ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
மன்னார் முசலிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சிக்கி உடல் கருகிக் கிடக்கும் இளம்பிஞ்சு. படம்: தமிழ்நெட்
-
- 4 replies
- 1.8k views
-
-
காணாமற்போனோர் தொடர்பாக ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி நாட்டில் பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பாக, அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விதத்தில் ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன. "காணாமற்போனோரைத் தேடியறியும் குழு' இது தொடர்பான முன் முயற்சிகளை எடுக் கும் என அக்குழுவின் அமைப்பாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அறிவித்திருக் கின்றார். நேற்று இக்குழுவின் சார்பில் கொழும் பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டி லேயே இவ்விடயத்தை கலாநிதி விக்கிரம பாகு கருணாரத்ன அறிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியவை வரு மாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒன்று கூற…
-
- 0 replies
- 692 views
-
-
மண்டபம் அகதி முகாமிலிருந்து 200 ஈழத்தமிழரைக் காணோம்! தமிழ்நாடு மண்டபம் அகதி முகாமில் தங்கியிருந்த இரு நூறு அகதிகள் காணா மற்போயிருக்கின்றனர். மண்டபம் முகாமில் நேற்றுத் திடீரெனத் தாம் மேற்கொண்ட கணக்கெடுப்பை அடுத்தே இது தெரியவந்திருப்பதாக "கியூ' பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர். 2006 ஜனவரிக்குப் பின்னர் இலங்கை யில் மோசமான இன யுத்தம் வெடித்ததை அடுத்து இதுவரை 20 ஆயிரத்து 112 அகதி கள் தமிழகம் வந்திருந்தனர். அவர்களில் 4 ஆயிரத்து 800பேர் மண்ட பம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டி ருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவர்கள் முகாமை விட்டு வெளியே போய்வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிலேயே இரு நூறு பேர் இப்போது மாயமாக மறைந்திருக்கிறார்கள் என் பது தெரியவந்திருக…
-
- 0 replies
- 843 views
-
-
திங்கள் 03-09-2007 04:28 மணி தமிழீழம் [மயூரன்] முசலி ஆக்கிரமிப்பு தாக்குதல் நடவடிக்கையில் இறந்த பொதுமக்கள் தொகை 13 ஆக அதிகரிப்பு மன்னார் முசலி பிரிவுக்குட்பட்ட பசுந்தென்றல் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆளஊடுருவும் அணியினர் மேற்கொண்ட நாசகார கிளைமோர் தாக்குதலில் இருசிறுவர்கள்இ 19 அகவையுடைய சிறுமி உட்பட நான்கு பெண்கள், நான்கு ஆண்கள் என 12பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொல்லப்பட்டவர்களில் இருவர் இன்னமும் இனம்காணப்படவில்லை எனத்தெரியவருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த தந்தைஇ தாய்இ நான்கு வயது குழந்தை மற்றும் அவரது அன்ரி என நால்வரும் மற்றய குடும்பத்தை சேர்ந்த மூவரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மற்றொரு பொதுமகனும் சனிக்கிழமை சிறீலங்கா படை…
-
- 0 replies
- 784 views
-
-
திங்கள் 03-09-2007 03:22 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் சிறீலங்கா இராணுவத்தினர் பலி ஞாயிறு மதியம் 12.30 மணியளவில் மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் கிரண் பகுதியில் வெடிபொருட்களை தேடும்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறீலங்கா படையினர் ஒருவர் மறைத்து வைத்த நிலக்கண்ணி வெடித்ததில் பலியாகியுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 30 அகவையுடைய மகிந்த ரட்நாயக்க எனத் தெரியவருகிறது. இவர்காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்ததாகவும் பின்னர் இறந்ததாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 878 views
-
-
இலங்கையின் தவறுகளில் இருந்து பாடம் கற்றது சிங்கப்பூர் - முன்னால் பிரதமர் லீ குவான் யூ எனது மின்னஞ்சலுக்கு நண்பர் ஒருவரால் அனுப்பிய மடலில் இருந்து இச்செய்தியினை இணைக்கிறேன். ஆனால் எந்த ஊடகத்தில் இருந்து பெற்றார் என்று அவர் குறிப்பிடவில்லை.
