ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னனி அமைக்க ஜே.வி.பி முடிவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு புதிய தேசிய முன்னணியொன்றை உருவாக்கவுள்ளது. இந்த முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழில் நிபுணர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : Thu Jun 28 7:52:47 EEST 2007 கிழக்கில் முதல் கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல்கள் கிழக்கில் முதற்கட்டமாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பின் கிழக்கில் முதற் கட்டமாக பிரதேச சபை, நகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்தவும் இரண்டாவது கட்டமாக கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 சதவீதமான பகுதிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சிய பகுதியும் சில தினங்களில் மீட்கப்படும் என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு முழுமையாக மீட்கப்பட்டவுடன் தேர்தல்களை நட…
-
- 0 replies
- 892 views
-
-
"ராஜகிரிய கிளைமோர்" நபர் விடுதியில் கைது - அதனால் தமிழர்கள் வெளியேற்றமும் சரியே: கேகலிய ரம்புக்வெல. ராஜகிரியவில் கிளைமோரைப் பதுக்கியவர்கள் கொழும்பு விடுதிகளில்தான் தங்கியிருந்தனர் என்றும் இத்தகைய செயற்பாடுகளினால்தான் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அந்நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை அல்ல என்றும் சிறிலங்கா பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்ததாவது: தொப்பிக்கல பிரதேசத்தை கைப்பற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கிழக்கில் 99 விழுக்காடு பிரதேசத்தை அரசாங்கம் கைப்பற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
இராணுவ பலத்துடனேயே தமிழருடன் இணக்கப்பாடு - சிங்களவர் மனதை வென்றெடுப்பது அவசியம்; வாஷிங்டனில் பீரிஸ் [24 - June - 2007] சிறுபான்மை தமிழ் சமூகத்தினருடன் அரசியல் ரீதியான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு இராணுவ ரீதியில் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்வது தேவையானதென்றும் இதன்மூலமே பெரும்பான்மை சிங்கள மக்களின் அரசியல் ரீதியான ஆதரவை வென்றெடுக்க முடியுமெனவும் ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் ராய்ட்டர் செய்திச் சேவைக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியிலேயே பீரிஸ் இதனைத் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இலங்கை இராணுவ ரீதியில் தனது பலத்தை வெளிப்படுத்த வேண…
-
- 11 replies
- 1.8k views
-
-
புலிகளின் படகில் ஜப்பான் ராடார்கள்- சீன இயந்திரங்கள்: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:34 ஈழம்] [செ.விசுவநாதன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் படகில் ஜப்பானிய தயாரிப்பு ராடார் மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி: விடுதலைப் புலிகள், சீன தயாரிப்பு இராணுவ தளபாடங்களை பயன்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராடார்கள் உள்ளிட்ட ஜப்பானிய தளபாடங்களை போராளிகள் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த வாரம் நடந்த உக்கிர மோதலின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் கல…
-
- 10 replies
- 2.9k views
-
-
வியாழன் 28-06-2007 04:56 மணி தமிழீழம் சிறீதரன் வான் படையினரின் பயிற்சி வானூர்தி விபத்தில் சேதம் இரத்மலானைப் பகுதியில் சிறீலங்கா வான் படைகளுக்குச் சொந்தமான பயிற்சி வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளது. நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் பயிற்சியில் ஈடுபட்ட வானூர்த்தியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது சிறீலங்கா பயிற்சி வானூர்தி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சிறீலங்கா விமானப் படையினர் அறிவித்துள்ளனர். விபத்தில் சிக்கி சேதமடைந்த வானூர்த்தியை சீர்செய்துவிட முடியும் என கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இவ் விபத்தையடுத்து நேற்று மாலைவரை வான்படைக்கு சொந்தமான வானூர்திகள் எதுவும் ப…
-
- 0 replies
- 717 views
-
-
