ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
பொலிஸ் நிலையத்தை படம் பிடித்ததாக 6 தமிழ் இளைஞர்கள் அனுராதபுரத்தில் கைது வீரகேசரி நாளேடு அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தினை செல்லிட தொலைபேசி மூலம் படம் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆறு தமிழ் இளைஞர்கள்க நேற்று காலை அனுராதபுரம் பொலிசாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதம இன்ஸ் பெக்டர் சரத்பிரேம கேசரிக்கு தெரிவித்தார். சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வாகரை மற்றும் அந்த பிரதேசங்களை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அனுராதபுரம் பொலிசார் மேலும் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்தினை செல்லிட தொலைபேசி மூலம் படம் பிடிப்பதாக பொலிசாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியதனையடுத்தே இவர்கள் பொலிசாரினால் சந்தேகத்த…
-
- 0 replies
- 893 views
-
-
யசூசி அகாசி யூன் மாதம் சிறீலங்கா பயணம் [புதன்கிழமை, 23 மே 2007, 22:28 ஈழம்] [காவலூர் கவிதன்] யப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி வருகிற மாதம் இலங்கைக்கு வரவிருக்கிறார். கொழும்பிலுள்ள யப்பானிய தூதரகம் விடுத்துள்ள அறிவித்தலில், முறிவடைந்து போயுள்ள பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான பயணமாக இது அமையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சமாதான செயலக அதிகாரிகள் உட்பட, பலரையும் சந்திக்கவுள்ள அகாசி, பின்னர் கிளிநொச்சி செல்வதற்கும் அனுமதி கோரியுள்ளார். எனினும், கிளிநொச்சி செல்வதற்கான அனுமதியை சிறிலங்கா வெளிநாட்டமைச்சு இதுவரை அவருக்கு வழங்கவில்லை என்றும் யப்பானிய தூ…
-
- 1 reply
- 833 views
-
-
அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு தமது அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும். முதற்கட்டமாக உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்கு - கிழக்கில் உள்ள 390,000 மக்களி…
-
- 3 replies
- 1.3k views
-
-
புதன் 23-05-2007 17:37 மணி தமிழீழம் [தாயகன்] நாகர்கோவில் முன்னரங்கில் மோதல் யாழ் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிறிய மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலில், விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக படைத் தரப்பு அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. pathivu
-
- 0 replies
- 1.9k views
-
-
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களால் பூட்டு. Wednesday, 23 May 2007 கொக்குவில் இந்துக் கல்லூரியின் பிரதான வாயில் பூட்டுபோட்டு பூட்டப்பட்டு கிடப்பதாக தெரியவருகின்றது மாணவர்களின் பதிஸ்கரிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. நேற்று காலை பாடசாலை வந்துள்ள பள்ளி நிர்வாகத்தினர் பாடசாலையின் பிரதான நுளைவாயில் பெரிய பூட்டு ஒன்றினால் பூட்டப்பட்டு கிடப்பதை கண்டுள்ளனர். படையினரின் அதிஉச்ச பாதுகாப்புக்கு மத்தியில் மாணவர்கள் துணிந்து சென்று நள்ளிரவு கதவுகளை பூட்டி தமது எதிர்ப்பை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக தெரியவருகின்றது தமிழ் ஒசை
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழ் குடாவுக்கு அனுப்பப்பட்ட 20 பேரூந்துக்களில் 11 பேரூந்துக்கள் படையினரால் கையகப்படுத்தல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ''லங்கா முடித'' கப்பலில் யாழ் குடாநாட்டுக்கு பொதுமக்களின் பாவனைக்கெனக் கொண்டு செல்லப்பட்ட இருபது பேரூந்துகளில் ஒன்பது பேரூந்தை மட்டும் பொதுமக்கள் பாவனைக்காக வடபிராந்திய போக்குவரத்து சபையிடம் கையளித்து விட்டு மிகுதியை கையகப்படுத்தி தமது பாவனைக்கு பயன்படுத்திவருகின்றனர். சிறீலங்கா படையினர் தற்போது மாத்திரமல்லாது பொதுமக்களது போக்குவரத்து பேரூந்துக்களை பலதடவைகள் தமது பாவனைகளுக்காக உபயோகித்து வருவது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/