-
- 1 reply
- 1.2k views
-
-
"காரியம் முடிவுற்றதும் ஓரம் கட்டப்படும் ஒட்டுக்குழுக்கள்" தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதற்கான அங்கிகாரத்தைக் கோரிக் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் தங்கள் ஏகோபித்த அங்கிகாரத்தை வழங்கியிருந்தனர். இப்பெரும் வெற்றி காரணமாக ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் போன்றவாகள் தமிழ் மக்களின் அரசியல் களத்திலிருந்து முற்றாகவே புறமொதுக்கப்பட்டனர். தமிழ் மக்களின் பேரால் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் துரோகமிழைத்து வந்த இவர்களுக்கு தமிழ் மக்கள் உரிய பாடத்தை வழங்கியிருக்கின்றனர். எனினும், இவர்கள் விழுந்தும் மீசையில் மண்படவில்லை எனத்தம்பட்டம் அடித்தவாறு தமிழ் மக்களின் விடுதலைப்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா இராணுவம் வடபோர்முனையில் பாரிய முன்னகர்வுக்கு முனைப்பு காட்டுவதாகத் தகவல் Written by Seran - Sep 02, 2007 at 04:00 PM வடபோர்முனையின் முன்தளங்களான முகமாலை எழுதுமட்டுவாழ், நாகர்கோவில் பகுதிகளை நோக்கி படையினர் பெருமளவில் நகர்த்தப்பட்டு வருவதாக அம்பன் மற்றும் மீசாலைப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களிலேயே கூடுதலான படைநகர்வுகள் இடம் பெற்று வருகின்றன. இதேவேளை வடபோர்முனையின் எந்த முனையில் படையினர் தாக்குதல்களை ஆரம்பித்தாலும் அதனை முறியடிக்கதாம் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். சங்கதி
-
- 8 replies
- 2.9k views
-
-
சர்வகட்சி குழுவின் தீர்வு யோசனையினை ஆவலாக எதிபார்த்துள்ள இணைத்தலைமை நாடுகள் வன்னி இராணுவ நடவடிக்கை அழிவுக்கே வழி வகுக்கும் எனவும் தெரிவிப்பு வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்படும் இனப்பிரச்சினைத்தீர்வுக்கான யோசனையினை தாம் ஆவலாக எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் தாம் கடைப்பிடித்துவரும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் இணைத்தலைமை நாடுகள் சுட்டிக்காட்டியுள்ன. இது தொடர்பாக இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்ததாவது: இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இராணுவ முனைப்புகள் கவலைய…
-
- 0 replies
- 962 views
-
-
ஞாயிறு 02-09-2007 03:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] மன்னாரில் முஸ்லீம் கிராமத்தவர்களை மனிதகேடயமாக பயன்படுத்தும் சிறீலங்கா படையினர் முசலி பிரிவுக்குட்பட்ட மன்னார் மாவட்டத்தில் சுமார் 50 முஸ்லீம் குடும்பத்தவர்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி சிறீலங்கா படையினர் முன்னேற்ற நடவடிக்கையினை சனிக்கிழமை காலை மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதேவேளை முள்ளிக்குளம் பகுதியில் உள்ள கிராமத்தவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள நானாட்டான் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் பகுதிநோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இப்பிரதேம் விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் பிரசன்னமாகியிருக்கும் பிரதேசமாக இருந்ததாகவும் இப்பிரதேசத்தினுள் சிறீலங்கா படையினர் முன்னகர்ந்தபோது…
-
- 3 replies
- 2.3k views
-
-
