Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளைவத்தையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது. கொழும்பு வெள்ளைவத்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் வட பகுதியைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நான்கு யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். நேற்று மாலை 5 மணிக்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளைவத்தை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தங்களை அடையாளப் படுத்தத் தவறியதாலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளைவத்தை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். -Pathivu-

  2. துறைமுகம் மற்றும் வானூர்தித்துறை அமைச்சராக மகிந்தவின் சகோதரர் நியமனம் [புதன்கிழமை, 16 மே 2007, 17:14 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் வானூர்தி மற்றும் துறைமுக அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்புக்கு முன்னர் சமல் ராஜபக்ச, அமைச்சராகப் பதவியேற்றார். இப்பதவியேற்பின் போது ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்ப, மகிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சந்திரபால லியனக ஆகியோர் உடனிருந்தனர். மகிந்தவின் அமைச்சரவையில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்மேலாண்மை அமைச்சராக இதுவரை சமல் ராஜபக்ச பொறுப்பு வகித்து வந்தார். மகிந்தவுடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து …

  3. வான் தாக்குதலுக்கு செய்மதி நிழற்படங்களைப் பயன்படுத்தினர் புலிகள் - இந்தியன் எக்ஸ்பிறஸ். தமிழீழ விடுதலைப் புலிகள் செய்மதிப் நிழற்படங்களின் உதவியுடனேயே வான் தாக்குதல்களை மேற்கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிறஸ் செய்தி நாளேடு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் தமக்கான இலக்குகளை தேர்ந்தெடுக்க வர்த்தக செய்திமதியின் தொழிற் நுட்பத்தைப் பயன்படுத்தும் ஆற்றலையும் பெற்றுள்ளதாகவும் அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Pathivu-

  4. கொள்ளையனை துரத்தி பொலிஸார் சூடு அப்பாவி குடும்பஸ்தர் உயிரிழந்தார் வவுனியா காமினி வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொள்ளையனொருவனைத் துரத்திச் சென்ற பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிக் குடும்பஸ்தரொருவர் கொல்லப்பட்டுள்ளார். பண்டாரிக்குளம் பகுதியில் கடந்த சனிக் கிழமை இரவு இடம்பெற்ற கொள்ளை முயற்சியின்போது மூவர் பிடிபட மேலும் சிலர் தப்பியிருந்தனர். இவ்வாறு தப்பியவர்களில் ஒருவர் காமினி வித்தியாலயத்திற்கு அருகில் வீடொன்றிலிருப்பதாக நேற்று மாலை பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. இதையடுத்து மாலை 5.30 மணியளவில் மேற்படி வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்தபோது அந்தக் கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதையடுத்து பொ…

  5. இந்திய மீனவரை இலங்கை கடற்படை சுடுவதாக கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி குற்றச்சாட்டு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினரே சுட்டுக் கொல்வதாக குற்றம் சாட்டியுள்ள இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி ராமன் பிரேம்சுதன், அண்மையில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லையென்றும் கூறினார். இந்திய கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள ராமன் பிரேம்சுதன் திங்கட்கிழமை அடையாறிலுள்ள கடற்படைத்தளத்தில் வைத்து வழங்கிய பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவேயுள்ள பாக்கு நீரிணைப் பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு அதிகரி…

  6. யாழ்.கல்விச் சமூகத்துக்கான கொலை மிரட்டல் குறித்து வெளிநாட்டுத் தூதர்களை கூட்டமைப்பு சந்திக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகச் சமூகத்துக்கு விடப்பட்டுள்ள கொலை மிரட்டல் தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களை உடனடியாக நேரில் சந்தித்து அவர்களது கவனத்திற்கு கொண்டுவருவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்களென 323 பேருக்கு `நாட்டைக் காக்கும் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்ப…

