ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142770 topics in this forum
-
நாதியற்ற நிலையில் தமிழ்ச்சாதி இல்லை! தமிழர் தம் தேச இறைமையை மீட்டு தமிழீழம் எய்தும் வரலாற்றின் காலப்பகுதி தற்போது நடைபெறுகிறது எனறே தமிழினம் உணர்கிறது. ஆபத்தான ‘சமாதானம்’ எனும் நெருப்பாற்றை வெற்றியோடு கடந்து புடம்போட்ட புதிய புலிகளாக தமிழினமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எழுந்து நிற்கும் இக்காலப்பகுதி, தமிழரின் வீரம் செறிந்த, குருதியாலும் சதைகளாலும் வெல்லப்பட்ட விடுதலைவேள்வியை முடித்துவைக்கும் கணங்கள் என்றே எம் உளங்களும் உயிர்களும் கருதுகின்றன. புதிய தேசத்தை பிரசவிக்க பிரசவவேதனை தொடங்கிய உணர்வு உலகத்தமிழரை ஆட்கொள்ள தொடங்கிவிட்டது. இவை ஆவேச வார்த்தைகள் அல்ல(rhetoric) அது களயதார்த்தமாகும். ( ground reality). நீண்டபோராட்டத்தினதும் சமாதானப் பயணத்தின…
-
- 1 reply
- 998 views
-
-
ஐ.நா. அதிகாரிகளுக்கு சிறிலங்கா அரசு அழைப்பு [செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2007, 04:15 ஈழம்] [க.திருக்குமார்] "மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தாம் செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சித்திரவதைகளுக்கான சிறப்பு பிரதிநிதியும் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகளுக்கான செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியும் சிறிலங்காவிற்கு சென்று நிலைமைகளை பார்வையிட வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்திருக்கின்றது. ஜெனீவாவில் உள்ள பலைஸ் டெஸ் நேசனில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றியிருந்தார். அங்கு அவர் ஆற்றிய …
-
- 3 replies
- 976 views
-
-
300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில் மகிந்தவும் பசிலும்: 'ராவய' வார ஏடு [திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனியார் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானதும், ரஸ்ய தூதரக அலுவலகத்திற்கு சொந்தமானதுமான 300 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி கொண்ட காணியை பலாத்காரமாக உரிமையாக்கிக் கொண்டு அதில் வாகனத் தரிப்பிடத்தை அமைக்கும் பணி, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றது. இத்தகவலை கடந்த வாரம் வெளிவந்த 'ராவய' வார இதழ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடத்தை அமைத்து அதனை அங்குரார்ப்பணம் ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
இந்தியாஇலங்கை கூட்டு ரோந்து: கருணாநிதி சென்னை: இலங்கை கடற்படை, கடலில் ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபடும்போது இந்திய ராணுவத்தையும் உடன் ஈடுபடுத்த இலங்கை அரசு சம்மதித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து இன்று திமுக சார்பில் சென்னையில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் இலங்கை துணைத் தூதரக அலுவலகத்திற்கு அமைச்சர்கள் குழு சென்று அங்குள்ள தூதரிடம் மனு கொடுத்தது. அப்போது அமைச்சர்கள் குழுவிடம் இலங்கை தூதர் பேசுகையில், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுலகம் எங்களிடம் விசாரித்தது, தகவல் …
-
- 8 replies
- 3.4k views
-
-
புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்குவதற்கு அமெரிக்காவின் ஆதரவு தேவை :கோத்தபாய ராஜபக்ஷ - பண்டார வன்னியன் ஆழனெயலஇ 12 ஆயசஉh 2007 09:56 விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று, சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக படை நடவடிக்கைகளை கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுவரும் கருத்துக்களை மறுத்திருக்கும் அவர், கிழக்கில் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகளின் நிலைகளைக் கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், படை நடவடிக்கைகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும…
-
- 6 replies
- 1.9k views
-
-
குறிசூட்டு தாக்குதலில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் பலி மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்ற குறிசூட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இரு சிறப்பு அதிரடிப்படையினர் உயிரிழந்துள்ளதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன
-
- 0 replies
- 841 views
-
-
இனவெறியர் இராஜபக்சே இந்தியா வர அனுமதிக்கக்கூடாது மறவன்புலவு க. சச்சிதானந்தன் தெற்காசியக் கூட்டமைப்பின் 14ஆவது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்பிரல் 3, 4 நாள்களில், புதுதில்லியில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தெற்காசியாவின் ஒவ்வொரு நாட்டுத் தலைவரையும் நேரடியாகச் சென்று அழைப்பைக் கொடுத்து வருகிறார். புதிதாக இணைந்துள்ள ஆப்கானிஸ்தானுடன், இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், பூடான், மாலேத்தீவு ஆகியன இந்தக் கூட்டமைப்பில் உள்ள ஏழு நாடுகள். ஆண்டுக்கு ஒருமுறை உச்சி மாநாடு நடக்கவேண்டுமென்பது மரபு. ஆனாலும் இதுவரை 13 மாநாடுகளே நடந்துள்ளன. 1985இல் முதலாவது உச்சி மாநாடு வங்காள தேசத் தலைநகர் தாக்காவில் நடைபெற்றது. அடுத்த 10 ஆண்டுகளில் 8 உச்சி மாநா…
