Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் மன்னிப்புச் சபை போராட்டம் நடத்துகின்றது: மகிந்த சமரசிங்க அனைத்துலக மன்னிப்புச் சபையினால் 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' என்ற போராட்டமானது விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் நடத்தப்படுவதாக சிறிலங்காவின் மனித உரிமைககளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது: அனைத்துலக மன்னிப்புச் சபையினால் நடத்தப்படும் போராட்டமானது சிறிலங்காவின் நற்பெயரை கெடுக்கும் முகமாக அமைந்துள்ளது. இந்த போராட்டம் அதிகளவில் பொது மக்களை கவர்ந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாலும் இதற்கு ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. அரசாங்கம், அனைத்துலகத்தின் தரப்புக்களுடன் மனித உரிமை தொடர்பாக பேசி வருகின்றது.…

  2. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரிய ஈழத் தமிழ் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற முடிவு அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாகப் பிரவேசித்து அடைக்கலம் கோரிய 83 தமிழர்களையும் அமெரிக்காவில் குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவந்திருக்கின்றது. புதிய உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையிலேயே இதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் 'த அவுஸ்திரேலியன்' என்ற நாளேடு செய்தி வெளியிட்டிருக்கின்றது. அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியிருக்கும் இவர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கும் அதற்கு பதிலாக குவந்தனாமோ குடாவில் உள்ள கியூபா நாட்டு அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வரவும் புகலிடம் கோருவோர் பரிமாற்றம் என்னும் உடன்படிக்கையின் மூல…

  3. 'பொய்ப் பரப்புரைகள் மூலம் தவறாக வழிநடத்தப்படும் சிங்கள மக்கள்': சுரேஸ் பிரேமச்சந்திரன் சிறிலங்கா அரசாங்கமானது பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் சிங்கள மக்களை தவறாக வழி நடத்துகின்றது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 59.2 வீதமான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வு மூலம் இனப்பிரச்சனையை தீர்க்கலாம் என தமது வாக்கெடுப்பில் தெரிவித்ததாக கொள்கை வகுப்புத் திட்ட கற்கைக்கான ஆய்வு நிலையம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரித்துள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது: "இந்த கற்கை நிலையத்தின் வாக்கெடுப்பு முடிவுகள் பெரும்பாலும் கி…

    • 0 replies
    • 691 views
  4. 'சிறிலங்கா அரசு எதனையோ மறைக்க முயல்கின்றது': அனைத்துலக மன்னிப்புச் சபை "எமது பிரதிநிதிகளை சிறிலங்காவிற்கு செல்லவிடாமல் சிறிலங்கா அரசாங்கம் தடுப்பதன் மூலம் அது எதளையோ மறைக்க முயல்கின்றது" என அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு என அங்கு சென்றிருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இருவருக்கு பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் விசா வழங்க மறுத்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பாக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய இணைப்பாளர் றொப் கோடன் தெரிவித்துள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அது எதனையோ மறைக்க முயல்வதனை கா…

  5. புதன் 18-04-2007 03:24 மணி தமிழீழம் [தாயகன்] கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு வன்னியில் பூநகரிக் கடற் பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற் படையினர் மேற்கொள்ளத் திட்டமிட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று, விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. யாழ் குருநகர், பாசையூர், மற்றும் நாவாந்துறை கடற்றொழிலாளர்கள் நேற்று காலை கடலுக்குச் சென்றபோது, அவர்களுடன் கடற்றொழிலாளர்கள் போன்று 3 படகுகளில் 18 கடற் படையினர் சென்றிருந்தனர். வன்னி கடற் பரப்பை அண்டிய பகுதிகளில், வன்னியில் இருந்து சென்று தொழில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சிறீலங்காப் பட…

  6. புதன் 18-04-2007 03:20 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் கடற்றொழிலாளர்களின் அவலம் யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாடுகள் காரணமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் குடாநாட்டிலுள்ள கடற்றொழிலாளரின் நிலை பற்றி அறிவதற்காக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் தர்மரத்தினத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான கடின உழைப்பை மேற்கொண்டு தொழில் ஈடுபட்டுவந்த கடற்றொழிலாளர்கள் சிறீலங்காப் படையினரின் கட்டுப்பாடுகள் காரணமாக உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்ப்பாணத்தி…

