ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
இலங்கை நிலைவரங்களை மீண்டும் நெருங்கி வந்து அவதானிக்க ஆரம்பித்திருக்கும் சர்வதேச சமூகம் இலங்கையின் அரசியல் ஆடுகளம் இவ்வாரத்தில் அதிக பரபரப்பையும் கடும் விவாதங்களையும் உலக நாடுகளின் அவதானிப்பையும் கொண்டதாகக் காணப்பட்டது. ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சிகளும் ஆடிவரும் அரசியல் கள ஆட்டங்களை மக்கள் ஆர்வமற்ற வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆளும் தரப்பினர் எடுக்கும் முடிவுகளும் விடாப்பிடியான செயற்பாடுகளும் தாங்கள் பலமான நிலையில் இருந்து வருவதாகவே எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், நாடு எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளும் மக்கள் கொண்டிருக்கும் கவலைகளும் ஆளும் தரப்பினர் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்மாறானவைகளாகவே இருந்து வருகின்றன. அவை இரண்டு அட…
-
- 0 replies
- 920 views
-
-
கடத்தப்பட்ட மாணவர்களை விடுவிக்க துரித நடவடிக்கை எடுங்கள்! மாவை சேனாதிராஜா எம்.பி. ஜனாதிபதிக்கு அவசர கடிதம் கொழும்பு, மே 12 யாழ்ப்பாணத்தில் கடத்திச் செல்லப்பட் டிருக்கும் பாடசாலை மாணவர்கள் பாதுகாப் பாக விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியிருக்கிறார். இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அவர் அனுப்பியிருக்கிறார். நான்கு மாணவர்களினதும் பெயர் விவ ரங்களைக் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்திருப்பவையாவது: யாழ்ப்பாணத்தில் "கிறீன் காம்ப்' எனப் படும் முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினராலேயே பாடசாலை மாணவர்கள் கட…
-
- 3 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை அமெரிக்கா இடைநிறுத்தியது. சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை இடை நிறுவத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலர் றிச்சட் ஏ பௌச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் நிகழும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக இவ் நிதியுதவியை வழங்கமுடியாது உள்ளதால் இதனை இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் விமான சேவைகளின் இடைநிறுத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் குறைவும், வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு எனத் தெரிவித்தார். …
-
- 7 replies
- 1.9k views
-
-
புதுக்குடியிருப்பில் மிக்-27 யுத்த விமானங்கள் 20 குண்டுகளை வீசின சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மூன்று மிக் - 27 ரக யுத்தவிமானங்கள் கைவேலி புதுக்குடியிருப்பு பகுதி மீது மிலேச்சத்தனமான வான்வழித்தாக்குதல்களை கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தன. இவை காலை 7.30 மணிக்கும் பின்னர் காலை 11.20 மணிக்குமாக இருதடைவைகள் 12 விமானக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன. இரு மிக் - 27 ரக விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மேலும் 8 குண்டுகளை வீசியுள்ளதாகவும் தெரியவருகிறது. இத் தாக்குதலில் ஐந்து வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை இக்குண்டுத் தாக்குதலால் 500ற்கு மேற்பட்ட மாணவர்கள் கைவேலி கணேசா வித்தியாலய மாணவர்களும் பதற்றமடைந்து பதுக்கு குழ…
-
- 0 replies
- 720 views
-
-
கருணா ஒட்டுக் குழுவின் 5 சடலங்களில் ஒன்று இனம் காணப்பட்டது. மட்டக்களப்பு கிரானில் கடந்த புதன்கிழமை மீட்கப்பட்ட ஒட்டுக் குழுவினரின் 5 சடலங்களில் ஒன்று கல்லாறைச் சேர்ந்த 31 வயதுடைய சிந்துஜன் ஒன்றழைக்கப்படும் ஜோன்சன் ஜெயகாந்தன் என்பவரது என அவரது அனைவி அடையாளம் காட்டியுள்ளார். கருணா ஒட்டுக் குழுவிற்குள் ஏற்பட்டுள்ள பிளவின் எதிரொலியாக பிள்ளையான் அணிக்கு ஆதரவாக இருந்த சிந்துஜன் உட்பட 5 பேர் கருணா அணியினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 4 சடலங்களில் ஒன்று பிள்ளையான் அணியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது என நம்பப்படுகின்றது. பெரியகல்லாறிலுள்ள தனது வீட்டிலிருந்து களுவாஞ்சிக்குடியிலுள்ள கருணா ஒட்டுக் குழுவின் முகாமிற்கு…
-
- 19 replies
- 3.6k views
-
-
பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற ஈழம் தொடர்பான வாதம். PART 1-- http://video.google.co.uk/videoplay?docid=...334915002856393 PART 2-- http://video.google.co.uk/videoplay?docid=...105496235307669 PART 3-- http://video.google.co.uk/videoplay?docid=...391142627496029 http://www.nitharsanam.com/