-
- 2 replies
- 931 views
-
-
ஏவி.எம். பேரனுக்கு புலிகள் பெயரில் மிரட்டல் மே 23, 2007 காரைக்குடி: மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியாரின் கொள்ளுப் பேரனுக்கு விடுதலைப் புலிகள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஏவி.எம்மின் கொள்ளுப் பேரன் பழனியப்பன். இவர் காரைக்குடி சூடாமணி புரத்தில் வசித்து வருகிறார். சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார் பழனியப்பன். 2 நாட்களுக்கு முன்பு பழனியப்பன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், உங்களுக்கு ஒரு தபால் வரும் அதைப் பிரித்துப் பார், நான் காரைக்குடி முத்துப்பட்டணத்திலிருந்து பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார். அத…
-
- 3 replies
- 2.1k views
-
-
இலங்கை: மனிதாபிமான உதவிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி [புதன்கிழமை, 23 மே 2007, 15:22 ஈழம்] [அ.அருணாசலம்] இலங்கையில் ஏற்பட்டுள்ள உக்கிரமான மோதல்களின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு அவுஸ்திரேலியா அரசு 5.25 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதியானது சுய சேவைகள் மற்றும் அவசர மனிதாபிமான சேவைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் டெளணர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: உலக உணவுத் திட்ட அமைப்பினுடாக நாம் 3 மில்லியன் டொலர்களை வழங்க உள்ளோம். இது அங்குள்ள 400,000 இடம்பெயர்ந்த மக்களின் அவசர உணவுத் தேவைகளுக்கும் வடக்க…
-
- 0 replies
- 934 views
-
-
மாங்குளத்தில் புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் வீரகேசரி இணையத்தளம் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது விமானப்படையினர் இன்று காலை வான் தாக்குதல் நடார்த்தியுள்ளனர். மாங்குளத்திலுள்ள புலிகளின் பயிற்சி முகாம் மீது இன்று காலை 6.45 மணியளவில் விமானப்படையினர் வான் தாக்குதல் நடார்த்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலின் போதான சேதவிபரங்கள் இது வரை தெரியவரவில்லை, எனினும் விமான படையினர் இவ் வான் தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 2k views
-
-
ஓமந்தை சோதனைச் சாவடியில் இருந்து மீண்டும் செஞ்சிலுவைச் சங்க கண்காணிப்பாளர்கள் வெளியேறினர் Wednesday, 23 May 2007 இலங்கையின் வடக்கே கடந்த நான்கு நாட்களாக மூடிக்கிடந்தபின், நேற்றுக் காலை திறக்கப்பட்ட ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடிப் பகுதியில் இன்று மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றினையடுத்து, அங்கு பொதுப் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினர் தமது பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடி ஊடான போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தனித்தனிக் கொடிகள் உருவாக்கப்பட்டு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுனர் பணிமனையில் அவை ஏற்றிவைக்கப்பட்டன. புதிய கொடிகளின் பின்னணியில் பழைய கொடி இலங்கையின் 35 வது குடியரசு தினமான இன்று திருகோணமலையில் கிழக்கு மாகாணத்துக்கான ஆளுனரும் வடக்கு மாகாணத்துக்கான பதில் ஆளுனருமான மொஹான் விஜேவிக்கிரம அவர்களின் அலுவலகத்தில் நடந்த சிறப்பு நிகழ்வு ஒன்றிலேயே இந்தக் கொடிகள் தனித்தனியாக ஏற்றிவைக்கப்பட்டன. வட மாகாணக் கொடி முன்னைய இணைந்த வடகிழக்கு மாகாணத்தின் கொடியில் யாழ் மற்றும் மீன் சின்னம் ஆகியன இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது வடமாகாணத்துக்கான கொடியில் சூரியன…
