ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
சனி 20-10-2007 01:58 மணி தமிழீழம் [தாயகன்] பாகிஸ்தான் குண்டுவெடிப்புக்கு மகிந்த கண்டனம் வன்னியில் நாளாந்தம் குண்டுவீச்சினை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசின் அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கு கண்டனம் வெளியிட்டிருக்கின்றார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ நாடு திரும்பியபோது அவரை வரவேற்கச் சென்ற மக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதில் 130 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். இதனை ஒரு கொடுமையான தாக்குதலாக வர்ணித்திருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ, பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார். முப்படைத் தளபதியாக அதி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அம்பாறையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவின் காவலரண் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தினரிடையே உள்மோதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
மன்னார் கோயில்குளம் பிரதேச மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களால் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வாகனத்துடன் டிப்பர் ஊர்தி கனராயன்குளம் மன்னகுளம் சந்தியில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வவுனியா நெடுங்கேணியின் எல்லைக் கிராம மக்கள் சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதல் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று வவுனியா வடக்குப் பிரதேச செயலக நிர்வாக அலுவலர் நகுலேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 849 views
-
-
முல்லைத்தீவு பிரதேசத்தில் பல பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை உள்ளதால் மாணவர்களின் கல்விநிலை பெரும் பாதிப்படைந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 833 views
-
-
அம்பாறை வீரமுனை பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பிரதீபன் சிவராசா (வயது 24) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை காலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் ஏறாவூரில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 756 views
-
-
சிறிலங்காவின் கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த ராடார், மின்னல் தாக்கியதில் செயலிழந்துள்ளது என்று வானூர்தி நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
ஓமந்தைசோதனைச் சாவடி மூடப்பட்டது. Written by Seran - Oct 18, 2007 at 01:14 PM வவுனியா ஓமந்தை சிறிலங்காப் படைச் சோதனைச் சாவடி இன்று காலை முதல் மக்கள் போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை வன்னி ஊடாக வவுனியாவிற்கும் வவுனியா ஊடாக வன்னிக்கும் போக்கு வரவில் ஈடுபடுவதற்கென மக்கள் சோதனைச் சாவடியை வந்தடைந்தபோது சோதனைச்சாவடி திறக்கப்படாமல் படையினரால் மககள் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக வவுனியா படை நிலைகளிலிருந்து விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிகள் மீது எறிகணைத்தாக்குதல்களை நடாத்திவந்த படையினர் சோதணைச் சாவடி ஊடாக வன்னியிலிருந்து பயணம் செய்த மக்களை கடும் விசாரணைகளுக்கு உட்படுத்தியும் வந்தன…
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். தீவகம் புங்குடுதீவில் நேற்று முன்தினம் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 801 views
-
-
வவுனியா புளியங்குளம் பகுதி நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலினை மேற்கொண்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
கிராமசேவகர் சுட்டுக்கொலை. Written by Seran - Oct 19, 2007 at 11:47 AM வவுனியா தோணிக்கல்லில் கிராம சேவையாளர் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 57,அகவையுடைய பி.குமாரசாமி எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தனது வீட்டில் இருந்த வேளை இரவு-8,மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாதோர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவரது சடலம் வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...75&Itemid=1