-
- 0 replies
- 805 views
-
-
மக்கள் குடியிருப்புகள் மீது தொடர் கிபிர் விமானத் தாக்குதல். - பண்டார வன்னியன் Friday, 13 April 2007 11:11 மூன்று தடவைகள் புதுக்குடியிருப்பு பிரதேச வான் பரப்பிற்குள் நேற்று பிரவேசித்த சிறிலங்கா விமானப் படையின் மிக் -27 யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து பத்து குண்டுகளை வீசியது. முதற் தடவையாக காலை 8.00 மணிக்கு மூன்று குண்டுகளை வீசியது இதனைத் தொடர்ந்து காலை 8.45 இற்கு மீண்டும் வந்த விமானங்கள் நான்கு குண்டுகளை வீசியது பின்னர் மூன்றாவது தடவையாக 11.10 இற்கு வந்த மிக் விமானங்கள் மூன்று குண்டுகளை வீசியது. இதனால் நேற்று புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ளவர்களும் அதனை அண்டிய பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் அச்சத்தில் காணப்பட்டனர். இத…
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவில் தற்பொழுது முதலீடுகளை மேற்கொள்வது ஆபத்தானது : வெளிநாட்டு முதலீட்டார்கள். விடுதலைப் புலிகளால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல்கள் மூலம், இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக ஏற்பட்டிருந்த பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல்களில் கொலன்னாவ எரிபொருள் களஞ்சிய நிலையம், முத்துராஜவெல ‘ஷெல்’ எரிவாயு உற்பத்தி நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் ஆகியன பாதிப்புகளுக்குள்ளாகியிருந
-
- 1 reply
- 972 views
-
-
தமிழக மீனவர்களின் ஊடுருவலானது புலிகளின் தாக்குதலுக்கு உதவி செய்கிறது: சிறிலங்கா குற்றச்சாட்டு. சிறிலங்கா கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவுவதானது எமது இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு உதவியாக இருக்கிறது என்று சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொல்வதாக இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.எகே.அந்தோணி கடந்த புதன்கிழமை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்து இன்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டுக் கொல்வதற்கு துல்லியமான எதுவித சாட்சியமும் இல்லை என்று தெரிவிக்கப்…
-
- 0 replies
- 935 views
-
-
வான்புலிகளைச் சமாளிக்க வாடகை மிக் - 29 ரக வானூர்தி வான் புலிகளின் தாக்குதல்களால் சிறிலங்காவில் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக மிக் - 29 ரக வானூர்தி ஒன்றை சிறிலங்கா வான்படை அவசரமாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றது. உக்ரேனிலிருந்து அதிநவீன மிக்-29 ரக வானூர்திகள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்தான் அவசரமாக வாடகைக்கு மிக்-29 ரக வானூர்தி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது இறங்கியிருக்கின்றது. மிக்-29 ரக வானூர்திகளைச் செலுத்துவதில் சிறிலங்கா வான்படையினருக்கு அனுபவம் இல்லாமையால், உக்ரேனிலிருந்து வானோடி…
-
- 4 replies
- 2k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
மகிந்தவுடன் அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 11 மே 2007, 14:01 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் ரொவான் டக்ளஸ் வில்லியம்ஸ் சந்தித்துப் பேசினார். மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை இச்சந்திப்பு நடைபெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அரச நிலைப்பாடுகள் விளக்கப்ப்டன. அதன் பின்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஆயர் ரொவான் டக்ளஸ் வில்லியம் கூறியதாவது: இலங்கையின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பன்மைத் தன்மை கொண்ட அரசாங்கமாக இயங்கி வந்தமை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பன்மைத்தன்மையை மீள உருவாக்க முடியும். வேறு தீர்வ…
-
- 0 replies
- 854 views
-
-
குடாக்கடலில் மீன் பிடிக்க நேற்று அனுமதி குருநகர், மே 12 குருநகர் கடற்றொழிலாளர்கள் குடாக் கடலில் மீன்பிடிப்பதற்கு நேற்று வெள் ளிக்கிழமை படையினரால் மீண்டும் அனு மதிக்கப்பட்டார்கள். குடாக்கடலில் வெளிச்சக்கட்டையை அண்டிய பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம் பத்திற்கு உட்பட்ட கடற்பகுதியிலேயே மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டதாக மீன வர்கள் கூறினர். குடாக்கடல் பகுதியில் படையினரால் விதிக்கப்பட்ட கடல் எல் லைப் பகுதியும், மட்டுப்படுத்தப்பட்ட நேர அளவும் வழமையான முறையில் தொழில் செய்வதற்குப் போதாதென்று என்று மீனவர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன உதயன்