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட முடியாது: பாகிஸ்தான் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 13:26 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவின் உள்விவகாரங்களுக்குத் தீர்வு காண வெளிநாடுகள் தலையிட முடியாது என்று சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சகாத் ஏ சௌத்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களுக்காக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: உள்நாட்டு பிரச்சினையை சிறிலங்காவே தீர்ப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். பாகிஸ்தான், இந்தியா, நோர்வே போன்ற நாடுகள் என்றாலும் அவர்களின் உள்விவகாரங்களில் வெளியார் தலையிடக்கூடாது. தற்போது சிறிலங்காவுக்கு உலகில் முழு உரிமைகளும் வழங்கப்படவில்லை போன்ற தோற்றப்பாட்டையே நாம் அவதானித்துள்ளோம். நடைபெற்று …
-
- 13 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர்கள் வெலிக்கடசிறைச் சாலையில் வீரகேசரி இணையத்தளப்பிரிவு விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பயிற்சி பெற்றுக்கொண்ட என்ற சந்தேகத்தின் பேரில் புரட்சிகர விடுதலை இயக்க ஆரம்பித்துள்ள தென் பகுதியை சேர்ந்த சிங்கள இளைஞர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டடுள்ளனர் கைது செய்யப்பட்ட இவர்கள் பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் கொழும்பு மேலதிக நீதிமன்ற உத்தரவையடுத்து இவர்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர். அதே வேளை ஏற்கனவே விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 5 மலையக இளைஞர்கள் வெலிக்கடை சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்
-
- 2 replies
- 1.8k views
-
-
புலிகளுக்கு ஆதரவான இணையத் தளங்களை தடை செய்யமாட்டோம்: பெர்னாண்டோ புள்ளே. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களைத் தடை செய்ய மாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை அவர் கூறியதாவது: ஊடகவியலாளர்கள் தாங்கள் கொண்டு சேர்க்க விரும்புகிற செய்தியை மக்களிடத்தில் சேர்ப்பதற்கான உரிமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் பாதுகாக்கும். தமிழ்நெட் இணையத்தளத்தை முடக்கியதன் பின்னணியில் அரசாங்கம் செயற்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரிக்கிறோம். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அந்த இணையம் செயற்பட்ட போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் ஒரு பயங்…
-
- 2 replies
- 2.9k views
-
-
திருகோணமலை கொட்பே துறைமுகத்தில் தீவிபத்து 4 மீன் பிடி படகுகள் நிர்மூலம் நிஷாந்தி திருகோனமலை கொட்பே துறைமுகத்துக்கே நங்கூரமிடப்பட்டிருந்தது 4 ஆழ்கடல் மீன்பிடிப்ப்டகுகளில் இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எனினும் இத்தீ விபத்துக்கான காரணம் இது வரை தெரியவரவில்லை இப்ப்டகுகளில் தீவிபத்தையடுது அங்கே நின்ர கடற் படையினருக்கும் பொலிஸருக்கும் வேறு படகுகளிற்கு தீ பரவவிடாமல் கட்டுப்படுத்தியதாக திருகோணமலை பொலிஸ் அத்தியட்சர் கீத் ஸ்ரீ தயானந்தா தெரிவித்தார். வீரகேசரி
-
- 0 replies
- 1.5k views
-
-
புதன் 27-06-2007 18:28 மணி தமிழீழம் [முகிலன்] இந்தியப் படையினரால் கைப்பற்றமுடியாத தொப்பிக்கலையை எமது படையினர் இன்னும் சில தினங்களில் விடுவிப்பர் - ஹெகலிய ரப்புக்வெல இலங்கைக்கு வந்த இந்திய சமாதானப் படையினரால் கூட கைப்பற்ற முடியாமல் போன தொப்பிகலை (குடும்பி மலை) பிரதேசத்தை எமது பாதுகாப்புப் படையினர் இன்னும் சில தினங்களில் தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விடுவர். இப்போது 99 வீதமான பிரதேசத்தை அவர்கள் விடுவித்துள்ளனர் என தேசிய பாதுகாப்புக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே …
-
- 4 replies
- 2.6k views
-
-
மேற்குலக நாடுகளின் நிதியுதவி துண்டிக்கப்படுவது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்: ஜி.எல்.பீரிஸ். மிலேனியம் சவால் திட்டத்தின் கீழ் சிறீலங்கா அரசை மேற்குலக நாடுகள் இணைக்காதது சிறீலங்கா அரசை பெரும் சீற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகிய சிறீலங்காவுக்கான நிதியுதவியை மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இடைநிறுத்தியமை இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அமெரிக்காவும் சிறீலங்காவை இணைக்காததே சிறீலங்கா கடும் சீற்றத்துக்கு தள்ளப்படக் காரணம் எனத் தெரியவருகிறது. இதுகுறித்து வோசிங்டன் சென்றிருக்கும் சிறீலங்கா வர்த்தகத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உடகவியாரிடம் கருத்துரைக்கையில் ... மனித உரிமை மீறல் காரணங்களை காரணம் காட்டி நிதியுதவிகளை …
-
- 2 replies
- 1.2k views
-
-
