ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
கொழும்பில் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பெருந்தொகை செலவில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விருந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்து நிகழ்வு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் உணவின்றி தவிக்கும் போது, கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வழங்கப்பட்ட இரவு உணவு நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. https://tamilwin.com/article/rosy-senanayaka-special-party-in-colombo-1673048225
-
- 29 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சுமந்திரன், உள்ளுராட்சிமன்ற தேர்தல் “உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரி…
-
- 2 replies
- 586 views
-
-
கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கலால் திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான கலால் வருமானம் 140 பில்லியன் ரூபாயாக இருந்த நிலையில், கடந்த வருடம் கலால் வருமானம் 170 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. https://athavannews.com/2023/1319166
-
- 4 replies
- 289 views
-
-
பிற மதங்களை வெறுக்க அவர்களுக்கு உரிமை இல்லை எவருக்கும் மதத்தை நம்புவதற்கும் அவ்வாறு நம்பாதிருப்பதற்கும் உரிமை உண்டு என்றாலும், பிறருடைய நம்பிக்கைகளையும் மதங்களையும் புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இந்நாடு அனைத்து மதத்தினரும் அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய நாடு என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பிட்ட சில புரட்சிக் கும்பல்களின் மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். புரட்சி பற்றி பேசும் தரப்பினர் தலதா மாளிகையையும் பௌத்த மதத்தையும் அவமதித்து பேசியதை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறானவர்களுக்கு சமூகத்தில் இடம் வழங்கக்கூடாது எனவும் மதம் குறித்து வேற…
-
- 1 reply
- 505 views
-
-
வீட்டுத்திட்டத்தை நம்பி குடிசைகளை இழந்து தவிக்கும் மக்கள் By NANTHINI 07 JAN, 2023 | 03:00 PM போர் உள்ளிட்ட பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் வசிப்பதற்கு வீடின்றி அவதிப்படுபவர்களின் நிலை வேதனையளிப்பதாக உள்ளது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடந்தகால அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடிழந்தவர்கள் மற்றும் புதிதாக திருமணமானவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது பயனாளிகள் தாம் அதுவரை வசித்த குடிசைகளை அகற்றிவிட்டு, புதிய வீடுகளை அமைப்பதில் ஆர்வ…
-
- 1 reply
- 589 views
- 1 follower
-
-
தபால் பெட்டி சின்னத்தில் அரவிந்தகுமார் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணியாக இணைந்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னணியின் பிரதி பொது செயலாளர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அ.அரவிந்தகுமார் தலைமையில் ஐக்கிய மக்கள் முன்னணி சா…
-
- 1 reply
- 207 views
-
-
கடவுச்சீட்டை பெற்றனர் இலங்கை அகதிகள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவுக்கு முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 38 இலங்கையர்கள், கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று ஆரம்பித்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, அவர்களின் கடவுச்சீட்டுகள் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு அவர்களின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. தற்போது கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதால், நாடு …
-
- 1 reply
- 761 views
-
-
அமெரிக்க வைரஸ் குறித்து எச்சரிக்கை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள எக்ஸ்பிபி 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல நாடுகளில் பரவியுள்ள குறித்த வைரஸ் பிறழ்வு, அந்த நாடுகளில் வேகமாகப் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இது குறித்து எச்சரிக்கை நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறித்த மாறுபாட்டின் எக்ஸ்பிபி பிறழ்வு இலங்கையில் கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட போதும் அமெரிக்காவில் அடையாளம் காணப்பட்ட 1.5 உப பிறழ்வு இதுவரை அடையாளம் காணப்பட்டவில்லை. https://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-வரஸ-கறதத-எசசரகக/175-310293
-
- 0 replies
- 728 views
-
-
யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில், வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார். இதனால் உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார். யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 671 views
-
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா ஜனவரியில் அறிவிக்கும் – ஜனாதிபதி இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா தனது பதிலை ஜனவரி மாதம் அறிவிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் செய்தி ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கான தனது திட்டத்தை இலங்கை தெரிவித்துள்ளதாகவும், இந்த மாதத்திற்குள் இந்திய அதிகாரிகளிடமிருந்து பதிலை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்காக கடனாளிகளுடன் உறுத…
-
- 0 replies
- 196 views
-
-
ஷாப்டர் மரணம் தற்கொலை என உறுதி..? ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தற்கொலை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தினேஷ் ஷாப்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர், அதாவது டிசம்பர் 10 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று ஒத்திகையை மேற்கொண்டதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாத நீதவான் சாட்சிய விசாரணையிலும் குடும்பத்தாருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. டிச.15 ஆம் திகதி தினேஷ் ஷாஃப்டர…
-
- 0 replies
- 482 views
-
-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியை ஜி.எல்.பீரிஸ் மீண்டும் ஏற்பாரா? ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எம்.பி. பீரிஸ் மீண்டும் தமது கட்சிக்கு திரும்புவார் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக நீடிப்பார் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள…
-
- 0 replies
- 253 views
-
-
