Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பழைய பூச்சாண்டி [06 - March - 2007] முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் அரசாங்கத்தரப்பு பின்வரிசை எம்.பி.க்களாக இருந்து கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் அவருக்கு நெருக்கமான குழாமுக்கும் எதிரான `போராட்டத்தை'த் தொடர்ந்த வண்ணமிருக்கிறார்கள். அவர்களின் இந்தப் போராட்டம் பெரும்பாலும் கொழும்பில் செய்தியாளர் மகாநாடுகளைக் கூட்டி குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ராஜபக்‌ஷ தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கையொன்றைச் செய்திருந்ததாக சமரவீரவும் சூரியாராச்சியும் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு தென்னிலங்கையில் இப்போது பெரும் அரசியல் சர்ச்சை…

  2. ரணில் - விடுதலைப் புலிகள் கூட்டு தொடரும் வரை அரசாங்கத்தை வீழ்த்த நாம் தயாரில்லை: லால் காந்த. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுதலைப் புலிகளுடனான தொடர்பு, மற்றும் தனியார் மயமாக்கல் திட்டங்கள் இருக்கும் வரை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜே.வி.பி ஒருபோதும் இணைந்து செயற்படாது என்று ஜே.வி.பியின் அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மேலும் பல கட்சிகளுடன் இணைந்து புதி…

  3. ஐ.நாவின் அமைதிப் படையை உடனடியாக அனுப்பி தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுக! கொழும்பு, மார்ச்.5 ஐ.நா. அமைதிகாக்கும் படை ஒன்றினை உடனடியாக இலங் கைக்கு அனுப்பி இலங்கைத் தமி ழர்களின் உயிர்களைக் காப்பாற்றுங் கள் அதன் மூலம் அமைதியை நிலை நாட்ட உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு வற்புறுத்திக் கேட் டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி யின் தலைவர் அப்பாத்துரை விநா யகமூர்த்தி ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கி மூனுக்கு அனுப்பி வைத் துள்ளார். வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்திலுள்ள தமி ழர்கள் சட்டவிரோதமாகக் கொல் லப்படுவது, கைது செய்யப்படு வது மற்றும் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பூஸா என்ற தட…

  4. மட்டக்களப்பு தாந்தாமலைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவி மாட்டுப்பட்டிகளில் பராமரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்களை பிடித்துச் சென்றுள்ளனர். மட்டக்களப்பு படுவான்கரை தாந்தாமலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா இராணுவத்தினர் ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது அந்தப் பகுதியில் மாட்டுப் பட்டிகளை பராமரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 13 இளைஞர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 4 பேரின் பெற்றோர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர். அரசடித்தீவைச் சேர்ந்த கதிர்காமப்போடி பகீரதன் (வயது 22) அமரசிங்கம் சிவகுமார் (வயது 16) கதிராமப்போடி கோணேஸ்…

  5. அவுஸ்.தேசிய வானோலிக்கு அமைச்சன் நிமல் பேட்டி விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு நிதி சேகரிப்பதற்காகவே இலங்கையில் வர்ழ்கின்ற தமிழ் மக்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கு வி.புலிகள் மேற்கொண்டு வருகின்ற மற்றுமொரு நடவடிக்கையாகும் என்று சுகாதரார அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் நிமல் அங்குள்ள தேசிய வானோலி ஒன்றுக்கு நேற்று முன்தினம் வழங்கிய செவ்வியிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் வழங்கிய செவ்வி தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்களை வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனு…

  6. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த "மிஹின் எயார்" விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிஹின் எயார் விமான சேவை தனது கன்னிப் பயணத்தை நேற்று ஆரம்பிப்பதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய விசேடமாக அழைக்கப்பட்டிருந்த 50 பயணிகளுடனும் 8 பணியாளர்களுடனும் நேற்று காலை 11 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி விமானம் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. பின்னர் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. "பொக்கர்-27" எனும் சிறிய ரக…

