Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. `வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவோர்' மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து இடம்பெயரும் அகதிகளின் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கள்வர்கள் திருடி விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் உறுகாமம், மாவடி ஓடை, இலுப்படிச்சேனை, கரடியனாறு போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நாடி வரும் மக்களின் உடைமைகள், ஆடு, மாடு போன்ற கால்நடைகளே இவ்வாறு திருடி விற்பனை செய்யப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான உறுகாமம் என…

    • 0 replies
    • 900 views
  2. பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டாக செயற்பட வேண்டியது அவசியம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்துக்கூறிய அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, சமாதான செயற்பாடுகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்களையும் விளக்கியுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவின் இந்திய விஜயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ரோகித்த போகொல்லாகம தனது விஜயத்தின்போது இந்திய முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பேய், வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, விவசாய அமைச்சர் ஷரத்பவார், பாதுகாப்…

    • 3 replies
    • 1k views
  3. மஹிந்தபுலி உடன்படிக்கை வெளிவந்துவிடும் என்பதனாலேயே சிறையில் அடைக்கப்பட்டேன் மஹிந்த புலி உடன்படிக்கை குறித்த தகவல்கள் வெளிவந்துவிடும் என்ற பயத்தில் என்னை சிறைவைத்துள்ளனர் என்று கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று சபைக்கு சமுகமளித்த முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபைக்குள் வந்ததும் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் கரகோஷம் செய்து வரவேற்றனர். ஸ்ரீபதி சூரியாராச்சியும் ஐ.தே.க. எம்.பி.க்களை பார்த்து கையசைத்தார். இதன்போது உங்களை மேலும் 3 மாதங்களுக்கு சிறையில் போடப்போகின்றார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்கள் கூறினர். ண்ண்ண்இதற்கு பதிலளித்த ஸ்ரீபதி சூரியாராச்சி மஹிந்த புலி உடன்படிக்கை கு…

    • 0 replies
    • 764 views
  4. உலக உணவுத் திட்ட பிரதிநிதிகள் - விடுதலைப் புலிகள் சந்திப்பு தமிழ் மக்கள் கிழக்கில் மனித அவலத்துக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில், உலக உணவுத் திட்ட அமைப்பின் பிரதிநிதிகள் கிளிநொச்சியில் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர். விடுதலைப் புலிகள் தரப்பில் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், இராணுவப் பேச்சாளர் இளந்திரையன், மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயா மோகன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மக்களின் அவலம் தொடர்பாக இந்த சந்திப்பில் விடுதலைப் புலிகளால் எடுத்து விளக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/

  5. மக்களை மிரட்டி கப்பம் வேண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்ப்பாணத்தில் இராணுவத்துடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுக்களில் ஒன்றான வரதர் அணியினர் (ஈ.பி.ஆர்.எல்.எப்) இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்களைப் பயமுறுத்தி கப்பம்பெற்று வருகின்றார்கள். இத்தகைய நடவடிக்கையில் பலபொதுமக்கள் தாக்கப்பட்டும் உள்ளார்கள். குறிப்பாக சுன்னாகத்தில் தற்போது இயங்கும் பொலிஸ் அலுவலகத்திற்கு அருகாமையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அலுவலகத்தில் உள்ள நாகப்பன் என்பவர் பகிரங்கமாகவே இந்த வீதியால் செல்லும் பொதுமக்களை மிரட்டி கப்பம் பெற்றுவருகின்றமை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இவர் பொலிஸ் அலுவலகத்திற்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் அந்த வீதியால் செல்பவர்களை மறி…

  6. புதன் 21-03-2007 01:43 மணி தமிழீழம் [தாயகன்] வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியான 6 ஆயிரம் பேர் இதுவரை சிறீலங்காப் படைகளால் பலவந்தமாக மீளக் குடியேற்றப்பட்டு, மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். முற்று முழுதாக இராணுவ வலயமாக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிக்கு தொண்டு நிறுவனங்கள், மற்றும் பொது அமைப்புகள் செல்வதற்கு சிறீலங்காப் படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அந்தப் பிரதேசத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. வாகரையில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் அவர்களின் உடமைகள் சிறீலங்காப் படையினரால் சூறையாடப்பட்டுள்ளன. இதேவேளை, மக்களை அச்…