-
- 4 replies
- 2.1k views
-
-
தமிழர்களுக்குரிய நியாயமான உரிமைகள் கிடைக்க உதவுமாறு புதிய பிரிட்டிஷ் பிரதமரிடம் கோரிக்கை லண்டன் தமிழர் குழு கோடன் பிறவுணுடன் சந்திப்பு லண்டனில் இருந்து குமரன் லண்டன், மே 23 ஈழத்தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகள் கிடைப்பதற்கும், அவர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறவும் உதவுமாறு பிரிட்டனின் புதிய பிரதமராக அடுத்த மாதம் பதவியேற்கவுள்ள, ஆளுங்கட்சியான தொழிற்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கோடன் பிறவுணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடன் பிறவுணை அவரது (நிதி அமைச்சு) அலுவலகத்தில் லண்டனில் வாழும் தமிழ்ப் பிரமுகர்கள் குழு ஒன்று நேற் றுச் சந்தித்தது. அப்போதே மேற்கண்ட வேண்டுகோள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு கிடைப…
-
- 1 reply
- 974 views
-
-
புதன் 23-05-2007 13:39 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் தமிழர் ஒருவர் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார் முன்னாள் யாழ் செயலக ஊழியரும் தற்போது கொழும்பு ராஜகிரியவில் வசித்து வருபவருமாகிய 30 அகவையுடைய கணேசன் உசாநாத் கடந்த ஞாயிறு முதல் காணாமல் போகடிகக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது குழந்தைக்கு பால்மா வாங்குவதற்காக கடைக்கு சென்றபின் காணவில்லை என இவரது மனைவியால் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. இவர் யாழ்ப்பாணம் சங்கரப்பிள்ளை வீதி ஆனைக்கோட்டையை சேர்ந்தவர் எனவும் ராஜகரியவில் சேர்ச் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் எனவும் தெரியவருகிறது. pathivu
-
- 0 replies
- 977 views
-
-
இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை: ஜாதிக ஹெல உறுமய [செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:38 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் இனப்பிரச்சினை என்பதே இல்லை என்ற விடயத்தில் நாங்கள் உறுதியாக முன்வைக்கின்றோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிசாந்த சிறீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய தயாரித்துள்ளது. எமது கட்சியின் யோசனைகள் அடுத்தவாரம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். தற்போது தீர்வுயோசனைகள் சட்ட நிபுணர்களின் ஆராய்வுக்குட்பட்டு வருகின்றன. எமது யோசனைகளின்படி ஒற்றையாட்சி என்ற கட்டமைப்பின் கீழேயே நாட்டின் ஆட்சிமுறைமை இருக்கவேண்டும். இந்த நாட்…
-
- 5 replies
- 1.6k views
-
-
மாணவர் கடத்தலும், கொலை அச்சுறுத்தலும் இராணுவத்துக்குத் தெரியாமல் நடந்திருக்க முடியாது ஒத்திவைப்பு பிரேரணையை சமர்ப்பித்து மாவை உரை கொழும்பு,மே 23 யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம். அங்கு நடைபெற்ற மாணவர்கள் கடத்தலும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக் கழக சமூகத்தினருக்கு எதிரான கொலை அச்சுறுத்தலும் இராணுவத்திற்குத் தெரியாமல் நடை பெற்றிருக்கவே முடியாது. இவ்வாறு நாடாளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மாவை சேனாதிராசா. மாணவர் கடத்தல், பல்கலைக்கழக சமூகத்தினருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக நேற்றுப் பிற்பகல் சபையில் ஒத்திவைப்புப் பிரேர ணையை சமர்ப்பித்து பேசுகையிலேயே அ…
-
- 3 replies
- 1.1k views
-
-
