ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
ராஜதந்திரிகள் இலக்கு வைக்கப்படுகின்றார்களா? கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனரா?-விதுரன்- மட்டக்களப்பில் முழு அளவில் போர் நடைபெறுகிறது. தினமும் பலர் கொல்லப்படுகின்றனர். புலிகளின் பகுதிகளை நோக்கி அனைத்து படை முகாம்களிலிருந்தும் கடும் ஷெல் மற்றும் பல் குழல் ரொக்கட் தாக்குதல் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான், யுத்த முனைப்பகுதிக்கு இராஜதந்திரிகள் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். கிழக்கை விடுதலைப் புலிகள் வசமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விடுவோமெனக் கூறிவரும் அரசும் படைத்தரப்பும் தினமும் அங்கு படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் மட்டக்களப்பில் புலிகள் வசமுள்ள …
-
- 8 replies
- 1.9k views
-
-
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவது பயங்கர நிலையை உருவாக்கும் ஜே.வி.பி. எம்.பி. விமல் வீரவன்ச இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாடு பூராவும் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் மீண்டும் வழங்கியுள்ளது. இது மிகவும் பயங்கரமான நிலைமையென எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச. ஜே.வி.பி.யின் அரசியல் சபைக் கூட்டம் வழமைபோன்று அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமையில் கூடிய போதே விமல் வீரவன்ச எம்.பி. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்; அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை நடத்துகின்ற அதேவேளை, மறுபுறம் வெ…
-
- 1 reply
- 1.2k views
-
-
திங்கள் 05-03-2007 13:47 மணி தமிழீழம் [மகான்] யாழ்பாணம் மருதானாமடம் சந்திக்கும் உடுவில்சந்திக்கும் இடையே காந்கேசன்துறை வீதியில் இனம்தெரியாத நபர்கள் கிளைமோர் வெடிக்கவைத்துள்ளதாகவும் இதனையடுத்து 15 நிமிட நேரங்களுக்கு மேலாக ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த அச்சமயம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எனினும் சிறீலங்கா அரசு இதுதொடர்பில் எதுவித தகவலையும் வெளியிடவில்லை. முதலாவது தாக்குதல் நடைபெற்று இருநாட்களில் இரண்டாவது தாக்குதல் சிறீலங்கா முகாமிற்கு அண்மையில் இடம்பெற்றது இராணுவ உயர்பீடத்தை அதிர்யடையச் செய்துள்ளது. சிறீலங்கா இராணுவத்தினர் உடுவில், மருதனாமடம் சந்திக்கு இடையேயான கே.கே.எஸ். வீதியை தேடுதல் நடவடிக்கையின் போது முற்றாக பொதுமக்கள் பாவன…
-
- 0 replies
- 1k views
-
-
நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்த்து ஐ.தே.கட்சி நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்கா இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏனைய அரசியல் கட்சிகளினதும் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார். இது தொடர்பாக ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவிக்கையில்; நேற்று முன்தினம் சனிக்கிழமை வத்தளைப் பகுதியில் ஐந்து ஆண்களின் சடலங்கள் அடையாளம் காணப்படாத வகையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் கொழும்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட ந…
-
- 1 reply
- 757 views
-
-
இராணுவத்தில் சரியான முறையில் தனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி பிரிகேடியர் நிமல் அன்ஸ்ரி ஜயசூரிய என்பவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது சேவைக்காலம், பதவிக்காலம் என்பவற்றின்படி தனக்கு மேஜர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மே 31 ஆம் திகதியுடன் இவர் சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் பதவியைப் பெற்று ஓய்வு பெறவே இவர் விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
-
- 3 replies
- 1.2k views
-
-
அரசு மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவிக்கும் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா, இது தொடர்பாக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அக்குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அரசை விட்டு தான் வெளியேறத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் டிலான் பெரேரா மேலும் தகவல் தருகையில், இந்தியாவின் முன்னாள் பிரதம நீதியரசர் பகவதி தலைமையிலான பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் குழுவினர் தற்போது இலங்கை வந்துள்ளனர். இவர்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயவே வந்துள்ள…