-
- 1 reply
- 875 views
-
-
பிரசவ வேதனையால் துடித்த தமிழ் பெண்ணுக்கு தாதியர்கள் உதவ முன்வராததால் சிசு மரணம் * பலாங்கொடை அரச வைத்தியசாலையில் சம்பவம் பலாங்கொடை அரச வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ் பெண்மணி ஒருவர் 4 மணிநேரமாக பிரசவ வேதனையில் துடித்தபோதும் அவருக்கு தாதியர்கள் எவரும் உதவ முன்வராததால் அவரின் சிசு வயிற்றிலேயே இறந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பலாங்கொடை பொலிஸில் கணவர் முறைப்பாடு செய்துள்ளனர். இப்பெண் கடந்த 12 ஆம் திகதி மகப்பேற்றுக்காக பலாங்கொடை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 16 ஆம் திகதி வயிற்றில் சிசு இறக்கும் வரை 4 நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்த போதிலும் இப்பெண்ணின் பிரசவ வேதனை தொடர்பில் அலட்சியப் போக்கும் பாரபட்சமும் காட்டப்பட்டதாகவும்…
-
- 2 replies
- 1.3k views
-
-
பெரிய தப்பனை முன்னரங்க நிலைகளில் மோதல்: படைத்தரப்பில் 10 பேர் படுகாயம் மன்னார் பெரிய தம்பனை முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று வியாழக்கிழமை காலை இப்பகுதியில் உள்ள இரு தரப்பு முன்னரங்க நிலைகளைத் தாக்கியுள்ளனர். இன்றை மோதலின் போது அரச படைகள் தரப்பில் 10 படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்காவின் இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இன்றை மோதல்கள் குறித்து எதுவித தகவல்களும் வெளியாகவில்லை -பதிவு
-
- 1 reply
- 879 views
-
-
செவ்வாய் 16-10-2007 21:07 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் நேற்றைய தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சிறீலங்காப் படைகளின் யால வனச் சரணாலய படை முகாம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல் கொழும்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசாங்கம், சிறீலங்காப் படையினர், அரசியல் கட்சிகள் மற்றும் இராணுவ அரசியல் நோக்கர்கள் மத்தியில் கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை மேலோங்கி வருகிறது என்ற தாக்தை நேற்றைய தாக்குதல் உணத்தியுள்ளது. ஜேவிபி, யாதிக கெல உறுமய ஆகிய கட்சிகள் கிழக்கில் விடுதலைப் புலிகளின் பலம் அதிகரித்துச் செல்கின்றது என்ற நிலைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளது. மகிந்த அரசாங்கம் தமது அரசியல் நலன் கருதி சிறீலங்காப் படைகளை அனுப்பியுள்ளது. இ…
-
- 5 replies
- 2.4k views
-
-
தமிழக மீனவர்களை சுட்டு விரட்டிய இலங்கை கடற்படை வெள்ளிக்கிழமை, அக்டோபர் 19, 2007 நாகப்பட்டனம்: கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கரிகாலன், முருகேன், சிலம்பு என்கிற சிலம்பரசன், சசிபாலன் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை அருகே உள்ள கடல் பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து நான்கு பேரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர். பின்னர் அவர்களது மீன் பிடி வலைகள், பிடித்து வைத்திருந்த மீன் உள…
-
- 2 replies
- 1.3k views
-
-
வன்னியில் விமானத் தாக்குதல் Written by Seran - Oct 19, 2007 at 11:37 AM முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புகள் மீது இன்று காலை சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான மிகையொலி விமானங்கள் சரமாரியான குண்டுத்தாக்குதல்களை நடத்தின இதன்போது மக்களுக்கு பொருட்சேதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு வேனாவில் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீதே இன்று காலை இந்த விமானத்தாக்குதல் இரண்டு கிபிர் விமானங்கள் காலை 8.30மணியளவில் மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து கண்மூடித்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன இதனைத் தொடர்ந்து ஐந்து தடவைகளுக்கும் மேலாக இந்த விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சில குண…
-
- 0 replies
- 819 views
-
-
