Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெற்காசியாவில் புதிய சமநிலையை ஏற்படுத்தும் ஈழப்போராட்டம் -சி.இதயச்சந்திரன்- விமானங்கள், உலங்குவானூர்திகளூடாக ஆயுதத் தளபாடங்கள் இரகசியமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. 80 களின் நடுப் பகுதிகளில் தமிழக 'கியூ" பிரிவிற்குத் தெரியாமல் டில்லியிலிருந்து புறப்பட்ட புகையிரதத்தில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் இராமேஸ்வரத்தில் இறக்கப்பட்டு தமக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு 'றோ" வழங்கியமை தற்போது நினைவிற்கு வருகிறது. இந்திய அமைதிப் படைப் பிரசன்ன காலத்திலும் இது நடைபெற்றது. யாருக்கு, எப்போது ஆயுதங்கள் வழங்க வேண்டுமென்பதில் இந்திய உளவுத் துறைக்கும் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெளிவான நிலையொன்று எப்போதும் உண்டு.…

  2. சிறீலங்கா துணைப்படைக்கூலிக் குழுக்களான கருணா – பிள்ளையான் கும்பல்களுக்கு மத்தயில் வெடித்துள்ள உட்பூசல்கள் வெளிநாடுகளில் இயங்கும் உளவாளிகளிடையேயும் பரவியுள்ளது. சிலவாரங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றில் இயங்கிவரும் உளவாளியின் சகா ஒருவர் திருமலை மூதூரில் வைத்து பிள்ளையான் குழுவினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தா

  3. தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகின்றார்களா?-புரட்சி (தாயகம்)- தற்போது தென்னிலங்கையிலே சிங்கள அரச மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் மிகவும் பரவலாகப் பேசப்படும் விடயம் புலிகள் இறுதிப்போருக்குத் தயாராகிவிட்டார்களா என்பதுதான். சில வாரங்களாக கொழும்பு ஊடகங்களிலே இது தொடர்பான கருத்துக்கள் கட்டுரைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துகொண்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. முதலில் சிங்களவர்கள் மத்தியில் இவ்வாறான ஓர் எண்ணம் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்ந்து பார்த்தோமானால் விடுதலைப் புலிகளின் அண்மைக்கால வெற்றிகரமான வலிந்த மற்றும் முறியடிப்பு தாக்குதல்களின் விளைவே சிறிலங்கா அரசையும் தென்னிலங்கையையும் இவ்வாறான ஒரு பயப்பீதியை அவர்கள் மத்தியில் உருவாக்கியமைக்குக் …

  4. விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் குடும்பிமலைப்பகுதியில் கடந்த 36 மணிநேரப்பகுதியில் சிறீலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் 10 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். சிறீலங்கா இராணுவத்தினர் வீரச்சாவடைந்த எட்டு போராளிகளின் உடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது. பாலமடு, மாவடி ஓடை பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது இவர்கள் வீரச்சாவடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா படைகள் கடும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்கா வான்படையினர் கடுமையான வான்வழித்தாக்குதல்களை குடும்பிமலைப்பகுதியில் மேற்கொண்டுவருவதாக தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 4 replies
    • 1.9k views
  5. தமிழர் வெளியேற்றம்: பகிரங்க மன்னிப்பு கேட்டது சிறிலங்கா அரசாங்கம் [ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2007, 18:51 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நடவடிக்கைக்காக சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை வெளியேற்றியது பாரிய தவறு. அந்நடவடிக்கைக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடத்தில் மன்னிப்பு கோருகிறேன். வவுனியாவில் அவர்களை கொண்டு சேர்த்த பின்னரும் சொந்த கிராமங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்களா என்று…

