ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
அரசாங்கத்தினால் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டதாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர் தெரிவிப்பு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தாங்கள் அரசாங்கத்தினால் சித்திரவை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பொருளாதார நோக்கங்களுக்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுவதை அவர்கள் நிராகரித்துள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 82 இலங்கையர்களில் ஒருவரான சஞ்சே செல்வநைனா கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனது நண்பர்கள் ஐவர் எனது கண்ணுக்கு முன்னால் சுடப்பட்…
-
- 1 reply
- 978 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுத் தேவைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளுக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பானது வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 155,000 மக்களுக்கும் உடனடியான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு மேலதிக நிதியுதவி கிடைக்காது போனால் எமது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத முடிவில் தீர்ந்து போகும் என்று உலக உணவுத் திட்டத்தின் ஆசியப் பிராந்திய தலைவர் ரொனி பான்பெறி தாய்லாந்தின் தலைநகரான பாங்ஹொக்கில் தெ…
-
- 0 replies
- 756 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் செல்லிடப்பேசிகள் செயலிழப்பு. மட்டக்களப்பு மாவட்டம் தொப்பிக்கல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளின் எதிரொலியாக மாவட்டத்தின் செல்லிடப்பேசி தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது அந்த பிரதேசத்தில் பணியாற்றும் தமது உறுப்பினர்களுடனான தொடர்புகளில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என உதவி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. வடக்கு - கிழக்கில் உள்ள பெரும்பாலான ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அதிகாரிகள் செய்மதி தொலைத் தொடர்பு வசதிகளை கொண்டுள்ளதாகவும் ஆனால் பெரும்பாலான வெளிநாட்டு மற்றும் உள்ளுர் அதிகாரிகள் தமக்கிடையிலான தொடர்புகளுக்கு சாதாரணமான செல்லிடப்பேசிகளையே பயன்படுத்துவதாகவும் தெரி…
-
- 0 replies
- 1k views
-
-
'' உலக வலையில் புலிகள் '' அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் தாக்கி அழிக்கப் படும் கப்பல்கள் எவ்வாறு இலங்கை கடற்படைகளால் கண்காணிக்கப்பட்டு தாக்கி அழிக்கப்பட்டன என்ற விடையை தேடினால் அதிர்ச்சி தரும் பல உண்மைகள் துளங்கும். இவ்வாறான நிகழ்வுகள் ஏன் செய்யப் படுகின்றன யாரால் செய்யப்படுகின்றன என்பதை வெளிப்படையாக புலிகளறிவார். இது புலிகளிற்கு ஒரு எச்சரிக்கை...யாரால்...?? இதுவே தான் புதிர்... தனது சுயநலன்களிற்காக ஒரு விடுதலை படையை அழித்து நசுக்கி அந்த அரசகளுடன் கூட்டு வைத்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி கொள்ள அந்த வல்லரசுகள் செய்யும் சதி நடவடிக்கைகள் தான் இவை... இருவரும் சமதானத்தை நிலை நாட்டி போரை முடிவிற்கு கொண்டு வரவேண்டுமென்ற வெற்று கோசத்தை வெளி…
-
- 14 replies
- 5.5k views
-
-
உலக உணவுத் திட்ட பிரதிநிதிகள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு தமிழ் மக்கள் கிழக்கில் மனித அவலத்துக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கிளிநொச்சியில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இளந்திரையன், மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மக்களின் அவலம் தொடர்பாக இந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளால் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/
-
- 1 reply
- 676 views
-
-
`வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவோர்' மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயரும் அகதிகளின் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கள்வர்கள் திருடி விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் உறுகாமம், மாவடி ஓடை, இலுப்படிச்சேனை, கரடியனாறு போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நாடி வரும் மக்களின் உடைமைகள், ஆடு, மாடு போன்ற கால்நடைகளே இவ்வாறு திருடி விற்பனை செய்யப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான உறுகாமம் என…