  7. தமிழக அரசியலில் ஜெயலலிதாவிற்கு கிடைத்த துருப்புச்சீட்டு விடுதலைப் புலிகள். ஜ திங்கட்கிழமைஇ 5 மார்ச் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ சென்றமாதம் தமிழக அரசாங்கத்தின் ஆதரவில் பாரம்பரிய கலைஞர்களை ஊக்குவிக்கும் சங்கமம் என்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இடம்பெற்றிருந்தது. குறிப்பிட்ட சங்கமம் நிகழ்சியினை கலைஞர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழியே முன்னின்று நடாத்தி இருந்தார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளராக முன்னைநாள் வெரிதாஸ் வானொலி பணிப்பாளர் ஜெகத் கஸ்பார் அடிகளார் முக்கிய பங்காற்றி இருந்தார். குறிப்பிட்ட சங்கமம் நிகழ்ச்சி தொடர்பாக இன்று இரவு ஜெயா தொலைக்காட்சி பரப்பான நிகழ்ச்சி ஒன்றை சங்கமம் திடுக்கிடும் உண்மைகள் அம்பலம் என்ற தலைப்பில் ஒலிபரப்பியது. ஆரம்பத்தில் கலைஞரைய…

  8. இலங்கை அரசுமீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் ! இலங்கை அரசுமீது சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க-வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். ஈழத்தில் நடைபெறுவது என்ன? என்று தலைப்பில் 6-3-2007 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் உண்மை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்று தொடக்கவுரையாற்றினார். அடுத்து திராவிடர் இயக்-கத் தமிழர் பேரவையின் மாநில அமைப்பாளர் சுப. வீரபாண்டியன் ஈழத் தமிழர்களின் அவலங்களையும் பார்ப்-பனர்கள் கொச்சைப்படுத்தும் செயல்களையும் மிக விளக்க-மாக எடுத்து…

  9. முல்லைத்தீவில் பாரிய தாக்குதல் நடத்த படையினர் திட்டமிடுவதாக தெரிவிப்பு முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்க அரச படைகள் திட்டமிட்டு வருவதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்புச் செயலகம் நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கையில், முல்லைத்தீவில் பாரிய தாக்குதலொன்றைத் தொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. அவர்களது அண்மைக் காலச் செயற்பாடுகள் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றன. இதற்காக இராணுவ விசேட அணிகளும் கருணா குழுவும் திருகோணமலைக்கு வடக்கே புல்மோட்டையிலும் கொக்குத்தொடுவாய் மற்றும் கொக்கிளாய்ப் பகுதிகளிலும் நிலை கொண்டுள்ளன. முல்லைத்தீவில் பாரிய தாக்குதலைத் தொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு படைக்குவிப்பு…

    • 20 replies
    • 4.5k views
  10. மிருசுவில் சிறிலங்காப் படைத்தளப் பகுதியில் பாரிய குண்டுவெடிப்பு. யாழ்ப்பாணம் மிருசுவில் சிறிலங்காப் படைத்தளப் பகுதியில் இன்று காலை 9.00மணிக்கு பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது. இதன் போது இரண்டு படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு கூறுகின்றது. இருந்த போதிலும் பல படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என சுயாதினத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 998 views
  11. மலையகத்திற்கு தனி உளவுப் பிரிவு ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:30 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்டறியும் முகமாக சிறப்பு உளவுப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக" ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரி.ஜே.மிஸ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "ஊவா மாகாணத்தின் அனைத்து காவல்துறை பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவின் மூலம் தற்போது மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து பல தகவல்களைப் பெறக்கூடியதாக உள்ளது. உளவுப் பிரிவினரின் தகவல்கள் அடிப்படையிலேயே அண்மையில் மலையகப் பகுதிகளில் பல ஆயுதங்களைக் கைப்பற்ற முடி…

    • 5 replies
    • 1.5k views
  12. முகமாலை, கிளாலி மற்றும் அலம்பில் பகுதியில் சிறீலங்கா வான்படையினர் தாக்குதல். முகமாலை, கிளாலி மற்றும் அலம்பில் பகுதியிலும் சிறீலங்கா வான்படையினரின் கிபிர் விமானங்கள் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் முன்னரங்கப் பகுதிகளை வட்டமிட்ட 4 கிபிர் விமானங்கள் இக்குண்டு வீச்சை நடத்தியுள்ளன. இதேநேரம் இன்று கலை அலம்பில் பகுதியிலும் சிறீலங்கா வான் படையினரின் வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்றைய தாக்குலின் போது ஏற்பட்டுள்ள தேசவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. -Pathivu-