  7. புலிகளின் எறிகணைத் தாக்குதலில் படையினரின் 3 உலங்குவானூர்தி இறங்குதளங்கள் தேசம். வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளும் பதில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் தென்மராட்சியில் அமைந்துள்ள மூன்று உலங்குவானூர்த்தித் தளங்கள் தேசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கெற்பலி மத்தி, மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், வரணி எருவன் பகுதியில் அமைந்துள்ள உலங்குவானூர்தி தளங்களே தேசமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளன. -Pathivu-

  8. அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுப்பு. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 17 யுpசடை 2007 12:11 இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் பிரசாரத்தை ஆரம்பித்திருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கமைய இலங்கை வருவதற்காக விண்ணப்பத்திருந்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் இரண்டு பிரதிநிதிகளுடைய விசா அனுமதி லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் மறுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “அவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் அதிகாரிகளை இ…

  9. வவுனியாவில் தமிழ்ப் படைப்பாளி சுட்டுக்கொலை. வவுனியாவில் சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழ்ப் படைப்பாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். திருநாவற்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் நேற்று திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் நுழைந்த இராணுவத்தினர், தரையில் தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர், சந்திரபோஸ் சுதாகர் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சுட்டுச் சத்தத்தினைக் கேட்ட கொல்லப்பட்டவரின் 8 வயது மகன் விழித்த போது, இராணுவத்தினர் சிங்களத்திலும் தமிழிலும் அவரது அப்பா தூங்குவதாகவும் அவரை பக்கத்து வீட்டுக்குச் செல்லுமாறும் மிரட்டியுள்ளனர். இராணுவத்தினரின் மிரட்டலைத் தொடர்ந்து வெளியேறிய சுதாகரின் மக…

  10. 'நாட்டுப்பற்றாளர் தினம் - அன்னை பூபதி ஒரு குறியீடு'-சபேசன் தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. அன்னை பூபதியின் நினiவு தினத்தை, நாட்டுப்பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில், நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக, தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம், ஆக்கிரமிப்புப் …

  11. வாகரையில் சிறிலங்கா இராணுவத்தினரால் தாயும், மகனும் சுட்டுப் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2007, 16:18 ஈழம்] [தாயகத்திலிருந்து க.தெய்வேந்திரம்] சிறிலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மட்டக்களப்பு வாகரையில் இராணுவத்தினரால் தாயும் மகனும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முத்தையா சிவமணி (வயது 58), அவரது மகன் முத்தையா பாஸ்கரன் ஆகியோரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். கொல்லப்பட்ட இருவரும் தமது சொந்த இடமாகிய வாகரைப் பகுதியில் உள்ள பனிச்சங்கேணி, கோவிற்குடியிருப்பில் இருந்து இடம்பெயர்ந்து வாழைச்சேனையில் வசித்து வந்த போது படையினரால் வாகரைக்கு பலவந்தமாக கொண்டு செல்லப்பட்டு…

  12. ஊடகவியலாளர் பரமேஸ்வரி நாட்டைவிட்டு வெளியேற்றம்? புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு சுமார் மூன்று மாதகாலம் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருந்த பின்னர், குற்றமற்றவர் எனத் தெரிவித்து விடுவிக்கப்பட்ட ஊடகவிய லாளர் முனுசாமி பரமேஸ்வரி இந்தியா புறப்பட்டுச் சென்றார். இரண்டுவார கால ஊடகப் பயிற்சி நெறி ஒன்றை மேற்கொள்ளவே அவர் இந்தியாவுக்குச் சென்றார் எனக் கூறப்பட்ட போதிலும், பயிற்சி நெறி முடிந்து அவர் நாடு திரும்புவாரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவர் வேறு ஒரு நாட்டுக்குச் செல்லக்கூடும் என ஊகம் தெரிவிக்கப் படுகின்றது. ஊடகவியலாளர் பரமேஸ்வரி ந…

  13. விடயம்: சிறீலங்கா சனதிபதியின் வத்திக்கான் பயணம் நோக்கம்: சிறீலங்கா சனதிபதி எதிர்வரும் வெள்ளி 20.04.07ல் வத்திக்கானில் புனித பாப்பரசரை சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிறீலங்காவின் மனிதவதை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான கவன ஈர்ப்பினைக் கோரும் நடவடிக்கை. படுகொலைகள் - காணமல் போதல் உட்பட்ட மனிதவதைகளை உடனடியாக சிறீலங்கா நிறுத்தல் வேண்டுமெனக் கோரியும், சர்வதேசக் கண்காணிப்பை ஏற்றுக்கொள்ளல், பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச் சட்டம், ஏ-9 வீதி மூடப்படல் போன்ற விடயங்களை நீக்கும் உறுதிமொழியை சிறீலங்காவிடமிருந்து புனித பாப்பரசர் கோரல் வேண்டுமெனக் வேண்டுதல். வழிமுறை: புனித பாப்பரசருக்கு நேரிடையாகவும், வாழும் நாடுகளில் உள்ள வத்திக்கானிற்கான தூதுரகம்…

