ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142783 topics in this forum
-
வெள்ளி 18-05-2007 20:28 மணி தமிழீழம் [சிறீதரன்] உடுப்பிட்டிப் படைமுகாம் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகியது வடமராட்சி உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள சிறீலங்காப் படைகளின் படைமுகாம் இன்று மதியம் இனம் தெரியாத ஆயுதாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியது. வீதித்தடைகளை திசைதிருப்பி படைமுகாமிற்கு உட்புகுந்த ஆயுததாரிகள் 15 நிமிடங்கள் வரை படையினருடன் மோதல்கள் இடம்பெற்றுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள் எதுவித இழப்புக்களும் இன்றி அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 2.7k views
-
-
கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன் [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 20:07 ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் …
-
- 0 replies
- 1.2k views
-
-
உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும் நீதிமன்றங்களிலும் சரணடைந்தோர் தொடர்பான விபரங்கள் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களுக்குக் கிடைத்திருப்பதால் தமக்கு படையினரால் உயிர்அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக சரணடைந்தோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ்செய்திகள் தெரிவிக்கின்றன. உயிருக்கு அஞ்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க யாழ்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல இளைஞர்கள் குறித்தும் அவர்கள் பின்னணி குறித்தும் சிறிலங்காப் படைப்புலனாய்வாளர்களின் பிhவு ஒன்று விசாரணைகளில் ஈடுபட்டுஇருப்பதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் உறவினர்களிடமும் படைப்புலனாய்வாளர்கள் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது http://www.sankathi.net/in…
-
- 0 replies
- 1k views
-
-
புலனாய்வுத்துறை அதிகாரியை கண்டுபிடிக்க அனைத்துலக உதவி கோருகிறது சிறிலங்கா இந்தோனேசியாவில் காணாமல் போன சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரி கப்டன் மொகமட் நிலாமைக் கண்டுபிடிக்க அனைத்துலகத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் புலனாய்வுத்துறைப் பிரிவு அதிகாரியாக நிலாம் பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடைவதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக அவர் காணாமல் போனார். இது தொடர்பாக இந்தோனேசிய பாதுகாப்பு தரப்பினரிடம் சிறிலங்கா அரசாங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மொகமட் நிலாம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காணாமல் போயுள்ளார்…
-
- 9 replies
- 3k views
-
-
மாணவர்களை விடுவிக்காதது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும்: மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை. யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் மூவரை சிறிலங்கா கடற்படை கைது செய்து இன்னமும் விடுவிக்காதிருப்பதானது விரக்தி நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவதாகும் என்று யாழ். மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் எச்சரித்துள்ளது. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை: மாணவர்களான சு.யசோதரன், கு.கண்ணன், ந.வேணுகாணன் ஆகியோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே கல்விச் சமூகத்தினதும், தமிழ் பேசும் மக்களினதும் எதிர்பார்ப்பாகும். படைத்தரப்பின் சமாளிப்பு அறிக்கைகளும், போலி வாக்குறுதிகளும் நீலிக் கண்ணீரும் அல்ல. அம் மாணவர்கள் இரகசியமாக தூக்கிச் செல்லப்படவில்லை. ஊரடங்கு நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட உந்துருளி…
-
- 0 replies
- 762 views
-
-
கூட்டாட்சி கோட்பாட்டையும் அமைதி முயற்சிகளையும் குழிதோண்டிப் புதைத்த மகிந்த ராஜபக்ச: கேணல் ஹரிகரன். இலங்கையில் கூட்டாட்சி கோட்பாட்டும் அமைதி முயற்சிகளும் மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள தீர்வுத் திட்டத்தின் மூலம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த போது அதன் புலனாய்வுப் பிரிவு தலைவராக செயற்பட்ட ஹரிகரன் இணையத்தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத் தலைவராகக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது இனப்பிரச்சனைக்கானத் தீர்வுத் திட்டத்தை அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு அனுப்பியுள்…
-
- 0 replies
- 765 views
-
-