கருணா குழு மோதலின் பின்னணியில் ஈ.பி.டி.பி. தொடர்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. பிள்ளையான் குழுவுடன் நின்று தீவிரமாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி. கிருபன், ராஜன் ஆகிய இருவரும் டக்ளசுடன் முரண்பட்டு வெளியில் நிற்கிறார்கள். ராஜன், பிள்ளையானைத் தொடர்பு கொண்டுள்ளான். பிள்ளையான் திருகோணமலையில் இராணுவத்துடன் நிற்பதும், ராஜனின் சொந்த இடம் திரு கோணமலை என்பதும். ராஜன் - பிள்ளையான் தொடர்புக்கு வழி ஏற்படக் காரணமாக அமைந்தது. ராஜன் இணைந்து செயற்படுவதாயின் திருமலையில் உள்ள ஈ.பி.டி.பி. கிளையின் செல்வாக்கை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை ராஜனுக்குப் பிள்ளையான் வைத்துள்ளான். இதற்கு அமைய முதற்கட்டமாக ஈ.பி.டி.பி.யில் இராணுவத்துடன் நின்று செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கசிய விடும்…
-
- 6 replies
- 3k views
-
-
இலங்கை அரசைப் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் இப்போது சொல்கின்றன! நாடாளுமன்றில் ஐ.தே.கவின் கிரியெல்ல கொழும்பு, மே 23 முன்னர் விடுதலைப் புலிகளைத்தான் சர்வதேசம் பயங்கரவாதிகள் என்று கூறியது. இப்போது இலங்கை அரசாங்கத்தையும் பயங்கரவாதி என்றே சர்வதேச நாடுகள் சொல்கின்றன. இவ்வாறு தெரிவித்தார் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்றுச் சபையில் கொண்டு வந்த ஒத்திவைப்புப் பிரே ரணை மீது பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். லஷ்மன் கிரியெல்ல தமது உரையில் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெறும் கடத்தல்களுக்கு அரசும் இராணுவமுமே பதில் சொல்ல வே…
-
- 4 replies
- 1.7k views
-
-
தந்தைக்குச் சாப்பாடு கொண்டுசென்ற இளைஞன் சுன்னாகத்தில் வெட்டிக்கொலை யாழ்ப்பாணம், மே 23 சுன்னாகம் ஸ்ரேசன் வீதியில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இளை ஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த திருச்செல்வம் திருபரன் (வயது 19) என்பவரே கொல் லப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிவான் திருமதி ச. இளங்கோவன் சம்பவ இடத்தில் விசாரணை களை நடத்தினார். மின்சார சபையில் பணிபுரியும் தமது தந்தைக்கு இரவு உணவை கொடுத்து விட்டு வீடு திரும்பியவேளை வழிமறித்த இனந்தெரியாத நபர்களால் அவர் வெட்டிக் கொல்லப்பட்டார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார் உதயன்
-
- 1 reply
- 1k views
-
-
திருச்சி 17 வருடமாக தலைமறைவாக இருந்து வந்த விடுதலைப் புலிகள் ஆதரவான, தமிழர் பாசறை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் குமார் என்கிற ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மன்னார்குடி அருகே உள்ள மேலப்பாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் என்கிற ராஜா (42). விடுதலைப் புலிகளுக்கு தீவிர ஆதரவளிக்கும் தமிழர் பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்தவர். கடந்த 1990ம் ஆண்டு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குமார் என்கிற ராஜா முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். தமிழர் பாசறை அமைப்புக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து நிதியுதவி கிடைத்து வந்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு இலங்கையில் வைத்து புலிகள் ஆயுதப…
-
- 0 replies
- 2.9k views
-
-
சிங்களக் காற்று திசை மாறுகிறது! - சோலை ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவ…
-
- 3 replies
- 2.2k views
-
-
நாரந்தனையில் கைதாகிய 6 இளைஞர்கள் கடும் வதைகளுக்கு உள்ளாகினர் சிறீலங்கா கடற்படையினரால் ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆறு அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கடும் வதைகளுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடற்படையினருடன் சென்ற துணை இராணுவக்குழுவான ஈபிடிபியினரும் கடற்படையினருடன் இணைந்து குறிப்பிட்ட இளைஞர்களை தாக்கியுள்ளார்கள். http://www.pathivu.com/