சிறிலங்காவுக்கான உல்லாசப் பயணிகளைத் தடுக்க எந்த நாட்டுக்கும் அதிகாரம் இல்லை: சரத் என் சில்வா [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 19:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] அனைத்துலக நாடுகளுடன் ஒப்பந்தங்களை சிறிலங்கா மேற்கொண்டுள்ள நிலையில் சில நாடுகள் தமது நாட்டவர்களை சிறிலங்காவுக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவிக்க அதிகாரம் ஏதும் இல்லை என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். உலக மயமாக்கல் குறித்து கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துலக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: உலக மயமாக்கலின் கீழ் சிறிலங்கா அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கும் உடன்படிக்கைகளுக்கு அமைய இந்நாட்டு உல்லாசப் பயண சேவையைப் பெற விரும்பும் வெளிநாட்டு பயணிக்கு தடைகளை ஏற்படுத்த எந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
வெள்ளி 31-08-2007 16:18 மணி தமிழீழம் [மயூரன்] சுதந்திரக் கட்சியின் மக்கள் அணிக்கு சந்திரிகா முழுமையான ஆதரவு சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் அணியின் நிறுவனர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காலை இச்சந்திப்பு சந்திரிகா குமாரதுங்கவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சந்திப்பில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் இருக்கும் என சந்திரிகா தெரிவித்துள்ளார். அத்துடன் தேசியக் கூட்டமைப்புக்கு நடவடிக்கைகளுக்கு தனது முழுமையான ஆதரவைத் தருவதாகவும் சந்திரிகா குமாதுங்க மங்கள சமரவீர, சிறீப…
-
- 2 replies
- 976 views
-
-
புலிகளின் நிலக்கண்ணிகளில் சயனைட், கந்தகம் [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 16:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளினால் கிழக்கில் புதைக்கப்பட்டிருக்கும் சில நிலக்கண்ணிகளில் சயனைட் மற்றும் கந்தகம் அடங்கியிருப்பதாக சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக "லக்பிம" வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விபரம்: நிலக்கண்ணிக்கு இலக்காகி சிறிலங்கா இராணுவத்தினரின் கால்கள் காயமடையும் போது அந்த காயங்களினூடாக சயனைட் உடலினுள் சென்று உடன் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கில் சயனைட் போடப்பட்டிருக்கலாம் என்பதே குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் கருத்தாகவுள்ளது. கந்தகம் அடங்கிய குண்டுகளால்…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஞாயிறு 02-09-2007 20:57 மணி தமிழீழம் [செந்தமிழ்] மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு : தம்பதியினர் காயம் மட்டக்களப்பு மாவட்டம் கன்னங்குடாவை சேர்ந்த வீடொன்றினுள் புகுந்த கருணாகுழுவை சேர்ந்த ஆயுததாரிகளால் சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் அவ்வீட்டில் வசித்து வந்த விவசாயியை கடத்த முற்பட்டதாகவும் பின்னர் அவரையும் அவரது மனைவியையும் சுட்டுக் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் சிவநாதன் ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி விசு ஜெயசீலன் எனவும் தெரியவருகிறது. ஜெயசீலன் தற்போது மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. pathivu
-
- 0 replies
- 918 views
-
-
ஞாயிறு 02-09-2007 05:34 மணி தமிழீழம் [தாயகன்] இனப்பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் - மகிந்த ராஜபக்ஸ இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும் என சிறீலங்கா அதிபர் மகந்த ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இன்று வெளியாகியுள்ள ஹாட் ரோக் (Hard Talk) என்ற சஞ்சிகைக்கு மகிந்த ராஜபக்ஸ வழங்கிய நேர்காணல் ஒன்றில் இந்தக் கருத்தினை வெளியிட்டிருப்பதுடன், இலங்கை இனப் பிரச்சனையில் அயல்நாடு உட்பட எந்தவொரு நாடும் நேரடியாகத் தலையிடுவதை தாம் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் பற்றிக் குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ஸ இது முழுமையான ஒரு ஒப்பந்தம் இல்லை எனவும், பல்வேறு குறைபாடுகள் அதில் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட…