  14. தே.க. விலிருந்து பலர் அரசுடன் இணைந்து வருகையில் அவர்களால் எப்படி ஆட்சியைக் கைப்பற்ற முடியும் பிரதான எதிர்க்கடசியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய கட்சிகளில் இருந்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணைந்து கொண்டமையினால் அரசாங்கம் பலமடையவுள்ளது. ஐ.தே.க. வில் இருந்து இன்னும் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவிருக்கின்றனர். அதனால், அரசாங்கம் இன்னும் பலமடைந்துள்ளது. இவ்வேளையில், ஆட்சி கவிழப்போவதாக பிரசாரம் செய்யப்படுவது வெறும் கேலிக்கூத்தென கால்நடை வள அபிவிருத்தி பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கால்நடை வள அபிவிருத்தியமைச்சில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…

  15. தம்மை விடுவிக்கக்கோரி சிறைக்கூரை மீதேறி ஆயுள் தண்டனைக் கைதிகள் போராட்டம் வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் தங்களை விடுவிக்குமாறு கோரி கூரைமீது ஏறிநின்று போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்ட நடவடிக்கையில் ஆயுள் தண்டனைவழங்கப்பட்ட ஆறு கைதிகளே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சிங்களவர்களாகிய இந்த ஆயுள் கைதிகள் செப்பல் சிறைக் கூடத்தின் கூரைமீது ஏறியே இப்போராட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள் ஆறுபேரும் நேற்று உணவு உண்ண மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆயுள் தண்டனைக் கை…

  16. வெள்ளவத்தையில் தமிழ் யுவதிகளிடம் சேஷ்டைபுரியும் நிர்வாண ஆசாமிகள் கொழும்பு வெள்ளவத்தைப் பொலிஸ் பிரிவில் வாகனங்களில் வரும் கும்பலொன்று வீதிகளில் தனியாக செல்லும் பெண்களிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. காலிவீதி தவிர்ந்த இப் பொலிஸ் பிரிவிலுள்ள குறுக்குத்தெருக்கள், மற்றும் ஒழுங்கைகளில் தாம் வந்த வாகனத்தை நிறுத்தும் இக் கும்பல் வாகனக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு பெண்கள் தனியாக வரும் போது தமது உடைகளை களைந்து நிர்வாணமாக இருக்கின்றனர் அத்துடன் ஆபாசமாக சைகைகளையும் காண்பிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை மாலை வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பஜுரோ ஜீப் வண்டியிலிருந்த அக் கும்பல் அவ்வழியால் தமிழ் யுவதிகள் சென்ற…

  17. வெள்ளவத்தையில் தமிழ் இளைஞனை கடத்த முயன்ற `வெள்ளை வான்' -மதகுருவின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது கொழும்பு, வெள்ளவத்தையில் நேற்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் தமிழ் இளைஞர் ஒருவரை கடத்திச் செல்வதற்கு முற்பட்ட முயற்சி அப்பகுதியால் சென்ற கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி.யின் கவனத்திற்கு இச் சம்பவம் தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது: வங்கியொன்றிலிருந்து பணத்தை மீ…

  18. அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்கு விஜயம் இலங்கையிலிருந்து 15 இற்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் மேலும் 6 அமைச்சர்கள் செல்லவிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற முறையிலேயே இவ் அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். எதிர்வரும் சில நாட்களில் மேலும் பல அமைச்சர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் வெளிநாடு செல்லுமுன் ஜனாதிபதிக்கு அதனை அறியப்படுத்துவதுடன் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெறும் காலங்களில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்க வேண்டுமெனவும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு மாத்திரமே அரசாங்க நிதியைப் பயன்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிப…

  19. குடாநாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நோயாளர்கள் பெரும் அவதி யாழ். குடாநாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் கடும் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.குடாநாட்டில் அரச வைத்தியசாலை களில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாட்டினால் தமக்குரிய மருந்துகளை நோயாளர்கள் அதிக விலையில் தனியார் மருந்தகங்களிலேயே பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இதே நிலையே காணப்படுவதாக நோயாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு ப…