வெளிவிவகார அமைச்சருக்கு தண்டத் தொகை விதித்தது மாவட்ட நீதிமன்றம். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டத்தொகையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்துள்ளது. சண்டே லீடர் நாளிதழ் தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றில் ரோகித முன்னிலையாகததால் நேற்று செவ்வாய்க்கிழமை இத்தண்டத் தொகை விதிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் ரோகித போகல்லாகம நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று அவரது சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர நீதிமன்றில் தெரிவித்தார். இதற்கு எதிர்த்தரப்பு சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 11 (2006), மார்ச் 14 (2007) மற்றும் நேற்று என மூன்று விசாரணைகளின் போதும் நீதிமன்றில் ரே…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாக…
-
- 0 replies
- 584 views
-
-
இலங்கையில் இனங்காணப்பட்ட 862 எய்ட்ஸ் நோயாளிகளில் இதுவரை 161 பேர் மரணம் [27 - June - 2007] எய்ட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர் என ஒருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில் சமூகம் அவரையும், அவரது குடும்பத்தையும் இழிவுபடுத்தி ஒதுக்கிவிடாமல் அவர்கள் மீது அன்பு, கருணை, ஆதரவுகளை வழங்கி வாழவைக்க வேண்டும் என எய்ட்ஸ் நோய் தொடர்பான விசேட நிபுணத்துவ வைத்தியரான டாக்டர் திருமதி கங்கா பத்திரன தெரிவித்தார். ஊடக அமைப்பு அனுசரணையுடன் ஐகெப் (ICAPP) நிறுவனத்தினால் கண்டி கட்டுகஸ்தோட்டை ஹோட்டல் ட்ரீ ஒப் லைபில் ஊடகவியலாளருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எய்ட்ஸ் நோய் தொடர்பான அறிவூட்டல் செயலமர்வின்போதே வைத்தியர் திருமதி கங்கா பத்திரன இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 972 views
-
-
வடக்கு கடற்பரப்பில் மோதல்...ஒன்று இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன...இராணுவ தரப்பு தகவல்படி விடுதலைப்புலிகளின் ஒரு படகு ழூழ்கடிக்க பட்டுவிட்டதாகவும் தங்கள் தரப்பில் இழப்பு இல்லை என்றும் கூறி இருக்கின்றார்கள்..புலிகள் தரப்பிடம் விபரங்கள் பெறமுடியவில்லை... செய்திகள் எடுத்து வந்தது.....SNS
-
- 15 replies
- 5.7k views
-
-
சிறிலங்காவின் காவல்துறை மற்றும் நீதித்துறை செயலிழந்துள்ளது: ஆசிய மனித உரிமைகள் ஆணையம். சிறிலங்காவின் காவல்துறை மற்றும் நீதித்துறை அமைப்புகள் செயலிழந்து போயிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையம் சாடியிருக்கிறது. துன்புறுத்தல்களுக்கு உள்ளாவோர்களுக்கு ஆதரவளிப்பது என்ற ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நாளை முன்னிட்டு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை: சிறிலங்காவில் கடத்தலகள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்தல், துன்புறுத்தல்கள், ஏனைய மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளமையானது சிறிலங்கா காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியன செயலிழந்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கோ அல்லது …
-
- 0 replies
- 883 views
-
-
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யுத்தத்தின் மூலம் நிறைவேற்றமுடியாது வீரகேசரி நாளேடு தமிழ் மக்களின் பிரதிநிதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனை கருதமுடியாதென்கிறார் அமைச்சர் விஜேசேகர தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை யுத்தத்தின் மூலம் நிறைவேற்றமுடியாது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தமிழ்மக்களின் பிரதிநிதியாக கருதமுடியாது. யுத்தத்தினை முடிவிற்கு கொண்டுவராவிட்டால் அபிவிருத்தி உட்பட பல செயற்பாடுகளை முடியாது, என்று விஷேட கருத்திட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேகர தெரிவித்தார். கொழும்பு வர்த்தக மையத்தின் 28 ஆம் மாடியில் விஷேட கருத்திட்ட அமைச்சின் அலுவலகத்தினை திறந்துவைக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமை…
-
- 1 reply
- 1.2k views
-
-
அரந்தலாவவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி [ த.இன்பன் ] - [ யூன் 27, 2007 - 03:33 AM - GMT ] வவுனியா அரந்தலாவ பகுதியில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா படையினர் மூவரும் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது இரு படையினரும், ஊர்காவற் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டதாகவும், மேலும் இரு படையினரும், ஓர் ஊர்காவற் படையாள் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் படைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட படையினரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி அங்கு உயிரிழந்தாக தெரியவருகி…