-
- 1 reply
- 840 views
-
-
சிலாபம் நகரை அண்மித்த வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சந்தேகத்தின் பேரில் வடபகுதி தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து லப்டொப், கணினி இயந்திரம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் மானவகே தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் கடந்த இரண்டு வருடங்களாக சிலாபத்தில் வாழ்ந்து வந்துள்ளவர்களாவர். மற்றவர் கடந்த வாரம் வெளிநாடொன்றிலிருந்து வந்தவராவார். இம் மூவரும் இணைந்து வாடகைக்கு வீடொன்றை எடுத்து அங்கு தங்கி இருந்த நிலையிலேயே தகவல் ஒன்றின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களான இம் மூவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்ப…
-
- 0 replies
- 590 views
-
-
மட்டக்களப்பு அரச கட்டுப்பாடற்ற பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருப்பதால் இடம்பெயர்ந்து வரும் மக்களை பராமரிப்பதில் பெரும் சிரமங்கள் எதிர்கொள்ளப்படும் நிலையில் நாளை செவ்வாய்க்கிழமையிலிருந்து வாகரையில் மீள்குடியேற்றப் பணிகள் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை வீதி, வவுணதீவு, கரையாக்கான் உள்ளிட்ட மற்றும் சில அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலிருந்து கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக கூடாரங்களிலும் மர நிழல்களிலும் தங்கியுள்ளனர். சனிக்கிழமை காலையில் மாத்திரம் நூற்றுக்கணக்கானவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை வந்தடைந்துள்ளனர். இவர்களுக்கு உலர் உணவுக…
-
- 0 replies
- 536 views
-
-
கொழும்பில் கடத்தப்பட்டோரது விவரங்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு! மக்கள் கண்காணிப்புக் குழு திரட்டி அனுப்புகிறது கொழும்பு,மார்ச் 5 இலங்கையில் கடத்தப்பட்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ள மக்கள் கண்காணிப்புக் குழு கடத் தப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி அவற்றை சர்வதேச மனித உரிமை அமைப் புகளிடம் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று கொழும் பில் உள்ள மேலக மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு, புத்தளம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் கடத்தப்பட்ட 75பேரினது உறவினர்கள் தங்களது முறைப்பாடு களை இந்த அலுவலகத்தில் பதிவுசெய்த னர். கொழும்பில் கடத்தப்பட்ட 35 பேரினது உறவினர்களும், கிழக்கில் கடத்தப்பட்…
-
- 1 reply
- 797 views
-
-
அரசியல் தீர்வு காணுமாறு இந்தியாவும் சர்வதேசமும் இணைந்து இலங்கைக்கு அதி உச்ச ராஜீக அழுத்தம் கொடுக்கவேண்டும் பாண்டிச்சேரியில் மாவை சேனாதிராஜா பாண்டிச்சேரி,மார்ச் 5 இராணுவ உத்திகளை மேற்கொள்வதை நிறுத்தி, இனப்பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு இந்தியாவும் சர்வதேச சமூகமும் சேர்ந்து ராஜீக ரீதியான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் உப தலைவருமான மாவை சேனாதிராசா பாண்டிச் சேரியில் தெரிவித்தார். பாண்டிச் சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்திப்பதற்காக இங்கு விஜயம் செய்துள்ள மாவை சேனாதிராசா நேற்றுச் செய்தி யாளர்க…
-
- 0 replies
- 688 views
-
-
தூதர்களின் மட்டக்களப்பு விஜயம் குறித்து அமைச்சுகளிடையே கருத்து முரண்பாடு ஆளை ஆள் சாடும் வாதப்பிரதிவாதம் கொழும்பு,மார்ச்5 வெளிநாட்டுத் தூதுவர்கள் பலர் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று கடந்த மாதம் 27ஆம் திகதி ஹெலிக்கொப்டர்கள் மூலம் மட்டக்களப்புக்குச் சென்று தரையிறங்கிய சமயம், விடுதலைப் புலி களின் மோட்டார்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் இலங்கை அரசின் மூன்று அமைச்சுகளி டையே கருத்து முரண்பாட்டை உருவாக்கியிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டிருக்கின்றன. இலங்கை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர்முகாமைத்துவ, மனித உரிமைகள் விவகார அமைச்சு ஆகியவற்றின் உயர்மட்டத்தினரிடையிலேயே இந்த விவகாரம் கருத்து முரண்பாட்டை உருவாக்கியிருக்கின்றது. அமெரிக்கா…
-
- 0 replies
- 631 views
-
-