  13. நளினி மகள் இங்கு வந்த பிறகு இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அவருக்கு குடியுரிமை வழங்களாமா என்று 4 வாரத்துக்கள் பதில் அறிவிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவு. நன்றி : மாலை மலர்

    • 2 replies
    • 1.5k views
  14. சிறுவர்களின் மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் "உலகில் வாழும் சிறுவர்களின் வளர்ப்புத் தாய்!" இவற்றைக் கண்டு கொள்ளமாட்டாரா?

  15. -முத்துசாமிகளுக்கு இடமளிக்க முடியாது என்கிறார் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் 1815 இல் கண்டி இராச்சியத்தை காட்டிக் கொடுத்த போது தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதேபோல், இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் தனது எதிராளிகள் அனைவருடனும் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலைமை நாட்டை பிரிக்க முயலும் சர்வதேச பிரிவினைவாத சக்திகளுக்கு சாதகமாக அமைந்து விட்டதென்கிறார் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச. தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற "அன்று கண்டி இராச்சியம் இன்று தாய் நாடு" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய போதே விமல் வ…

  16. கொழும்புத் துறைமுகப் பகுதியிலிருந்து கேட்ட குண்டு, வேட்டுச் சத்தத்தால் பரபரப்பு வழமையான ஒத்திகையென கடற்படை தெரிவிப்பு கொழும்பு துறைமுகத்திற்குள் கடற் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஒத்திகை நடவடிக்கை யொன்றில் ஈடுபட்டனர். முன் அறிவித்தலின்றி இடம் பெற்ற கடற் படையினரின் இந்த ஒத்திகை நடவடிக்கை காரணமாக விடயம் அறியாத பலரும் துறைமுகத்திற்குள் சண்டை நடப்பதாக பீதியடைந்தனர். பாதுகாப்பு காரணத்துக்காக மாதாந்தம் மேற்கொள்ளும் வழமையான ஒத்திகை நடவடிக்கை என்று கடற்படையினரிடம் கேட்டபோது தெரிவித்தனர். கடற் படையினரின் கொழும்பு துறைமுக ரங்கலை கடற்படை முகாம் கடற்படையினரே இரு தரப்பாக நின்று நேரடி மோதலில் ஈடுபடுவதை செய்து காட்டி பாதுகாப்பு பயிற்சியில்…

  17. மற்றைய சிந்தனைகள் சமாளித்துக்கொண்டு அதிகாரத்துக்கு வருவதற்கு வழிசமைத்ததற்காக `சந்திரிகா சிந்தனைக்கு' நன்றி தெரிவிக்க வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகலையில் இரண்டு மாடி சனசமூக கட்டிடத்துக்கான அடிக்கல்லை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது. இன்று ஒருவாறு சமாளித்து ஆட்சிக்கு வந்துள்ள சிந்தனைக் காரர்கள் அனைவரும் சந்திரிகா சிந்தனைக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் நான்கு அமைச்சுக்களை தனித்து கையாண்டேன். ஆனால், ஏனைய அமைச்சர்கள் அதற்கான பெயரை சம்பாதித்தனர். நான் ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு சதித்திட்டம் செய்வதாக சிலர் கதைக…

  18. விஜயதாச ராஜபக்ஷ மீதான அச்சுறுத்தல் விவகாரம் தன்மீது வீண்பழி சுமத்தப்படுவதாக ரணில் விசனம் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. மீதான அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பாக தன் மீது வீணான பழிச் சொல் சுமத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து பேசும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; கடந்த மாதம் இரு நாட்களாக தொடர்ச்சியாக பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்றக் குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதா…

