ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
செல்லிடப்பேசிகளுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சி போராட்டம் நடத்த உள்ளதாகவும் போராட்டம் நடைபெறும் போது செல்லிடப்பேசி இயக்கத்தை 2 மணி நேரத்துக்கு மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 761 views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தில் மட்டும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் பட்டினியால் வாடும் தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சென்றடையும் வரை எமது போராட்டம் தொடரும்- எம்மைத் தடுத்து கைது செய்தாலும் எமது படகுப் பயணம் நடைபெறும் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 14 replies
- 2.2k views
-
-
10 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்இலங்கை கடற்படை அட்டூழியம்செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007 ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறித் தாக்கிய இலங்கை கடற்படையினர் 10 பேரை பிடித்துச் சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அஙகு இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினர்.பிறகு அமரன், மாணிக்கம், மணி, ஸ்டாலின் உள்ளிட்ட 10 மீனவர்களை தங்களுடன் அழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
வன்னியில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தி தாக்குதல் நடத்தியது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால் பாதுகாப்பு அளிக்கக் கோரி யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் 8 பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 726 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 11-09-2007 13:16 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கையின் தெற்கே கடற்படையினரால் இழுவைப் படகு மூழ்கடிப்பு இலங்கையின் தெற்கே மாத்தறை டென்ரா முனையில் அருகே சந்தேகத்திற்கு இடமான 70 மீற்றர் நீளம் கொண்ட இழுவைப் படகு ஒன்றை சிறீலங்கா கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. விபரங்கள் இங்கே....... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 19 replies
- 4.1k views
-
-
இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் நிலவிய தப்பபிப்பிராயங்கள் நீக்கப்பட்டுள்ளன *அரச சமாதான செயலகம் தெரிவிப்பு இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் நிலவிய தவறான அபிப்பிராயங்களை ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் தலைமையிலான தூதுக்குழு தீர்த்து வைத்துள்ளதாக இலங்கை சமாதான செயற்பாட்டை கூட்டிணைப்பதற்கான செயலக செயலாளர் நாயகம் ரஜிவ விஜேசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஜெனீவாவில் மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை அரச சமாதான செயலகம் வரவேற்கி…
-
- 1 reply
- 1k views
-
-
திங்கள் 10-09-2007 15:33 மணி தமிழீழம் [சிறீதரன்] நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை இடம் பெற்றது. யாழ் குடா நாட்டில் கடந்த பல மாதங்களாக காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வருகை தந்திருந்தனர். அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதள்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது. குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேசத் தவைலர் கேபி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் பாங்கொக்கில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பாங்கொக் போஸ்ட் ஏட்டை மேற்கோள் காட்டி சிறிலங்கா அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
- 19 replies
- 5k views
-
-
யாழ். கோப்பாயிலுள்ள பூதர்மடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் வயோதிப தம்பதியரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சிங்கராசா(வயது54) ரஞ்சிதமலர்(வயது 50) என்ற தம்பதியினரே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். கணவனின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது என்றும், மனைவியின் சடலம் கிணற்றுக்கு அருகில் தலையில் அடிகாயங்களுடன் இருந்தது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். சடலங்கனைபப் பார்வையிட்ட யாழ் மாவட்ட நீதவான் இ.த. விக்னராஜா அயலவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும்படியும், சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி : சுடர் ஒளி
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் செயற்படும் ஐ.நா. அமைப்புகளின் பணியாளர்களது பாதுகாப்புக் குறித்து இலங்கை அரசு அதிக சிரத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை கோரும் கடிதம் ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக நம்பகரமாக அறியப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக இலங்கை அரசுத் தலைமைக்கு இந்த விடயத்தை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தெரியப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 786 views
-
-
மனிதாபிமான அப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய மறுக்கும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனக் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார் த.தே.இயக்த்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள். 'ஈழத்தமிழர்களுக்கு உணவு,மருந்துகள், உள்ளளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுமாறன். ஈழத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்ட மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ். நோக்கி படகில் புறப்படவிருக்கும நெடுமாறன் தலைமையிலான குழுவினர், தமது படகுப்பயணத்துக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்தைச் சனிக…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய தரைவெளி பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் சூனியப் பிரதேசமாக காணப்பட்ட மன்னார் சிலாவத்துறைப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயமாக சிறிலங்கா அரசாங்கத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில். யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, மன்னார்-பூநகரி கப்புப்பிட்டி ஊடான ஏ-32 வீதி மற்றும் முல்லைத்தீவு-பரந்தன் ஏ-35 வீதி ஆகிய மூன்று பிரதான வீதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் ஊடாகவே செல்வதாக அவர் கூறினார். எனினும், கட…
-
- 6 replies
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளனர். சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மனிதஉரிமைகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒருவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தொடக்கம் 1974 தமிழ்மக்கள் சிறிலங்காப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதற்குள் அடங்குகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர்களுள் 69பேர் சிறுவர்களாவர் 1வயது…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன் நாட்டின் உதவி கோரல் சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன்ஸ் நாட்டின் உதவி சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டதாக பிலிப்பீன்சில் வெளிவரும் ''மணிலா ரைம்ஸ்'' எனும் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது. விடுதலைப் புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்தவே இந்த உதவியை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 5 replies
- 1.2k views
-
-
போர் ஒத்திகைகளும் சிலாவத்துறை சமரும் சி.இதயச்சந்திரன்- யாழ். குடாவின் வடமுனை கடலோர நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் நீண்ட தூர எறிகணைகள் விழுந்து வெடித்துள்ளன. மறுபடியும் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி மீது புலிகளின் தூரப் பார்வை பதிந்துள்ள நிலையில் வடபோர்முனை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈழப் போரின் முடிவுரை வன்னியில் எழுதப்படுமென பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அநுராதபுரத்தில் முழங்கியதால் அடுத்த நிகழ்விற்கான அதிர்வுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/10.htm
-
- 4 replies
- 1.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....74a814ec9237b6e
-
- 0 replies
- 1.2k views
-
-
வானொலி மூலமாக ஒரு சமூகக் கட்டமைப்பை, ஊடகங்கள் உருவாக்கக்கூடிய ஒரு பொதுக் கருத்தை, ஒரு பொதுப் பண்பை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடி நாதத்தை வானொலிகளின் ஊடாகத்தான் நாங்கள் தக்க வைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாரத்தை சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று திடீரென சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவில் கல்வியை தனியார் மயமாக்கும் மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இன்று முதல் ஜே.வி.பி.யின் பல்கலைக்கழக மாணவர்கள் "கறுப்பு வாரம்" கடைபிடிக்கின்றனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட "உறவுகளைக் காப்போம்" நல்வாய்ப்புச் சீட்டிழுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையேயான உறவானது மிகவும் ஆபத்தானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உதவிகளை வழங்க பொதுநல அமைப்புக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 922 views
-