  7. கப்பல்கள் மூழ்கடிப்பு - ஒரு நாடகம்! கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்து வருவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கல்முனைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்தாக சிறிலங்கா அரசு கூறியது. ஒரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் வீடியோக் காட்சியையும் வெளியிட்டது. அதன் பிறகு பல தடவைகள் கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்ததாக கூறியது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி மாத்தறைக் கடற்பரப்பில் ஒரு ஆயுதக் கப்பலை மூழ்கடித்ததாக சிறிலங்கா அரசு கூறியது. இம் முறையும் ஒரு கப்பல் தாக்கப்படும் வீடியோக் காட்சியை வ…

    • 14 replies
    • 4.5k views
  8. புதன் 21-03-2007 01:27 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கு மக்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் அலட்சியப்போக்கு - விடுதலைப் புலிகள் கண்டனம் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மனித அவலம் தொடர்பாக அனைத்துலக சமூகம் அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதாக, தமிழீழ சமாதானச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக ஒரு இலட்சம் வரையிலான மக்கள் படுவான்கரையில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். திருகோணமலை சம்பூர், மூதூர், மட்டக்களப்பு வாகரைப் பிரதேசங்களில் இருந்து ஏற்கனவே 60 ஆயிரம் பேர் மட்டக்களப்பு நகர் நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், சில மனித நே…

  9. சிறிலங்கா அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் மாபெரும் மனித அவலத்துக்கு இன்று முகம் கொடுத்து வருகின்றார்கள். கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கை, 150,000 ஆயிரத்தை தாண்டியிருப்பதாகச் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இதேவேளை கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை, சிறிலங்கா அரசாங்கம் பலாத்காரமாக மீளக் குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. கிரான், பாலச்சோலை, ஐயன்கேணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ்ப் பொதுமக்களைப் பலவந்தமாகக் கிளிவெட்டிப் பகுதிக்குச் சிறிலங்கா இராணுவத்தினர் கொண்டு செல்வதாக, அமெரிக்காவில் இயங்க…

    • 0 replies
    • 830 views
  10. வாகரைப் பிரதேச மக்களின் முதல் கட்ட மீள்குடியேற்றம் நிறைவடைந்தததாக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்திருந்த யுத்த அகதிகளின் முதற்கட்ட மீள்குடியேற்றம் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு யுத்த அகதிகளாக வாகரைப் பிரதேசத்திலுள்ள நாற்பது கிராமங்களிலிருந்து 3945 குடும்பங்களைச் சேர்ந்த 14,000 பேர் வரை இப்படி அகதிகளாக இடம் பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தங்கியிருந்தனர். முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசம் கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இராணுவத்தின் கட்டுபாட்டின் கீழ் கொண்ட…

    • 0 replies
    • 729 views
  11. அமெரிக்க செனட்டர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளையும் சந்தித்து ஈழப் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைக்கும் முக்கிய பணியில் தமிழ்ப் புத்திஜீவிகள் இறங்கி இருக்கின்றனர். பத்தாயிரம் கையொப்பங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதுவரை மூவாயிரத்திற்கும் சற்று அதிகமான கையொப்பங்களே பெறப்பட்டிருக்கின்றன. பெயர் மட்டும் போதுமானது. அதனைக்கூட விரும்பினால் நீங்கள் தவிர்க்கலாம். ஆனால் உங்கள் ஆதரவை வழங்கும் வகையில் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வது அவசியமானதும் அவசரமானதும் கூட.தமிழ் மக்களின் கையொப்பம் அவசர தேவையாக உள்ளது. உலகத் தமிழர்களின் ஆதரவு ஈழப் பிரச்சனை தொடர்பாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்ட இந்த விண்ணப்பபங்கள் இலக்க ரீதியான ஆதாரத்தை வழங்குகின்றன.இதனால், தமிழ…