-
- 0 replies
- 1.7k views
-
-
6 ஆயிரம் புலிகள்தான் எங்களுக்குப் பிரச்சினை: அமைச்சர் சரத் அமுனுகம [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 14:26 ஈழம்] [ப.தயாளினி] தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை- 6 ஆயிரம் புலிகள்தான் பிரச்சினை என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மற்றும் முதலீடு மேம்பாட்டு அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். மறவன்கொடவில் உள்ள ஹலகதெர, ஹதெனியவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: தமிழ் மக்களுடன் எங்களுக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. தமிழ் மக்களை பயங்கரவாதச் செயலின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் 6 ஆயிரம் அல்லது புலிப் பயங்கரவாதிகள்தான் பிரச்சினை. சாதாரண தமிழர்கள் எங்களுடன் இணக்கமாகவே வாழ்கின்றனர். கண்டியில் …
-
- 12 replies
- 2.1k views
-
-
அச்சுறுத்தல்: கொழும்பிலிருந்து ஐ.நா.அதிகாரி வெளியேறினார் [செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2007, 15:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக நிதிப் பிரிவு திட்ட அதிகாரி வாசுகி மகேந்திரனுக்கு பணம் அறவிடும் கும்பல் அச்சுறுத்தல் விடுத்ததால் அவர் சிறிலங்காவிலிருந்து குடும்பத்தினருடன் வெளியேறி உள்ளார். சிறிலங்காவிலிருந்து தான் வெளியேறுவதற்கு முன்பாக கடத்தல்கள் தொடர்பான மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் அவர் முறைப்பாடு செய்துள்ளார். வாசுகி மற்றும் அவரது கணவர் மகேந்திரன் இருவரும் ஹவ்லொக் வீதியில் வசித்து வந்தனர். நேற்று மு…
-
- 2 replies
- 2k views
-
-
காலவரையறையற்ற போர், நாடு எங்கே போய் முடியப் போகிறது? [26 - June - 2007] * "அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) வெளிக் கொணரக்கூடிய திட்டம் மிக முக்கியமானதாகும். அதுதான் மிதவாத தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை காண்பதற்குரிய பேச்சுவார்த்தைக்கு அடிப்படையானதாய் அமையும். சிறுபான்மையினரின் பல மனக்குறைகள் நீங்குவதற்கு வழி பிறக்கும். அதையடுத்து, பயங்கரவாதத்தினை நசுக்குவதற்கு இந்தியா முதன்மையாக சர்வதேச சமூகம் கூடுதலான பங்களிப்பினை வழங்கக்கூடியதாயிருக்கும். ஆக தேசிய இனப்பிரச்சினைக்கு தெரிவானதொரு அரசியல் தீர்வினை அரசாங்கம் முன்வைத்து, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்று, பயங்கரவாத அமைப்புகளை முற…
-
- 2 replies
- 1.5k views
-
-
26.06.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜனாதிபதியின் படங்களை மட்டுமே பஸ்கள், ரயில்களில் வைக்கலாம் [25 - June - 2007] * போக்குவரத்து அமைச்சர் கடும் உத்தரவுஜனாதிபதி படத்தை தவிர வேறெந்த அமைச்சரினதும் படமும் பொதுச்சேவையில் ஈடுபடும் பஸ்களிலும் புகையிரதங்களிலும் ஒட்டப்படவோ, காட்சிக்கு வைக்கப்படவோ கூடாதென போக்குவரத்து அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களிலும் இலங்கை புகையிரத சேவைக்கு சொந்தமான புகையிரதங்களிலும் விளம்பரங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை ஒட்டுவதை தடைவிதித்து போக்குவரத்து அமைச்சர் விஷேட உத்தரவொன்றை பிறப்பித்து…
-
- 10 replies
- 2.4k views
-
-
வியட்நாம், ஈராக்கில் கையாளப்பட்ட மனோதத்துவ உத்திகளை கையாளும் புலிகள் [26 - June - 2007] கிழக்கில் படுதோல்வியை அடைந்திருக்கும் புலிகள் இயக்கம் அண்மைக்காலங்களில் நேரடி யுத்த உத்திகளைக் கைவிட்டு யுத்தம் சம்பந்தப்பட்ட மனோதத்துவ உத்திகளைக் கையாண்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு புலிகள் இயக்கம் போலியான பிரசார உத்தி (False Propaganda Stratergy), போலியான அடையாளம் காணல் உத்தி (False Identity Stratergy) ஆகிய இரண்டு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். இதில் போலியான பிரசார உத்தி படையினர் மனதில் முற்றிலும் மனோதத்துவப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளதுடன், போலியான அடையாளம் காணல் உத்தி, படையினர்களிடையே அரசாங்கம், யுத்தம், பாதுகாப்பு பற்றிய தவறான கருத்துக்களை உருவாக்கி…
-
- 2 replies
- 2.8k views
-