ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
புதன் 11-04-2007 01:01 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளின் எறிகணையில் படையினருக்கு பாரிய இழப்பு யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களை நோக்கி விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடுமையான எறிகணைத் தாக்குதலில், படைத் தரப்புக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அரியாலை கிழக்கு, நாவற்குழி, மற்றும் கேரதீவு பகுதிகளிலுள்ள சிறீலங்காப் படை முகாம்களிலுள்ள படையினர் பாரிய தாக்குதல்களுக்கான தயார் படுத்தலில் ஈடுபட்டவந்த நிலையில், அந்த முகாம்கள் மீதே விடுதலைப் புலிகள் கடுமையான ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த எறிகணைத் தாக்குதலால் படைத் தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தாக்குதல் தொடர்பான செய்திகளை படையினர் இருட…
-
- 3 replies
- 2.9k views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசாரம், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் - விடுதலைப் புலிகள் வரவேற்பு சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என விடுதலைப் புலிகள் கூறியிருப்பதுடன், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஏ.எஃப்.பி செய்தி சேவைக்கு கருத்துரைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் …
-
- 0 replies
- 784 views
-
-
புதன் 11-04-2007 01:08 மணி தமிழீழம் [தாயகன்] வடக்கு கிழக்கு அபிவிருத்திக் கூட்டம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்காது, சிறீலங்கா அரசு புறக்கணிப்புச் செய்துள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் முக்கிய ஆலோசகரும், சகோதருமான பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு கிழக்கு மாகான ஆளுநர்கள், அரச அதிபர்களும், பிரதேச செயலாளர்கள் கலந்து கொண்டனர். அத்துடன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஃபேறியல் அஸ்ரப், பசீர் சேகுதாவூத், அமீர் அலி, பிரதி அமைச்சர்கள் மயோன் முஸ்தஃபா, றோஹித அபய குணவர்த்தன, ஃபைசால், மற்றும் ஜே.வி.பியின் திருகோணமலை …
-
- 0 replies
- 669 views
-
-
புதன் 11-04-2007 01:14 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் பல்கலைக்கழக மாணவன் உட்பட இருவர் கடத்தப்பட்டுள்ளனர் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் முதல் காணாமல்ப் போயிருப்பதாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலை, நாவலர் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நாகேந்திரன் ராஜலக்ஸ்மன் என்ற கலைப்பீட மாணவரே காணாமல்ப் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ் காவல்துறை, மற்றும் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பெற்றோரால் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ் சுண்டுக்குளியைச் சேர்ந்த 24 வயதுடைய ஞானசீலன் ரவி என்ற தொழிலாளியும் நேற்று முன்தினம் முதல் காணாமல்ப் போயிருப்பதாக, யாழ் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடப்பட்டுள…
-
- 0 replies
- 636 views
-
-
கடத்தல்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி. நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஆட்கடத்தல், காணாமல் போதல், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றுடன் அரசுக்கு எதுவித தொடர்பும் கிடையாது. ஆனால், இதனைத் தடுத்துநிறுத்த அரசு தன்னாலான முயற்சிகளை எடுக்கும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இக்கருத்தை முன்வைத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜே.வி.பியினர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. நாட்டில் இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடு…
-
- 3 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவருக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கக்கோரி சென்னையில் விடுதலைச் சிறுத்தை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. @ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குள்ளாகும் தமிழக மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்கள் வழங்கவேண்டும். @ கச்சதீவை மீட்டுக் கொடுக்கவேண்டும். மேற்கண்ட இரு கோரிக்கைகளையும் முன்வைத்து விடுதலைச் சிறுத்தை அமைப்பு சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. சென்னை அரச பொது மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள மெமோரியல் மண்ட பத்துக்கு அருகே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் அங்கு உரையாற்றினார். தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு எந்த அக்கறையும்…
