Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. `சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளும் தீர்வே இனநெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்' [06 - June - 2007] * வாசுதேவ நாணயக்கார "தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டத்தினை சமர்ப்பித்து, யுத்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியது, காலத்தின் அவசியத் தேவையாகும்" என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பதுளை நூலக சேவை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீதியமைச்சர் டிலான் பெரேராவின் அரசியல் பிரவேசத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவினையொட்டி, இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் அங்கு மேலும் கூறியதாவது; "இந்நாட்டிற்கு பெரும் அழிவினை ஏற்ப…

  2. ஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டுக்கு தமிழ் பிரதிநிதிகளை அழைக்கவில்லையென கவலை [06 - June - 2007] கடல்கோள் அனர்த்தத்துக்குப் பின்னரான மீள் கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் நிலை தொடர்பாக பிரசல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் கூட்டம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தியிருக்கும் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம், தமிழ்ப் பிரதி நிதிகள் பங்குகொள்ளாத இது போன்ற கூட்டமொன்று பயனுள்ளதாகவோ, முழுமையானதாகவோ இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கின்றது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் ஒன்றுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளையும் ஐரோப்பிய ஒன்றிய அபிவிருத்திக் குழு அழைத்திருக்க வேண்டும் என இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள விட…

  3. கருணா அணி அரசுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக டெய்லி மிரர் செய்தி நிஷாந்தி தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் எதிர்வரும் காலங்களில் தேர்தலில் நின்று அரசுடன் இணைந்து மக்களுக்கு பணியாற்றவுள்ளதாக அவ் அமைப்பின் தலைவர் கருணா அம்மன் தெரிவித்துள்ளதாக ஆங்கிழ நாளிதழான டெய்லி மிரர செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு வன்முறைகள் என்பவற்றை கைவிட்டு மக்களுக்கு பணியாற்ற முன்வந்துள்ளதாக அதன் அம்பாறை மாவட்ட தலைவர் ஐ.பாரதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கிழக்கே மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும் அவை இராணுவ தீர்வின் மூலம் முடிவிற்கு கொண்டுவர முடியாது ஜனநாயக ரீதியாகவே தீர்க்கப்படவேண்டும் நாம் ஆயுதங்களை நமது பாதுகாப்பிற்ககவே …

  4. புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினருடன் யுனிசெஃப் அதிகாரிகள் சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறார் பாதுகாப்புச் சபையினரை கொழும்பு யுனிசெஃப் பிரதிநிதிகள் நேற்று சந்தித்துப் பேசினர். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது. - விடுதலைப் புலிகளிடம் உள்ள வயது குறைந்தோர் தொடர்பான விபரங்கள் - சிறார்களுக்கான யுனிசெஃப் திட்டங்கள் - வான்குண்டுத் தாக்குதல்களின் போது பாடசாலைகளுக்குச் செல்லும் சிறார்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆகியவை குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. சிறிலங்கா வான்படையின் குண்டுத் தாக்குதல்களினால் பாடசாலைகளின் வழமை நிலை பாதிக்கப்படுவது குறித்து தமிழீழ கல்விக் கழகத்தி…

  5. சிறிலங்காவின் செலுத்தப்படாத கடன் தொகை ரூ 34.7 பில்லியன்: விமல் வீரவன்ச சிறிலங்காவின் செலுத்தப்படாமல் உள்ள கடன் தொகை ரூ 34.7 பில்லியன் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற குழுத் தலைவர் விமல் வீரவன்ச சாடியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: நாட்டின் வாழ்க்கைச் செலவீனத்தைக் கட்டுப்படுத்த மகிந்த அரசாங்கம் தவறிவிட்டது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் எரிபொருள் விலைகளும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன. 1977 இல் 5 வீதமாக இருந்த பணவீக்க வீதம் இப்போது 20 வீதமாக உள்ளது. பண மதிப்பு வீழ்ச்சியடையும்போது அரசாங்கத்தின் கடன் தொகை அதிகரிக்கும். தற்போது 34.7 பில்லியன் ரூபாய் கடன் செலுத்தப்படாமல் உள்ளது. அரசாங்கத்தின் வருவாயில்…