பரந்தனில் புலிகளின் குரலின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு நிகழ்வு [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 19:30 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புலிகளின் குரல் நிறுவனத்தின் ஊரெங்கும் ஒலிவெள்ளம் சிறப்பு ஒலிபரப்பு பரந்தனில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. இரண்டாம் நாள் ஒலிபரப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கியது. நிகழ்வில் பொதுச்சுடரை புலிகளின்குரல் விசுவமடு மன்றத் தலைவர் மு.கந்தசாமி ஏற்ற தமிழீழ தேசியக்கொடியை பரந்தன் பிரதேசப் பொறுப்பாளர் வின்சன் ஏற்றினார். ஈகச்சுடரை போராளி தேவா ஏற்றினார். இன்று இரவு வரை மக்களின் பெரும் பங்களிப்புடன் ஊரெங்கும் ஒலிபரப்பு நடைபெற்றது. மூன்றாவது நாளாக நாளையும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளி 18-05-2007 16:37 மணி தமிழீழம் [மயூரன்] யாழ் பல்கலைக் கழகத்தை மூடி படைமுகாம் அமைக்க இராணுவம் முயற்சி யாழ்ப்பாணம் பல்கலைக்ழகத்தை மூடுவதற்கான முன்முயற்சி நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளார்கள். இதனைக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி சந்திசிறீக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் மற்றும் பல் கலைக்கழக பதில் துனைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பிலும் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அறியவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் ஈ.பி.டி.பி மற்றும் ஆயுத ஒட்டுக்குழுக்களும், பல்கலைக்கழக மாணவர்களின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வரணியில் உந்துருளியில் பயணித்த படை அதிகாரி உட்பட இருவரை காணவில்லை. வரணி படைத்தளத்தில் இருந்து காலை வேம்புராய் படைத்தளத்திற்கு உந்துருளி ஒன்றில் புறப்பட்ட படையினர் இருவர் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகாரி நிலையுடைய படையினர் ஒருவரும் அவரது பாதுகாப்பு சிப்பாயுமே உந்துருளியுடன் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவருகின்றது. நேற்று காலை புறப்பட்டுச் சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வேம்புராய் படைத்தளத்திற்கு செல்லாமையால் இவர்களை படையினர் இப்பிரதேசத்தின் பல இடங்களில் தேடிபார்த்ததாகவும் மாலை வரை இவர்கள் குறித்தான தகவல்கள் எவையும் படையினருக்கு கிடைக்காமையால் இவர்கள் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் உயர…
-
- 4 replies
- 2k views
-
-
வவுனியாவில் மூவர் சுட்டுக்கொலை வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:43 ஈழம்] [ப.தயாளினி] வவுனியாவில் மூன்று தொழிலாளர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சந்திரசேகரன் (வயது 28- இரு குழந்தைகளின் தந்தை), சின்னத்துரை விக்கினேஸ்வரன் (வயது 24- 6 மாத குழந்தையின் தந்தை) மன்மோகன் மோகன்தாஸ் (வயது 24) ஆகியோர் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் அவர்களின் வீடுகளிலிருந்து கடத்தப்பட்டனர். தமிழை சரளமாகப் பேசிய ஆயுதக்குழுவினரே கடத்தலில் ஈடுபட்டதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மூவரினது உடல்களும் துப்பாக்கிச் சூட…
-
- 1 reply
- 3.5k views
-
-
மோசமான பாதுகாப்பு சூழ்நிலையால் யாழ். பல்கலைக்கழகம் மூடப்படும் அபாயம் யாழ். குடாநாட்டில் எழுந்துள்ள மோசமான பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மீண்டும் மூடப்படும் நிலைமை தோன்றியுள்ளது. யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ள நிலையில், அங்கு கல்வி பயிலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாட சாலை மாணவர்களையும் விடுவிக்குமாறு கோரியும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவான சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிட்ட மாணவர் சமூகம் தமது கல்விச் செயற்பாடுகளைப் பகிஷ்கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஏறாவூரில் மின்மாற்றி தகர்ப்பு [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 15:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஏறாவூர் - களுவங்கேணி வீதியிலுள்ள மின்மாற்றியை அடையாளம் தெரியாதோர் தகர்த்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நடந்ததாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் ஏறாவூர் சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார். புதினம்
-
- 0 replies
- 757 views
-
-
நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிடால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு செல்லுங்கள் வீரகேசரி நாளேடு மக்களின் பிரச்சினைகள் யுத்தத்தால் மூடிமறைக்கப்படுகின்றன என்கிறது ஐ.தே.க. மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த எதிர்கொள்கின்ற துன்பங்களை பார்க்கும் போது நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. நாட்டைக்கொண்டு நடத்த முடியாவிட்டால் பொறுப்புக்களை எம்மிடம் ஒப்படைத்து விட்டு வீடு செல்லுமாறு இந்த அரசாங்கத்தை கோருகின்றோம். நாட்டை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் எம்மிடமிருக்கின்றன என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்றன. அனைத்…
