ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
சிறிலங்கா உளவுத்துறையில் முழுமையான மாற்றங்கள் [ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2007, 13:22 ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்கா உளவுத்துறைப் பிரிவில் முழுமையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதுடன் உயர்பதவியில் இருக்கும் அனைவரும் அகற்றப்பட்டு வருகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட அல்லது தாக்குதல் நடைபெற்று வரும் இடங்களில் இவர்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்ற புதிய முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை காலமும் ஒரு தனிப்பிரிவாக செயற்பட்டு வந்த இப்பிரிவின் மூத்த அதிகாரிகளும் இதுவரை மாற்றப்பட்டதில்லை. இப்பதவிகளுக்கு மிக நம்பிக்கையான, சிறந்த ஆற்றல் பெற்ற நிபுணர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர் என்பதால் அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. எனினும் உளவுத்…
-
- 1 reply
- 900 views
-
-
சி.ஐ.டி. எனக்கூறி வடபகுதி மக்களிடம் கொள்ளையடித்தவர் நையப்புடைப்பு. தன்னை குற்றப் புலனாய்வு பிரிவு (சி.ஐ.டி.) பொலிஸ் என அறிமுகப்படுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒருவர் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இந்த நபர் வடபகுதி மக்களை இலக்கு வைத்து சி.ஐ.டி. பொலிஸ் எனக் கூறி நீண்ட காலமாக வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த 16 ஆம் திகதி இவர் வெள்ளவத்தையில் வைத்து வடபகுதி இளைஞர் ஒருவரை வழி மறித்து தன்னை சி.ஐ.டி. பொலிஸ் எனக்கூறி விசாரித்து சோதனை செய்வது போல் பாசாங்கு…
-
- 3 replies
- 1.4k views
-
-
காயமடைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி மரணம். யாழ். குடாவை ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் 53 ஆம் படையணியின் தலைமையகத்தின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத்தாக்குதலில் படுகாயமடைந்த அதிகாரிகளில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14 ஆம் நாள் கொடிகாமத்தில் அமைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோக்களின் 53 ஆம் படையணியின் தலைமையகத்தில் மக் கவச கொமாண்டோப்படைப்பிரிவு தலைமையகத் திறப்பு விழா தொடங்கிய வேளையில் விடுதலைப் புலிகள் செறிவான ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதில் மக் கவசப்படையணித் தளபதியும் 53 ஆம் பிரிக்கேட் தளபதியுமான லெப். கேணல் சார்ள்ஸ் நுகேரா, லெப்டினன்ட் கேணல் அத்தப்பத்து, லெப். கேணல் யு.ஏ.லெஸ…
-
- 2 replies
- 2k views
-
-
[25 - February - 2007] [Font Size - A - A - A] அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு சில வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த அறிக்கை மீதான விவாதம் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் இருநாட்கள் நடைபெற்றது. அரசாங்க நிறுவனங்களில் தலைவிரித்தாடுகின்ற படுமோசமான ஊழல் மோசடிகள் மற்றும் முறை கேடுகள் குறித்த விபரங்களை வெளியிட்ட அந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தரப்பினரும் எதிரணியினரும் மாறி மாறி குற்றச் சாட்டுகளைச் சுமத்தியவண்ணம் இருந்ததைக் காணமுடிந்தது. ஊழல் மோசடிகள் இடம்பெற்ற காலகட்டம் குறித்து அறிக்கையில் எதுவுமே குறிப்பிடப்பட்டிருக்கவில்ல
-
- 0 replies
- 1.2k views
-
-
நீதியமைச்சர் டிலான் பெரேராவும் சட்டமா அதிபர் கே.சி.கமலசபேசனும் தமது குறைகளை கேட்டறிவதற்கு சிறைச்சாலைக்கு வருகை தரவேண்டும் என்று புதிய மகசீன் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் 21 பேர் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாகவும் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றது. உண்ணாவிரதம் இருந்துவரும் கைதிகளை மலையக மக்கள் முன்னணியின் எம்.பி.யும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் நேற்று சிறைச்சாலைக்கு விஜயம் செய்து பார்வையிட்டார். http://www.sooriyan.com/index.php?option=c...0…