-
- 2 replies
- 1k views
-
-
சனி 07-04-2007 17:54 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஜிம் பிறவுண் அடிகளார் படுகொலை செய்யப்பட்டிருக்காலம் - கத்தோலிக் குருமார் அச்சம் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்ட பங்குத் தந்தை நிகால் ஜிம் பிறவுன் அடிகளார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா யாழ் கிறிஸ்தவ குருமார் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் தீவகம் அல்லைப்பிட்டி இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து கைதான 34 அகவையுடைய திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் அடிகளாரும் அவரின் உதவியாளரான 38 அகவையுடைய வின்செண்ட் விமலன் ஆகியோர் விசாரணைக்கு எனக் கைதான பின் காணாமல் போயுள்ளர். இந்த நிலையில் மண் சாக்குமூடை ஒன்றில் வெட்டப்பட்ட ந…
-
- 7 replies
- 2k views
-
-
செவ்வாய் 10-04-2007 21:42 மணி தமிழீழம் [மயூரன்] கோட்டபாய ராஜபக்ச உடன் பதவி விலகி அமெரிக்கா செல்லவேண்டும் - ஐ.தே.க சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலகி அமெரிக்கா செல்லுமாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு ஊடகங்களுக்கு கருத்துரைத்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் மூத்த நடாளுமன்ற உறுப்பினர் ஜோன்சன் பெரேரா மேலும் தெரிவிக்கையில்.... வான்புலிகள் கட்டுநாயக்கவில் விமானப்படையினரின் தளம் மீது தாக்குதலுக்கு பொறுப்பேற்று உடனடியாக பதிவி விலகி அமெரிக்கா செல்லவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகள் 1990ம் ஆண்டே விமானங்களை வைத்திருந்தார்கள் என்பதை அறிந்திருந்தும் யுத்த ந…
-
- 0 replies
- 840 views
-
-
திங்கள் 09-04-2007 19:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும்…
-
- 16 replies
- 4.4k views
-
-
-
அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரச்சாரத்தால் சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரசார நடவடிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பது அராசாங்கத்தை வெட்கப்பட வைக்கும் செயற்பாடு எனத் தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகள், இந்தப் பிரசார நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்குவதாகக் கூறியுள்ளனர். இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி ‘விதிமுறைப்படி விளையாடு’ எனும் தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச பிரசார நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசார நடவடிக்கைக்குத் தாம் ஆதரவு வழங்குவதாக விடுதலைப் புலிகள் அமைப்புக் கூறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
'மக்களை கடத்துவதால் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது': ரணில் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 20:09 ஈழம்] [அ.அருணாசலம்] "தமிழ் மக்களை காணாமல் போகச் செய்வதன் மூலமோ அல்லது கடத்துவதன் மூலமோ தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்த முடியாது. மக்களை கடத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தலாம் என அரசாங்கம் நினைத்தால் அது அவர்களின் தவறாகவே இருக்கும்" என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். கொழும்பில் காணாமல் போதல், கொல்லப்படுவோர் தொடர்பான பொது மக்கள் கண்காணிப்புக் குழுவினால் நேற்று திங்கட்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "இந்த பிரச்சினைகள…
-
- 1 reply
- 840 views
-
-
பேருந்து விபத்து பொதுமக்கள் 17 பேர் பலி. - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 10:30 காலியில் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இவ் விபத்தானது கெண்டைனர் ஒன்றுடன் பேருந்து நேருக்கு நேர் மோதியமையால் ஏற்ப்பட்டதாகும். இது தொடர்பான மேலதிக விபரம் தெரியவரவில்லை. சங்கதி
