ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
செவ்வாய் 04-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து எறிகணைத்தாக்குதல்: ஒரு பொதுமகன் பலி, மற்றொருவர் காயம் சிறீலங்கா படையினர் 3ம் திகதி மதியம் 1 மணியளவில் தள்ளாடி இராணுவமுகாமில் இருந்து வண்ணாங்குகுளம் பகுதிமீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் இருபிள்ளைகளின் தந்தையான 32 அகவையுடைய நேசன் எனவும் காயமடைந்தவர் 38 அகவையுடைய யோகநாதன் தீபன் எனவும் நான்கு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 609 views
-
-
ஏற்கனவே மன்னாரில் சில இடங்களில் இராணுவம் போரைத் தொடங்கி விட்டாலும், நேற்றைய தினக்குரல் இதழில் விதுரன் எழுதிய ஆக்கத்தை இங்கே இணைக்கிறேன் எங்கே போரைத் தொடங்குவது? -விதுரன் - தெற்கில் அரசுக்கெதிராக தோன்றிவரும் புதிய அரசியல் நிலைமைகளை சமாளிக்க வடக்கில் பாரிய படை நடவடிக்கையை ஆரம்பிக்க அரசு முயல்கிறது. கிழக்கை கைப்பற்றியது போல், வடக்கையும் மிக விரைவில் கைப்பற்றுவோமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சூளுரைத்ததன் மூலம் அவசர இராணுவ வெற்றிக்காக அரசு காத்திருப்பது தெளிவாகிறது. கிழக்கைப் போன்று, வடக்கின் கள நிலையில்லையென்பது நன்கு தெரிந்தும் கிழக்கைப் போன்று வடக்கையும் கைப்பற்றுவோமென அரசு கூறிவருவதன் மூலம் இராணுவ வெற்றியின் மூலம் அரசியல் வெற்றியைப…
-
- 2 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8042477183b7ac3
-
- 1 reply
- 1.7k views
-
-
02.09.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....df8527599fa6264
-
- 1 reply
- 1.9k views
-
-
வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை: தி.இறைவன் [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 14:57 ஈழம்] [தாயக செய்தியாளர்] வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள இயலாத அளவுக்கு சிறிலங்காவில் நிதிப் பற்றாக்குறை உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் செய்தி ஆசிரியர் தி.இறைவன் தெரிவித்துள்ளார். பூநகரி முழங்காவிலில் கடந்த வெள்ளிக்கிழமை (24.08.07) நடைபெற்ற புலிகளின் குரல் வானொலியின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் அவர் பேசியதாவது: நம்மை சிங்கள அரசாங்கம் இராணுவ ரீதியாக ஒடுக்கிக்கொண்டிருந்த அதே காலத்தில் கருத்துக்கள் ரீதியாகவும் நம்மை ஒடுக்கிக்கொண்டிருந்தது. அவர்களுடைய வானொலிகள், த…
-
- 1 reply
- 1k views
-
-
பிரான்ஸ்சில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறக்கவிடப்பட்டிருந்த இலங்கையின் தேசியக்கொடியை அங்குள்ள விடுதலைப் புலிகள் இயக்கம்தைச் சேர்ந்த சிலர் கழற்றிச் சென்று விட்டனர், என்று தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டமைச்சர் ரோஹித விசேட விஜயமொன்றை மேற் கொண்டு நேற்று முன்தினம் காலை பிரான்ஸ் சென்றடைந்தார். அமைச்சரின் இந்த விஜயத்த்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே விடுதலைப்புலிகள் இவ்வாறு செயற்பட்டிருக்கன்றனர் என்று வெளிநாட்டமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகள் அமைப்பு பிரான்ஸில் தடைசெய்யபட்டுள்ளது என்று பிரன்ஸ் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் இன்னமும் அங்கு செயற்படுகின்றனர் என்பதை இந்தச் சம்பவம் உறுதி செய்துள்ளது. இதனைப் பிரான்ஸ்…
-
- 0 replies
- 2k views
-
-
உட்பூசல் காரணமாக முன்னாள் கருணா குழு உறுப்பினர் சுட்டுக்கொலை கடந்த ஞாயிறு மாலை 7.30 மணியளவில் முன்னாள் கருணா குழு உறுப்பினர் கொத்தியாப்புலவு வவுணதீவு காவல்நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது ஆயுததாரிகள் அவரது வீட்டுக்கு சென்று அவரை கூப்பிட்டு விசாரணைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட நபர் வீட்டிலிருந்து தப்பித்து ஓட முயற்சித்தபோது கருணாகுழுவினர் அவரைச் சுட்டுக்கொன்றுள்னர். இவர் அண்மையில் திருமணம் செய்திருந்தார். முன்பு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்து பின்னர் கருணா குழுவில் இணைந்து செயற்பட்டவர். கருணா குழுவில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக கருணா குழுவிலிருந்து …