  6. Posted on : Wed Jun 6 8:38:54 EEST 2007 நாம் சுதந்திரமாகக் கற்பதற்கு அரசுக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் கோரிக்கை சுதந்திரமாக நாம் கற்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். அதற்குரிய அழுத்தங்களைச் சர்வதேச சமூகம் அரசுக்கு வழங்கி, எமது உரிமைக்குரல் நசுக்கப்படுவதை நிறுத்த உதவ வேண்டும். இவ்வாறு தமிழீழ மாணவர் எழுச்சி நாள் குறித்து விடுத்த அறிக்கை ஒன்றில் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ்.மாவட்டப் பிரிவு கோரியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே மாய்த்து உயிர் நீத்த யாழ்.இந்து அன்னையின் தவப்புதல்வன் பொன்.சிவகுமாரனை நினைவுக…

  7. மாங்குளப்பகுதியில் சிறிலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் மு.சுப்பிரமணியம் இன்று செவ்வாய்க்கிழமை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான மாங்குளப்பகுதியில் புலிகளின் முகாம் என சந்தேகிக்கும் இலக்குகள் மீது தாக்குதல் சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளார். முல்லிக்குளம், விளாத்திக்குளம், கல்மடு போன்ற இடங்கள் மீது தாக்குதல் நடத்தும் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது புலிகளின் தலைவர்கள் கூடும் இடங்கள் தாக்கியழிக்கபட்டுள்ளது என இராணுவம் தெரிவித்துள்ளது. வீரகேசரி

  8. தமிழகத்தில் ஈழத்தமிழரின் அவலவாழ்வு விஜயகாந்த் கட்சிக்கொடி, ஸ்நேகா பிறந்தநாளுக்கு சுவரில் கிறுக்கல் வாழ்த்து என தமிழ்நாட்டிற்குரிய தற்போதைய அடையாளங்களுடன் வரவேற்கிறது தாழையுத்து ஈழத்தமிழர் காலனி (அகதிகள் முகாம்). தென்தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரபல சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்புறத்தில் இருக்கிறது இந்த முகாம். இங்கு வாழும் குழந்தைகள் பலருக்கு இலங்கை தமிழ் பேச வருவதில்லை. தங்களது நாட்டின் நிலை கூட தெரிகிறதா என்பது சந்தேகமே. ஈழத்தின் பேச்சுத்தமிழை மட்டுமல்ல, கலாச்சார அடையாளங்களும் வளரும் குழந்தைகள் அறியாமலே வளர்கிறார்கள். 2006ல் ஓர் அந்திப்பொழுதில் நாம் முகாமிற்குள் செல்லத்துவங்கும் போதே முகாமின் நிலை நமது கண்களுக்கு தெரிகிறது. மண்சுவர்,தென்னை ஓலைகளால் வே…

  9. ஆழிப்பேரலை உதவிகளை தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளன: ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆழிப்பேரலை கட்டுமானப்பணிகளுக்காக கொடுக்கப்பட்ட நிதியை அனைத்துலக அரச சார்பற்ற பல தொண்டர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளதாக முன்னணி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஒக்ஸ்பாம், சிறுவர் பாதுகாப்பு அமைப்பு, விசன் போன்றன உட்பட முன்னணி அனைத்துலக தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு ஆழிப்பேரலை மீள்கட்டுமான உதவியாக 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கையில் இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து பிரசல…

  10. அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. எதிர்ப்பு. சிறிலங்கா அரசாங்கத்தின் அமெரிக்காவுடனான இராணுவ ஒப்பந்தத்துக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யின் விமல் ரட்நாயக்க பேசியதாவது: சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலைகளை அமெரிக்கா பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது. மேலதிகமான யுத்த தளபாடங்களை சிறிலங்காவுக்கு அது வழங்க உள்ளது. இராணுவ உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டுக்குத்தான் இது வழிவகுக்கும். கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே அமெரிக்கா இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் இது தொடர்பிலான ஒரு ஒப்பந்…

  11. தமிழீழத் தேசியத் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்சநேரம் பதிவு http://www.yarl.com/videoclips/view_video....46c9077ebb5e35c