-
- 2 replies
- 886 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதானமான வேரூன்றிய அரசியல் வாழ்வு அற்ற நிலை என்பது சர்வதேச அரங்கில் எமது போராட்டம் எதிர்கொள்ளும் சில பிரச்சாரங்களிற்கு காரணமாக அமையலாம். தாயகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் பங்களிப்பு போல் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு எண்ணிக்கையில் பரந்து பட்டு இல்லை. குறிப்பிட்ட வீதமானவர்கள் போராட்ட விடையங்களில் நாட்டமற்று இருப்பது வேதனைக்குரியது. ஒரு நாடு நிலைப்படுத்தப்படுவதற்கு சர்வதேசத்தின் அங்கீகாரம் அவசியமான ஒன்று. அத்தகை அங்கீகாரத்தை பெறும் நோக்கிலான நிதானப்பாடுகளே கால நீட்சிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன எனபது தமிழர்களின் நிலைப்பாடு. இந்தக் கால நீட்சி என்பது விடுதலை வேலைகளையும் மன உறுதியையும் குலைத்துவிடும் ஒரு பொறிமுறையாக சர்வதேசத்தாலு…
-
- 37 replies
- 6.4k views
-
-
மலையகத் தமிழரைக் காக்கவேண்டியது நமது கடமை - வீர. மதுரகவியிடம் நேர்காணல் இந்தியாவின் தென்பகுதியிலிருந்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இலட்சக்கணக்கானோர் 15க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழ் மக்களில் இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்து வருவது குறித்து தாய்நாட்டு மக்களுக்கு இதுவரை முழுமையாகத் தெரியாமலிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயமாகும். எனவே இலங்கை வாழ். இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் நிலைமை குறித்து இந்திய அரசாங்கத்தினதும் தமிழ்நாட்டு அரசாங்கத்தினதும் ஐக்கிய நாட்டுச் சபையினதும் கவனத்து…
-
- 0 replies
- 694 views
-
-
தவறான எச்சரிக்கை விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய பிரச்சினையிலும் அதற்குத் தலைமை தாங்கி நடத்தும் விடுதலைப் புலிகள் குறித்த அணுகுமுறையிலும் ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒருவிதமாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு ஒருவிதமாகவும் பேசுவது கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மட்டுமே உரிய கலையாகும். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய படகொன்று இந்திய கடலோரக் காவல்படையினால் பிடிக்கப்பட்டிருப்பது குறித்து "இந்து' போன்ற பத்திரிகைகளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா போன்றவர்களும் எழுப்பிய கூச்சலுக்குப் பயந்து முதலமைச்சர் கருணாநிதி …
-
- 0 replies
- 817 views
-
-
செவ்வாய் 13-03-2007 01:06 மணி தமிழீழம் [சிறீதரன்] மூன்று போராளிகளின் வீரச்சாவு விபரம் சிறீலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலில் வீரச்சாவை தழுவிக் கொண்ட மூன்று போராளிகளின் பெயர்விபரம் வெளியிடப்பட்டுள்ளது. மன்னார் மடு பெரியதம்பனை பிரதேசத்தில் சிறீலங்கா ஆழஊடுருவும் அணியினருடனான மோதலில் லெப்ரினன் செல்வரத்தினம் என்றழைக்கப்படும் தென்னிலங்கை மாத்தளை மாவட்டத்தை சொந்த இடமாகவும் ஒட்டுசுட்டான் பகுகுதியை பிந்திய முகவரியாகவும் கொண்டிருந்த பீற்றர் செல்வரத்தினம் என்றழைக்கப்படும் துணைப்படைப்போராளி வீரச்சாவை தழுவுக்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மணலாறு மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மேஐர் தேனுஜா என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட ஞானசேகரம் லலிதாம…
-
- 0 replies
- 775 views
-
-
மட்டக்களப்பு உன்னிச்சையில் மோதல் - ஒரு இராணுவம் பலி 10 பேர் காயம். மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் அதாவது கரடியனாறு பகுதியில் இருந்து தென்மேற்காக 12 கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது காயமடைந்த இராணுவத்தினரை அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு? ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவும் இந்தியாவும் இந்த தருணத்தில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுவதுடன், இந்த இரு நாடுகளும் ஆதரவளிக்காத பட்சத்தில் குறிப்பிட்ட தீர்மானம் கொண்டுவரப்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக்கு ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் ஆதரவும் கிடைக்கலாம். ஜெனீவாவில் ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான தீர்மானத்தை கொண்டு வர முயற்சிகளை …
-
- 7 replies
- 2.6k views
-
-