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எரித்தேரியா உதவி - அமெரிக்க செனற் சபை குற்றச்சாட்டு தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எத்திரியா அரசாங்கம் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க செனற் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கம் ஆயுதக்குழுக்கு உதவிகளை வழங்குவது ஜனநாயக விரோத செயற்பாடுகள் என்றும் இவ்வாறான செயற்திட்டங்களை எத்திரியா அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அமெரிக்க செனற் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக செயற்படும் ஆயுதக்குழு ஒன்றிற்கு, ஐக்கிய நாடுகளில் உறுப்பினராகவுள்ள நாடொன்று ஆயுதங்களை வழங்குவதாகவும் அமெரிக்க செனற் வெளியுறவுக்குழு குறிப்பிட்டுள்ளது. எத்திரியா இத்தாலி…
-
- 15 replies
- 4.2k views
-
-
கிளிநொச்சி வாகன விபத்து: கணவனும் மனைவி உயிரிழப்பு [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 15:26 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி இரத்தினபுரம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் இடம்பெற்றது. டிப்போச் சந்தியில் இருந்து இரத்தினபுரம் நோக்கிச் சென்ற உந்துருளியும், இரத்தினபுரத்திலிருந்து டிப்போச் சந்தி நோக்கி வந்த கன்ரர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதிக்குள் உந்துருளி சிக்குண்டு சிறிது தூரம் இழுபட்டுச் சென்றது. உந்துருளியில் பயணித்த புலோப்பளையைச் சொந்த இடமாகவும் கனகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யாக்கோப்பு…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 03-09-2007 15:22 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவின் படைத்துறைப் பேச்சாளராக பிரிகேடியர் உதய நாணயக்கார நியமனம் சிறீலங்கா படைத்துறைப் பேச்சாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய படைத்துறைப் பேச்சாளராக பிரிகேடியர் உதய நாணயக்கார நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் படைத்துறைப் பேச்சாளர் பிகேடியர் பிரசாத் சமரசிங்க பிரித்தாரியாவில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். நன்றி - பதிவு
-
- 0 replies
- 890 views
-
-
திங்கள் 03-09-2007 18:44 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவ வேண்டும் - மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி விநியோகங்களை முடக்க இந்திய உதவி புரிய வேண்டும் என மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய ஜ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் கடல்வழி விநோயகங்களை முற்றுகையிட இந்திய மத்திய அரசாங்கம் உதவியளிக்க வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு மிகவும் வலுமானது. எனது நாட்டில் உள்ள ஏனைய அரசியல் தலைவர்களை விட நான் இந்தியாவை நன்கு புரிந்துள்ளேன். எமது நாட்டில் இயல்பு நிலையை உருவாக்கமும் அபிவிருத்தியை முன்னெட…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரமுகர்களின் விஜயங்கள் அவல வாழ்வை மாற்றுமா? -சி.இதயச்சந்திரன்- மொஹமட் யூனூஸ் என்பவர் பங்களாதேஷைப் பிறப் பிடமாகக் கொண்ட சமூக மேம்பாட்டுவாதியாவார். 'நோபல்" என்ற உலகப் பரிசினை பெற்ற சாதனையாளர். நோபல் பரிசென்பது சினிமாவிற்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது போன்று உலக அங்கீகாரம் பெற்றது. சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அடிப்படைப் பொருளாதார சீரழிவுகளை அடியோடு பெயர்த்தெடுத்து, புதிய சமுதாயம் காணப்போராடியவரல்ல இந்த மொஹமட் யூனூஸ். அவர் ஒரு சீர்திருத்தவாதி. மனித அவலங்களை கண்ணுற்று, தற்காலிகத் தீர்வினை தமது ஆளுமைக்கு உட்பட்டு முன்வைக்கக் கூடிய ஒரு மனிதாபிமானி. அவர் புரட்சிக்காரனாக மாறியிருந்தால் நோபல் பரிசு வழங்கும் கொம்பனிகளின் கண்ணில் தென்படும் சாத்தியப் ப…
-
- 0 replies
- 953 views
-
-
புலிகளின் முற்றுகையில் சிக்கியிருக்கும் யாழ். சிறிலங்கா இராணுவம்: "லக்பிம" [திங்கட்கிழமை, 3 செப்ரெம்பர் 2007, 14:58 ஈழம்] [பி.கெளரி] பீரங்கித் தாக்குதல்கள் மூலம் பலாலி சிறிலங்கா வான்படை தளத்தையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செயலிழக்கச் செய்தால் யாழ். குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் ஒரு முற்றுகைக்குள் சிக்க நேரிடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பத்தியில் தெரிவித்துள்ளது. அந்த இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதிய பத்தியின் தமிழ் வடிவம்: யாழ்குடாநாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத் மீது கடந்த 21 ஆம் நாள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 130 மி.மீ நீண்டதூர பீரங்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