    • 0 replies
    • 1.7k views
  12. தமிழரை இடம்பெயர வைத்து சிங்களவரை குடியேற்ற சூழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களை இடம்பெயரச் செய்து அகதிகளாக்கி அங்கு சிங்கள மக்களை குடியமர்த்தும் சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்காகவே அரசாங்கம் அங்கு படையினரை பயன்படுத்தி தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்கி அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு அழைப்பு விடுத்தால் எந்தத் தமிழன் அதற்கு முன்வருவானென்றும் கேள்வி எழுப்பினார். கொழும்பு கொம்பனி வீதி நிப்பொன் ஹோட்டலில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற போருக்கெதிரான முன்னணியின் ஊடகவியலா…

    • 2 replies
    • 1.2k views
  13. தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சிங்கள நபருக்கு விளக்கமறியல் வவுனியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவரை அச்சுறுத்தி கப்பமாக பத்து இலட்சம் ரூபா பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள பமுனுகம என்ற இடத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி மூலம் மிரட்டல், உயிர்அச்சுறுத்தல் விடுத்ததன் காரணமாக சந்தேக நபர் கோரிய பத்து இலட்சம் ரூபா பணத்தை, சந்தேக நபரின் பெயரில் சம்பத் வங்கியின் அனுராதபுரக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு, சம்பத் வங்கியின் வவுனியா கிளை மூலமாக கடந்த வருடம் நவம்பர் மாதம…

  14. வவுனியாவில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை வவுனியா கோவிற்குளம் பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கபட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைசெய்யப்பட்ட நபரின் சடலம் நேற்று இரவு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உறவினர்களார் இனங்காணப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட நீதிவான் பிரேத பரிசோதனைகளின் பின் பிரேத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார். அதேவேளை வவுனியா கோவிற்குளம் பகுதியில் இன்று செவ்வாய் காலை இரு கிளேமோர் குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைபற்றியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  15. செவ்வாய் 20-03-2007 13:45 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் கைக்குண்டு வீச்சு மூவர் காயம் வவுனியா பண்டாரிக்குளம்பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் வீடொன்றின் மீது மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பெண் ஒருவர், 16 அகவையுடைய இளைஞர் மற்றும் வீட்டில் இருந்த மற்றொரு ஆணும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. pathivu.com

  16. செவ்வாய் 20-03-2007 03:27 மணி தமிழீழம் [தாயகன்] சிறுவர் நலன் தொடர்பாக அவுஸ்திரேலியா கரிசனை சிறீலங்காவில் சிறுவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், இடம்பெயர்ந்த சிறுவர்களின் நலன் தொடர்பாக தமது அரசு அக்கறை கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் சிறுவர்களின் நலன் தொடர்பான நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவுஸ்திரேலிய அரச பிரதிநிதி இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்காப் படையினரின் எறிகணைகள், மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பல்லாயிரக் கணக்காக மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்படுவதுடன், சிறுவர்களும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் நலன் தொடர்பாக தமது அரசாங்கம…

  17. கிளிநொச்சியில் சிறிலங்கா அரச தலைவரின் கொடும்பாவி எரிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 17:03 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிக்கு எரியூட்டி தமது கோபத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சுண்டிக்குளம் பாடசாலை மீது சிறிலங்கா வான்படை மிலேச்சத்தனமாக நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் மற்றும் கல்வியாளர்கள் மீதான தாக்குதல் என்பவற்றை கண்டித்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களும், கிளிநொச்சி புனித தெரேசா பெண்கள் கல்லூரி மாணவிகளும் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவிகளை இழுத்து வந்து ஏ-9 சாலைக்கு குறுக்காக வைத்து எரித்துள்ளனர். இந்…

    • 3 replies
    • 1.1k views
  18. நன்றி சங்கதி http://sankathi.org/news/index.php?option=...43&Itemid=1 வீரகாவியமான கண்மணிகளுக்கு வீரவணக்கம்