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் அதிவிசேட உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்றுத் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. புதுவருடப் பிறப்புக்கு முன்னதாக இந்த வாரத்தில் விடுதலைப்புலிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தினாலேயே அரசாங்கம் அதிவிசேட பாதுகாப்பு நடவடிக்கை களை முன்னெச்சரிக்கையாகத் தொடங்கி பாதுகாப்புத் துறையினரை உஷார் நிலையில் வைத்துள் ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. மேலதிக எண்ணிக்கையில் பாதுகாப் புப் படையினரையும் மேப்ப நாய்களுடன் பொலீஸாரையும் ஈடுபடுத்தி நாடுமுழுவ திலும் விசேட பாதுகாப்புத்திட்டம் ஒன்று நேற்றுத் தொடக்கம் அமுலுக்கு வந்திருப் பதாக மூத்த பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத் தொடர்பு ந…
-
- 1 reply
- 1.1k views
-
-
எது பயங்கரவாதம் என்பதை சார்க் தலைவர்கள் புரிந்து கொள்ளட்டும் [10 - April - 2007] [Font Size - A - A - A] வி.திருநாவுக்கரசு 22 வயது நிரம்பிய தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) தனது 14 ஆவது உச்சி மாநாட்டினை சென்ற வாரம் புதுடில்லியில் நடத்தியது. உலக சனத்தொகையில் 20% அல்லது 1.5 பில்லியன் மக்கள் வாழும் இப்பிராந்தியத்தில் தான் அதிகளவு வறுமையும் காணப்படுகிறது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் நாடுகளுடன் புதிதாக ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியாவும் முதல் முதலாக பார்வையாளர்களாக பங்கேற்றுள்ளனர். பார்வையாளர்கள் மேற்பார்வையாளர்கள் என எண்ணத் தோன்றியது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
ஊடரங்கு வேளையில் நடைபெறும் கொடூரம்! -(தேசியன்) [08 - April - 2007] யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்கு வேளையில் கதவுகளை உடைத்துக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் ஆயுதக் கும்பல்கள் கொள்ளையில் ஈடுபடுவதுடன் குடும்பத்தவரின் கண்முன்னே பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி வருவதனால் மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். ஆயுத முனையில் நிர்வகிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணத்தில் மாலை 6 மணியுடன் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டத்தால் மக்கள் எவரும் வெளியில் நடமாட முடியாத சூழலே நிலவி வருகின்றது. மாதகல் வீதி, காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, முகமாலை வீதி, தீவுகளுக்கான வீதியென குடாநாட்டின் அனைத்து பிரதான வீதிகளும் அரச படைகளின் கடுகளவும் பிசகாத கண்காணிப்பின் கீழேயே உள்ள…
-
- 38 replies
- 6k views
-
-
தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெறமுடியுமென செயற்படுகிறது அரசாங்கம் [10 - April - 2007] * சொந்த மக்களையே கொல்லும் நிர்வாகம் என்று சாடுகிறார் ரணில் - பி.ரவிவர்மன், அருளானந்தம் அருண் - சொந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தர முடியாமல் சொந்த மக்களையே கொல்வதற்கு வழி செய்யும் அரசு மகிந்த ராஜபக்ஷவின் அரசு என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக சாடினார். தமிழர்களை அழித்தாலே யுத்தத்தில் வெற்றி பெற முடியும் என்றும் தமிழர்கள் அனைவரும் புலிகள் என்னும் ஒரு கருத்தை முன்னிறுத்தி அதற்கமைவாகவே மகிந்த அரசு செயற்படுகின்றது என்றும் குற்றம்சாட்டிய அவர், தமிழ் மக்களைக் கடத்துவதன் மூலம் புலிகளை இல்லாதொழிக்க முடியும் என யாரும் நினைத்தால் அது மிக…
-
- 1 reply
- 816 views
-
-
செவ்வாய் 10-04-2007 03:04 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருகின்றன - சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆழ்ந்த கவலை சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமடைந்து வருவதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மீண்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டு, 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிலுள்ள அனைத்துத் தரப்பினரும் மனித உரிமைகளைப் பேணும் அனைத்துலக சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் எனவும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வேண்டுகோள் விடுத்…
-
- 0 replies
- 601 views
-
-
