Jump to content

வேள்விக்கு தயாராகும் "கிழக்கின் விடிவெள்ளி"!!!!


Recommended Posts

கருணா குழுவிற்குள் பிளவு- பிள்ளையான தப்பி ஓட்டம்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007, 05:56 ஈழம்] [க.திருக்குமார்]

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர்.

கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளார்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையானும் கருணாவும் மரதன் ஓட்டம்.

(ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007 , யோகராஜன் )

சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையானின் சகாக்கள் 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளனர். கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையானின் முக்கிய சகா கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். இந்தக் கொலை முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையானின் உதவியாளன் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

kpmd4.png

சிறிலங்கா இராணுவத்தினரின் ஒட்டு இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் உருவாகியுள்ள உட்பூசல் காரணமாக அந்த கூலிக்குழுவின் இரண்டாவது நிலை தலைவரான பிள்ளையான், கருணா கூலிகளின் கொலை முயற்சியிலிருந்து தப்பிய நிலையில் தனது 150 விசுவாசிகளுடன் தப்பி ஓடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணா குழுவிற்குள் ஏற்பட்ட பெரும் பிளவினால் அதன் இராணுவப்பிரிவுத் பொறுப்பாளரான பிள்ளையான் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளான். இந்த முயற்சியில் அவரின் விசுவாசியான சிந்துஜன் கொல்லப்பட்டுள்ளான். இந்த சிந்துஜனே கடத்தப்பட்ட தமிழர் புணர்வாழ்வுக் கழக உறுப்பினரான பிறேமினியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொடூரமாகக் கொலை செய்தவன. கொலை முயற்சியில் இருந்து தப்பிய பிள்ளையான் தனக்கு விசுவாசமான 150 உறுப்பினர்களுடன் திருகோணமலை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: கருணா குழுவின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளரான சீலனையும், அதன் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான சிந்துஜனையும் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைத்தனர். கலந்துரையாடலுக்கு வந்திருந்த இவர்களை நோக்கி கருணா குழுவின் விசுவாசியான இனியபாரதி துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும், அதன் போது சிந்துஜன் அந்த இடத்திலேயே கொல்லப்பட சீலன் படுகாயத்துடன் மயிரிழையில் தப்பியுள்ளான்.

கருணா குழுவின் நிதிக் கையாள்கை, புதிய நியமனங்கள் தொடர்பாக கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும், அதனைத் தெடர்ந்து பிள்ளையானையும் அவரது விசுவாசிகளையும் வேட்டையாடும் படி கருணா தனது விசுவாகிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிந்துஜன் கொல்லப்பட்ட நாளன்று பிள்ளையானை அவசர கூட்டம் ஒன்றிற்காக கொழும்புக்கு வருமாறு கருணா அழைத்திருந்ததாகவும், எனினும் கருணாவின் உள்நோக்கத்தை புரிந்து கொண்ட பிள்ளையான அதனை தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கருணா ஒட்டுக்குலிக்கும்பலிடையே தோன்றிய பிளவு தொடர்பாக எமக்குக் கிடைத்த உறுதியான தகவல்களின்படி, இப்பிளவை சரி செய்ய இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை பெரும் முயற்சி எடுத்து தோல்வியடைந்த நிலையில், கருணா கூலிக்கும்பலை மட்டக்களப்பிலும், பிள்ளையான் கூலிக்கும்பலை திருமலையிலும் தங்க வைக்க முயற்சி எடுப்பதாக தெரியவருகிறது. இதேவேளை கூலி பிள்ளையானின் 40 விசுவாசிகளை, கருணா கூலிக்கும்பல் கடத்தி படுகொலை செய்திருப்பதாகவும் அறிய முடிகிறது.