  6. இரேவாடிரவாகக எமக்குத் தெரியாமலேயே நாடு பிரிந்து விட்டதோவென நினைத்தோம்- (தேசியன்) [10 - June - 2007] கொழும்பிலுள்ள தங்குமிடங்களில் (லொட்ஜ்களில்) பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த பல நூற்றுக்கணக்கான வட, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த 07 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்தினராலும் பொலிஸாராலும் பலவந்தமாக வட, கிழக்கு பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் 31 ஆம் திகதி மாலை புறக்கோட்டைப் பகுதியிலுள்ள தங்குமிடங்களின் உரிமையாளர்களை அழைத்த புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மறுநாள் வெள்ளிக்கிழமை காலைவேளைக்குப் பின் வட, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் எவரும் உங்கள் `லொட்ஜ்'களில் இருக்கக் கூடாது. அவ்வாறு தங்கியிருந்தால் நாம் அவர்களை வெளியேற்ற…

  7. தொடர் மௌனத்தின் மூலமாக `டில்லி' வெளிப்படுத்தும் நிலைப்பாடு -(கலைஞன்) [10 - June - 2007] * ஈழப்பிரச்சினையும் இந்தியாவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இலங்கை தொடர்பாக கூறிய கருத்துக்கள் இலங்கை பேரினவாதிகள் மத்தியில் புயலைக் கிளப்பிவிட்டுள்ள நிலையில், அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இலங்கையரசுக்கு எந்த வழிகளில் இராணுவ உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து புது டில்லி தீவிரமாக சிந்தித்து வருகிறது. இலங்கை இந்தியாவை தவிர சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை,இராணுவ தளபாடங்களை வாங்க முற்படக் கூடாதென தான் கூறிய கருத்துத் தொடர்பாக இலங்கையில் ஏற்பட்டுள்ள சீற்ற நிலை குறித்து எவ்வித விளக்கங்களையும் வழங்க இந்திய தேசிய பாதுகாப்பு ஆ…

    • 2 replies
    • 1.7k views
  8. தமிழருக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு! -(அஜாதசத்ரு) [10 - June - 2007] தலைநகர் கொழும்பிலுள்ள லொட்ஜ்களில் தங்கியிருந்த தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களான வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு பலவந்தமாக கடத்திச் சென்று வெளியேற்றிய நடவடிக்கையானது தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்களின் அதிஉச்சக்கட்டமான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே அரசியல் கட்சி பிரமுகர்களாலும் சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளாலும் கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவ வசதி, வெளிநாட்டுப் பயணம் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்காக தலைநகர் கொழும்புக்கு வரும் தமிழர்கள் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருக்க முடியாத பட்சத்தில் தனியார் லொட்ஜ்களிலேயே தங்கியிருக்க…

    • 1 reply
    • 1.1k views
  9. விடுதித் தமிழர் விவகாரத்தை அரசு கையாண்ட இலட்சணம் [10 - June - 2007] இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைவரத்தை கையாளுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறையின் இலட்சணத்தை உலகிற்கு தெளிவாக வெளிக்காட்டுவதாக கொழும்பு தனியார் விடுதிகளில் இருந்து வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளும் அமைந்திருக்கின்றன. தங்களது அத்தியாவசிய அலுவல்களைக் கவனிப்பதற்காக வடக்கு, கிழக்கிலிருந்து பலத்த சிரமங்களுக்கு மத்தியில் கொழும்புக்கு வந்து தங்கியிருந்த தழிழர்களை விடுதிகளில் இருந்து வெளியேற்றிய பொலிஸாரின் செயலை உள்நாட்டிலும் வெளியுலகிலும் நியாயபூர்வமாகச் சிந்திக்கக்கூட…

  10. பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக கேகலிய நியமனம்? சிறிலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவை நியமிக்க அரசாங்கத்தின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை தொடர்பான கேள்விகளுக்கு தற்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சரான பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இருப்பதில்லை என்பதால் கேகலியவையே நியமித்துவிடலாம் என்றும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கேகலிய, என்னை அமைச்சராக்குவதற்கான குறித்த பேச்சுக்கள் இடம்பெறுவதனை அறிவேன். ஆனால் மகிந்ததான் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதனிடையே யுத…