  12. புறக்கோட்டை லொட்ஜ்களில் 25 தமிழர்கள் கைது: 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில். கொழும்பு புறக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள லொட்ஜ்களில் தங்கியிருந்த 25 தமிழர்கள் புறக்கோட்டை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தாம் லொட்ஜ்களில் தங்கியிருந்தமைக்கான உரிய காரணத்தை கூறாததன் காரணமாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதமான் உத்தரவிட்டுள்ளார். -Tamilwin-

  13. தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலைக்கு த. தே. கூட்டமைப்பு கண்டனம். சுனாமி வேலைத் திட்டம் தொடர்பாக கருத்தரங்கு ஒன்றிற்காக கொழும்பிற்கு வந்து கருத்தரங்கு முடிவடைந்து மட்டக்களப்பு செல்வதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பணியாளர்கள் ஆறு பேரில் இரண்டு பேர் கடந்த 01-06-2007 அன்று இராணுவ புலனாய்வுத் துறையினர் என்று சந்தேகிக்கப்படுவோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் இரத்தினபுரி பகுதியில் அவர்களது உடல்கள் வீசப்பட்டுள்ளன. செ. கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 05-06-2007 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலைக்கு கண்டனம் : த. தே. கூட்டமைப்பு கொழும்ப…

  14. பங்களாதேஷ் தனது பிரஜைகளை இலங்கை செல்ல வேண்டாமென அறிவித்துள்ளது. இலங்கையில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாக இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷ் தனது நாட்டுப் பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களைத் தொடர்ந்து விமானச் சேவைகள் குறைவடைந்துள்ளமை மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைகளைக் கவனத்தில் கொண்டே பங்களாதேஷ் அரசாங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் மீது விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தக் கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதால் முக்கியமான காரணங்கள் இருந்தால் அன்றி இலங்கைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள சுற்றுநிருபத்த…

  15. தேர்தல் சீர்திருத்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு: கட்சிகள் பலத்த எதிர்ப்பு சிறீலங்காவில் தேர்தல் சீர் திருத்தங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை நேற்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்த அறிக்கையை பாராளுமன்ற தெரிவிக்குழுவின் தலைவர் தினேஸ் குணவர்த்தன பாராளுமன்றில் சமர்ப்பித்தார். 1. சீர்திருத்த அறி்க்கையில் தொகுதிவாரி முறையில் 140 பேர் வாக்கெடுப்பு பிரிவில் இருந்து தெரிவு செய்யப்படுவர். 2. 70 பேர் மாவட்ட விகிதாரசார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். 3. 15 பேர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுவர். (இதி்ல் 5 பேர் சிறுபாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்) ஏற்கனவே கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எதுவ…

  16. படையினரது 12 உடலங்கள் கையளிப்பு. கிளிநொச்சி அரசசார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தில் வைத்து இன்று காலை 10.30 மணியளவில் கொல்லப்பட்ட படையினரது 12 சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் கிளிநொச்சி ஜ.சி.ஆர்.சி வதிவிட பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. -Sankathi-

  17. வவுனியாவில் 156 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்: லக்ஸ்மன் கிரியெல்ல வவுனியாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சமரில் 156 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகத்துறை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் வசம் 95 சடலங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் இரு டாங்கிகளை எடுத்துச் சென்றுள்ளதுடன் 10 கொள்கலன்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் கனரக ஆயுதங்களையும் அழித்துள்ளனர். உக்கிரமான மே…

  18. பாக்குநீரிணையில் கடற்படை வலுவை இந்தியா அதிகரித்தது வெளிச்சக்திகளின் அச்சுறுத்தலை சமாளிப்பது என்ற போர்வையில் இந்தியா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள வங்காளா விரிகுடாவில் தனது கடற்படைப் பலத்தை அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கடற்படையினரின் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. 'தாஷ' நடவடிக்கை என்ற பெயரில் இந்திய கடற்படையினர் தமது கடற்படை நடவடிக்கைகளை பாக்கு நீரிணையில் முடுக்கி விட்டுள்ளனர். இந்த திட்டத்தில் பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளின் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கிழக்குப் பிராந்திய கடற்படை கட்டளை மையத்தின் குக்றி வகையான ஏவுகணை கப்பல்கள் இரண்டும் மேலதிகமாக பாக்கு நீரிணைப் பகுதியில் சுற்றுக…