-
- 1 reply
- 725 views
-
-
இலங்கை சிங்களவருடையது என சொல்கின்றனர் சிங்கள பேரினவாதிகள் அத்துடன் 6 மாதம் காணுமாம் புலிகளை அழிக்க பகுதி- 1 http://youtube.com/watch?v=0qNeypXY0Qk பகுதி- 2 http://youtube.com/watch?v=MO530uHtY_g பகுதி- 3 http://youtube.com/watch?v=fDAWHlF3BfQ
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 2 செப்ரெம்பர் 2007, 17:14 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தினர் என்னை கடத்த முயற்சித்தனர் என்று பிரபல ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் "த நேசன்" வார ஏட்டிற்கு அவர் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம்: எனது பாதுகாப்பை அகற்றியதற்காக என்னால் அவர்களுடன் வாதாட முடியாது. எனக்கு பிரத்தியேக பாதுகாப்பு வழங்குமாறு நான் அவர்களை நிர்ப்பந்திக்கவும் முடியாது. ஆனால் மறுபுறம் அரச சார்பான குழுவினர் எனது வீட்டிற்கு வெளியில் நடமாடுவதனால் ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. தனக்கு நெருக்கடியான விடயங்களை தெரிவிக்கும் போது அவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-09-02 மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பதும் குற்றம்தான் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் அமைதித் தீர்வு காண்பதிலும் நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதிலும் கொழும்பு அரசு பொறுப்பு ணர்வோடு செயற்படவில்லை என்று அதிருப்தி கொண் டிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இது தொடர்பான தனது அதிருப்தியையும் விசனத்தையும் இலங்கைக்கு உணர்த்தும் வகையிலும், இலங்கை மீது அழுத்தம் ஒன்றை பிரயோகிக் கும் விதத்திலும் சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வருகின்றது எனச் செய்திகள் கசிந்துள்ளன. ஏற்கனவே பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் இதே காரணத்துக்காகத் தமது உதவித் திட்டங்களை இடைநிறுத் தியிருக்கின்றன. அதேபோல, ஐரோப்பிய ஒன்றியமும் இதுவரை இலங் கைக்கு தான் வழங்கி வந்த வரிச்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சூசையை சுற்றிய புனை கதைகளும் கிழக்கை சுருட்டும் புனை கதைகளும் -சி.இதயச்சந்திரன்- ஒளியைவிட அதிவேகமாகப் பரவும் பரப்புரையொன்று எதிரிகளால் தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இணையத்தளங்கள், அச்சு ஊடகங்கள் என்று சகலத்திலும் முதன்மைச் செய்தியாகவும், மக்களின் அடிப்படைச் பிரச்சனை போன்றும் சோடிக்கப்பட்டு அலங்கார ஊர்தியாக பவனி வருகின்றது. சூசைக்கும் பொட்டம்மானிற்கும் லடாய். இரண்டு ஆதரவாளகளுக்கு இடையே நோர்வேயில் வாள்சண்டை. கடற்புலிகளின் பொறுப்பாளர் பதவியிலிருந்து சூசை விலக்கப்பட்டுள்ளார். அண்மையில் மூண்ட கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலித் தளபதிகள் இருவரின் இறுதி நிகழ்வில் சூசை கலந்துகொள்ளவில்லை என்றவாறு சுயதிருப்திப் பரப்புரைகள் மகிந்த விசுவா…
-
- 8 replies
- 3.5k views
-
-
மகிந்த அரசாங்கம் மீது விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 20:00 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வரவு - செலவுத்திட்டத்திற்கு முன்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மகிந்த அரசாங்கத்தின் மாபெரும் ஊழல்கள், தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. "கோப்" அறிக்கையில் சிறிலங்கா பொதுத்துறை நிறுவனங்களின் ஊழல்கள் தொடர்பில் வெளியாகியிருக்கும் விடயங்கள், மிக் - 27 கொள்வனவு ஊழல், ரெலிகொம் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் 107 அமைச்சர்களை …
-
- 0 replies
- 1k views
-
-