-
- 1 reply
- 1.4k views
-
-
நேச நாடுகளின் உதவியை அரசாங்கம் நிராகரிக்காது உள்நாட்டு கொள்கைகளை விலைபேசும் வெளிநாட்டு உதவிகளை மட்டுமே ஜனாதிபதி தேவையில்லையெனக் கூறியதாகவும் ஒட்டுமொத்தமாக வெளிநாட்டு நிதிகள் எதுவும் தேவையில்லையென ஜனாதிபதி கூறவில்லை என்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவன தலைவர்களை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் ஜனாதிபதி சந்தித்தபோது வெளிநாட்டு உதவிகளில் இலங்கை அரசாங்கம் தங்கியிருக்கப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்தக் கருத்து குறித்து நேற்று அர சாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் இலண்டன் `பி.பி.சி.'யி…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆட்சியாளருக்கும் ரணிலுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை தற்போதைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்குப் பதிலாக ஏற்கனவே இராணுவ மேஜராக இருந்த காலத்தில் அதிகார துஷ்பிரயோகங்களும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்கு முறைகளுக்காகவும் பல வழக்குகளையும் குற்றச்சாட்டுகளையும் சந்தித்த ஜானக பெரேராவை சிபார்சு செய்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் தனக்கும் தற்போது நாட்டை ஆளும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார் என ஆட்கடத்தல்களுக்கெதிரான மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் ஐக்கிய சோஷலிச கட்சியின் செயலாளருமான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; ஆட்கடத்தல்கள் ,கொலைகள் மூலம் தற்பொழுது நிர்வாகம் இடம…
-
- 1 reply
- 1k views
-
-
மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வு அடுத்த ஆண்டு ஓகஸ்டில் தொடங்கும் மன்னார் கடற் படுக்கையில் எண்ணெய் அகழ்வு வேலைகள் 2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்ப மாகும். இதற்கான கேள்விப் பத்திரங்களை கோருவதற் கான சட்ட திட்டங்கள் மற்றும் நிபந்தனைகள் தொடர் பான ஆவணங்கள் தயாரிக்கும் வேலைகள் இப்போது நடைபெற்று வருகின்றன இவ்வாறு பெற்றோல், பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்றுத் தெரிவித்தார். பெற்றோல், பெற்றோலிய வள அமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இது குறித்து தொடர்ந்து தகவல் தருகையில் கூறியதாவது: எண்ணெய் வளம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள மன்னார் கடற்படுக்கை எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இவற்றில் ஒரு பிரிவு இந்தியாவுக்கும், இன்னொரு பிரிவு சீனாவ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மனித உரிமை அமைப்புகள் மீது அரச சமாதான செயலகம் சீற்றம் அரசாங்கம் வெளிப்படையாகவும் முனைப்போடும் மனித உரிமை மீறல் களில் ஈடுபட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டு கின்ற சர்வதேச மனித உரிமை நிறு வனங்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் புரியும் மனித உரிமை மீறல்கள் குறித்து வாய் திறக்காது இருந்து வருவதாக அரச தரப்புக் கடுமையாகக் குற்றஞ்சாட்டி யுள்ளது. அரசாங்க சமாதானச் செயலகம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் மேற்படி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது டன் அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன் றுக்கு வர எப்போதும் முயன்றுவந்துள் ளது. அவ்வாறான ஒரு தீர்வுக்கு இணங்கு மாறு புலிகள் மீது அழுத்தம் செலுத்தப் படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் விடு தலைக்காகப் போராடுபவர்கள் அல்லர் என்பதை …
-
- 0 replies
- 896 views
-
-
ராஜபக்ஷக்களின் அரசு " மஹிந்த பிறதர்ஸ் அண்ட் கோ' என்ற கம்பனியின் கை களில் நாடு சிக்குப்பட்டுச் சீரழிந்து கொண்டிருப்பதாகப் பிர தான எதிர்க்கட்சியான ஐ. தே. க. குற்றம் சுமத்துகின்றது. அதை நிரூபிப்பது போல மஹிந்த குடும்பத்தவரின் அதிகாரம் ஆட்சிப்பிடியில் இறுகிவருகின்றது. நிறைவேற்று அதிகாரம் என்ற அசைக்கவே முடியாத வலிமையை வைத்துக்கொண்டு நாட்டைத் தனது குடும் பத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் கைங் கரியத்தை மிகச் செவ்வனே நிறைவேற்றி வருகின்றார் இலங் கைத் தீவின் தலைவர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும், அரசு, நாடு மற்றும் அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தளகர்த்தராகவும் இருப்பவர் பேர்ஸி மஹிந்த ராஜபக்ஷ. தவிரவும், நாட்டின் அறுபது வீத நி…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகளின் படகை மாலத்தீவு கடலோரப் பாதுகாப்புப் படையினர் சுட்டு மூழ்கடித்தனர். இருப்பினும் அதில் வந்த ஒரு நபர் மலையாளத்தில் பேசியதால் அவர்கள் உண்மையில் விடுதலைப் புலிகள்தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அகமது ஷகீது கூறுகையில், மாலத்தீவு கடல் எல்லைக்குள் வந்த அன்னிய படகை எங்கள் கடற்படை சுட்டு மூழ்கடித்தது. அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், படகில் இருந்த ஐந்து பேரில் ஒருவர் தானாக முன்வந்து மாலத்தீவு படையினரிடம் சரணைடந்தார். அவர் கூறுகையில், மற்ற நான்கு பேரும் தனது படகை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி ஏறியாதகவும் துப்பாக்கிகள், க…