-
- 1 reply
- 935 views
-
-
தமிழக மீனவர்கள் கடத்தல்- சுடப்பட்டது எல்லாமே இந்திய உளவுத்துறையின் நாடகம்தான் என்பதனை திரும்பிவிட்ட தமிழக மீனவர்கள் சொல்லியிருக்கும் வாக்குமூலம் அம்பலப்படுத்தியிருக்கிறது. மீனவர் கடத்தல் தொடர்பான ஒரு செய்தி ஆய்வு: 4 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் 12 பேர் மாயம் 29 மார்ச் 2007: தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி (தினமணி மார்ச் 30: சிறிலங்கா கடற்படை சுட்டு குமரி மீனவர்கள் 4 பேர் பலி களியக்காவிளை, மார்ச் 30: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 மீனவர்கள் உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்த…
-
- 39 replies
- 5k views
-
-
இனப் பன்மைத்துவத்தின் சிறப்பை உணராத தென்னிலங்கை நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளியினரான பேராசிரியர் அமர்ட்டியா சென், இலங்கையின் இன்றைய இழி நிலைமைக்கான காரணத்தை குறைந்த சொற்களில் நிறைவாக வெளிப்படுத்தி படம் பிடித்து காட்டியிருக்கின்றார். ஒஸ்லோ நோபல் நிறுவகத்தில் நேற்று முன்தினம் மாலையில் "வறுமை, யுத்தம் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் இளவேனில் கால உரை ஒன்றை அவர் நிகழ்த்தினார். நோர்வேயின் இளவரசர் மற்றும் கல்விமான்களினால் நிரம்பி வழிந்த அந்தச் சபையில், புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியரான அமர்ட்டியா சென்னிடம் இலங்கை விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பொருளாதார அபிவிருத்திக்காக 1998இல் நோபல் பரிசு பெற்ற சென், இலங்கையின் இன்றைய ம…
-
- 0 replies
- 719 views
-
-
இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து மன்னிப்புச் சபை இன்று அறிக்கை வெளியிடும் லண்டன், மே 23 இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் சம்பவங்களைக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை இன்று அறிக்கை ஒன்றை வெளியிடும். அந்த அமைப்பு இன்று லண்டனில் நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிக்கை வெளியிடப் படும். இலங்கை உட்பட உலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து இந்த அறிக்கை வெளியாகவிருக்கின்றது. குறிப்பாக இலங்கையில் மிக மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த இலங்கை அர சுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைச் சிபார்சு செய்யும் விதத்தில் இந்த அறிக்கை அமையும் என்று அந்த அமைப்பின் பிரதிநிதி ஒருவர் லண்டனில் தெரிவித்தார். உதயன்
-
- 0 replies
- 693 views
-
-
மாணவர் பகிஷ்கரிப்பு நேற்றும் தொடர்ந்தது யாழ்ப்பாணம், மே 23 குடாநாட்டுப் பாடசாலைகளில் பதினொராவது நாளாக நேற்றும் மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்தனர். மூன்று மாணவர்கள் கடத்தப்பட்டமை, மாணவர்களுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை ஆகியன தொடர்பாக மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவது தெரிந்ததே. கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு சுமாராக இருந்த போதிலும் நகரத்தையும்,நகரத்தை அண்டியும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வரவு வீழ்ச்சி கண்டிருந்தது. உயர்தர வகுப்பு மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய வகுப்பு மாணவர்களும் நேற்று அதிக எண்ணிக்கையில் வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நேற் றுத் தற்கா…
-
- 0 replies
- 624 views
-