சனி 01-09-2007 15:25 மணி தமிழீழம் [சிறீதரன்] ஆஞ்சிநேயர் ஆலயத்திற்கு செல்ல முற்பட்ட வயோதிபர் படையினரால் தாக்கப்பட்டார். யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரால் அயலில் உள்ள ஆலயத்திற்கு செல்ல முற்பட்ட வயோதிபர் பல நூற்றுக் கணக்கான பொதுமக்கள் பார்த்துக் கொண்டு நிற்க்க இராணுவத்தினரால் தாக்கப்பட்டார். மருதனார்மடம் சந்தியில் வாகனக் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த வேளையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து நிறுத்தப்பட்டு இருந்த பேரூந்தில் இருந்து இறங்கிய வயோதிபர் அயலில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்க்கு சென்ற வருவதாக கடமையில் நின்ற இராணுவத்திடம் தெரிவித்தார். வீதியைக் கடக்காது வயோதிபர் நின்ற பக்கத்தில் உள்ள ஆலயத்திற்க்கு செல்லவே இவர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நான் தமிழ் தேசியம் பேசுவது ஏன்? - பழ. நெடுமாறன் செவ்வியின் ஒரு பகுதி மட்டுமே இங்குள்ளது.. குறிப்பாக ஈழப்பிரச்சனை தொடர்பானது.. எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் எ…
-
- 2 replies
- 933 views
-
-
அரசியலில் சந்திரிகா மகன்? [சனிக்கிழமை, 1 செப்ரெம்பர் 2007, 16:33 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்த தனது மகனை தீவிர அரசியலில் சந்திரிகா இறக்கக்கூடும் என்று தெரிகிறது. சந்திரிகாவின் மகன் விமுக்தி குமாரதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறிலங்கா திரும்பினார். அவர் எதிர்வரும் காலத்தில் அரசியலில் இணைந்து கொள்ளக்கூடும் என்று அவரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தி அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து ஜனநாயக கட்சிகள் மற்றும் சக்திகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை மங்கள சமரவீரவுடனான சந்திப்பின் போது சந்திரிகா தெரிவித்திருந்தார். அவரின் இந்த புத…
-
- 0 replies
- 1.6k views
-
-
Posted on : 2007-09-01 கோமாளிக் கூத்தாகத் தொடரும் சர்வதேசக் கையாள்கைப் போக்கு சர்வதேச சமூகத்தைக் கையாள்வதில் மோசமான இராஜதந்திரத் தவறுகளை இழைப்பதன் மூலம் கொழும்பு அரசு தனது தலையில் தானே மண் அள்ளிக் கொட்டி வருகிறது என்பதைப் பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அதுவே தொடர்கதையாகத் தொடர்கின்றது. இப்போது, அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கும் கலாநிதி ரஜீவ் விஜேசிங்க "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி' போல தேவையில்லாத விவகாரத்தைக் கிளறிக் குழப்பி அடித்திருக்கின்றார். அவர் இப்பொறுப்பை ஏற்று சில மாதங்களே ஆகின்றன. அதற்கிடையில் மேற்குலகுக்கு குறிப்பாக மேற்குலக மனித உரிமைகள் அமைப்புகளுக்கு எதிராக ஓர் அறிக்கைப் போரைத் தொடங்கி ஆல…
-
- 1 reply
- 1k views
-
-
சர்வதேச சமூகமும் அரசியல் குருடர்களும் [01 - September - 2007] இனநெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்று தொடர்பில் தென்னிலங்கையில் கருத்தொருமிப்பைக் காண்பது அவசியமென்று கூறிக்கொண்டு கடந்தவருடம் சர்வகட்சி மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்போது அந்த மகாநாட்டை என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டிருக்கிறார் போலத் தோன்றுகிறது. தென்னிலங்கை அரசியல் சக்திகள் மத்தியில் கருத்தொருமிப்பைக் காண்பதற்கு முயற்சிப்பதென்பது ஒன்றும் புதியவிடயமல்ல. அத்துடன் ஒப்பேறக்கூடியதுமல்ல.கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்தக் கருத்தொருமிப்புக்காணும் முயற்சிகள் சகல அரசாங்கங்களினாலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அடிப்படையில் அவை தமிழ் மக்களுக்கு எந்தளவுக்குக் குறைவா…
-
- 0 replies
- 1.1k views
-