-
- 1 reply
- 1.1k views
-
-
2006 மே 13இன் 13 பேர் படுகொலைச் சம்பவம் இரசாயனப் பகுப்பாய்வுக்கான மனுவை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது முதலில் அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவு யாழ்ப்பாணம், மே 12 அல்லைப்பிட்டி, வேலணை, புளியங் கூடல் ஆகிய பகுதிகளில் கடந்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட 13 பேர் தொடர்பான வழக்கில் குற் றப்புலனாய்வுப் பொலிஸார் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இரசாயனப் பகுப்பாளர் குழு ஒன்றை இங்கு அழைத்து வருவதற்கு அனுமதிகோரி, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவையே நீதிமன்றம் நிராகரித்தது. ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் றொக்ஸி முன் இந்த வழக்கு நேற்று விசார ணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த குற்றப்புலனாய்வுப் பொலி…
-
- 0 replies
- 1k views
-
-
"யுனிசெவ்' அதிகாரிகள் யாழ். நீதிவானுடன் நேற்றுச் சந்திப்பு யாழ். மாவட்டத்தில் உயிர் அச்சுறுத் தல் காரணமாக நீதிமன்றங்களில் சரண் அடை பவர்களின் வாழ்க்கை நிலை, சிறுவர் மற்றும் பெண்களின் மனித உரிமை நிலை ஆகியன தொடர்பாக "யுனிசெவ்' அதிகாரி கள் நேற்று யாழ். நீதிவானுடன் ஆராய்ந்த னர். "யுனிசெவ்' அமைப்பின் கொழும்ப அலுவலக அதிகாரி சஜீவா சமரநாயக்க, யாழ். அலுவலக அதிகாரி யோகு உசாலா ஆகியோர் யாழ். நீதிவான் இ. த. விக்னராஜாவை நேற்று நீதிமன்றத்தில் சந் தித்துக் கலந்துரை யாடினர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரண் அடை யும் இளம் வயதினரின் பிரச்சினைகளை அவர்கள் கேட்டறிந்தனர். திருமணம் செய்யாத நிலையில் தாயா கிப் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கை நிலை குறித்தும் அவர்கள் நீதிவானுடன் கலந்துரையாடின…
-
- 0 replies
- 955 views
-
-
மனித உரிமை கண்காணிப்பாளர்களை ஐ.நா. இலங்கைக்கு அனுப்பவேண்டும்! "ஹியூமன் றையிட்ஸ் வோட்ச்' மீண்டும் வலியுறுத்து தொடரும் மோதல்களால் பாதிக்கப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஐ.நா. தனது மனித உரிமைகள் கண் காணிப்பாளர்களை கட்டாயம் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று, அமெ ரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் "ஹியூமன் றையிட்ஸ் வோட்ச்' என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவ்வாறு விடுக்கப் பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ள நிலை யில், மனித உரிமைகள் கண்காணிப்ப கம் மீண்டும் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா தீவிர கவனம் செலுத்துகிறது என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் கான அமெரிக்க …
-
- 0 replies
- 847 views
-
-
தமிழக மீனவர்களின் உயிருடன் விளையாடும் அபத்தப் போக்கு ` பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்கள் படும்பாடு இப் போது பெரும் சர்ச்சையாகியிருக்கின்றது. மீனவர்கள் விவகாரத்தில் இந்தியா கண்ணை மூடிக்கொண் டிருந்தால், ஈழத் தமிழர் தாயகப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் காலாதிகாலமாகத் தமக்கு வாழ்வளித்து வந்த கடல் அன்னையின் மடியில் இறங்கமுடியாமல், அன்றாட ஜீவனோபாயத்தைத் தொலைத்து, அல்லாடுவது போன்ற நிலைமை, தமிழக மீனவர்களுக்கும் கூட ஏற்படும் என்பதை முற்கூட்டியே உரைக்கும் விதத்தில் "தமிழக மீனவர்களின் பாடும் அதே(õ)கதி' என்ற தலைப்பில் இப்பத்தியில் சுமார் இரண்டரை மாதங்களுக்கு முன்னரே மார்ச் முதல் வாரத்திலேயே எச்சரித்திருந்தோம். அதுதான் இப்போது களத்தில் கட்டவிழ்கின்றது போலும். தமிழக ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிதி சேகரிப்பை தடுக்குமாறு சர்வதேசத்திடம் கோருவோரே புலிகளுக்கு இரகசியமாக உதவி [11 - May - 2007] * சாடுகிறது ஐ.தே.க. - எம்.ஏ.எம்.நிலாம் - சர்வதேச சமூகம் அரசு மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் மனித உரிமை மீறல் விவகாரத்தில் அரசு- புலிகள் இருதரப்பினர் மீதும் சர்வதேசம் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது ஆளும் தரப்பினரே குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் அவற்றை மூடி மறைப்பதிலேயே அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பின…
-