-
- 0 replies
- 993 views
-
-
விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் வழங்கியமை தொடர்பில் இந்தோனேசியா கடற்படை அதிகாரிக்கு சிறை தண்டனை. இளைப்பாறிய இந்தோனேஷிய கடற்படை அதிகாரி விடுதலைப் புலிகளிற்கு ஆயுதம் மற்றும் பண உதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டர் . நேற்று வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி தெரிவித்துள்ளது. 59 வயதான ஏரிக் வோலோ கடந்த வருடம் செப்டம்பர் மாதம் குவாம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார் . விடுதலைப் புலிகளிற்க்கு வோடுலோ இயந்திர துப்பாக்கி வெடிபொருட்கள் தலை வான் ஏவுகணை நைட்விஷன் கொருல் ஆகிய வற்றை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது . http://www.virakesari.lk/vira/html/head_view.asp?key=4298
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம்: மங்கள சமரவீர. சிறிலங்கா மீதான அழுத்தங்களை கொண்டுவரும் மேற்குலகின் முயற்சிகளில் இந்தியாவும் இணையலாம் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எச்சரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் நாள், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் எழுதிய கடிதத்தின் பிரதிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: "கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது எனக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இரட்டை வலு சக்தி கொண்ட முச்சக்கர வண்டிகளை தடை செய்வதென்பது இருபது இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகுமெனத் தெரிவிக்கும் அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் நலன்புரிச் சங்கம் தடை செய்வதென்றால் தமது முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக அரசாங்கம் அறிமுகப்படுத்தும் முச்சக்கர வண்டிகளை வழங்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றது. கொழும்பு- 15 முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினால் எலிஹவுஸ் மைதானத்திற்கு முன்பாக இரட்டை வலு முச்சக்கர வண்டிகளை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை எதிர்த்து நடத்தப்பட்ட கூட்டத்தின்போதே இச்சங்கத்தின் தலைவர் ஜயந்த விஜேசிங்க இதனைத் தெரிவித்தார். இலங்கை முழுவதும் 2,80,000 முச்சக்கர வண்டிகள் பாவனைய…
-
- 0 replies
- 1.2k views
-
-
பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான மங்கள சமரவீர மிக விரைவில் மீண்டும் அமைச்சுப் பதவியில் இணைந்து கொள்ளும் சாத்தியமிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன. கடந்த இரு தினங்களாக அலரிமாளிகையில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீபதி சூரியாராச்சி மீதே அரச உயர்மட்டம் அதிகளவு விசனமுற்றிருப்பதாகவும் அறிய வருகிறது. தொடர்ந்தும் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஸ்ரீபதியை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கிவிடும் சாத்தியமிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. ஜனாதிபதியைப் போலவே அவரின் சகோதரர்களும் ஸ்ரீபதி மீது மிகுந்த ஆத்திரம் கொண்டிருப்பதாகவு…
-
- 0 replies
- 710 views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தம் பற்றியும் 2002- 2007 காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள சில முக்கிய செல்நெறிகளும் 2002 இல் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பெயரளவில் மறுதலிக்கப்படாது 5 வருடங்கள் நிறைவேறியுள்ளன. பெயளரவில் இந்த ஒப்பந்தம் இரு பகுதியினராலும் உத்தியோக பூர்வமாக மறுதலிக்கப்படவில்லையெனினும
-
- 0 replies
- 718 views
-
-