சோதனையே எழுதாமல் பட்டத்தினை பெற்ற பலரும், தமது பட்டங்களை நான் திரும்பி தருமாறு கேட்டு விடுவேன் என்று என்னை எதிர்திருக்கலாம். -ரத்தினஜீவன் கூல் கடந்த ஆறுமாத காலமாக மூடப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்.பல்கலைகழம் எதிர்வரும் 22.ம் திகதி முதல் மீண்டும் செய்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்குப் பல்கலைகழக துணைவேந்தர் ரவீந்திர நாத், இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு இது வரை என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு பல்கலைகழக தமிழ்துறைத் தலைவர் பாலசுகுமார் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். கடந்த மாதம் வவுனியா விவசாயகல்லூரியில் இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் செய்ததில் மூன்று மாணவர்கள் ப…
-
- 1 reply
- 2.1k views
-
-
யாழில் நலன்புரி நிலையங்களில் பதற்றம். யாழ்ப்பாணம் உடுவில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களிடத்தில் பெரும் பதட்டமான நிலமை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடுவில் ஆலடிப் பகுதியில் உள்ள நலன்புரி நிலையத்தில் உள்ள திருமணமாண இளம்குடும்பஸ்தர் ஒருவர் நள்ளிரவு நேரம் வெள்ளை வானில் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர் இளம் குடும்பஸ்தரான நடனசிகாமணி வசந்தராஐன் வயது 30 என்பவராகும் இதே போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடுவில் சபாபதிப்பிள்ளை முகாமின் தலைவராக இருந்த மோகன் என்பவர் இராணுவப் புலனாய்வாளர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட…
-
- 0 replies
- 761 views
-
-
கப்டன் குட்டியழகியின் நினைவுக்கல் திரைநீக்கம் மட்டக்களப்பு புல்லுமலைச் சமரில் வீரச்சாவடைந்த கப்டன் குட்டியழகியின் நினைவுக் கல், இன்று அவரது சொந்த இடமான கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் திறந்து வைக்கப்படுகின்றது. இன்று மாலை 3.00 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து திருவுருவப் படம் எடுத்துச் செல்லப்பட்டு, பாரதிபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் வீரவணக்க கூட்டம் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ மரியாதையுடன் இவரது நினைவுக் கல் திரைநீக்கம் செய்து வைக்கப்படவுள்ளது. கடந்த 9ஆம் திகதி வீரச்சாவடைந்த இவரது வித்துடல், நேற்று முன்தினம் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புல…
-
- 0 replies
- 773 views
-
-
கொழும்பு: தமிழக மீனவர்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. விடுதலைப் புலிகள்தான் இதற்குக் காரணம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது சமீப காலமாக இலங்கை கடற்படையினர் கடும் தாக்குதலை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. நேற்று காலை இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாம்பன் மீனவர் கிறிஸ்டோபர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். பல்வேறு போராட்டங்களை அவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு தங்களது நாட்டு கடற்படை காரணம் அல்ல, விடுதலைப் புலிகள்தான் சுட்டனர் என்று இலங்கை வெளியுறவு அமைச…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐ.நா. குழுக்களுக்கான விண்ணப்பம் படிவங்கள் http://www.tamilnaatham.com/pdf_files/2007..._2007_03_06.pdf ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையின் நான்காவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தில் அதன் அங்கத்துவ நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் ஒன்று கூடி சிறிலங்கா உட்பட பல நாடுகளின் உள்ள மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 2 replies
- 1.1k views
-
-
தலை துண்டிக்கப்பட்டவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது [12 - March - 2007] [Font Size - A - A - A] ஏழாலை மயிலங்காடு புகையிலைத் தோட்டம் ஒன்றிலிருந்து கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் அடையாளங் காணப்பட்டுள்ளது. சுன்னாகம் புகையிரத நிலைய வீதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து 4 ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்ட துரைராசா சசிகரன் (வயது 26) என்பவரது சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்தச் சடலத்தையே உறவினர்கள் அடையாளம் காட்டினர். யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இவரது சடலம் மல்லாகம் நீதிவான் திருமதி சரோஜினி இளங்கோவன் உத்தரவின்படி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது http://www.thinakkural.com/news/2007…
-
- 0 replies
- 861 views
-
-