தமிழக அரசு மனோவுக்கு அழைப்பு! சென்னையில் ஜனவரி 11,12 தினங்களில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழக அரசு நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. “தாய் தமிழ்நாட்டில் பிரமாண்ட கொண்டாட்டம். அயலக தமிழர் தினம். உலகெங்கும் உள்ள சாதனை தமிழர்களுடன் கலை நிகழ்சிகள், உலக தமிழ் சங்கங்களுடன் கலந்துரையாடல், நலத்திட்டங்கள், சிறப்பு அமர்வுகள். சிறப்பு விருந்தினர் உரைகள்” என்ற நிகழ்ச்சி நிரல்களுடன், தமிழக அரசின் சிறுபான்மையினர், அயலக தமிழர் மற்றும் மறுவாழ்வு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில், தமிழக …
-
- 0 replies
- 124 views
-
-
வடக்கில் வீதி விபத்துக்களை தடுக்க துறைசார் அதிகாரிகள் தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆறுதிருமுருகன் வேண்டுகோள் By DIGITAL DESK 5 07 JAN, 2023 | 02:09 PM (எம்.நியூட்டன் ) வடக்கில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு துறைசார்ந்த அதிகாரிகள் தூரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் . குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பல இடங்களிலும் வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.எனினும் இந்த விபத்துக்கள் தொடர்பில் யாரும் கவனிப்பதாக இல்லை இந்த விபத்துக்களில் வடக்கு மாகாணம் முன்னிலையில் காணப்பட…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
'கெத்து பசங்க' வட்ஸ்அப் குழுவைச் சேர்ந்த நால்வர் வவுனியா விசேட அதிரடிப்படையினரால் கைது! By NANTHINI 07 JAN, 2023 | 01:12 PM பூவரசங்குளம், தட்டான்குளம், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் வன்முறைகளை ஏற்பாடு செய்த 'கெத்து பசங்க' என்ற வட்ஸ்அப் குழுவை சேர்ந்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். விசேட அதிரடிப்படை வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 5ஆம் திகதி பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்…
-
- 0 replies
- 465 views
- 1 follower
-
-
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் களுவாஞ்சிகுடியில் ஆரம்பம்! இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் குறித்த கூட்டம் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக் கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இக்கூட்டத்திற்கு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஸ்ட…
-
- 4 replies
- 321 views
-
-
13 ஆவது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் டக்ளஸ் தேவானந்தா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். முதற்கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம், நிர்வாக ஏற்பாடுகளினூடாக காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்கொள்ளு…
-
- 5 replies
- 521 views
-
-
கிளிநொச்சியில் கடலட்டை பண்ணையாளர்களிற்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு முன்னெடுப்பு! இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பரிவிற்குட்பட்ட வேரவில் இளவங்குடா கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு கடலட்டை பண்ணையாளர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்கி வைத்தார். மேலும் குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் அகிலன், பூநகரி பிரதேச செயலக மற்றும் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1319120
-
- 1 reply
- 201 views
-
-
போதைப்பொருளை அடக்குவதற்கு உயர் அதிகாரம் கொண்ட செயலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை ! இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை ச…
-
- 3 replies
- 626 views
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் நிதிஉதவி இந்த வருடத்தின் முதல்காலாண்டில் - ஜனாதிபதி நம்பிக்கை By Rajeeban 07 Jan, 2023 | 10:46 AM இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தமாத இறுதியில் இந்தியா பதிலளிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிகள் இந்த வருடத்தின் முதல்காலாண்டில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா…
-
- 0 replies
- 129 views
-
-
ஒரு டொலருக்கு 2 ரூபாய் என்ற ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் ! வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்க 2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல்; இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமான ஹவாலா அல்லது உண்டியல் முறைகள் மூலம் பணம் அனுப்பியதை அடுத்தே இந்த முறை அறிமுகப்படுத்தபட்டது. எனினும் எதிர்பார்த்தபடி வெளிநாடுகளின் தொழிலாளர்கள் பணத்தை வங்கிகளின் ஊடாக அனுப்பப்படவில்லை. இதனையடுத்தே இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அமெரிக்க ட…
-
- 0 replies
- 579 views
-
-
இந்தியா தமிழ் மக்கள் தொடர்பாக வைத்திருக்கக்கூடிய நிலைப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நல்ல தெளிவு இருக்கின்றது” என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, இந்தியா தொடர்பாக சிங்கள மக்களுக்கும், சிங்கள ஆட்சியாளர்களுக்கும் இருக்கக்கூடிய அச்ச நிலையினை தான் சீனா இவ்வளவு காலமும் பயன்படுத்தி இருக்கின்றது. இந்தியா தமிழ் மக்களுக்கு சார்பான நாடு, வடக்கு கிழக்கை தனி நாடாக கொடுத்துவிடும் என்றெல்லாம் அச்ச நிலை சிங்கள மக்களுக்கு இருந்தது. இன்று வரை இருக்கின்றது. இந்தியாவை சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு சார்பான ந…
-
- 3 replies
- 856 views
- 1 follower
-
-
டுபாயிலிருந்து நாடு திரும்பினார் கோட்டா இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, டுபாய் பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை (5) காலை நாடு திரும்பினார். கோட்டாபய ராஜபக்ஷ டிசெம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தகவல் வெளியானது. அவருடன் மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் தமிந்த ராஜபக்க்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ மற்றும் அவரது பேரக்குழந்தையும் சென்றிருந்தனர். அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ டுபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ இல் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்கு…
-
- 11 replies
- 603 views
-
-
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு ! உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மா…
-
- 4 replies
- 238 views
- 1 follower
-
-
சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? 17க்கு முன்னர் பதில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில் முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது. 1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில் இன்று (04) பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது. தகவலறியும் ஆணைக்குழு முன்பாக இலங்கை…
-
- 3 replies
- 665 views
-