ஏப்ரல் 13-க்குள் அதிகாரப் பகிர்வு திட்டப் பரிந்துரை. வடக்கு - கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரப் பரிவுத் திட்டம் ஒன்றை ஏப்ரல் 13 ஆம் திகதிக்குள் சிறிலங்கா அரசாங்கம் முன்வைக்கும் என அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் ஜப்பான் சென்றிருந்த பசில் ராஜபக்ச, வெளியுறவு அமைச்சரிடமும் ஜப்பானின் சிறப்புத் தூதுவரிடமும் இதனைக் கூறியுள்ளார். அதேநேரத்தில் மார்ச் கடைசிக்குள் அதிகாரப் பகிர்வுத் திட்ட அறிக்கை தயாராகிவிடும் என வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இணைத் தலைமை நாடுகளிடம் தெரிவித்திருக்கின்றார். இலங்கை நிலவரம் குறித்து கடந்த வாரம் இணைத்தலைமை நாடுகள் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளன. நோர்வேயின் சிறப்புத் தூதுவர் எரிக் சொல்ஹெய…
-
- 1 reply
- 859 views
-
-
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்து விவாதம்: மனோ கணேசன். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றத்தில் அடுத்த மாதம் இலங்கை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் மற்றும் ஆயுதப் பிரச்சினைக்கான செயற்குழுவின் விவாதங்களில் இலங்கைப் பிரச்சினையும் விவாதிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். ஆட்கடத்தல், கொலைகள் மற்றும் ஏனைய வன்முறைகள் குறித்த ஆய்வறிக்கையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. எங்களது ஆட்சியாளர்களும் ஆய்வைப் பார்வையிடுவர். எனவே ஐக்கிய நாடுகள் சபையுடன் எங்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்று அவர் குறி…
-
- 0 replies
- 783 views
-
-
மகிந்தவை எதிர்க்க சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி. அண்மையில் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டவர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி இருவரும் முன்னாள் அரச தலைவரும் சுதந்திரக் கட்சித் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கவுடன் இணைந்து மகிந்தவை எதிர்க்க புதிய கூட்டணி அமைக்கப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. ஆளும் கூட்டணிக்கும் மகிந்தவுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் மகிந்தவுடன் இணைந்து புதிய கூட்டணி செயற்படும் என்று கூறப்படுகின்றது. இக்கூட்டணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி நேரடியான இணைப்புகளை வைத்துக்கொள்ளவில்லை என்றாலும் மங்கள, சிறீபதியுடன் இணைந்து செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த கையோடு சந்திரிகா…
-
- 0 replies
- 687 views
-
-
தேசிய இனங்களின் உரிமைப்போர்: இரட்டை வேடம் போடுகிறார் மஹிந்தர்! எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் தென்னிலங்கையில் அரச அடக்கு முறையினால் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ. இதனால் மனித உரிமை வாதியாகத் தெற்கில் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆனால் இன்று அவரது முழு அதிகாரத்தின் கீழ் அமைந்த அரசில்தான் அரச பயங்கரவாதம் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது. தாம் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்த போதுஇ உலகளாவிய ரீதியில் அடக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக குரல் எழுப்பவும் மஹிந்தர் தவறவில்லை. குறிப்பாக விடு…
-
- 0 replies
- 567 views
-
-
பௌத்த சிங்கள நாடென்று கூறிக்கொண்டு நாய், பூனை போன்று பொதுமக்கள் படுகொலை - துரும்பளவு கூட மனிதருக்கு மதிப்பில்லை என்கிறார் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தனது சொந்த ஊரான ஹொரகொல்லைக்கு செல்லக்கூடிய சூழல் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க புலிகளுடன் செய்துகொண்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமே ஏற்பட்டதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ரவிராஜ் நடுநிலையான கருத்துகளை கொண…
-
- 1 reply
- 2k views
-
-
திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை அரசு தெரிவிப்பு இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கரையோரப் பிரதேசமான கும்புறுபிட்டி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மூன்று பாரிய முகாம்கள் மீது சனிக்கிழமை காலை அரச படையினர் பல்முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு அங்குள்ள விடுதலைப் புலிகளின் முகாம்களை நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது எறிகணை மற்றும் பல்குழல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் மாற்றம் எதுவுமே இன்றி தொடர்ந்து அமுலில் இருக்கும் அரசு அதனை முறித்துக்கொள்ளாது: கெஹலிய ரம்புக்வெல. போர்நிறுத்த ஒப்பந்தம், மாற்றம் எதுவும் இன்றித் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். அதனை அரசாங்கம் முறித்துக்கொள்ளவும் மாட்டாது, அதில் திருத்தம் எதனையும் செய்துகொள்ளவும் மாட்டாது. இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்து ஆண்டுகள் பூர்த்தி குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை அரசாங்கம் முறித்துக்கொள்ளப் போவத…
-
- 5 replies
- 1.3k views
-
-
நடைமுறையில் செத்துவிட்ட எழுத்தில் மட்டும் உயிர்வாழும் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 5 ஆண்டுகள் நிறைவு நாளான நேற்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் தீப்பந்தப் பேரணி நடைபெற்றது நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைய வளாகத்திலிருந்து ஆரம்பமான பேரணி, நோர்வே நாடாளுமன்றத்தைச் சென்றடைந்து, அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இனப் படுகொலைகள், இடப்பெயர்வுகள், பொருளாதாரத் தடை, மனிதப் பேரவலங்களே சிறிலங்கா அரச பயங்கரவாதமும் அதற்கு முண்டுகொடுக்கும் அனைத்துலக சமூகமும் தமிழ் மக்களுக்குத் தந்த பரிசுகள். அனைத்துலக அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட சமா…
-
- 0 replies
- 749 views
-
-
பிராந்தியங்களின் அடிப்படையிலான அரசியல் தீர்வே உகந்தது: இந்தியா. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரதுங்கவினால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திர்வுத்திட்டத்தின் பல முன்னேற்றங்களுடன் கூடிய திட்டத்திற்கு இந்தியா ஆதரவு தர முன்வருவதாக மகிந்த ராஜபக்ச அரசிற்கு இந்தியா தெரிவித்துள்ளது. சந்திரிகா, அரசினால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தில் இறைமையுள்ள நாட்டிற்குள் பிராந்தியங்களுக்கு இடையிலான அதிகாரப்பகிர்வு பிரேரிக்கப்பட்டு இருந்தது. இதில் வாக்கெடுப்புக்களின் அடிப்படையில் வடக்கு - கிழக்கு இணைப்பும் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அனைத்துக்கட்சி குழு கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்வுத்திட்டம…
-
- 0 replies
- 754 views
-
-
தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை அங்கீகரித்து, அதன் பிறப்புரிமையான சுயநிர்ணய அடிப்படையில் எமக்கெனத் தனியரசை அமைப்பதற்கு அனைத்து உதவிகளையும் நல்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனைத் தவிர வேறு வழி கிடையாது என்பதனையும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஐந்து வருடங்கள் பூர்த்தியானதையொட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்ட கோரிக்கையைக் கூட்டமைப்பு சர்வதேச சமூகத்திடம் விடுத்திருக்கிறது. …
-
- 4 replies
- 1.6k views
-
-
வெடிமருந்துகள் அடங்கிய விடுதலைப் புலிகளின் படகை பிடித்து துறைமுகத்துக்கு கொண்டு வந்த விவகாரம், கடலோர காவல்படைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வெடிமருந்துகளை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் குழுவை கலந்து ஆலோசிக்காமல், துறைமுகத்தில் புலிகளின் படகை எட்டு நாட்கள் நிறுத்தி வைத்தது குறித்து கடலோர காவல் படையினரிடம் விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய, இலங்கை கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த "ஸ்ரீ ராமஜெயம்' என்ற படகை, இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர். அப்படகு விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமானது. அப்படகில் ஏராளமான சமையல் பொருட்களுடன், ஏ.கே.56 ரக துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் இருந்தன. இதுதவிர கையெறி குண்டுகள், மனி…