  11. போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து இணைத் தலைமை நாடுகளின் உச்சிமாநாட்டில் ஆராயப்படும் இணைத் தலைமைகளின் மாநாடு எதிர்வரும் 21ம் நாள் நோர்வே ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது. மாநாட்டில் போர் நிறுத்த உடன்படிக்கை, அரச நிர்வாகம், மனித உரிமை மீறல்கள், இரு தரப்பினடையே அதிகரித்துவரும் மோதல்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் படுகொலை, கொழும்பில் தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளது. http://www.pathivu.com/

    • 0 replies
    • 904 views
  12. எரிபொருள்கள் தெற்கிலும் இனி பங்கீட்டு அட்டைகளுக்கே! எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய தெற்கிலும் பங்கீட்டு அடிப்படைக்கு எரிபொருள் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பங்கீட்டு அட்டைக்கு மாதம் 30 லீற்றர் எரிபொருள் வழங்கப்படும். மேலதிகமாக எரிபொருள் தேவையெனின் 25 சதவீதம் அதிக விலை செலுத்தியே எரிபொருள்களைப் பெற முடியும். பெற்றோல், டீசல், மண்எண்ணெய் ஆகிய மூன்று எரிபொருள்களும் இனிமேல் பங்கீட்டு அட்டைகளுக்கு வழங்கப்படும். எரிபொருள்கள் தேவையைக் குறைப்பதற்கும், எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடைமுறை கொண்டுவர உள்ளதாக அரசுடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய நடைமுறை முன்னெடுக்கவும் கண்காணிக்கவும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க …

  13. கொலைகார மஹிந்தரை அப்பாவியாக சித்திரிக்கக் கொழும்பில் முயற்சி கொழும்பு விடுதிகளில் இருந்து அப்பாவித் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக ஜனாதி பதி செயலகம் வெளியிட்ட தகவல் பார்வையாளர்களை ஆச் சரியத்துக்குள் மூழ்கடிக்க வைத்திருக்கின்றது. இந்த இன ஒதுக்கல் நடவடிக்கை ஜனாதிபதிக்கு ஏதோ தெரியாமல் செயற்படுத்தப்பட்டது போலவும், இது குறித்து ஜனாதிபதி அறிந்ததும் பொலிஸ் மா அதிபரிடம் உடன் விளக்கம் கோரியிருக்கின்றார் என்பது போலவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்கள் இப்போது கூறுகின்றன. கடந்த புதன்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் அதாவது வியாழக்கிழமை அதிகாலையில்தான் கொழும்பு விடுதி களிலிருந்து அப்பாவித் தமிழர்களை அள்ளி, பலவந்தமாக அகற்றும் அராஜகத்தை சீருடையினர் மேற்கொண்டனர். …

  14. Posted on : Sun Jun 10 7:37:33 EEST 2007 83 வயதான முதியவருக்கு சோதனைச் சாவடியில் ஏற்பட்ட கதி! அவர் நடப்பதற்கு மிகவும் கஷ்டப் படுகிறார். அவரது வயதின் முதிர்ச்சியை உடலில் காணமுடிகிறது. உற்றார், உற வினர்களின் உதவியின்றி முதியோர் இல்லம் ஒன்றில் வசித்து வருகிறார். அவர் முன்னாள் அரச ஊழியர். அத னால் ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவு கள் சம்பந்தமான விடயங்களுக்கு அங்கு செல்ல வேண்டுமாயின் தாமே வருவ துண்டு. அதிக தூரம் நடக்க முடியாத, பஸ்ஸில் தானும் அடிக்கடி ஏறமுடியாத முதியவர் அவர். அவருக்கு வயது 83. கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் செயலகத்திற்கு வரவேண்டிய தேவை இருந்தது. எவரது உதவியுமின்றித் தாமே வந்தார். அலுவலை முடித்துக் கொண்டு திரும்பியபோது ஏற்பட்டஅனுபவம் அவரை விரக்தியுடன் பேச…