  7. கடற்பிராந்திய உரிமையை இலங்கை இழக்கும் சாத்தியம் [16 - May - 2007] அண்மையில் "நமது தேசமும் கடல்பிராந்தியமும்" எனப்படும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா அதற்குரிய கடற்பிராந்திய உரிமையை பரந்த அளவில் இழக்கக்கூடிய சூழ்நிலையும் சாத்தியப்பாடும் உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது பற்றி குறித்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்; குறிப்பாக ஸ்ரீலங்காவுக்குச் சொந்தமான கடற்பிராந்தியத்தைப் பராமரித்தல், ஆய்வு செய்தல் சம்பந்தமாக அரசினால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதிகள், நடைமுறைகள் குறைபாடுகளை உடையதாக இருப்பதாகவும் இத்தகைய குறைபாடான நடைமுறைகளாலேயே மேற்படியாக ஸ்ரீலங்கா அதன் கடற்பிராந்திய ஆதிக்கத்தையும் உரிமையையும் இழந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதா…

  8. ~வலியப்போய் ஏமாறுபவர்களும், துணிந்து வந்து ஏமாற்றுபவர்களும்!!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- சில மேற்குலக நாடுகள் சிறிலங்கா அரசு மீது இப்போது கொடுக்கக் தொடங்கியிருக்கின்ற அழுத்தங்கள், தங்களது நலன் சார்ந்தே இருக்கும் என்பதையும், இத்தகைய அழுத்தங்கள் மீது நாம் தேவையற்ற நம்பிக்கைகளை வைக்கக் கூடாது என்பதையும் விளக்குகின்ற தர்க்கங்களை நாம் இந்த வாரம் முன்வைப்போம் என்று, எமது முன்னைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கிணங்க, சில கருத்துக்களை முன்வைத்து இவ்விடயங்களை இவ்வாரம் தர்க்கிக்க விழைகின்றோம். இங்கே மேற்குலகின் தன் நலன் சார்ந்த விடயம் என்னவென்றால், தங்களுடைய அரசியல், பொருளாதார, பிராந்திய நலன்களைப் பாதிக்காத வகையில், இலங்கைத்தீவில், ஏதாவது, ஒரு வகையில் ஷஏதோ…

  9. முழு நாட்டையும் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளிவிடும் நடவடிக்கையில் அரசாங்கம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லையெனத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி முழு நாடும் வறுமைக் கோட்டுக்குள் தள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும் நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்த வண்ணமே காணப்படுவதாகவும் எரிபொருள், சமையல் எரிவாயு, கோதுமை மா போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதால் மக்கள் மீது பாரிய பொருளாதாரச் சுமை சுமத்தப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. …

  10. அரசியல் நோக்கங்களுக்காக அவசர மீள் குடியேற்றம் கிழக்கில் பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு, லட்சக்கணக்கானோரை நாட்டுக்குள்ளேயே இடம்பெயரவைத்து, மனிதப் பேரவல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொழும்பு அரசு, அந்தச் செயற்பாட்டின் மூலோபாயமாக இருக்கும் தனது தந்திரத் திட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகளை காய்நகர்த்தல்களை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டது. அண்மைக்காலத்தில் கிழக்கிலங்கையில் அரசுப் படைகள் மேற்கொண்ட பெரும் தொடர் இராணுவ நடவடிக்கைகளினால் சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் தமது வீடு,வாசல்கள், நிலபுலன்கள், உடைமைகள், சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர். நலனோம்பு மையங்கள் என்ற பெயரில் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களை…

  11. யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான கொலை மிரட்டலுக்கு ஒட்டோவா தமிழ் மாணவர் சமூகம் கண்டனம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு 'நாட்டைக் காக்கும் தேசிய அமைப்பு" என்ற புனைபெயரில், வன்முறையைக் கட்டிக் காக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் விடுத்துள்ள பகிரங்க கொலை மிரட்டலானது ஒட்டாவா தமிழ் மாணவ சமூகத்தை ஆழ்ந்த அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தின் 270 தமிழ் மாணவர்களிற்கும் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகின்றது என்ற ஸ்ரீலங்கா இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான அறிவித்தலை ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் (Academic Soceity of Tamil Students - ACTS) வன்மையாகக் கண்டிப்பதோடு உலகளாவிய கல்விச் சமூகத்தின…

