மாகாணம் அரச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் அங்கு பாதுகாப்பு உத்தாரவாதம் உறுதி செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் துணை இராணுவக்குழுக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் அதிகளவு செயற்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் வன்முறைகள் அதிகளவு காணப்படுவதால் கிழக்கு மாகாண பகுதிகளுக்குச் சென்…

    • 0 replies
    • 1.1k views
  17. http://www.yarl.com/videoclips/view_video....a8da1e5352d03ca

    • 1 reply
    • 2.1k views
  18. மட்டக்களப்பில் எமது சம்மதமின்றி எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்ற முடியாது: த.தே.கூ. எச்சரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதமின்றி நிறைவேற்ற முடியாது என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.விபரங்களுக்கு

    • 2 replies
    • 1.1k views
  19. பயங்கரவாதத்தை ஒழிக்காமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்காமல் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்சியில் ஊடகவியாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்க பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ், முஸ்லிம், மலையமக்கள், சிங்களவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை முன்வைக்க அனைத்து கட்சி ஆலோசனைக் குழுவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.!??? மனித உரிமை மீறல்களை ஆராய குழு அமைக்கப்பட்டு ஆராயப்படுகின்றன.!??? மனித உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்புபவர்கள் இக்குழுவில் இணையலாம். இராணுவத்தினருக்கு மனித உரிமை தொடர்பில் வ…

  20. மகிந்த ஆட்சி மீது குவியும் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் -வேலவன்- சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு. விலைவாசி ஏற்றம், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் என்பனவற்றுக்கு மத்தியில் சிக்கிப் போயிருக்கின்றது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் ஏழாம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையினைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அது இன்று நெருக்கடிக்குள்ளேயே சிக்கியுள்ளது. இதுவரை அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் நெருக்கடிகளைச் சந்திக்கவில்லையாயினும் அல்லது அது பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தையும் மற்றும் சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற போதிலும் வரவு-செலவுத் …

    • 0 replies
    • 1.2k views
  21. சிறிலங்காப் படையினருடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை இடம்பெறவுள்ளது. 2000ஆம் ஆண்டு யாழ்பாணத்தில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள்; ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இவரது 7ஆம் ஆண்டு நினைவுநாள் (19,10,2007) நாளை மாலை 3.30 மணிக்கு கிளிநொச்சி ஊடக இல்லத்தில் அதன் அனுசரணையுடன், யாழ் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது. பி.பிசி தமிழோசை, பி.பிசி சந்தேசிய சிங்கள சேவை, ஐ.பி.சி தமிழ், மற்றும் கொழும்பின் பல தமிழ், சிங்கள, ஆங்கில ஏடுகளுக்கு மயில்வாகனம் நிமலராஜன் செய்தியாளராகப் பணிபுரிந்திருந்தார். நன்…

  22. http://www.yarl.com/videoclips/view_video....a3f3cbd1e429b5d

  23. ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள் - ஒரு பார்வை தமிழீழத் தனியரசுப் பிரகடனத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அண்மையில் தொடர்ந்து கூறி வருகிறார். பல "ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்களை" சந்தித்துதான் இன்றைய உலக ஒழுங்கு உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த சுதந்திரப் பிரகடனங்களில் அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையும் நிராகரிக்கப்பட்டவையும் உள்ளன. அதேபோல் அனைத்துலக ஆதரவுக்காக காத்திருக்கும் பிரகடனங்களும் உள்ளன. ஒரு தலைபட்சமான பிரகடனங்களுக்குப் பின்னரும் கூட அடிமை நாடுகளாகவும் போரை நடத்த வேண்டியதான நிலையிலும் கூட பல நாடுகள் இருந்துள்ளன. இருந்தும் வருகின்றன.விபரங்களுக்கு

    • 0 replies
    • 1.5k views
  24. சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டமும், சர்வதேச மனித உரிமைக் கோட்பாடுகளும் -நா.யோகேந்திரநாதன் இப்பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததை அடுத்து இது சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்துடன் முரண்படுகிறதா என்பதைப் பரிசீலனை செய்ய சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப் படவுள்ளது. குறிப்பாக சமூக அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் காணப்படும் தேசிய இன மத உரிமைகளுக்கெதிராக எந்த ஒரு தனிமனிதனோ, அமைப்போ ஒடுக்கு முறைகளையோ தடைகளையோ வன்முறைகளையோ மேற்கொள்ள முடியாது என்ற விதி சிறீலங்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின் சில விதிகளுக்கு ஏற்புடையதா எனப் பரிசீலனை செய்யப்படவுள்ளது. அதற்கென உச்சநீதிமன்ற நீதியரசர்களாகிய நிஹால் ஜெயசிங்…

  25. அரச பயங்கரவாதத்தின் இன்னொரு பெயர் மனித உரிமை மீறல்கள் -மனோகரன் இப்போது சிறீலங்காவில் தங்கியுள்ள லுயிஸ் ஆபரின் பயணம் அவருடைய களப்பணிகள் பற்றி அரசாங்க மட்டத்தில் அதிருப்தி உள்ளது. இதெல்லாம் அரச பயங்கரவாதத்தின் மீது ஐ.நா பிரதிநிதிகள் வைத்துள்ள விமர்சனத்தையும் அவர்களுடைய புதிய நிலைப்பாட்டையும் சிறீலங்கா அரசினால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதையே காட்டுகின்றன. முன்னரே இந்தப்பத்தியில் சொல்லப்பட்டுள்ளதைப்போல “மனித உரிமை மீறல்” என்பது அரசபயங்கரவாதத்துக்கு நாகரீகமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரே. ஆக இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப்பற்றி ஆராய்வதென்பது அரச பயங்கரவாதத்தைப்பற்றி ஆராய்வதாகவே இருக்கும். இலங்கையில் அரச பயங்கரவாதம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.