ஊழியர்களின் புகைப்படங்களுடன் விபரங்களை வர்த்தக நிலையங்களில் தொங்க விட பணிப்பு * குடாநாட்டில் வலிகாமம் மேற்கு, தென்மேற்கு பகுதிகளில் படையினரின் புதிய உத்தரவு யாழ்.குடாநாட்டில் வலிமேற்கு மற்றும் வலி தென்மேற்கு பகுதிகளில் வர்த்தக நிலையங்களின் முன்பாக ஊழியர்களின் புகைப்படங்களுடன் கூடிய விபரப் பட்டியல் தொங்கவிடப்பட வேண்டுமென படையினர் உத்தரவிட்டுள்ளனர். இதற்கமைய கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றுவோரின் புகைப்படங்களுடன் அவர்களது விபரங்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டும். இந்தப் பகுதிகளில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நேரில் செல்லும் படையினர் இந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறு கூறிவருகின்றனர். …
-
- 0 replies
- 759 views
-
-
திங்கள் 15-10-2007 08:48 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு இந்தியா மேலும் ஆயுத உதவி - த டைம்ஸ் ஒஃப் இந்தியா தகவல் இந்தியா, சிறீலங்கா அரசுக்கு மறைமுகமாக மேலும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக, த டைம்ஸ் ஒஃப் இந்தியா ஏட்டின் இன்றைய வெளியீட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மறைமுக ஆயுதப் பேரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி... இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் மனோபல ரீதியான ஒத்துழைப்பு மட்டுமே தேவைப்படுவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ கூறலாம். ஆனால் ஆனால் பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் கொழும்பு நிருவாகம் இந்தியாவிடம் ஆயுத தளபாடங்களையும், தொழில்நுட்பங்களையும் கோரி வருகின்றது. இந்தியாவும் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காது, தன…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஐ.தே.க.வின் அச்சுறுத்தலையும் மீறி சர்வதேசம் அரசுக்கு கடன் வழங்கியுள்ளது தாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் கடன்களை திருப்பி தரமாட்டோம் என்ற ஐக்கிய தேசியக்கட்சியின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாத சர்வதேச சமூகமும் நிறுவனங்களும் அரசாங்கத்தின் மீது விசுவாசம் கொண்டு கடன்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளன என்று அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரசாங்கம் சர்வதேச சமூகத்திடமிருந்து 500 மில்லியன் ரூபாவை கடனாக கோரி ஒப்பந்த விடயங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு சென்ற போதிலும் அரசாங்கத்திற்கு 1.25 பில்லியன் ரூபா கடனாக கிடைத்துள்ளது. எனினும் வட்டி வீதங்கள் தொடர்பாக இன்னும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் த…
-
- 1 reply
- 871 views
-
-
காலையில் வெள்ளை வானில் வந்தோர் குடும்பப் பெண்ணைக் கடத்தினர்! பிள்ளைகள் இரண்டும் அனாதரவாயினர்!! திருநெல்வேலி, தாழையடி வீதியில் நேற்றுமுன்தினம் காலை 8.30 மணியள வில் வெள்ளை வானில் சென்ற ஆயுததாரி களால் குடும்பப் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ். அலுவல கத்தில் இது குறித்து நேற்று முறைப்பாடு செய்யப்பட் டுள்ளது திருமதி எஸ்.ஜெபநேசன் என்ற குடும் பப் பெண்ணே கடத்தப்பட்டுள்ளார். ஹலோட் றஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத் தில் பணிபுரியும் அவரது கணவர் உயிர் அச் சுறுத்தல் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தஞ் சம் அடைந்து தற்சமயம் நீதிமன்றப் பாது காப்பில் உள்ளார். அதன்பின் பிரஸ்தாப பெண் தனது மகளை கல்வி பயில்வதற்காக யாழ்ப்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னார் கடலில் பொதுமக்கள் படகு மீது சிறிலங்காக் கடற்படை தாக்குதல் Written by Seran - Oct 18, 2007 at 03:00 PM மன்னார் நாச்சிக்குடாவில் இருந்து தமிழகத்திற்கு படகு மூலம் சென்று கொண்டிருந்த அகதிகள் மீது பேசாலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கோரத்தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை 4:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சிறிலங்கா கடற்படையின் இத்தாக்குதலுக்கு நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர்கள் இலக்காகியிருப்பதாக தெரிகிறது. இச்சம்பவத்தில் புஸ்பமலர் அகவை -34 என்ற தாயும் அவரது இரு பிள்ளைகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் புஸ்பமலர் மருத்துவர் ஒருவரிடம், தனது கணவர், இர…
-
- 4 replies
- 1.2k views
-