விசித்திரமான அரசியல் சூழ்நிலை [03 - September - 2007] இலங்கையில் இன்று விசித்திரமானதொரு அரசியல் சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கமும் பலம் வாய்ந்ததாக இல்லை. எதிரணியும் பலம் வாய்ந்ததாக இல்லை. இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் அரசாங்கம் கண்மூடித்தனமான அக்கறை காட்டுவதன் விளைவாக வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிற அவலத்துக்கு மத்தியில், முழுநாட்டிலுமே மனித உரிமை மீறல்கள் படுமோசமாக அதிகரித்திருக்கின்றன. மறுபுறத்தில் வாழ்க்கைச் செலவு கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ உயர்ந்திருப்பதால் மக்கள் முன்னென்றுமில்லாத பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். நாளை எந்தப் பொருளின் விலை அதிகரிக்கப் போகின்றதோ என்ற ஏக்கத்துடன் தான் மக்கள் ஒவ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதிய பாதைக்கு தேவை புதிய பார்வை [03 - September - 2007] தெற்காசிய நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய பிரச்சினைகள் - வறுமை, தீவிரவாதம், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல். அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுதந்திர பத்திரிகையாளர்கள் சங்கம் நடத்திய ஆறாவது மண்டல மாநாடு இப் பிரச்சினைகள் குறித்து விவாதித்து, சில வழிமுறைகளைத் தெரிவித்துள்ளது. `ஊடகங்கள், அமைதி, வறுமை ஒழிப்பு' என்ற தலைப்பில் கொழும்பில் இரு தினங்கள் நடைபெற்ற சாஃப்மா (SAFMA) மாநாட்டில் தெற்காசிய நாடுகளின் பத்திரிகையாளர்கள், பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். "தீவிரவாதம் இருக்கும் வரை - ஊடகங்களின் சுதந்திரத்துக்குப் பாதிப்பு நீடிக்கும் வரை - வறுமை ஒழிப்பு சாத்தியமில்லை". அந்த மா…
-
- 0 replies
- 943 views
-
-
ஐவர் கொண்ட முழுக் குடும்பமுமே உயிர் அச்சுறுத்தலுக்குப் பயந்து சரண்! யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும் பம் ஒன்று உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்துள்ளது. உயிர் அச்சுறுத்தல் காரணமாக அறுப துக்கு மேற்பட்டவர்கள் ஆணைக்குழுவில் யாழ். அலுவலகத்தில் இதுவரை சரண் அடைந்துள்ளனர். தனிநபர்களாகவே அவர் கள் சரண் அடைந்து வந்தனர். எனினும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் ஒரேயடியாக சரண் அடைந்தமை இதுவே முதல் தடவையாகும். மட்டுவில் வடக்கைச் சேர்ந்த கதிரவேல் குமாரசாமி (வயது 36), அவரது மனைவி சிறிலதா (வயது 30), அவரது பிள்ளைக ளான துளசிகா (வயது 13), குணசீலன் (வயது 10), திலக்சனா (வயது…
-
- 0 replies
- 988 views
-
-
மன்னார் முசலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சிக்கி உடல் கருகிக் கிடக்கும் இளம்பிஞ்சு. படம்: தமிழ்நெட்
-
- 4 replies
- 1.8k views
-
-
காணாமற்போனோர் தொடர்பாக ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி நாட்டில் பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக, அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன. "காணாமற்போனோரைத் தேடியறியும் குழு' இது தொடர்பான முன் முயற்சிகளை எடுக் கும் என அக்குழுவின் அமைப்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அறிவித்திருக் கின்றார். நேற்று இக்குழுவின் சார்பில் கொழும் பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டி லேயே இவ்விடயத்தை கலாநிதி விக்கிரம பாகு கருணாரத்ன அறிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வரு மாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒன்று கூற…
-
- 0 replies
- 683 views
-
-
மண்டபம் அகதி முகாமிலிருந்து 200 ஈழத்தமிழரைக் காணோம்! தமிழ்நாடு மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த இரு நூறு அகதிகள் காணா மற்போயிருக்கின்றனர். மண்டபம் முகாமில் நேற்றுத் திடீரெனத் தாம் மேற்கொண்ட கணக்கெடுப்பை அடுத்தே இது தெரியவந்திருப்பதாக "கியூ' பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். 2006 ஜனவரிக்குப் பின்னர் இலங்கை யில் மோசமான இன யுத்தம் வெடித்ததை அடுத்து இதுவரை 20 ஆயிரத்து 112 அகதி கள் தமிழகம் வந்திருந்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 800பேர் மண்ட பம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டி ருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவர்கள் முகாமை விட்டு வெளியே போய்வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலேயே இரு நூறு பேர் இப்போது மாயமாக மறைந்திருக்கிறார்கள் என் பது தெரியவந்திருக…