துணைபோகும் சர்வதேசம் மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங் கையின் வண்டவாளம் இப்போது சர்வதேச சமூகத் தின் முன்னால் தண்டவாளம் ஏறிக்கொண்டிருக் கின்றது. ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசு எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் நிர்வாகத்தி னால் "சட்டத்தின் ஆட்சி' என்ற பெயரின் கீழ் மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளின் சீத்துவம் என்ன வென்பது இப்போது வெளிப்படையாகவே தென் படத் தொடங்கியுள்ளது. "சட்டத்தின் ஆட்சி' நிலவுவதாகக் கூறப்படும் தென்னிலங்கையில் வீதிக்கு வீதி, சந்திக்குச் சந்தி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே ஆயுதங்களோடு சீருடையினர் நிறுத்தப்பட்டிருக் கும் தலைநகர் கொழும்பில் வெள்ளை வானில் நவீன ரக ஆயுதங்களோடு வரும் இனந்தெரியாத குழு வினர், சர்வ சாதாரணமாக, சாவகாசமாக, இந்…
-
- 0 replies
- 638 views
-
-
புலிகளின் குரலின் செய்மதி ஒலிபரப்பு தொடங்கியது 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் 69 ஆவது பிறந்த நாளான இன்று 'புலிகளின் குரல்' வானொலி தனது செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு 'புலிகளின் குரல்' அமலன் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் செய்மதி வழியிலான ஒலிபரப்பை தொடக்கி வைத்தார். இந்த தொடக்க நிகழ்வு இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார். 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக்…
-
- 6 replies
- 1.9k views
-
-
குடும்ப அரசியல் முடிவுக்கு வரவேண்டும் - சூரியாராச்சி. 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பாராளுமன்ற மற்றும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் மங்கள சமரவீரவிற்கு அதாவது எமது பக்கம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்கள். எமக்கு ஒரு குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்புள்ளது. இவ்வாறு முன்னாள் துறைகள் அமைச்சர் சூரியாராச்சி லங்கா தீப பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் திரு.ராஐபக்ஸவின் நடவடிக்கைகள் எம்மை போராட்ட முன்னெடுப்புக்களை கட்டாயப்படுத்தி மேற்கொள்ளச் செய்துள்ளன. இவை இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாதகமான வரும் எனவும் அவர்கள் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவருடன் எதுவித கலந்துரையாடலையும் மேற்கொள்ளவ…
-
- 7 replies
- 1.7k views
-
-
புலிகள் வெளிநாட்டு தூதர்களை குறிவைத்து தாக்கவில்லை என்கிறார் அமெரிக்க தூதரும், இணைத்தலைமை நாடுகளின் தலைவருமான Robert Blake... ( பிளேக் எண்டது ஒரு நோய் எண்டாங்கள் உண்மைதானோ..)) எண்டாலும் புலிகள் தீவிரவாதத்தை கைவிட வேணும் எண்டுறார்...! http://www.zeenews.com/znnew/articles.asp?...926&sid=SAS
-
- 5 replies
- 2.1k views
-
-
2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களிக்க விடாது தடுக்கப்பட்டமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் குழுவினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி
-
- 0 replies
- 1k views
-
-
நாட்டின் அரசியல், இராணுச் சூழ்நிலைகளில் தற்போது உருவாகியுள்ள நெருக்கடியான நிலை குறித்து விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கைக்கான நோர் வேத் தூதர் ஹான்ஸ் பிரஸ்கர் இவ்வார ஆரம்பத்தில் கிளிநொச்சி செல்லவுள்ளார். அனேகமாக, திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நோர்வேத் தூதுவர் கிளிநொச்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது. தூதுவர் பிரட்ஸ்கரின் விஜயம் குறித்து தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது தொடர் பாக இன்னமும் இறுதிமுடிவு செய்யப்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நேற்றிரவு தெரிவித்தது. தூதுவர் எம்மைச் சந்திப்பதற்காக வரும்பட்சத்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படக்கூடிய எமது தரப்பு நிலைப்பாட்டை அவருக்கு வி…
-
- 4 replies
- 1.4k views
-
-
அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர் என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தொவித்துள்ளதாவது: கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தள…
-
- 10 replies
- 1.9k views
-
-
இரு கருணா கூலிக்குழு உறுப்பினர் காயம் நேற்று ஞாயிறு இரவு 7.05 மணியளவில் மட்டக்களப்பு மயிலம்பவே சிறீலங்கா இராணுவ முகாமிற்கு அடுத்திருக்கின்ற திருமலைவீதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருகருணா கூலிக்குழு உறுப்பினர்களும் மற்றும் அச்சமயம் பாடசாலை கட்டிடத்திற்கு அருகில் நின்ற நான்கு இடம்பெயர்ந்த பொதுமக்களும் காயமமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் ஆறுவரும் மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கூலிக்குழு முகாமானது சிறீலங்கா இராணுவமுகாமிற்கு அப்பால் 100 மீற்றர் தொலைவில் ஒரு வீட்டில் இருந்ததாகவும் 15நிமிடநேர தாக்குதலில் அது முற்றாக தகர்க்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது. …