-
- 0 replies
- 895 views
-
-
மஹிந்தபுலி உடன்படிக்கை வெளிவந்துவிடும் என்பதனாலேயே சிறையில் அடைக்கப்பட்டேன் மஹிந்த புலி உடன்படிக்கை குறித்த தகவல்கள் வெளிவந்துவிடும் என்ற பயத்தில் என்னை சிறைவைத்துள்ளனர் என்று கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று சபைக்கு சமுகமளித்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபைக்குள் வந்ததும் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் கரகோஷம் செய்து வரவேற்றனர். ஸ்ரீபதி சூரியாராச்சியும் ஐ.தே.க. எம்.பி.க்களை பார்த்து கையசைத்தார். இதன்போது உங்களை மேலும் 3 மாதங்களுக்கு சிறையில் போடப்போகின்றார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் கூறினர். ண்ண்ண்இதற்கு பதிலளித்த ஸ்ரீபதி சூரியாராச்சி மஹிந்த புலி உடன்படிக்கை கு…
-
- 0 replies
- 758 views
-
-
தமிழரை இடம்பெயர வைத்து சிங்களவரை குடியேற்ற சூழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து அகதிகளாக்கி அங்கு சிங்கள மக்களை குடியமர்த்தும் சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே அரசாங்கம் அங்கு படையினரை பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு அழைப்பு விடுத்தால் எந்தத் தமிழன் அதற்கு முன்வருவானென்றும் கேள்வி எழுப்பினார். கொழும்பு கொம்பனி வீதி நிப்பொன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற போருக்கெதிரான முன்னணியின் ஊடகவியலா…
-
- 2 replies
- 1.2k views
-
-
மக்களை மிரட்டி கப்பம் வேண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்ப்பாணத்தில் இராணுவத்துடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுக்களில் ஒன்றான வரதர் அணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்களைப் பயமுறுத்தி கப்பம்பெற்று வருகின்றார்கள். இத்தகைய நடவடிக்கையில் பலபொதுமக்கள் தாக்கப்பட்டும் உள்ளார்கள். குறிப்பாக சுன்னாகத்தில் தற்போது இயங்கும் பொலிஸ் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் உள்ள நாகப்பன் என்பவர் பகிரங்கமாகவே இந்த வீதியால் செல்லும் பொதுமக்களை மிரட்டி கப்பம் பெற்றுவருகின்றமை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இவர் பொலிஸ் அலுவலகத்திற்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் அந்த வீதியால் செல்பவர்களை மறி…
-
- 1 reply
- 821 views
-
-
நிவாரண உதவிகளை பணயமாக வைத்து மக்களை அச்சுறுத்தும் சிறீலங்கா அரசு இடம்பெயர்ந்த மக்களை யுத்த பிரதேசங்களுக்கு மீள குடியமர்த்துவதில் சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் முற்படுவதாக நியூயோர்க்கை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பில் தங்கியிரக்கும் 721 இடம்பெயர்ந்தோரை அச்சுறுத்தல் யுக்திகளை கையாண்டு சிறீலங்கா படைகளும் அரசாங்க அதிகாரிகளும் திருமலைக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மோதலால் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப் போவதில்லை என அறிக்கையளவில் கூறிவரும் சிறீலங்கா அரசு அனைத்துலக கண்காணிப்பாளர்கள் முன்னிலை…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்திய கடற்படை பயம்! கடலில் குதித்து அகதி பலி ராமேஸ்வரம் - மார்ச் 19, 2007 : இந்திய கடற்படையினரைப் பார்த்து விட்டதால் கடலில் குதித்த இலங்கை அகதி பரிதாபமாக பலியானார். இலங்கையிலிருந்து அதிக அளவில் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். இதுபோல அகதிகளாக படகுகளில் வருபவர்கள், ஒரு படகுக்கு 30 பேர் மட்டுமே பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் இதற்கும் அதிக அளவில் சில நேரங்களில் அகதிகளை அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கையிலிருந்து ஒரு படகில் 32 பேர் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கடலில் அந்தப் படகு வந்தபோது தொலைவில் இந்திய கடற்படை ரோந்துப் படகு வந்துள்ளது. இதைப் பார்த்த படகை ஓட்டி வந்த மீனவர்கள், அகதி…
-
- 2 replies
- 1k views
-
-