  12. பாரதத் தாயின் கால்விரல் மெட்டியான கச்சதீவை இலங்கை கைப்பற்றியபோது கண்டுகொள்ளாமல் விட்டது முதற்கோணல் [15 - May - 2007] காஷ்மீர் பாரதத் தாயின் முகமென்றால், கச்சதீவு கால்விரல் மெட்டி எனலாம். கச்சதீவின் நீளம் ஒரு மைல், அகலம் அரை மைல். யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ. கச்சதீவில் `டார்குயின்' எனும் பச்சை ஆமைகள் அதிகம். கச்சம் என்றால் ஆமை என்பர். எனவே, பச்சைத் தீவு நாளடைவில் கச்சதீவு ஆயிற்று. 1882 ஆம் ஆண்டிலிருந்து எட்டுத் தீவுகளும் 69 கடற்கரை ஊர்களும் ராமநாதபுரம் சேதுபதிக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் கச்சதீவும் ஒன்று. கிழக்கிந்திய கம்பெனியினர் ராமநாதபுரம் சேதுபதியிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குத்தகை நிலமாக கச்சதீ…

  13. கருணா குழு முகாம்களை உடனே மூட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல் [புதன்கிழமை, 16 மே 2007, 05:58 ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா அரசாங்கப் பகுதிகளில் உள்ள இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முகாம்களை உடனே மூட வேண்டும் என்று அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. படையணிகளில் சிறார் சேர்ப்பு குறித்து அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையத்தின் பாதுகாப்பு சபைக்கான செயற்பாட்டுக் குழு வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவினரின் செயற்பாடுகள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதி ஜோ பெக்கர் தெரிவித்துள்ள கருத்து: இலங்கையின் கிழக்குப் …

  14. மருந்துவகைகள் எடுத்துசென்ற இரண்டு லொறிகள் ஓமந்தையில் தடுத்துவைப்பு [Wednesday May 16 2007 07:08:34 AM GMT] [யாழ் வாணன்] ஓமந்தை சோதனைச்சாவடியூடாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்துக

  15. என்ன... ஊடக சுதந்திரம் இல்லையா...? பத்திரிகைகள் என்னைத் தினமும் விமர்சிக்கின்றன அதைப் பொறுத்துக்கொண்டுதானே இருக்கிறேன்! கொழும்பு, மே 15 ""நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லையா? யார் சொன்னது? பத்திரிகைகள் எல்லாம் என்னைத் தினமும் விமர்சிக்கின்றனவே. அதற்கு நான் ஏதாவது கேட்டேனா? பொறுத்துக்கொண்டுதானே இருக்கிறேன். பிறகேன் ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்கிறார்கள்...?'' இப்படிக் கேள்விகளை அடுக்கியிருக்கிறார் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இளம் பிக்குமார்களுக்கான சமய வைபவம் ஒன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார் ஜனாதிபதி. அதன்போதே ஊடகங்கள் தொடர்பான தனது ஆதங்கங்களை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அனைத்து இன…

  16. மர்ம விமானம் தரையிறங்கியதாகத் தகவல்; கேகாலையில் பொலிஸார் தீவிர தேடுதல் கொழும்பு,மே 15 கேகாலைப் பகுதியில் மர்ம விமானம் ஒன்று மலைப்பகுதியில் தரையிறங்குவதுபோல தாழப் பறந்ததைக் கண்டதாக சிவிலியன் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து நேற்று பொலிஸார் அந்த மலைப்பிரதேசத்தில் தீவிர தேடுதல்களை மேற்கொண்டனர். கேகாலை பொலிஸ் பிரிவில் புலத்கோபிட்டிய என்ற மலைப் பகுதியை விமானம் ஒன்று தாழப்பறந்து கடந்து சென்றதை நேற்று அதிகாலை 4.00 மணி யளவில் கண்டார் என்று அந்த சிவிலியன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள் ளார். பொலிஸ் அவசர பிரிவின் "116' என்ற தகவல் சொல்லும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே குறிப்பிட்ட சிவிலியன் இந்த மர்ம விமானம் பற்றிய தகவலை வழங்கினார். இதனையடுத்து கேகாலை பொலிஸ் பிரிவில் குறிப்பிட்…