  19. இலங்கையில் மனித உரிமை மீறல்கள்: ஐ. நாவின் மீதும் குற்றச்சாட்டுகள் ` இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோச மாக இடம்பெற்று வருகின்றமை குறித்து அத் தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், விசேட குற் றப் பொறுப்பு விலக்களிப்புப் பாதுகாப்பின் கீழ் அவற்றைத் தொடர்ந்து புரிந்துகொண்டிருக்கின் றமை குறித்து இவ்விடயத்தைக் கண்காணித்து, கையாண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண் டிய ஐ. நா. அமைப்பு பொறுப்பின்றி மெத்தனப் போக்குடன் செயற்படுகின்றது. இவ்வாறு ஐ. நா. அமைப்பு மீதே சீறிப் பாய்ந் திருக்கின்றது சர்வதேச மன்னிப்புச் சபை. இந்தக் குற்றச்சாட்டை விசனத்தை வெளி யிட்டிருப்பவர் மன்னிப்புச் சபையின் கீழ்நிலை அதிகாரியோ அல்லது பேச்சாளரோ அல்லர். லண் டனைத் தலைமையக…

  20. ஐ.தே.கவின் கட்சிக் கூட்டத்தில் கட்சி தாவியவர்கள் தோற்கடிப்பு [செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2007, 13:20 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினால் நாட்டில் உள்ள அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்று வரும் ஊழல்கள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான ஆதரவுப் பிரேரணை கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நேற்று கொண்டுவரப்பட்டது. அதனை தடுப்பதற்கு முயன்ற கட்சி தாவிய உறுப்பினர்களின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தலைமை தாங்கப்பட்ட இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க பக்கம் தாவி அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட அதன் உறுப…

  21. செவ்வாய் 20-03-2007 04:46 மணி தமிழீழம் [மகான்] நெதர்லாந்து அரசின் வெளிநாட்டமைச்சின் இணையத்தளத்தில் சிறீலங்கா செல்வதை தவிர்க்குமாறு தனதுநாட்டு மக்களிற்கு நெதர்லாந்து அரசானது எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த மாதங்களிலிருந்து தமிழீழவிடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களி

    • 3 replies
    • 1.5k views
  22. மட்டக்களப்பில் குடும்பத் தலைவர்கள் வெளியே செல்லும் தருணம் பார்த்துபெண்கள், குழந்தைகள் பஸ்களில் ஏற்றப்பட்டு பலவந்த இடப்பெயர்த்தல்!கிழக்கில் நடப்பது குறித்து யு.என்.எச்.சி.ஆர். அதிகாரி ஜெனிவாவில் திடுக்கிடும் தகவல் ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ பல குடும்பத் தலைவர்கள் தொழிலுக்கு அல்லது வேறு அலுவல்கள் நிமித்தம் தூரச் சென்ற தருணம் பார்த்து, பெண்களும் குழந்தைகளும் பலவந்தமாக பஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்டு இடம்பெயர்த்தப்பட்டுள்ளார்க

    • 0 replies
    • 1.7k views
  23. மனவலிமையும் மண் மீட்புப் போரியலும் http://www.pathivu.com/?ucat=nilavaram&file=180307

  24. யாழில் எரிந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு. யாழ். மாவட்டம் தென்மராட்சி, வரணிப்பகுதியில் உள்ள முள்ளியில் அரைகுறையாக எரிந்த நிலையில் 2 சடலங்களை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். தென்மராட்சிக்கும் வடமராட்சிக்கும் இடையில் உள்ள கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் உள்ள புதர் நிலப்பகுதியில் இந்த சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காணப்பட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பிறிதொரு இடத்தில் கொல்லப்பட்டு பின்னர் வரணிக்கு கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அப்பகுதிகளில் மேலும் சடலங்கள் இருக்கலாம் எனவும் அப்பகுதி மக்கள் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். முள்ளியானது வடமராட்சிப் பகுதி இராணு வலயத்தின் நுழைவாயில் என்பதுடன், முன்னர் 8 இளைஞர்கள் காணாம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.