-
- 9 replies
- 3k views
-
-
புலிகளின் வான்தாக்குதலை எதிர்கொள்ள மிக் - 29 கொள்வனவு இல்லை: மகிந்து [வியாழக்கிழமை, 17 மே 2007, 15:03 ஈழம்] [ப.தயாளினி] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை எதிர்கொள்ள மட்டுமே மிக்-29 வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யவில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் சிறிலங்கா ஊடக ஆசிரியர்கள் மற்றும் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் கூறியதாவது: புலிகளின் வான்தாக்குதலை எதிர்கொள்ள மிக் - 29 நவீனரக வானூர்திகளை அரசாங்கம் அவசரமாகக் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கவில்லை. வான்படையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏற்கனவே திட்டமிட்டவாறே அவை கொள்வனவு செய்யப்படவுள்ளன. புலிகள் வான் தாக்குதலைத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
வரவு-செலவு திட்டத்தில் 75 வீதம் மகிந்த சகோதரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது: ஐ.தே.க [வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 05:36 ஈழம்] [கலாநிதி என்.மாலதி] பொது வானூர்தித்துறை மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சராக சமல் ராஜபக்சவை நியமித்ததன் மூலம் ராஜபக்ச சகோதரர்கள் நாட்டின் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 75 வீதத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் முன்னணி உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல ஊடகத்துறையினருக்கு தெரிவித்துள்ளதாவது: இதற்கு முன்னர் அவர்கள் வரவு-செலவுத் திட்டத்தில் 65 வீதத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர். ஏனெனில் அதிக எண்ணிக்கையான திட்டங்கள், நிறுவனங…
-
- 0 replies
- 803 views
-
-
மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்: யாழ். ஆயர் வலியுறுத்தல் யாழ். கல்விச் சமூக செயற்பாடுகள் மீளத் தொடங்கப்பட வேண்டுமாயின் கடத்தப்பட்ட மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று யாழ். ஆயர். தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் வலியுறுத்தியுள்ளார். யாழில் அமைதிக்கான மக்கள் குழு பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தின் யாழ். தளபதி ஜி.ஏ.சந்திரசிறிக்கும் இடையே நேற்று புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு நடந்த சந்திப்பின் போது இது வலியுறுத்தப்பட்டது. இரு மணித்தியாலங்கள் நடைபெற்ற இச்சந்திப்பில் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் பி.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் எஸ்.பரந்தாமன் ஆகியோர் பங்கேற்றனர். யாழ். குடாநாட்டில் 4 பாடசாலை உயர் வகுப்பு மாணவர்கள் கடத்தப்பட்டமை குறித்தும் யாழ…
-
- 0 replies
- 800 views
-
-
இலங்கை மீது அமெரிக்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் கருதிய கரிசனை இல்லை [17 - May - 2007] * வாஷிங்டனின் முன்னாள் தூதுவர் லன்ஸ்டெட் அமெரிக்காவிற்கு இலங்கை குறித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களோ அல்லது பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்ட அக்கறையோ இல்லையென கொழும்பிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஆசியா பவுண்டேஷனுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தென்னாசியாவின் ஏனைய நாடுகளுடன் உள்ளது போன்று கேந்திர நலன்களை அடிப்படையாகக் கொண்ட இராணுவ உறவு இலங்கையுடன் அமெரிக்காவிற்கு கிடையாது என தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுகின்றன: சிறிலங்கா குற்றச்சாட்டு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் செயற்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா சமாதான செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்துலக மனித உரிமை சட்ட விதிகள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீறுகின்ற போது அனைத்துலக நிறுவனங்கள் அதனை புறக்கணித்து விடுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். ஆனால் செத்துப்போன கனவை அடைவதற்காக அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
காலக்கணிப்பு http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai&file=130507
-
- 2 replies
- 1.7k views
-