    • 8 replies
    • 3.2k views
  17. போசாக்கின்மைக்கு யாழில் 185 சிறார்கள் பாதிப்பு [புதன்கிழமை, 16 மே 2007, 05:55 ஈழம்] [ப.தயாளினி] யாழ்ப்பாணத்தில் போசாக்கின்மைக்கு 185 சிறார்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாண பிரதி சுகாதார சேவைகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கோப்பாய் மற்றும் ஊர்காவற்றுறை சுகாதர பிரிவுகளைச் சேர்ந்த சிறார்களே இத்தகைய பாதிப்புகளுக்குள்ளாகியுள்ள

  18. யாழில் பேரூந்து தீக்கிரை [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 08:09 ஈழம்] [யாழ். நிருபர்] யாழ். மருதனார்மடம் விவசாயக் கல்லூரிப் பண்ணைக்கு அருகில் மாணவர் குழுவினரால் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்றது. மருதனார்மடம் உரும்பிராய் வீதியில் சென்று கொண்டிருந்த 64 ஆம் இலக்க பாதைக்கான பேரூந்தினை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பயணிகளை இறக்கிவிட்டு எரியூட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. பேரூந்து எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து 500 மீற்றர் தொலைவில் சிறிலங்காப் படைப் புலனாய்வுத்துறையினரின் முகாம் உள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை துண்டு…

  19. புதன் 16-05-2007 03:39 மணி தமிழீழம் [மயூரன்] மல்லாகம் ஈபிடிபி முகாமில் துப்பாக்கி வெடித்தமையால் பதட்டம் நேற்று முன்தினம் மாலை 5.10 மணியளவில் மல்லாகம் ஈ.பி.டி.பி அலுவலகத்தில் உள்ள இராணுவத்தினரின் துப்பாக்கி வெடித்தமையால் அப் பகுதியில் பெரும் பதட்டமான நிலமை காணப்பட்டது. இராணுவத்தினரின் வாகண அணிவருவதற்காக வீதித்தடை செய்யப்பட்ட இருந்தவேளையில் இந்த துப்பாக்கி வெடித்தமையால் குறிப்பிட்ட வீதியில் தடுத்த வைக்கப்பட்டு இருந்த வாகணங்களின் உரிமையாளர்கள் மற்றும் பாதசாரிகளும் பெரும் பதட்டம் அடைந்தனர். அத்துடன் இராணுவத்தினர் அயலில் உள்ள வீடுகள், காணிகளுக்குள் சென்றும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் வீதிக்கடமையில் இருந்த இராணுவத்தினரும் ஓடி தமக்கு பாது…

  20. சிங்களவர்களுக்குத்தான் சிறிலங்கா: அமைச்சர் சம்பிக்க ரணவக்க [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 21:14 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவில் சிங்களவர்கள்தான் வாழ வேண்டும் என்று சிறிலங்காவின் சுற்றுச் சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். மகரகமவில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சம்பிக்க ரணவக்க பேசியதாவது: சிறிலங்காவில் சிங்களவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். சிங்களவர்கள் வரலாற்று இனம். சிங்களவர்களால்தான் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டது. இங்கே இனப்பிரச்சனை ஏதும் இல்லை. இனப்பிரச்சனை என்பதற்கான தீர்வுத் திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தினால் சிங்களவர்களின் அபிலாசைகளைப் புறக்கணிக்கக் கூடாது. அது சிங்களவர்களின் மனநிலையைக் கொண்டே உருவாக்கப்பட…