இக்கூலிகளின் இடையே தோன்றியுள்ள பிளவையடுத்து பிள்ளையான் கும்பல் எந்நேரமும் புலிகளிடம் சரணடையலாம் என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கருணா கும்பலிடையே பலமாக ஊடுருவியிருக்கும் புலிகளின் உளவுப்பிரிவினர், இப்பிளவையடுத்து தக்க தருணத்தில் களையெடுக்கத் தொடங்கலாம் எனவும் நம்பகரமாகத் தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

நம்பினால் நம்புங்கள், எமக்கு விடுதலையை பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகிக்கப் போகின்றவர்கள் "கருங்காலி" கருணாவும், "அத்தியடிக்குத்தி" டக்கிலஸும்தான்!!! ....

அண்மையில் விடுதலையான கிழக்குத்தீமோர் இதற்கு ஓர் நல்ல உதாரணம்!! கிழக்குத்தீமோர் விடுதலைக்கு முன்னர் அங்கு நிலை கொண்டிருந்த இந்தோனேசிய துருப்பகளுடன் ஒட்டிச் செயற்பட்ட ஒட்டுக்குழுக்கள் செய்த படுகொலைகளே உலக கண்களை திறந்தன!! கிழக்குத்தீமோரின் விடுதலையில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் அந்த ஒட்டுக்குழுக்களே!!

இவ்வாறே எமது விடுதலையிலும் கூலி கருணாவும், கூலி டக்கிலஸின் பங்கு நிச்சயமாக மிக முக்கிய பங்கு வகிக்கும்!! இன்று சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பார்வை எம் பக்கம் திரும்பவும் இவர்கள்தான் காரணம்!! அது மட்டுமல்ல பல நாடுகளின் இன்றைய என் நோக்கிய சில மாறுதலுக்கும் இவர்களே காரணம்!!!

ஆகாவே இந்தப் பிளவு, கூலிகளின் அட்டகாசங்களை குறைக்குமா???? அது நல்லதல்ல!!!! கூலிகள் கட்டுக்கடங்காமல் அட்டகாசங்கள் செய்தால்தான் எமக்கு நல்லது!!! அது வெதமாத்தயா மகிந்தவின் ஆட்சிக்கும் உலகில் நல்ல பெயரைக் கொடுக்கும்!!! ஆகவே .....

.... குழம்புகிறனோ??? குழப்புகிறனோ????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனது ஆய்வு கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் வர அனுமதியளிக்காததால் சங்கடத்தில் அமெரிக்கா ! அமெரிக்க ஆய்வு கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுப்பு : அரசாங்கத்தின் தீர்மானத்தால் கடும் அதிருப்தியில் வொஷிங்டன் அமெரிக்க ஆய்வுக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்புக்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளதால், அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த ஆய்வுகப்பலில், பல்கலைக்கழக மாணவர்களே வருகைத் தருவதாகவும், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவுமே அனுமதி கோரியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை கடல் பரப்புக்குள் ஆய்வு நடத்துவதற்காக அமெரிக்க கப்பல் வரவில்லை எனவும், எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய காரணிகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான அனுமதியை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், எந்தவொரு பிற நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கும் இனி இலங்கை கடல் பரப்புக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும், எந்தவொரு ஆய்வு கப்பலையும் இலங்கை கடற்பரப்பிற்குள் இனி அனுமதிக்கப் போவதில்லை என்ற கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமையவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிலளித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கும் தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய இலங்கை அரசாங்கம், எந்தவொரு நாட்டின் ஆய்வுகளுக்கும் இனி இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த கப்பலின் தேவைகளை, சர்வதேச கற்பரப்பிற்குள் சென்று பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே குறித்த அமெரிக்க ஆய்வுக் கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ள போதிலும் அங்கும் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380126
    • நாகப்பட்டினத்திலிருந்து – காங்கேசன்துறைக்கிடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல், மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. அதன்படி, மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவைகள் நாகையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை சென்றடையும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சேவையில், இரு வழிப் பயணத்துக்காக அண்ணளவாக 34 ஆயிரத்து 200 ரூபா அறவிடப்படவுள்ளதுடன் ஒவ்வொரு பயணியும் தம்முடன் 20 கிலோ வீதம் 3 பொதிகளை எடுத்துச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1380121
    • இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள்.  தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன்  கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார்.  தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள்.  தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள்.  சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு.  திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது.   இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம். 
    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.