-
- 35 replies
- 10.3k views
-
-
மீண்டும் ஒரு இளைஞர் படு கொலைக்கு இராணுவம் தயார் யாழ்ப்பாணத்தில் இராணுவம் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கும் துணைப்படை ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல்களுக்குப் பயந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூலம் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றங்களின் மூலம் யாழ் சிறைச்சாலையில தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாதுகாப்பை வழங்க முடியாதென யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளமை மீண்டும் ஒரு இளைஞர்களின் படுகொலைக்கு இராணுவம் தயாராகி உள்ளது என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் எனத் தெரிவித்து புனர்வாழ்வு முகாமெனக் கூறி பிந்துனுவௌhவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞர்கள் காவலு…
-
- 0 replies
- 1.2k views
-
-
[24 - Fஎப்ருஅர்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] எதிர்பாராத வகையில் தற்செயலாக இடம்பெறுகின்ற சம்பவங்களையே நாம் விபத்துகள் என்கின்றோம். ஆனால், இன்று வீதி விபத்துகளை நோக்கும்போது அவை அந்த அடிப்படை அர்த்தத்துக்கு அப்பால் சென்று `வழமையான விபரீதங்கள்' என்று வர்ணிக்கப்படக் கூடியவையாக மாறிவிட்டன. இன்று நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட வீதி விபத்துகள் இடம்பெறாமல் ஒருநாள் கழிவதைக் காண முடிவதில்லை. இலங்கையில் வீதி விபத்துகளில் வருடாந்தம் 3,000 க்கும் அதிகமானவர்கள் பலியாவதாக கணிப்பிடப்பட்டிருக்கிறது. இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு எண்ணிக்கையானோர் விபத்துகளில் படுகாயமடைகிறார்கள். டெங்கு நோயின் விளைவான மரணங்களைவிட விபத்து மரணங்கள் நான்கு மடங்கு அதிகமா…
-
- 0 replies
- 1.3k views
-
-
உணவுத் தட்டுப்பாட்டை மறைக்க அரச அதிகாரிகள் முயற்சி யாழ் குடாநாட்டில் தற்போதும் உணவுத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. கடந்து மூன்று வாரங்களுக்கு மேலாக கோதுமை மா வழங்கப்படாமையால் பாணுக்கும் கூட தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது யாழ் மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களுக்கு நேற்று கோதுமை மா வழங்கப்பட்டுள்ளது. இதுவும் கூட மட்டுப்படுத்திய அளவிலேயே வழங்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு போதுமானதென தெரிவிக்கப்பட்ட போதிலும் வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். மக்களின் முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யக் கூடியளவுக்கு மா வழங்கப்படவில்லை. இந்த நிலமையில் தற்போது மீண்டும் தனியார் வர்த்தகர்களுக்கு பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் யாழ் செயலக திட்டமிடற் பிரிவு ஈடுபட்டுள்ள…
-
- 0 replies
- 810 views
-
-
ஐந்து மில்லியன் ரூபாவை குடும்பத்திற்கு வழங்கிவிட்டு ரவிராஜ் எம்.பி.யின் கொலையை அரசு ஏற்கிறதா? ரவிராஜ் எம்.பி.யின் குடும்பத்திற்கு ஐந்து மில்லியன் நிதியை வழங்கிவிட்டு அவரின் படுகொலையை அரசாங்கம் ஏற்றுக் கொள்கின்றதா? என்று ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார். படுகொலை செய்யப்பட்ட ரவிராஜ் எம்.பி.யின் அனுதாப பிரேரணையில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்கா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: கடந்த காலங்களிலிருந்து இதுவரை பத்தாயிரம் கோடி ரூபா வரை பாதுகாப்புக்காக செலவிடப்பட்டிருப்பதாகவும் ஆனாலும் பாதுகாப்பு நடைமுறைகள் சீரானதாக இல்லையெனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்னர் இந்த …
-
- 0 replies
- 842 views
-