- 3 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் அகதிமுகாம் மீது கைக்குண்டுத் தாக்குதல்: 10 பேர் காயம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் அகதி முகாம்மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய கைக்குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இத்தகவலை மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த 4 பெண்கள் உட்பட 10 பேர் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அகதி முகாமில் உள்ள குடும்பத்தினர் கூடாரத்தின் வெளிப்பகுதியில் இருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்த இடத்தில் மறைந்த…
-
- 0 replies
- 612 views
-
-
மன்னாரில் இன்று அதிகாலை படையினரின் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு மன்னார் விளாத்திக்குளம் ஊடாக பரிசங்குளம் நோக்கி இன்று அதிகாலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்டிலெறி எறிகணை, பல்குழல் வெடிகணை ஆகியவற்றின் சூட்டாதரவுடன் விளாத்திக்குளம் ஊடாக பரிசங்குளம் நோக்கி படையினர் முன்னேற முயற்சித்தனர். இம்முயற்சியினை விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளனர். படைத்தரப்பு பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கிச் சென்றுள்ளது http://www.eelampage.com/
-
- 0 replies
- 736 views
-
-
சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் ஆட்கள் கடத்தப்படுதல் கொலைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களை அரசு இயக்குதல் என்று அரசு தரப்பு மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் கண்டித்து அதை நிறுத்த அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் வரை சிறீலங்காவுக்கான நிதி உதவிகளின் குறித்த அளவை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது..! அமெரிக்க சிறப்புத் தூதரின் செய்தியாளர் மகாநாட்டில் இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆதாரம் skynews.
-
- 9 replies
- 2.6k views
-
-
நவீன நீரோ மன்னன் நாடு கெட்டுக்கிடக்கிறது. இரவில் நிம்மதியாகக் கூடத்தூங்க முடியாமல் சனங்கள் பரிதவிக்கிறார்கள். பஸ்ஸில் கலக்கமில்லாமல் பயணம் செய்;யமுடியாது. விதைத்த வயலை அறுக்கமுடியாமல், வீட்டிலிருக்கும் நெல்லையோ அரிசியையோ போய் எடுக்க வழியில்லாமல் அகதி முகாம்களில் சனங்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளில்லை. அப்படியல்ல வீடுகளிருக்கு ஆனால் அவற்றில் இருப்பதற்கு அனுமதி இல்லை. நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் நடக்கவேயில்லை. பாதைகளுமில்லாமல் பயணங்களுமில்லாமல் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் ஒரு தடவையாவது பங்கருக்குள் நுழையாமல் அன்றிரவு படுக்கைக்குச் செல்ல முடியாது. இவ்வளவும் இலங்கைத்தீவில் நடக்கிறது. அதுவும் தமிழ்மக்களுக்குத்தான் …
-
- 0 replies
- 1.5k views
-
-
இராணுவ மயப்படும் அரசியல் அண்மையில் சிறிலங்கா சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் சிறிலங்கா இராணுவத்திற்கு சிவில் நிர்வாக விஷயங்களைக் கையாள்வதற்கான அதிகாரம் இராணுவத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவித்தல் வெளிவந்து சிலமணி நேரத்திற்குள்ளேயே சிறிலங்கா இராணுவ வடபகுதிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ்.குடா நாட்டில் சீரான உணவு விநியோகம் நடைபெறுகிறது எனவும், எரிபொருள் போதியளவு கையிருப்பில் உண்டு எனவும் சிவில் நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது இனி அரச அதிபரால் மேற்கௌ;ளப்பட்ட விடயங்கள் யாவும் இராணுவத்தளபதிகளால் மேற்கொள்ளப்படும். அல்லது, அவற்றின் மேல் இராணுவ அதிகாரிகளின்…
-
- 0 replies
- 934 views
-
-
துணைப்படை இராணுவக்குழுவின் தாக்குதலில் எட்டு பொதுமக்கள் காயம் மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 10.35 மணியளவில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முகாம்களின் மீது சிறீலங்கா இராணுவத் துணைப்படைக்குழு மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட எட்டு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. பதிவு
-
- 0 replies
- 1k views
-
-
திரியாயில் ஆயுததாரிகளால் மூன்று இளைஞர்கள் கடத்தல் திருகோணமலை திரியாயப் பகுதியில் ஆயுததாரிகளால் மூன்று இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நேறிரவு திரியாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளினுள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றம் காணப்பட்டது. பதிவு
-
- 0 replies
- 826 views
-