  19. யாழ்.குடா நாட்டில் ஆட்கடத்தல்கள் தொடர்கிறது மூன்று நாட்களில் ஏழு அப்பாவிகள் கடத்தப்பட்டனர் யாழ்.குடாநாட்டில் வெவ்வேறு இடங்களில் வைத்து கடந்த மூன்று தினங்களில் ஏழு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் வடமராட்சி கம்பர்மலை தோட்டவெளியில் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பகுதி இளைஞர்களான வேலாயுதம் கிருஷ்ணமோகன் (வயது 19) ,கந்தையா செல்வக்குமார் (வயது 21), கோவிந்தராஜா கிருபாகரன் (வயது 22) ஆகிய மூவரும் அங்கு சீருடையில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சுன்னாகம் ஸ்ரேசன் வீதியிலுள்ள தனது வீ…

  20. திருச்சி: திருச்சியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவரின் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி பெருமளவிலான பணத்தைப் பறிமுதல் செய்தனர். அவரைக் கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூரில் ஒருவரைக் கைது செய்து, 4 டன் இரும்புக் குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை, தீரன் நகர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் குறித்து போலீஸாருக்குத் தகவல்கள் சென்றன. அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஒரு நபர் அவரிடம் வந்து பெரிய சூட்கேஸைக் கொடுத்துச் சென்றதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் அவரது வீட்டை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு 10 மணிக்கு போலீஸ் படை அந்த இல…

  21. கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வடக்கின் கந்தானை காவல்துறை பிரிவில் உள்ள முத்துராஜவெல சதுப்புநில காட்டுப்பகுதியில் இருந்து 5 சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 3 சடலங்களும் சனிக்கிழமை 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில சடலங்கள் கண்கள் கட்டப்பட் நிலையிலும் மிகவும் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இந்த சதுப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்து வரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. -Puthinam-

  22. 'சிறிலங்காவிற்கு அமெரிக்கா அமைதிப்படையை அனுப்பாது': அமெரிக்கா ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 05:18 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ "சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் அமெரிக்காவின் சிறிலங்காவிற்கான தூதுவர் றொபேர்ட் ஒ பிளேக்கிற்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமானது சாதாரண பொருட்கள் மற்றும் சேவைகளின் வழங்கல்களுக்கான ஒரு உடன்பாடு" என அமெரிக்க தூதரக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பில் அமெரிக்க தூதரக ஊடகத்துறை அதிகாரி ஈவான்ஸ் ஓவன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: "அமெரிக்காவின் அமைதி காக்கும் படையினர் சிறிலங்காவில் பணியாற்றுவதோ அல்லது சிறிலங்காவின் படையினரை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதோ இந்த ஒப்பந்தத்…

  23. அம்பாறையில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2007, 19:07 ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் அம்பாறையில் இழப்புக்களை சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அம்பாறை உடும்பன்குளம் பகுதிக்குள் ஆக்கிரமிப்பு நோக்கில் நகர்ந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின் போது சிறிலங்கா அதிரடிப்படையினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடிவிட்டனர். அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட விடுதலைப் புலிகள், ஏகே எல்எம்ஜி ரவை இணைப்புத் தொடர்கள், 40 ம…

    • 1 reply
    • 1.2k views
  24. கடந்த சில வாரங்களாக இப்பத்திரிகையில், ரவி சுந்தரலிங்கம் என்பவரால் தொடராக எழுதப்பட்ட 'இஸ்ரேலிய லெபனான் சர்ச்சைகள், போர்கள், உத்தேசங்கள், விளைவுகள் எமக்கான படிப்பினைகள்" என்கின்ற கட்டுரையை படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவலை நினைத்து உரலை எப்படி இடிப்பது என்பதன் அர்த்தம் தெளிவாகப் புரிந்தது. நானும் ஒரு பத்தி எழுத்தாளன் என்ற முறையில் சில கருத்துக்களை ஆரோக்கியமான விமர்சனத் தளத்திலிருந்து முன்வைக்க விரும்புகிறேன். விடுதலைப் புலிகளையும், ஹிஸ்புல்லாவையும் ஒன்றென தளமும் தரமுமற்ற ஒப்பீடுகளால் ஓலமிடுவதைத் தவிர்க்கும்படி இக்கட்டுரையாளர் தமது பத்தி எழுத்தை நிறைவு செய்கிறார். அதுமட்டுமின்றி மக்கள் பலமற்ற திடமில்லாத வெறும் போரொன்றை புலிகள் மேற்கொள்வதாகவும் சலிப்புறுகிறார்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.