  19. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதே கடத்தல்களுக்கான காரணம்: ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் படுகொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள் என்பன நாளாந்த நடவடிக்கையாக தோற்றம் பெற்றுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு அற்றுப்போனதே இதற்கான காரணம் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் சட்டம் சீர்குலைந்துள்ளது. மக்கள் சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துபவர்களை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இது மக்களின் வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எது தொடர்பாகவும் யாருக்கும் நிச்சயமில்லாத தன்மை தோன்றியுள்ளது. இந்த மோசமான நிலமை மக்களின் நாளாந்த வ…

  20. செவ்வாய் 05-06-2007 05:04 மணி தமிழீழம் ஜதாயகன்ஸ கருணா குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களை கொன்றனர் - காவல்துறை கருணா ஒட்டுக் குழுவினரே செஞ்சிலுவைச்சங்க பணியாளர்களைக் கடத்திக் கொலை செய்திருப்பதாகஇ விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது பற்றிக் கருத்துக்கூறிய சப்ரகமுவ மாகாண காவல்துறை பொறுப்பதிகாரி சரத் பெரேராஇ கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கருணா குழுவுக்குச் சொந்தமானது எனக் கூறியிருக்கின்றார். இதேவேளைஇ செஞ்சிலுவைச்சங்க பணியாளர்கள் இருவரும் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டபோது அவர்களுடன் உடனிருந்த ஏனைய நான்கு பணியாளர்களிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மவுன்ற் லவின…

  21. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 19,204 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் எண்ணிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 1983ம் ஆண்டு நவம்பர் 27ம் நாள் தொடக்கம் 2007ம் ஆண்டு மே 15ம் நாள் வரையில் 19,204 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. மாவீரர்களின் மொத்த எண்ணிக்கை மாவட்டம் தொகை யாழ்ப்பாணம் 6929 மட்டக்களப்பு - அம்பாறை 4894 வன்னி 2809 திருமலை …

  22. முன்னாள் அதிபர் சந்திரிக்காவிற்கு பாதுகாப்பு - 69 ஊழியர்கள் மீண்டும் நியமனம். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பிற்காக அதிகாரி ஒருவர் உட்பட, 69 காவல்துறையினர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், முன்னாள் அதிபரின் அலுவலக அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் சிறீலங்காவிற்கு செல்ல இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசு அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சல வாரங்களுக்கு முன்னர் …

    • 6 replies
    • 1.4k views
  23. இலங்கை முஸ்லிம்களுக்கு சொந்தமான நாடு உலமாக்களின் முஸ்லிம் கட்சி உரிமை கோருகிறது [05 - June - 2007] இலங்கை பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான மண் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறி வருவது அப்பட்டமான பொய். அது மிகவும் கண்டிக்கத்தக்க கூற்றாகும். முதல் மனிதன் தோன்றிய வரலாற்றை நோக்குகின்றபோது இந்த மண் முஸ்லிம்களுக்கே சொந்தமானதாகுமென உலமாக்களின் முஸ்லிம் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய `முஸ்லிம் பூர்வீகம்' நூலின் நான்காவது அறிமுக விழா அண்மையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துரை வழங்கும்போதே அவர் இதனைக் கூறினார். `எழுவான்' வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் அதன…

  24. யாழ். குடாவை கைப்பற்ற புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும்: சரத் பொன்சேகா யாழ்ப்பாணக் குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்தால் அது அவர்களுக்கு பேரழிவாகவே முடியும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச சார்பு ஊடகமான 'டெய்லி நியூஸ்' நாளேட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்: அரச படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருவதால் போர் நிறுத்த உடன்பாடானது செயற்திறனற்றதாக உள்ளது. தற்போது போர் நிறுத்த உடன்பாடு என்பது இங்கு இல்லை. போர் நிறுத்தம் தொடர வேண்டும் எனில் விடுதலைப் புலிகள் தம்மை பலப்…

    • 11 replies
    • 2k views
  25. செவ்வாய் 05-06-2007 20:51 மணி தமிழீழம் [நிலாமகன்] திருகோணமலை சாம்பல்தீவில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு திருகோணமலை சாம்பல்தீவுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை சாம்பல்தீவு சல்லித்தோட்டப் பகுதியில் மீட்கப்பட்ட இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அடையாளம் காண்பதற்காக சடலம் திருமலை பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.