  15. 50,000 பேரை படையில் சேர்க்க சிறிலங்கா அரசு முடிவு: மகிந்த ராஜபக்ச. சிறிலங்கா படையில் மேலும் 50,000 பேரை சேர்ப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது: அரசு கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது. எனவே அமைச்சர்கள் தமது பொறுப்பின் கீழ்வரும் திணைக்களங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதனை நிறுத்த வேண்டும். மேலும் 50,000 பேரை இராணுவத்திற்கு திரட்டுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. எனவே தேவையற்ற செலவுகளை நாம் குறைக்க வேண்டும். பொது நிர்வாக சேவைகளில் பதவி உயர்வுகளை வழங்குவதிலும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவ…

  16. கொழும்பில் தமிழ் மக்கள் வெளியேற்றத்தின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ச. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாயா ராஜபக்சவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் வடக்கு - கிழக்கு மூத்த காவல்துறை உதவி ஆணையாளாரான பாலசுர்யாவினால் அரச அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சுற்று அறிக்கையில் வவுனியாவில் ஜூன் 6 ஆம் நாள் புனர்வாழ்வு முகாம் ஒன்றை அமைக்கும் படி தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜூன் 7 ஆம் நாள் கொழும்பு விடுதிகளில் உள்ள தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த மே மாதம் 31 ஆம் நாள் பாதுகாப்பு அமைச்சில் கோத்தபாய ராஜபச்ச தலைமையில் நடைபெற்ற…

  17. சிறிலங்கா இராணுச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசி வன்னிச் சமரை நடத்திய விடுதலைப் புலிகள்: கொழும்பு ஊடகம் (மேலதிக இணைப்பு) வவுனியாவில் சிறிலங்கா இராணுவச் சீருடையுடன் சரளமான சிங்களத்தில் பேசியபடி சிறிலங்கா இராணுவத்தினரை சுற்றிவளைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. போக்கறுவன்னியில் நடந்த தாக்குதல் குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: கடந்த சனிக்கிழமை (02.06.07) வவுனியாவுக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்றிருந்தார். இராணுவ அதிகாரிகளைச் சந்தித்த சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் ஒரு பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதனை சுட்டிக்காட்டி விவாதித்தார். விடுதலைப் புலிகள், கடந்த சனிக்கிழமை (02.…

    • 1 reply
    • 1.2k views
  18. சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியம் - இணைத்தலைமை நாடுகள் முயற்சி. இலங்கையில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேற்கொண்ட கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து சிறிலங்காஅரசு மீது தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தயாராகுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை தடுப்பதற்கு வியன்னாவிற்கு சென்றுள்ள சிறிலங்காவின் பிரதிநிதிகள் குழு தோல்வியை சந்தித்துள்ளது. அருணி விஜ…

  19. மனைவி விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழ... சிறுநீரக நோயாளியை இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றிய பொலிஸார். கடந்த வியாழக்கிழமை கொழும்பு விடுதிகளில் தங்கியிருந்த தமிழர்களை பஸ்களில் தமிழர் மாவட்டங்களுக்குப் பலவந்தமாகக் கூட்டிச் சென்ற போது, பொலீஸாரும் படையினரும் மனிதாபிமானமற்ற முறையில் கர்ணகொடூரமாக நடந்து கொண்டனர் என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டுவிட்டு விடுதி ஒன்றில் தங்கியிருந்த நோயாளி ஒருவர் அவரது படுக்கையில் இருந்து இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றப்பட்டிருக்கின்றார். தமது கணவர் கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டிய தேவை இருப்பதாக அவரது மனைவி அவரை விடுங்கோ விடுங்கோ எனக் கதறி அழுத போதிலும் அந்த நோயாளியை தள்ளிச் செ…

    • 3 replies
    • 1.6k views
  20. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விலங்குகளைப் போல் பேரூந்துகளில் அடைத்து வடக்கு மற்றும் கிழக்க…