  21. செவ்வாய் 15-05-2007 02:56 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் இருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் யாழ் குடாநாட்டில் இருவர் கடத்திச் செல்லப்பட்டு, காணாமல்ப் போயிருப்பதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் நேற்று முறையிடப்பட்டுள்ளது. வெள்ளை சிற்றூந்தில் சென்ற படைப் புலனாய்வு ஆயுத தாரிகள் இளைஞரான 22 வயதுடைய இராசலிங்கம் நாகராஜாவை சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் கடத்திச் சென்றுள்ளனர். காரைநகர் தோப்புக்காட்டைச் சேர்ந்த இந்த இளைஞர் தற்காலிகமாக வட்டுக்கோட்டையில் வசித்துவந்த நிலையில் கடத்திச் செல்லப்பட்டார். இதேவேளை, கைதடி தபால் நிலையத்தில் தபால் விநியோகப் பணியாளராகப் பணிபுரிந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் சிவதர்ஸன் என்ற மற்றொரு இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை பட…

  22. ஊடகவியலாளர் சிவராமின் கொலை வழக்கு ஜூலைக்கு ஒத்திவைப்பு அரதரப்புச் சாட்சிகள் சமுகமளிக்காததால் கொழும்பு,மே15 ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவ ராம் கொலை வழக்கு அரசுத் தரப்பு சாட்சிகள் நீதிமன்றுக்கு சமுகம் தராத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று கொழம்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டபிள்யூ.ஏ.ரி. இரத்திநாயக்கா முன்னிலையில் எடுத் துக்கொள்ளப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கும் ஏப்ரல் 28ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தர்ம ரத்தினம் சிவராமைக் கடத்திச் கொலை செய்யத் திட்டமிட்டார் எனவும் கொலைசெய்தார் எனவும் இந்த வழங் கில் ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா(பீற்றர்) என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக் கின்றது. எதிரித் தரப்பின் வேண்டுகோளுக…

  23. மாணவர் கைது குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களின் விடுதலை, பல்கலைக்கழக சமூகத்துக்கு விடுக்கப்பட்ட அச் சுறுத்தல் ஆகியன தொடர்பாக தாம் நடவடிக்கை எடுக்கவுள்ள தாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கு உறுதி அளித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஜனாதிபதி யுடன் நேற்றுமாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்த இரு விடயங்கள் தொடர்பாகவும் கூட்டமைப்பு எழு திய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளதாக வும் யாழ்.மாவட்ட படைத் தளபதியுடன் இது தொடர்பாக பேசி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி தம்மிடம் தெரி வித்ததாக மாவை சேனாதிராசா தெரிவித்தார். ஜனாதிப…

  24. ஒற்றையாட்சியைக் காப்பாற்ற போராடுகின்றனர் இராணுவத்தினரும் காவல்துறையினரும்: அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா [செவ்வாய்க்கிழமை, 15 மே 2007, 19:21 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவின் ஒற்றையாட்சியைக் காப்பாற்ற இராணுவத்தினரும் காவல்துறையினரும் போராடுகின்றனர் என்று அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். வெள்ளவவில் மிபிட்டியவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கும் நிகழ்வில் அவர் பேசியதாவது: ஒற்றையாட்சியைக் காப்பதற்காக மிகவும் முக்கியமான கால கட்டத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் போராடி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரைப் பாதுகாப்பது அனைவரது கடமை. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற மகிந்த ரா…

  25. இரத்மலானையில் படையினருடன் மோதல் ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவர் பலி இரத்மலானை விமான நிலையத்திற்கு சமீபமாக நேற்று திங்கட்கிழமை மாலை இராணுவத்தினருக்கும் இனம் தெரியாத ஆயுதக் குழுவொன்றுக்குமிடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சமரில் ஆயுதபாணிகள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இதன்போது, ஆயுத பாணிகள் இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6 மணியளவில் இரத்மலானை அங்குலானை கொணாகும்புர கடலோரத்தில் இச் சம்பவம் இடம்பெற்றதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர். ஆட்டோ ஒன்றில் சந்தேகத்திற்கிடமான குழுவொன்று செல்வதாகக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து அவ்விடத்தில் கடமையிலிருந்த இராணுவத்தினர் மேற்படி ஆட்டோவை வழி மறித்து நிறுத்திய போது, ஆட்ட…

    • 1 reply
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.