18 அதிரடிப் படையினருக்கு கொழும்பில் தீவிர சிகிச்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் காயமடைந்த படையினர் மற்றும் விசேட அதிரடிப் படைப் பொலிஸார் சிகிச்சைகளுக்காக கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். படையினர் இராணுவ மருத்துவமனைக்கும் விசேட அதிரடிப்படை பொலிஸார் பொலிஸ் மருத்துவமனைக்கும் கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மருத்துவமனையில் விசேட அதிரடிப் படையினர் 18 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்திலும் இதே அளவிலானவர்கள் படுகாயமடைந்த நிலையில் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலநறுவை மாவட்ட வைத்தியசால…
-
- 0 replies
- 1.1k views
-
-
மட்டுநகர் பாடசாலைகள், ஆலயங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து சகல மக்களும் வெளியேற்றம் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை முதல் சற்று ஓய்ந்திருந்த மோதல் இரவு மிகத் தீவிரமடைந்த அதேநேரம், தாக்குதல் அச் சத்தால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அனைத்து மக்களும் வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது பாதுகாப்புத் தேடி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள சுமார் ஒரு இலட்சத்து 60,000 பேருக்கும் அரசோ, அரசசார்பற்ற நிறுவனங்களோ எதுவித உதவிகளையும் வழங்காத நிலையில் இந்த மக்கள் இருப்பிடங்களுக்காகவும் உணவுக்காகவும் அலைந்து திரிகின்றனர். மட்டுநகரிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் …
-
- 0 replies
- 597 views
-
-
கடத்தப்பட்டோர், காணாமற்போனோர்; நேற்று மட்டும் 8 முறைப்பாடுகள் பதிவு கடத்தப்பட்டோர் மற்றும் காணா மற்போனவர்கள் தொடர்பாக எட்டு முறைப்பாடுகள் நேற்று மனித உரிமைகள்ஆணைக் குழு வின் யாழ். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டன. உரும்பிராய் மேற்கைச் சேர்ந்த பரமசாமி திவாகரன் (வயது25) நேற்று ஞாயிற்றுக்கிழமை அதி காலை 4.30 மணியளவில் அவ ரது வீட்டில் இருந்தும் அரியாலையைச் சேர்ந்த மா. குருதராஜ் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12 மணியள வில் அவரது வீட்டில் இருந்தும் அரியாலை,நெடுங்குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் அழகேஸ் வரன் (வயது29) கடந்த வெள் ளிக்கிழமை நள்ளிரவு 1.40 மணி யளவில் அவரது வீட்டில் இருந் தும் மானிப்பாய், மேதர் லேனைச் சேர்ந்த யேசுதாசன் ஜெயசுதன் (வயது25) கடந்த வெள்ளிக் கிழமை அ…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழர்களின் அவலங்களை கருத்தில் எடுக்காமல் இராணுவ நடவடிக்கையில் அரசு முனைப்பு ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தமை குறித்து தமிழ்க்கூட்டமைப்பு அதிர்ச்சி, கவலை அரசு கிழக்கில் இராணுவ நடவடிக்கை யில் மாத்திரமே முனைப்புக் காட்டுகின் றது. மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படு வது பற்றியோ அவர்கள் உயிர் ஆபத்துக் களை எதிர்நோக்குவது பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்ட மைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இராணுவ நடவடிக்கையில் மாத்திரம் கவனஞ்செலுத்தாமல் மக்களைப் பற்றியும் சிந்தித்து தற்போது புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் இருந்து அரச கட் டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந் திருக்கும் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடி யாகச் செய்து கொடு…
-
- 0 replies
- 582 views
-
-
தேர்தல் ஆணையரோடு ஜனாதிபதி ஆலோசனை திடீர்ப் பொதுத் தேர்தல் குறித்து ஆராய்வு? [Monday March 12 2007 06:38:11 AM GMT] [யாழ் வாணன்] தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்காவை திடீரென அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்தாலோசனை நடத்தியிருக்கிறார். திடீர்ப் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கையாக இச் சந்திப்பு இருக்கலாம் என சில அரசியல் வட்டாரங்கள் ஊகம் தெரி விக்கின்றன. கடந்த புதன்கிழமை இச்சந்திப்பு நடை பெற்றது. எனினும் ஜனாதிபதிக்கும் தேர் தல் ஆணையாளருக்கும் இடையில் கலந் துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வத் தகவல் ஏதும் வெளி யாகவில்லை. அதேவேளை அன்று (புதன்கிழமை ) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் க…
-
- 0 replies
- 544 views
-
-
கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் ஐ.தே.க.கோரிக்கை; மீள்குடியேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு அரசாங்கம் கிழக்கை கைப்பற்றிவிட்டோம் என்று பெருமை பேசிக்கொண்டிருக்காமல் கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தற்போது இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. மனிதஉரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றன. இவற்றைத் தடுக்க அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவ…
-
- 0 replies
- 542 views
-