  20. மட்டக்களப்பு அகதி முகாம்களில் வேகமாக பரவும் தொற்றுநோய்கள் -ஆயிரக்கணக்கானோர் பீடிப்பு மட்டக்களப்பில் அகதி முகாம்களில் வேகமாகப் பரவி வரும் தொற்று நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகளவு மக்கள் குறிப்பிட்டதொரு நிலப் பகுதியில் மிக நெருக்கமாகத் தங்கியிருக்கும் சூழ்நிலையிலும் முழுமையான சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று நோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. அண்மையில் தொடர்ச்சியாகப் பெய்த கடும் மழையாலும் அகதி முகாம்களைச் சூழ்ந்து வெள்ளம் தேங்கி நிற்பதாலும் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. பொக்களிப்பான், கண்நோய், வயிற்றோட்டம், வாந்திபேதி மற்றும் தோல் நோய்களும் பரவத் தொடங்கியுள்ளன. அகதிகள் நெருக…

  21. ரணிலின் இரட்டை வேடம் [17 - April - 2007] -வி.திருநாவுக்கரசு- ஆட்கடத்தல்கள், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், காணாமற் போதல்கள் போன்ற கொடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கவன ஈர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கு முகமாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு (C.M.C) அழைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மனோகணேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் ஒன்று 2007.04.09 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றதல்லவா? அக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையினை நிகழ்த்தினார். காணாமற் போன அல்லது கடத்தப்பட்ட தமது அன்பிற்குரியவர்களை காணத்துடிக்கும் அப்பாவி உறவினர்கள் கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தனர்.காணாமல் போனவர்களை கண்டுபிடி…

    • 4 replies
    • 2.1k views
  22. செவ்வாய் 17-04-2007 14:21 மணி தமிழீழம் [சிறீதரன்] மாதகல் கடலில் இராட்சத அலைகள் வலிகாமம் மேற்கு மாதகல் கடலில் நேற்று திங்கட் கிழமை காலை இராட்சத அலைகள் ஆர்ப்பரித்து எழுந்ததால் மக்கள் ‘சுனாமி’ வருவதாக பதறியடித்து மக்கள் இடம்பெயர்ந்து சில்லாலை கதிரைமாதா ஆலயச் சூழலில் தஞ்சமடைந்தள்ளதாக தெரியவருகிறது. இப்பகுதியில் நேற்றுக் காலை திடீரென பெரும் காற்று வீசி இதனால் பனைமரங்கள் முறிந்து வீழ்ந்ததாகவும் கடல் அலைகள் வழமைக்கு மாறாக ஆர்பரித்து எழுந்ததாகவும் தெரியவருகிறது. பின்னர் நிலைமை வழமைக்கு திரும்பியதையடுத்து மக்கள் தமது இடங்களுக்கு திரும்பியுள்ளனர். pathivu

  23. சிறிலங்கா அரசிடம் பாதுகாப்புக் கோரும் கருணா ஒட்டுக்குழு. - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 12:23 சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறிலங்கா அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமது அலுவலகங்களுக்கு சிறிலங்காப் படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். துணை இராணுவக் குழுவான கருணாவினர், கிழக்கில் அதிகளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் அதேவேளை, சிறார் படைச்சேர்ப்பு, தமிழ், முஸ்லிம் மக்களை அச்சுறுத்துதல், பணம் அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பல தரப்பினாலும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருணா குழுவ…

  24. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு, பகலாக விமானத் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 10:33 புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நேற்றுப்பகலும் இரவும் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலால் அப்பகுதியே அதிர்ந்தது மக்கள் பாதுகாப்புத் தேடி அவலமாக ஓடித்திரிந்ததை அவதானிக்க முடிந்தது புதுக்குடியிருப்புப் பிரதேச வான்பரப்பினுள் காலை 8.35 மணிக்கும் பின்னர் 9.15 மணிக்கும் தொடர்ந்து 9.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பிரவேசித்த சிறிலங்கா வான்படையின் மிக் 27 ரக யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதி மீது தாக்குதலை மேற்கொண…

  25. கருணா குழுவினரின் நடவடிக்கைகள் பேரழிவுக்கு வழிகோலும்: ஹக்கீம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிராக துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் ஒரு பேரழிவான நிலையை ஏற்படுத்தும் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை அவர் தெரிவித்துள்ளதாவது: நான் இந்த விடயங்கள் தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான தனியான சந்திப்பின் போதும், அனைத்துக்கட்சி குழுக் கூட்டங்களின் போதான சந்திப்பின் போதும் எடுத்துக் கூறியுள்ளேன். மிகவும் நெருக்கடியான பகுதிகளில் கருணா குழுவினர் சட்ட ஒழுங்கில் தலையிடுவதனை தடுக்கும் படி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.