-
- 2 replies
- 1.3k views
-
-
நாடு பயங்கரமான சூழலை நோக்கி செல்கின்றது: ஐ.தே.க, த.தே.கூ [திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 07:24 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு என்ற நிலையை நோக்கியும் பயங்கரமான காலத்தை நோக்கியும் நகர்ந்து கொண்டிருப்பதாக கந்தானையில் உள்ள முத்துராஜவெலவில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தெரிவித்திருக்கின்றன. மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பான மர்மங்கள் தொடர்வதுடன், அவை வேறு ஒர் இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு பின்னர் அந்த சதுப்பு நிலத்தில் போடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் …
-
- 2 replies
- 1k views
-
-
அனைவரும் திரண்டு வாரீர். இடம்: Scarborough Civic Centre,150 Borough Drive, Scarborough காலம்: மார்ச் 4, ஞயிற்றுக்கிழமை பி.ப 5:45 தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் பேரவை (CTC) 416 240 0078 http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 801 views
-
-
மூத்த பாதுகாப்பு அமைச்சு அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன தலைவர் கைது [திங்கட்கிழமை, 5 மார்ச் 2007, 07:06 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி மூத்த பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, அரச சார்பற்ற நிறுவன தலைவர் ஆகியோர் சிறிலங்காவின் பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி வெள்ளவத்தையில் உள்ள தமிழ் தொழிலதிபர் ஒருவரின் இல்லத்தில் இருந்தும், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தின் தலைவர் டிவுலப்பிட்டிய இல்லத்தில் இருந்தும் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருப்பதாக பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரி ஒருவர் தெர…
-
- 0 replies
- 654 views
-
-
விடுதலைப் புலிகளுடன் மகிந்த செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பிரதான பிரதிநிதியாக பசிலே பங்குபற்றியிருந்தார்: சிறீபதி [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 08:47 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரச தலைவர் தேர்தலின் போது சுதந்திரக் கட்சிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒப்பந்தத்தின் போதான பேச்சுக்களில் என்னுடன் பிரதான பங்கை பசில் ராஜபக்சவே வகித்திருந்தார் என முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறீபதி சூரியாராச்சி மேலும் தெரிவித்தாவது: அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவே என்னுடன் முதற் சுற்றுப் பேச்சுக்களில் கலந்து கொண்டார். அதில் கருணாவை கையளிப்பது, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மீதான படுகொலை போன்ற விடயங்கள் கலந…
-
- 1 reply
- 838 views
-
-
வடக்கு கிழக்கு விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு என்றும் நான் எதிரானவன் - கோத்தபாய வடக்கு கிழக்கு விவகாரங்களில் சம்மந்தப்படும் அனைத்துலக மற்றும் உள்ளுர் உதவு நிறுவனங்கள், வெளிநாட்டு தூதரகங்களுக்கு என்றும் நான் எதிரானவன் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய பிரகடனப்படுத்தியுள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ‘நேசன்’ நாளிதழுக்கு கருத்து தெரிவித்த அவர் ‘எனது சகோதரர் (ஐனாதிபதி) தனது உயிரை துச்சமென மதித்து வாகரைக்கு சென்றார் அதேபோல அங்கு செல்ல விரும்பும் வெளிநாட்டவரும் ஆபத்துக்களை ஏற்க தயாராக இருக்கவேண்டும் அல்லது அங்கு செல்லக்கூடாது’ என தனக்கே உரித்தான பாணியில் தெரிவித்துள்ளார். இதேவேளை சிறீலங்கா அரசு தமிழர…
-
- 1 reply
- 894 views
-
-
யாழில் கிளேமோர்த் தாக்குதல் படையினரின் வாகனம் பலத்த சேதம். யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நேற்று இரவு 8.45மணியளவில் சிறிலங்காப் படையினரின் வாகனத்தை இலக்குவைத்து ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர்த் தாக்குதலில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. அப்பகுதி மக்களின் கருத்தின்படி கிளேமோர்த் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இரத்தக்கறைகள் வீதியில் படிந்திருப்பதாகவும் வாகனத்தின் கண்ணாடிகள் சிதறுண்டுக்காணப்படுவதாகவும
-
- 1 reply
- 1k views
-