செவ்வாய் 10-04-2007 13:02 மணி தமிழீழம் [மோகன்] இந்திய தூதராலய சாரதி வாகனத்துடன் கடத்தப்பட்டுள்ளார் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இந்திய தூதராலயத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு தூதுவர் ஒருவரை ஏற்றுக் கொண்டு வருவதற்கு சென்றபோது இரு தாக்குதலாளிகளால் அவ்வாகனத்தின் சாரதி எஸ்.விஸ்வநாதன் தாக்கப்பட்டு வாகனத்துடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சீதுவ காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களது வாகனம் இரவு 11 மணியளவில் கொழும்பை விட்டு புறப்பட்டதாகவும் பேலியகொட தனுகாம பாலத்தலடியில் மற்றொரு மகழுர்தினால் துரத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். மகழுர்தில் துரத்தியவர்கள் வாகனத்தின் சாரதியை தமத…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்த அரசமைப்பு வரையறைக்குள் தீர்வுக்கு இடமேதும் கிடையாது ` இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தியாவின் மாதிரியை ஒத்த அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணலாம் என சில அரசியல் பிரகிருதி கள் பெரும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவ்விடயத்தை ஒட்டி தமிழர் தேசிய இயக் கத் தலைவர் பழ. நெடுமாறன் இப்போது தெரிவித் துள்ள இரண்டு விடயங்கள் இங்கு கவனிக்கத் தக்கவை. ஒன்று இந்தியாவில் இருப்பது போன்ற இன சமரசம் பாகுபாடின்மை இலங்கையில் கிடை யாது. இங்கு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி நசுக்குவதே தனது வாழ்வியல் நோக்காகக் கொண்டு அந்தத் தீவிர வெறியில் செயற்படுகின்றது. அடுத்தது இலங்கை இனப்பிரச்சினைக்கு இலங்கையின் அரசமைப்புக்குள் உட்பட்டு தீர்வு காணவே…
-
- 0 replies
- 688 views
-
-
ஈழப் பிரச்சினையும் இந்தியாவும் இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விடயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர். எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது. இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொன்றொழிக்கப்படுகின்றார்கள
-
- 3 replies
- 1.4k views
-
-
ஓமந்தை மீது புலிகள் தாக்குதல். சிப்பாய் பலி 03 பேர் காயம். - பண்டார வன்னியன் Tuesday, 10 April 2007 11:11 இன்று காலை 7.45 மணியளவில் வவுனியா ஓமந்தை முன்னரங்க சிறிலங்கா இராணுவ படைமுகாம்களிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டு மூன்று படைச்சிப்பாய்கள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக படைத்தரப்பு அறிவித்து உள்ளது. சங்கதி.கொம்
-
- 0 replies
- 816 views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரும் வேறுபட்ட சமர் உத்திகளும் -அருஸ் (வேல்ஸ்)- தரைப்படைகளின் கடுமையான மோதல்கள், விமானத்தாக்குதல்கள், கடற்படையினரின் தாக்குதல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அதனால் அல்லல்படும் மக்களும், தனிமைப்படுத்தப்பட்ட யாழ். குடாநாடு, ஏதிலிகளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் என ஒரு முழு அளவிலான போருக்குள் இலங்கை சிக்கியுள்ளது. எனினும் எந்தத் தரப்பாலும் அது போராக பிரகடனப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போரும் சமாதானமும் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றது, விடுதலைப் புலிகளும் தற்காப்புத் தாக்குதல்களையும், அழித்தொழிப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் இந்த போரில் இருதரப்பினதும் சமராடும் உத்திகள் (வுயஉவiஉள) முற்றிலும் வேறுபட்டவை. அரசு வி…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசு மே மாதத்தில் தீர்வுத்திட்டத்தை சமர்ப்பிப்பது சந்தேகமே: ஐ.தே.க அரசாங்கத்திற்குள்ளும், அதன் கூட்டணிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இனப்பிரச்சனைக்கான தனது தீர்வுத் திட்டத்தை மே 1 ஆம் நாள் சமர்ப்பிப்பதாக சுதந்திரக் கட்சி கூறியிருப்பது சந்தேகமே என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சுதந்திரக் கட்சிக்குள் உள்ள சில கூட்டணிகள் அதிகாரப் பரவலாக்கத்திற்கு எதிராக உள்ளதால் தாம் இந்த சந்தேகத்தை கொண்டுள்ளதாக ஊடகத்துறையிருடனான மாநாட்டின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அரசாங்க கூட்டணிக் கட்சிகள் வடக்கு - கிழக்கு பிரச்சனை தொடர்பாக வேறுபட…
-
- 1 reply
- 896 views
-
-
சிறிலங்காவில் 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு உல்லாசப் பயணத்துறையில் மிகவும் ஒரு முன்னேற்றமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. எனினும் தற்போது ஆரம்பித்துள்ள மோதல்களில் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள துறையாக உல்லாசப் பயணத்துறையே இருப்பதாக அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் சிறிலங்காவில் உல்லாசப் பயணத்துறையை முன்னேற்றுவதற்கு அதிகாரிகள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் தினமும் இடம்பெறும் கடல், வான், தரை தாக்குதல்கள் அதற்கு சாதகமாக இல்லை. இப்படிப்பட்ட நிலைமைகளில் உல்லாசப் பயணத்துறையே முதலாவதாக …
-
- 1 reply
- 863 views
-