-
- 0 replies
- 840 views
-
-
திங்கள் 03-09-2007 04:28 மணி தமிழீழம் [மயூரன்] முசலி ஆக்கிரமிப்பு தாக்குதல் நடவடிக்கையில் இறந்த பொதுமக்கள் தொகை 13 ஆக அதிகரிப்பு மன்னார் முசலி பிரிவுக்குட்பட்ட பசுந்தென்றல் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆளஊடுருவும் அணியினர் மேற்கொண்ட நாசகார கிளைமோர் தாக்குதலில் இருசிறுவர்கள்இ 19 அகவையுடைய சிறுமி உட்பட நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் என 12பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொல்லப்பட்டவர்களில் இருவர் இன்னமும் இனம்காணப்படவில்லை எனத்தெரியவருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தைஇ தாய்இ நான்கு வயது குழந்தை மற்றும் அவரது அன்ரி என நால்வரும் மற்றய குடும்பத்தை சேர்ந்த மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மற்றொரு பொதுமகனும் சனிக்கிழமை சிறீலங்கா படை…
-
- 0 replies
- 767 views
-
-
திங்கள் 03-09-2007 03:22 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தினர் பலி ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் கிரண் பகுதியில் வெடிபொருட்களை தேடும்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறீலங்கா படையினர் ஒருவர் மறைத்து வைத்த நிலக்கண்ணி வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 30 அகவையுடைய மகிந்த ரட்நாயக்க எனத் தெரியவருகிறது. இவர்காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்ததாகவும் பின்னர் இறந்ததாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 873 views
-
-
இலங்கையின் தவறுகளில் இருந்து பாடம் கற்றது சிங்கப்பூர் - முன்னால் பிரதமர் லீ குவான் யூ எனது மின்னஞ்சலுக்கு நண்பர் ஒருவரால் அனுப்பிய மடலில் இருந்து இச்செய்தியினை இணைக்கிறேன். ஆனால் எந்த ஊடகத்தில் இருந்து பெற்றார் என்று அவர் குறிப்பிடவில்லை.
-
- 1 reply
- 1.2k views
-
-
"காரியம் முடிவுற்றதும் ஓரம் கட்டப்படும் ஒட்டுக்குழுக்கள்" தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதற்கான அங்கிகாரத்தைக் கோரிக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் தங்கள் ஏகோபித்த அங்கிகாரத்தை வழங்கியிருந்தனர். இப்பெரும் வெற்றி காரணமாக ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றவாகள் தமிழ் மக்களின் அரசியல் களத்திலிருந்து முற்றாகவே புறமொதுக்கப்பட்டனர். தமிழ் மக்களின் பேரால் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகமிழைத்து வந்த இவர்களுக்கு தமிழ் மக்கள் உரிய பாடத்தை வழங்கியிருக்கின்றனர். எனினும், இவர்கள் விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனத்தம்பட்டம் அடித்தவாறு தமிழ் மக்களின் விடுதலைப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவம் வடபோர்முனையில் பாரிய முன்னகர்வுக்கு முனைப்பு காட்டுவதாகத் தகவல் Written by Seran - Sep 02, 2007 at 04:00 PM வடபோர்முனையின் முன்தளங்களான முகமாலை எழுதுமட்டுவாழ், நாகர்கோவில் பகுதிகளை நோக்கி படையினர் பெருமளவில் நகர்த்தப்பட்டு வருவதாக அம்பன் மற்றும் மீசாலைப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களிலேயே கூடுதலான படைநகர்வுகள் இடம் பெற்று வருகின்றன. இதேவேளை வடபோர்முனையின் எந்த முனையில் படையினர் தாக்குதல்களை ஆரம்பித்தாலும் அதனை முறியடிக்கதாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். சங்கதி
-
- 8 replies
- 2.9k views
-
-
சர்வகட்சி குழுவின் தீர்வு யோசனையினை ஆவலாக எதிபார்த்துள்ள இணைத்தலைமை நாடுகள் வன்னி இராணுவ நடவடிக்கை அழிவுக்கே வழி வகுக்கும் எனவும் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்படும் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான யோசனையினை தாம் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் தாம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் இணைத்தலைமை நாடுகள் சுட்டிக்காட்டியுள்ன. இது தொடர்பாக இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்ததாவது: இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இராணுவ முனைப்புகள் கவலைய…
-
- 0 replies
- 960 views
-