    • 2 replies
    • 1.2k views
  21. சிறீலங்காவுக்கான நிதியுதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்: யசூசி அகாசி. சிறீலங்காவுக்காக நிதியுதவிகளை யப்பான் தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் யப்பானின் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரப்பினருக்கும் விடுதலைப் புலிகள் தரப்பினருக்கும் இடையில் பேச்சுக்கள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என யப்பான் நம்புவதாக யசூசி அகாசி தெரிவித்துள்ளார். அரதரப்பில் மகிந்த ராஜபக்ச உட்பட பலரையும் சந்தித்த நான் இங்க சமாதான உருவாக்கும் பற்றுருதி சிறீலங்காவில் காணப்படுவதாகவும் சிறீலங்காவின் எதிர்காலம் குறித்தும் எதிர்பார்ப்புக்களுடனும் நம்பிக்கையுடனும் நான் யப்பான் செல்கின்றேன் என யசூசி அகா…

    • 9 replies
    • 1.8k views
  22. தமிழ் உணர்வின்மீது சிங்களவாதத்துக்கு மேலான வைரம்பாய்ந்த பகை கொண்டுள இந்துவுக்கு சிங்கள அரசுக்கு எதிராகவரும் கண்டனங்களைக் கண்டு பொறுக்கமுடியவில்லையாம். புதினத்தில் இப்படி இருக்கிறது... என்னே! "இந்து" நாளிதழின் எல்லையில்லா சிங்கள விசுவாசம்!! [சனிக்கிழமை, 9 யூன் 2007, 16:07 ஈழம்] [ப.தயாளினி] தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான "இந்து"வின் சிங்கள விசுவாசம் எல்லையற்றதாக விரிந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இந்தியக் குடிமகனால்தான் "இந்து" நடத்தப்பட்டாலும் அறிவிக்கப்படாத "தமிழ்நாட்டின் சிறிலங்கா தூதரகமாகத்தான்" அது செயற்பட்டு வருகிறது. தமிழருக்கு எதிராக சிங்களவர்களைப் பாதுகாக்க தனது "ஊடக தர்மத்தை" முழுவீச்சில் பயன்படுத…

    • 124 replies
    • 10k views
  23. மகிந்தவின் ஆட்சியில் அமைதி சாத்தியமற்றது: தி எக்கனொமிஸ்ற் [சனிக்கிழமை, 9 யூன் 2007, 15:21 ஈழம்] [பி.கெளரி] சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைதி என்பது சாத்தியமற்றது என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'தி எக்கொனமிஸ்ற்' என்ற இதழ் கருத்து தெரிவித்துள்ளது. அந்த இதழில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கட்டுரையின் முக்கிய பகுதிகள்: மட்டக்களப்பில் உள்ள ஒர் இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்த ராதிகெல (வயது 21) தனது தந்தையார் எவ்வாறு கொல்லப்பட்டார் என விவரித்தார். எனது தந்தையின் இரு கரங்களும் வெட்டப்பட்டன, அவரது வயிற்றுப் பகுதி வெட்டப்பட்டது, பின்னர் புழுதியில் போட்டு அடித்துக் கொன்றனர். அதனை 13 வயதே நிரம்பிய எனது தம்பியை பார்க…

  24. ஆயுதக் கொள்வனவு விவகாரம்: சிங்களவர் எதிர்ப்பும் தமிழரின் எச்சரிக்கையும் Wednesday, 06 June 2007 சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுதம் வழங்குவது சரியே என்ற கருத்துருவாக்கத்தை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரடியாகக் களம் இறங்கியுள்ளார் புதுடில்லியில் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின்னர் சென்னைக்குப் பறந்து வந்து மீண்டும் சென்னையிலும் கருணாநிதியை சந்தித்த எம்.கே.நாராயணன், "இராணுவ தளபாடங்களை இந்தியா அளிக்காவிட்டால், சீனா அல்லது பாகிஸ்தானிடம் அவற்றை பெறப்போவதாக சிறிலங்கா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பிராந்தியத்தில் இந்தியாதான் வல்லரசு. நம்மை சிறிலங்கா அணுகின…

  25. கொழும்பில் தமிழர்களின் வெளியேற்றம். இந்தியாவிற்கு அழுத்தம். Saturday, 09 June 2007 சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும். பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.