புதன் 21-03-2007 01:43 மணி தமிழீழம் [தாயகன்] வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியான 6 ஆயிரம் பேர் இதுவரை சிறீலங்காப் படைகளால் பலவந்தமாக மீளக் குடியேற்றப்பட்டு, மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். முற்று முழுதாக இராணுவ வலயமாக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிக்கு தொண்டு நிறுவனங்கள், மற்றும் பொது அமைப்புகள் செல்வதற்கு சிறீலங்காப் படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அந்தப் பிரதேசத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. வாகரையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் அவர்களின் உடமைகள் சிறீலங்காப் படையினரால் சூறையாடப்பட்டுள்ளன. இதேவேளை, மக்களை அச்…
-
- 0 replies
- 626 views
-
-
புதன் 21-03-2007 01:27 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கு மக்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் அலட்சியப்போக்கு - விடுதலைப் புலிகள் கண்டனம் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மனித அவலம் தொடர்பாக அனைத்துலக சமூகம் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதாக, தமிழீழ சமாதானச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக ஒரு இலட்சம் வரையிலான மக்கள் படுவான்கரையில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். திருகோணமலை சம்பூர், மூதூர், மட்டக்களப்பு வாகரைப் பிரதேசங்களில் இருந்து ஏற்கனவே 60 ஆயிரம் பேர் மட்டக்களப்பு நகர் நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், சில மனித நே…
-
- 0 replies
- 669 views
-
-
சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மாபெரும் மனித அவலத்துக்கு இன்று முகம் கொடுத்து வருகின்றார்கள். கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கை, 150,000 ஆயிரத்தை தாண்டியிருப்பதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை, சிறிலங்கா அரசாங்கம் பலாத்காரமாக மீளக் குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கிரான், பாலச்சோலை, ஐயன்கேணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்ப் பொதுமக்களைப் பலவந்தமாகக் கிளிவெட்டிப் பகுதிக்குச் சிறிலங்கா இராணுவத்தினர் கொண்டு செல்வதாக, அமெரிக்காவில் இயங்க…
-
- 0 replies
- 824 views
-
-
இன்று அறுகம்பேயில் இருந்து 190 கடல் மைல் தொலைவில் வைத்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கப்பல் அழிக்கப்பட்டது காலை 9.00 மணிக்கு எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலும் காலை 7.00 மணிக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் இணையத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடற்கரையில் இருப்போர் என அனைவரும் இலகுவில் பார்க்கும் வண்ணம் பட்டப்பகலில் தமது கப்பலைக் கொண்டுவந்து புலிகள் ஆயுதங்களை இறக்குவார்களா?
-
- 24 replies
- 7.7k views
-
-
கிளிநொச்சியில் சிறிலங்கா அரச தலைவரின் கொடும்பாவி எரிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 17:03 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிக்கு எரியூட்டி தமது கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சுண்டிக்குளம் பாடசாலை மீது சிறிலங்கா வான்படை மிலேச்சத்தனமாக நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் மற்றும் கல்வியாளர்கள் மீதான தாக்குதல் என்பவற்றை கண்டித்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களும், கிளிநொச்சி புனித தெரேசா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை இழுத்து வந்து ஏ-9 சாலைக்கு குறுக்காக வைத்து எரித்துள்ளனர். இந்…
-
- 3 replies
- 1.1k views
-
-
வாகரைப் பிரதேச மக்களின் முதல் கட்ட மீள்குடியேற்றம் நிறைவடைந்தததாக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்திருந்த யுத்த அகதிகளின் முதற்கட்ட மீள்குடியேற்றம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு யுத்த அகதிகளாக வாகரைப் பிரதேசத்திலுள்ள நாற்பது கிராமங்களிலிருந்து 3945 குடும்பங்களைச் சேர்ந்த 14,000 பேர் வரை இப்படி அகதிகளாக இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்தனர். முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசம் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் கொண்ட…
-
- 0 replies
- 725 views
-
-
திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற இருக்கும் இலங்கை அரச பயங்கரவாத பாராளுமன்ற குழுவினருடனான சந்திப்புகளை எதிர்த்து பிரித்தானிய தமிழர்கள் மாபெரும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாளை பிற்பகல் 3 மணியில் இருந்து 8 மணிவரை தொடர இருக்கும் இந்த ஆர்பாட்டம், இலங்கையில் இருந்து வருகைதரும் தமிழ் தேசவிரோதிகளுக்கும் மற்றும் அரசுடன் கூட்டிணைந்திருக்கும் சில முஸ்லீம் பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கும் எதிரானது என்று லண்டன் ஆர்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இன்று லண்டன் பாராளுமன்றத்தில் நடைபெறும் சந்திப்பில் உலகில் கலாச்சாரம் பண்பாடுகளை, இனங்களுக்கிடையே உறுதிசெய்யும் அமைப்பான யுனெஸ்கோ, தமிழரின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
அமெரிக்க செனட்டர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ்ப் புத்திஜீவிகள் இறங்கி இருக்கின்றனர். பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டிருக்கின்றன. பெயர் மட்டும் போதுமானது. அதனைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.இதனால், தமிழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சிங்கள நபருக்கு விளக்கமறியல் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பமாக பத்து இலட்சம் ரூபா பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள பமுனுகம என்ற இடத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி மூலம் மிரட்டல், உயிர்அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக சந்தேக நபர் கோரிய பத்து இலட்சம் ரூபா பணத்தை, சந்தேக நபரின் பெயரில் சம்பத் வங்கியின் அனுராதபுரக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு, சம்பத் வங்கியின் வவுனியா கிளை மூலமாக கடந்த வருடம் நவம்பர் மாதம…
-
- 0 replies
- 961 views
-
-
வவுனியாவில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை வவுனியா கோவிற்குளம் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்ட நபரின் சடலம் நேற்று இரவு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உறவினர்களார் இனங்காணப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட நீதிவான் பிரேத பரிசோதனைகளின் பின் பிரேத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார். அதேவேளை வவுனியா கோவிற்குளம் பகுதியில் இன்று செவ்வாய் காலை இரு கிளேமோர் குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைபற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 881 views
-
-
www.tamilnet.com
-
- 4 replies
- 1.5k views
-
-
அகதிகளுக்கு கொழும்பில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியில் மேலக முன்னணி, தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் -தாராள மனதுடன் உதவுமாறு வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலைநகர் கொழும்பில் வசிக்கும் அனைத்து மக்களும் இன மதபேதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலக மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தலைநகர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக…
-
- 2 replies
- 953 views
-
-
கடத்தபட்டு உயிருடன் இருந்து சித்தரவதை அனுபவிக்கும் தமிழரை மீட்க ஜரோப்பிய தமிழர்கள் போராடவேண்டும். திங்கட்கிழமை 19 மார்ச் 2007 யோகராஜன் இலங்கை இராணுவத்தாலும் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டு 60 பேர் கொண்ட குழுவாக இயங்கும் விசேட கட்டமைப்பே என்னை கடத்தியது என்னை அடைத்து வைத்திருந்த குகைக்குள் 38 தமிழ் இளைஞர்கள் வரை தடுத்து வைக்கபட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் ஒருவர் இருவராக தினமும் வாகனத்தில் ஏற்றி சென்று கொலை செய்து பல்வேறு இடங்களில் வீசப்படுவார்கள் நான் சிறை பிடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருப்பவர்கள் அனைவரும் இறுதியாக கொலை செய்வதற்கு நாட்கள் குறிக்கப்பட்டு கொலை செய்யபடும் நாளை எதிர்பார்த்து காத்து கிடக்கிறார்கள். இந…
-
- 9 replies
- 3k views
-
-
செவ்வாய் 20-03-2007 13:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் கைக்குண்டு வீச்சு மூவர் காயம் வவுனியா பண்டாரிக்குளம்பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெண் ஒருவர், 16 அகவையுடைய இளைஞர் மற்றும் வீட்டில் இருந்த மற்றொரு ஆணும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu.com
-
- 0 replies
- 676 views
-